thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

9 கறைக் கண்டன் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
48 கணம்புல்ல நாயனார் புராணம்
1. திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி 4055-1 பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் 4055-2 வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் 4055-3 இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி 4055-4 2. அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த 4056-1 எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் 4056-2 ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் 4056-3 மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் 4056-4 3. தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று 4057-1 ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து 4057-2 நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத் 4057-3 தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார் 4057-4

4. தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் 4058-1 அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த 4058-2 வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க 4058-3 இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில் 4058-4 5. ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி 4059-1 காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து 4059-2 மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித் 4059-3 தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார் 4059-4 6. இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் 4060-1 மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் 4060-2 எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார் 4060-3 அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார் 4060-4 7. முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் 4061-1 மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான 4061-2 அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை 4061-3 என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் 4061-4 8. தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் 4062-1 பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு 4062-2 மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து 4062-3 எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் 4062-4 9. மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் 4063-1 பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி 4063-2 வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் 4063-3 காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் 4063-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • kaNampulla n^AyanAr purANam in English prose
  • The Puranam Of kaNampulla n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page