logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

pichaikaarak-kadavula

பிச்சைக்காரக் கடவுள்


திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவண்ணாமலை 
திருக்குறுந்தொகை 
ஐந்தாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் 
ஓடிப் போயினர் செய்வதொன்று என் கொலோ 
ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ 
ஓடிப்போகும் நம் மேலை வினைகளே.        5.5.4 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvaNNAmalai 
thirukkuRunthokai 
Fifth thirumuRai 
 
thirucciRRambalam 
 
pADic cenRu palikkenRu n^inRavar 
ODip pOyinar ceyvathonRu en kolO 
ADip pADi aNNAmalai kaithoza 
ODippOkum n^am mElai vinaikaLE        5.5.4 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


He, Who stood for alms singing, 
has gone away, what to do? 
Dancing and singing, when the thiruvaNNAmalai 
is worshipped, the vinai on us will run away! 
 
பொருளுரை

 
பாடிச்சென்று பிச்சை எடுத்து நின்றவர் (சிவபெருமான்) 
போய்விட்டார், இனி என்ன செய்வது? 
ஆடிப் பாடித் திருவண்ணாமலையைக் கைதொழுதால் 
நம் மேலுள்ள வினைகள் எல்லாம் ஓடிப்போகும். 
 
Notes


1. இறைவன் பிச்சை எடுத்துக் கொண்டு நம் 
எல்லாரிடத்திலும் வருகின்றார். அப்பெருமானிடம் 
நம்மை முழுமையாக ஒப்புவிக்கின்ற பேறு பெற்றால் 
பேரின்பமே. அப்பக்குவம் வரவில்லையாயினும் 
அவ்விறைவன் உறையும் திருவண்ணாமலையைக் 
கைதொழுது இருந்தால் அவர் நம் மேலுள்ள 
வினை அகற்றிப் பக்குவப் படுத்துவார். 
2. பலி - பிச்சை. 

Related Content

கடவுள் இயல்

Sure loss of evils

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொட

May the Supremacy of Lord Shiva Stay High! - Prayer from San

Dances of Lord Shiva - Kodukotti, Pandarangam, Kapalam - Pra