Thiruthondar Puranam (Periya Puranam) Twelfth Thirumurai


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

11 பத்தராய்ப் பணிவார் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
59 பரமனையே பாடுவார் புராணம்
1. புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை 4155-1 உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் 4155-2 கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை 4155-3 பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம் 4155-4

2. தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன 4156-1 மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக 4156-2 ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் 4156-3 பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் 4156-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • paramanaiyE n^AyanAr purANam in English prose
  • The Puranam Of paramanaiyE n^AyanAr in English poetry