logo

|

Home >

hindu-hub >

temples

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: மருந்தீஸ்வரர், ஒளஷதீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர் (இலிங்கத் திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்துள்ளது.)

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பஞ்சதீர்த்தம். பாப நாசினி

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு முதலியோர்

Sthala Puranam

thiruvanmiyur temple
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்
  • வான்மீக (வால்மீகி) முனிவர் பூஜித்தபதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது. மார்க்கண்டேய முனிவர் வான்மீக முனிவரிடம் முத்தி பெற என்ன உபாயம் செய்துள்ளீர் என்று கேட்க அவர் ராமகாதை இயற்றியுள்ளேன் என்று கூறினார். மீண்டும் மார்க்கண்டேயர் அவரிடம் அது சரி முத்திக்கு என்ன உபாயம் செய்துள்ளீர்கள் என்று கேட்க வான்மீக முனிவர் சிவபூஜை முத்தியை தர வல்லது என்பதை உணர்ந்தவராய் இங்கு சிவ பூஜை செய்தார். பங்குனி பௌர்ணமியில் வான்மீகி முனிவர் முத்தி பெற்றதாகச் 
    சொல்லப்படுகிறது.
  • வான்மீக முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம்.
  • திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஒளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். 
  • ஒருசமயம் காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் அவமரியாதையாக சிவபூஜை நேரத்தில் பால் கொடுக்காமல் தாமதம் செய்தது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது. காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும் பசுவின் குளம்பு வடு தெரிகின்றது
  • வேதங்கள் வழிபட்ட தலம். 
  • தேவர்களும், சூரியனும் பிருங்கி முதலியோரும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.
  • சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீக்ஷிதர் சென்னைக்கு அருகில் உள்ள வேளச்சேரியில் 
    வாழ்ந்து வந்தபோது நாடொறும் வான்மியூர் வந்து பெருமானை வழிபட்டு வந்தார். ஒருமுறை இறைவனருளால் இப்பகுதி முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற அப்பையர் பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்தார். இச்சிறப்பினால் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது.
  • இத்தல புராணம் பூவை. கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. கரையுலாங் கடலிற்பொலி (2.04),                                         2. விரையார் கொன்றையினாய் (3.55);                       அப்பர்      - 1. விண்டமாமலர் கொண்டு (5.82); பாடல்கள்      :   சேக்கிழார்    -        மெய் தரும் புகழ்த் (12.19.40) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,                                             நீடு திருக் கழுக் குன்றில் (12.21.330 & 331) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             திருத்தொண்டர் (12.28.1120, 1121 & 1124) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கிழக்கு ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. மேற்கில் 5 நிலை கோபுரம் அமைந்துள்ளது. 
  • சுயம்பு லிங்க உருவில் தீண்டாத் திருமேனி, பால்போன்று வெண்மையாக உள்ளது.  (பால் வண்ண நாதர்) 
  • சுவாமிக்குப் பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. 
  • வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். 
  • வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது.
  • பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம், நான்காம் நாள் உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் வன்னி மர சேவை விசேஷம். பத்தாம் நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக் காட்டியருளும் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில் நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது.
  • சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில் தான் நடைபெறுகிறது.
  • விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில் சந்திரசேகரரும் பஞ்சமூர்த்திகளும் 
    மட்டுமே, 'தியாகராஜா' புறப்பாடு பகலில் கிடையாது. இரவில் மட்டுமே நிகழ்கிறது.
  • சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
  • இராஜேந்திரசோழனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதிராஜனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதி ராஜனுடைய கல்வெட்டுக்கள் மூன்றும் இராஜேந்திரதேவனுடைய கல்வெட்டு மூன்றும் இருக்கின்றன. இவைகளின்படி நுந்தா விளக்கு வைப்பதற்கு ஆடுகள் தானம், கோயில் வழிபாட்டுற்கு நிலதானம், பூமாலை இடுவதற்குப் பொன் தானம், வழிபாட்டிற்குப் பணமும் நெல்லும் தானம்செய்யப் பட்டன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, சென்னையிலேயே (தென் பகுதியில்) அமைந்த தலம். மாநகரப் பேருந்துகள் வெகுவாக உள்ளன. தொடர்பு : 044 - 24410477

Related Content

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்