thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

31 தண்டியடிகள் புராணம்
1. தண்டி அடிகள் திரு ஆரூர் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் 3592-1 அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக் 3592-2 கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும் 3592-3 கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் 3592-4 2. காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் 3593-1 பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே 3593-2 பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் 3593-3 சேணும் அறிய அரியதிருத் தொண்டில் செறியச் சிறந்து உள்ளார் 3593-4 3. பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் 3594-1 தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாரய் செம்மை புரி 3594-2 நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நற்பதமே 3594-3 ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் 3594-4 4. செம் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு 3595-1 எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் 3595-2 அங்கு அந்நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் 3595-3 இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார் 3595-4 5. குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின் 3596-1 இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி 3596-2 வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய் 3596-3 ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார் 3596-4 6. நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி 3597-1 அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி 3597-2 எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார் 3597-3 மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் 3597-4 7. மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் 3598-1 தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் 3598-2 பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி 3598-3 ஆசிலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் 3598-4 8. அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் 3599-1 சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன 3599-2 மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே 3599-3 இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் 3599-4 9. வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரையார் கமலச் சேவடிகள் 3600-1 அல்லால் வேறுகாணேன் யான் அதுநீர் அறிதற்கார் என்பார் 3600-2 நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு 3600-3 எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் 3600-4 10. அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் 3601-1 பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று 3601-2 கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித் 3601-3 தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் 3601-4

11. வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம் 3602-1 மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி 3602-2 ஐயனே இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய 3602-3 நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு எனவீழ்ந்தார் 3602-4 12. பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து 3603-1 தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது 3603-2 அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் 3603-3 முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார் 3603-4 13. நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த 3604-1 வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் 3604-2 அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே 3604-3 துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார் 3604-4 14. தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியாராய் 3605-1 மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான் அவன்பால் நீ மேவிக் 3605-2 கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் 3605-3 தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார் 3605-4 15. வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப் 3606-1 பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால் 3606-2 சார்ந்து புகுந்த படி விளம்பத்தம் பிரானார் அருள் நினைந்தே 3606-3 ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் 3606-4 16. மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்லத் 3607-1 துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப் 3607-2 பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்ததறிகள் அவை வாங்கி 3607-3 என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி 3607-4 17. அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு 3608-1 எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன 3608-2 இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இதுமேல் 3608-3 வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் 3608-4 18. அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் 3609-1 மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி 3609-2 அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப் 3609-3 பெருகுந் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர் 3609-4 19. ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று 3610-1 வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் 3610-2 ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்செழுத்தை 3610-3 வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் மூழ்கினார் 3610-4 20. தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார் 3611-1 பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி 3611-2 இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு 3611-3 பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் 3611-4 21. தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர் 3612-1 அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் 3612-2 கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என 3612-3 மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி 3612-4 22. குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை- என உரைப்பார் 3613-1 வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பாமதி-கெட்டீர் 3613-2 அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார்-அரசனுக்கு 3613-3 பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர்-பறிதலையார் 3613-4 23. பீலி தடவிக் காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் 3614-1 காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள் 3614-2 சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார் 3614-3 மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் 3614-4 24. அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் 3615-1 சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின் 3615-2 பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து 3615-3 மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடிபணிந்தான் 3615-4 25. மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத 3616-1 பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே 3616-2 உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே 3616-3 மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் 3616-4 26. கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவி குளம்தொட்ட 3617-1 எணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி 3617-2 விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் 3617-3 உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் 3617-4

This webpage was last updated on 13 July 2004

See Also:

  • dhaNdiyadikaL n^AyanAr purANam in English prose
  • The Puranam Of dhaNdiyadikaL n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page