thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
42 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
1. கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து 3983-1 மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் 3983-2 தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி 3983-3 நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 3983-4 2. இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் 3984-1 தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல 3984-2 மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி 3984-3 அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 3984-4 3. சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி 3985-1 யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து 3985-2 மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு 3985-3 கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 3985-4 4. ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் 3986-1 வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 3986-2 நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் 3986-3 நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 3986-4

5. ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் 3987-1 மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் 3987-2 மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த 3987-3 ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 3987-4 6. மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் 3988-1 உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு 3988-2 கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் 3988-3 பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 3988-4 7. சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை 3989-1 ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் 3989-2 பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து 3989-3 மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 3989-4 8. இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் 3990-1 செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் 3990-2 பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து 3990-3 மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 3990-4 9. விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை 3991-1 உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் 3991-2 தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் 3991-3 கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 3991-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • narachiNga munaiyaraiya n^AyanAr purANam in English prose
  • The Puranam Of narachiNga munaiyaraiya n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page