thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
45 கலிய நாயனார் புராணம்
1. பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு 4022-1 நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும் 4022-2 காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 4022-3 தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 4022-4 2. பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் 4023-1 வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும் 4023-2 ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின் 4023-3 காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 4023-4 3. பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 4024-1 அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 4024-2 பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 4024-3 செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 4024-4 4. கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும் 4025-1 கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 4025-2 முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் 4025-3 செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 4025-4

5. எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 4026-1 பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 4026-2 வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 4026-3 தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 4026-4 6. அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார் 4027-1 மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் 4027-2 தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் 4027-3 முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 4027-4 7. எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம் 4028-1 செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த 4028-2 கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும் 4028-3 அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 4028-4 8. எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப் 4029-1 புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே 4029-2 உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி 4029-3 மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 4029-4 9. திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம் 4030-1 பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர் 4030-2 வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து 4030-3 தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 4030-4 10. வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி 4031-1 கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத் 4031-2 தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் 4031-3 களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 4031-4 11. செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம் 4032-1 பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் 4032-2 தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை 4032-3 மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 4032-4 12. அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய் 4033-1 எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே 4033-2 ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின் 4033-3 செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 4033-4 13. மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில் 4034-1 தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி 4034-2 சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக் 4034-3 கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 4034-4 14. பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள் 4035-1 அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் 4035-2 மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் 4035-3 துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 4035-4 15. திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப 4036-1 ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக் 4036-2 கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார் 4036-3 பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 4036-4 16. மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள 4037-1 உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் 4037-2 பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம் 4037-3 பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 4037-4 17. தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து 4038-1 மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் 4038-2 யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை 4038-3 நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 4038-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • kaliya n^AyanAr purANam in English prose
  • The Puranam Of kaliya n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page