thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 

43 அதிபத்த நாயனார் புராணம்
1. மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் 3992-1 தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் 3992-2 பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் 3992-3 நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 3992-4 2. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த 3993-1 தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 3993-2 காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த 3993-3 மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 3993-4 3. பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து 3994-1 திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 3994-2 தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் 3994-3 கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 3994-4 4. நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த 3995-1 பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 3995-2 கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் 3995-3 ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 3995-4

5. அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் 3996-1 பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் 3996-2 மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த 3996-3 தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 3996-4 6. புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை 3997-1 அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் 3997-2 வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த 3997-3 கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 3997-4 7. உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த 3998-1 கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் 3998-2 அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து 3998-3 மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 3998-4 8. வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் 3999-1 விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் 3999-2 தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் 3999-3 அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 3999-4 9. அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து 4000-1 மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் 4000-2 புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் 4000-3 வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 4000-4 10. ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் 4001-1 ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 4001-2 பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் 4001-3 ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 4001-4 11. முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 4002-1 பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் 4002-2 நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் 4002-3 விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 4002-4 12. வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் 4003-1 ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் 4003-2 ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே 4003-3 மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 4003-4 13. மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் 4004-1 தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் 4004-2 பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று 4004-3 மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 4004-4 14. சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து 4005-1 கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் 4005-2 சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே 4005-3 ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 4005-4 15. ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 4006-1 தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் 4006-2 மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் 4006-3 பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 4006-4 16. வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற 4007-1 ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் 4007-2 தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 4007-3 பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 4007-4 17. என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் 4008-1 பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் 4008-2 ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 4008-3 சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 4008-4 18. அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 4009-1 புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த 4009-2 இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் 4009-3 முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 4009-4 19. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே 4010-1 அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை 4010-2 நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து 4010-3 அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 4010-4 20. தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு 4011-1 மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி 4011-2 மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் 4011-3 செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 4011-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • adhipaththa n^AyanAr purANam in English prose
  • The Puranam Of adhipaththa n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page