logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

sarppathosham-ningka

சர்ப்பதோஷம் நீங்க

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருமருகல் 
பண்    :    இந்தளம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் 
முந்தா யெனுமால் முதல்வா யெனுமால் 
கொந்தார் குவளை குலவும் மருகல் 
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thirumarugal 
paN    :    indhaLam 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
cin^thA yenumAl civanE yenumAl 
mun^thA yenumAl muthalvA yenumAl 
kon^thAr kuvaLai kulavum marukal 
en^thAy thakumO ivaL EcaRavE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
"Oh my Conscience!", she says; "Oh shiva!", she says; 
"Oh the Ancient!", she says; "Oh the Prime!", she says; 
Oh my Mother at the thirumarukal where kuvaLai bunches  
are abundant, is her misery bearable? 
 
பொருளுரை

  
"சிந்தையே!" என்கின்றாள்; "சிவனே!" என்கின்றாள்; 
"முந்தையே!" என்கின்றாள்; "முதல்வனே!" என்கின்றாள்; 
கொத்தாகக் குவளைகள் மிகுந்த மருகலில் உள்ள 
எம் தாய் போன்றவனே, இவள் துன்பம் தாங்கக்கூடியதா? 
 
Notes

  
1. இத்திருப்பதிகம் முழுவதும் ஞானசம்பந்தப் பெருமானின் 
கருணைப் பெருக்கினை மிகக் காணலாம். தான் தீண்டாத 
காதலனை அரவு தீண்டிய துயரத்தில் இரவு முழுமையும்  
இறைவன் திருவடியை அரற்றிய பெண்ணின் துயரம் போக்கி 
அவள் காதலனை உயிர்ப்பித்து மணம் புணரும் பெருவாழ்வு 
வகுத்தது இத்திருப்பதிகம். (வரலாறு: ThirunyAnachampandha nAyanAr - part IV
இன்றும் சர்ப்பதோஷத்தால் திருமணம் தடையுறுபவர்கள் 
பாடிப் பலன்பெறும் திருப்பதிகம். (முழுப்பதிகம்: Prayers for specific ailments
2. கொந்து - பூங்கொத்து; குலவுதல் - மிகுதல்; ஏசறவு - துன்பம். 
(திருவாசகத்தில் திருவேசறவு என்றே பதிகம் உண்டு. 
எட்டாம்-திருமுறை-திருவாசகம்-திருவேசறவு

Related Content

Benefits of relying on God

Life A Boon

Who Else Can Help ?

Don't Worry Mind, You will be blessed !

Lord Shiva - Blemishless God