நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே. 7.17.11
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.7
பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி
புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்
நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே. 11.51-நம்பி
நரசிங்க முனையர் என்னும்
நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூரப்
பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர்
பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற்கு ஏற்ப
அன்பினால் மகன்மை கொண்டார். 12.006.5
பெருமைசால் அரசர் காதற்
பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி
வளர்ந்து மங்கலம் செய்கோலத்து
அருமறை முந்நூல் சாத்தி
அளவில் தொல்கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்சீர்
மணப் பருவஞ் சேர்ந்தார். 12.006.6

See Also: 1. Life history of narasiNga munaiyaraiya nAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais