Thiruthondar Puranam (Periya Puranam) Twelfth Thirumurai


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
64. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
1. மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் 4169-1 நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் 4169-2 பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த 4169-3 சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே 4169-4

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி 1. செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் 4170-1 சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு 4170-2 முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு 4170-3 பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 4170-4 திருச்சிற்றம்பலம்

பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:

  • appAlum adichchArndhAr purANam in English prose
  • The Puranam Of appAlum adichchArndhAr in English poetry