thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

11 பத்தராய்ப் பணிவார் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
62 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
1. எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து 4160-1 மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே 4160-2 அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் 4160-3 முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 4160-4 2. தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் 4161-1 வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் 4161-2 விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் 4161-3 பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 4161-4

3. நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா நாதனை எம் பெருமானை ஞானம் ஆன 4162-1 ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் 4162-2 காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப் 4162-3 பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன் 4162-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • muppOdhum thirumEni thINduvAr purANam in English prose
  • The Puranam Of muppOdhum thirumEni thINduvAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page