தாழை Pandanus Odoratissimus, Roxb.; Pandanaceae.
ஏழைமார் கடைதோ றுமிடு பலிக்கென்று கூழைவா ளரவாட் டும்பிரா னுறைகோயில் மாழையொண் கண்வளைக் கைநுளைச் சியர்வண்பூந் தாழைவெண் மடற்கொய்து கொண்டாடு சாய்க்காடே.
. - திருநாவுக்கரசர்.
திருச்சாய்க்காடு, பல்லவனம், திருமயேந்திரப்பள்ளி சங்கவனேச்வரம் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது தாழையாகும். இது கைதை, கேதை, கண்டல் என்றும் குறிக்கபெறும். விளிம்பில் முள்ளுள்ள நீண்ட தோல் போன்ற இலைகளையுடைய சிறுமரங்கள்; விழுதுகளைப் போன்ற புறவேர்கள் உள்ளன. மணம் மிக்க மலர்களைக் கொண்டது. தமிழகமெங்கும் கடற் கரைகளிலும் காணப்பெறும். செந்தாழை, வெண்தாழை என்ற இருவகைகள் காணப்படுகின்றன. வெண்தாழையே எளிதிற் கிடைக்கக் கூடியதாகவுள்ளது. இலை, பூ, சாறு, விழுது ஆகியவை மருத்துவக் குணமுடையது.
வியர்வை பெருக்குதல், வலி நீக்குதல், நாடிநடையை மிகுத்து உடல்வெப்பந் தருதல் ஆகிய குணங்களை உடையது.
< PREV < தருப்பை |
Table of Content | > NEXT > தில்லைமரம் |