logo

|

Home >

hindu-hub >

temples

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: வேதபுரீஸ்வரர், வேற்காட்டுநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை, வேற்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.

வழிபட்டோர்:வேதங்கள், முருகப்பெருமான், பராசர முனிவர், அத்ரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிஷ்டர், கௌதமர், காஷ்யபர், திண்டி, முண்டி, வாலக்கில்யர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள், சம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலோர்.

Sthala Puranam

rajagopuram verkadu temple
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
  • வேதங்கள் வழிபட்டது; பிரளய காலத்திற்குப் பின் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்கள் இத்தலத்தில் வெள்ளை வேல மரங்களாக இருந்து வழிபாடு செய்து வந்தன. நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று, இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'வேல்காடு' (வேலமரம்) = வேற்காடு என்று பெயர் பெற்றது.
  • அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலக் காட்சியை அருளிய அற்புதப் பதி.
  • முருகப்பெருமான் இத்தலத்திற்கு வருகை தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. முருகப் பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே இங்குள்ள வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது.
  • விநாயகர் பாற்கடலை பருகி விளையாடும்போது திருமால் தன் கையில் இருந்த பாஞ்சஜன்யம் சங்கைத்  தவறவிட்டார். பின் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு மீண்டும் பெற்றார். திருமால் பூஜை செய்த போது உடனிருந்து ஆதிசேஷன் இங்கு வழிபட்டு தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை நாகம் தீண்டாது எனக் கூறியதாக வரலாறு. இன்றும் தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது. இத்தலத்திற்கு விடந்தீண்டாப்பதி என்ற பெயரும் உண்டு.
  • இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார். 

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :       சம்பந்தர்         -   1. ஒள்ளி துள்ளக் கதிக்கா (1.57); பாடல்கள்      : நம்பியாண்டார் நம்பி  -       தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் (11.34.39) திருத்தொண்டர் திருவந்தாதி;                        சேக்கிழார்        -       மன்னு புகழ்த் திருத் தொண்டர் (12.28.1029 & 1030) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                                   கண்ணின் மணிகள் (12.31.26) தண்டியடிகள் நாயனார் புராணம்,                                                   மன்னிப் பெருகும் (12.32.1 & 2) மூர்க்க நாயனார் புராணம்.

Specialities

  • திருஞானசம்பந்தர் பெருமானால் பாடல் பெற்ற திருத்தலம்.
  • மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இவருக்கு இங்கு சந்நிதி உள்ளது. குருபூசை நாள் : கார்த்திகை - மூலம்.
  • மூலவர் வேதபுரீஸ்வரர் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. 
  • கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் அ/மி. வேதபுரீசுவரர் திருக்கோயில், திருவேற்காடு & அஞ்சல் - 600 077. திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி : 044 - 26800430, 26272487. மாநிலம் : தமிழ் நாடு காடுவெட்டியாறு என்று சொல்லப்படும் (பழைய) பாலாற்றங்கரையில் கோயில் உள்ளது. சென்னையிலிருந்து திருவேற்காட்டிற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பூந்தமல்லியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

Related Content

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில

திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு