thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

7 வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

34 சாக்கிய நாயனார் புராணம்
1. அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய் 3636-1 மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர் 3636-2 உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து 3636-3 மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் 3636-4 2. தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவுடைய 3637-1 வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து 3637-2 கேளாகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி 3637-3 நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் 3637-4 3. அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து 3638-1 நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார் 3638-2 முன்னாகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து 3638-3 மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் 3638-4 4. அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது 3639-1 தன்னிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல 3639-2 என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறில் சிவ 3639-3 நன்னெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் 3639-4 5. செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் 3640-1 மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே 3640-2 இவ்வியல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என 3640-3 உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் 3640-4

6. எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் 3641-1 மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே 3641-2 துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம் 3641-3 தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் 3641-4 7. எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் 3642-1 பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார் 3642-2 அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன 3642-3 வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார் 3642-4 8. காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் 3643-1 நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் 3643-2 நாணாது நேடியமால் நான் முகனும் காண நடுச் 3643-3 சேணாரும் தழல் பிழம்பாய்த் தோன்றிது தெளிந்தாராய் 3643-4 9. நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து 3644-1 மாடோர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் 3644-2 நீடோடு களியுவகை நிலைமை வரச் செயல் அறியார் 3644-3 பாடோர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார் 3644-4 10. அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் 3645-1 மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால் 3645-2 இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே 3645-3 நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் 3645-4 11. அன்றுபோய் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால் 3646-1 கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை 3646-2 நின்றுணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே 3646-3 என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் 3646-4 12. தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும் 3647-1 கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவராடைப் 3647-2 படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே 3647-3 அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம் 3647-4 13. இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய 3648-1 முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் 3648-2 துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு 3648-3 மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் 3648-4 14. கல்லாலே எறிந்த அதுவும் அன்பான படி காணில் 3649-1 வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்றால் 3649-2 நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை 3649-3 அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அ·து அலராமால் 3649-4 15. அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் 3650-1 எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து 3650-2 பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு 3650-3 வெங்கர்¢யின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார் 3650-4 16. கொண்டதொரு கல்எடுத்துக் குறிகூடும் வகை எறிய 3651-1 உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை ஓடும் 3651-2 கண்டருளும் கண்நுதலார் கருணை பொழிதிருநோக்கால் 3651-3 தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி ஓடும் தோன்றினார் 3651-4 17. மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே 3652-1 கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி 3652-2 விழ அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில் 3652-3 பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார் 3652-4 18. ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற 3653-1 கோதில் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் 3653-2 சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தான் சூடித் 3653-3 தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி 3653-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • chAkkiya n^AyanAr purANam in English prose
  • The Puranam Of chAkkiya n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page