|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
38 கணநாத நாயனார் புராணம்
1. ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்ட 3923-1
வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு இல்லா 3923-2
ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் 3923-3
காழி மா நகர் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர் 3923-4
2. ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி 3924-1
நாயனார்க்கு நல் திருப்பணியாயின நாளும் அன்பொடு செய்து 3924-2
மேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத் 3924-3
தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார் 3924-4
3. நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர் 3925-1
பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர் 3925-2
அல்லும் நன் பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் 3925-3
எல்லையில் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர் 3925-4
4. இனைய ப·திருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின் 3926-1
வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தே 3926-2
அனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை 3926-3
மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார் 3926-4
5. இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி 3927-1
மெய்ப் பெரும் திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே 3927-2
முப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் 3927-3
ஒப்பில் காதல் கூர் உளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் 3927-4
6. ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் 3928-1
ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத் 3928-2
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி 3928-3
மான நற்பெரும் கணங்களுக்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார் 3928-4
7. உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி 3929-1
அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் 3929-2
மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்தி 3929-3
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் 3929-4
This webpage was last updated on 13 July 2004
|
|