|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
39 கூற்றுவ நாயனார் புராணம்
1. துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம் 3930-1
நன்னாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் 3930-2
பன்னா¡ள் ஈசர் அடியார்தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி 3930-3
முன்னாகிய நல் திருத் தொண்டின் முயன்றார் கனந்தை முதல்வனார் 3930-4
2. அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார் 3931-1
பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க 3931-2
மருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார் 3931-3
வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலார் 3931-4
3. வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச் 3932-1
சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி 3932-2
மன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி 3932-3
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆனார் 3932-4
4. மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத் 3933-1
தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம் 3933-2
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று 3933-3
நல்காராகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார் 3933-4
5. ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப் 3934-1
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி 3934-2
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின் 3934-3
வரும் ஐ உறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் 3934-4
6. அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப் 3935-1
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும் 3935-2
பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க 3935-3
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார் 3935-4
7. அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய் 3936-1
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித் தனியே 3936-2
இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றி 3936-3
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார் 3936-4
8. காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக் 3937-1
கோதங்ககல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி 3937-2
நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும் 3937-3
போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம் 3937-4
சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
1. தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி 3938-1
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள் 3938-2
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம் 3938-3
யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன் 3938-4
திருச்சிற்றம்பலம்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
|
|