logo

|

Home >

hindu-hub >

temples

திருமூக்கீச்சரம் - (உறையூர்)

இறைவர் திருப்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: காந்திமதியம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன் முதலியோர்

Sthala Puranam

  • உதங்க முனிவருக்கு, ஈசன், ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கியத் தலம்.

     

  • வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.

     

  • வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.

 

  • உறையூர்ப் புராணம்

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :    சம்பந்தர்    -    1. சாந்தம் வெண்ணீறெனப்பூசி (2.120); 

பாடல்கள்     :   சேக்கிழார்   -       கற்குடி மாமலை (12.28.343) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

தல மரம் :  வில்வம்

Specialities

  • இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.
    	அவதாரத் தலம்	: உறையூர் (மூக்கீச்சுரம்).
    	வழிபாடு		: சங்கம வழிபாடு.
    	முத்தித் தலம் 	: கருவூர் (கரூர்)
    	குருபூசை நாள் 	: ஆடி - கார்த்திகை.
    

 

  • புகழ்ச்சோழ நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

     

  • தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி.

     

  • சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பது படி எடுக்கப்பட்டுள்ளன.

     

  • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

 

Contact Address

அமைவிடம் நிர்வாக அதிகாரி, அ/மி. பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 - 2768546, 094439 19091.

Related Content

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு