|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
29 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
1. நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் 3155-1
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் 3155-2
ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் 3155-3
பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால் 3155-4
2. இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் 3156-1
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் 3156-2
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் 3156-3
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு 3156-4
3. விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி 3157-1
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் 3157-2
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் 3157-3
உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் 3157-4
4. நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் 3158-1
காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி 3158-2
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் 3158-3
சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால் 3158-4
5. இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் 3159-1
மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் 3159-2
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய 3159-3
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் 3159-4
6. அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் 3160-1
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் 3160-2
தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து 3160-3
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் 3160-4
7. புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் 3161-1
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து 3161-2
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று 3161-3
துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார் 3161-4
8. நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு 3162-1
இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் 3162-2
தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு 3162-3
மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன் 3162-4
9. திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி 3163-1
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் 3163-2
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து 3163-3
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் 3163-4
10. தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த 3164-1
வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் 3164-2
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று 3164-3
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் 3164-4
11. செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் 3165-1
இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் 3165-2
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் 3165-3
பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார் 3165-4
12. ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற 3166-1
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் 3166-2
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை 3166-3
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் 3166-4
13. வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க 3167-1
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து 3167-2
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே 3167-3
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார் 3167-4
14. ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி 3168-1
நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் 3168-2
பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் 3168-3
காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல் 3168-4
15. அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே 3169-1
எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து 3169-2
செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் 3169-3
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் 3169-4
16. நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு 3170-1
யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் 3170-2
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து 3170-3
தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் 3170-4
17. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்
கொண்டு கோதில் வாய்மைத் 3171-1
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று 3171-2
பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட 3171-3
அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று 3171-4
18. மனிதரால் எடுக்கும் எல்லைத்து
அன்று நெல் மலையின் ஆக்கம் 3172-1
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு 3172-2
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று 3172-3
இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் 3172-4
19. விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி 3173-1
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி 3173-2
எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் 3173-3
தண்ண்¢லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று 3173-4
20. ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான 3174-1
கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி 3174-2
வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் 3174-3
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும் 3174-4
21. பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி 3175-1
மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் 3175-2
புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் 3175-3
நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால் 3175-4
22. தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே 3176-1
உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் 3176-2
செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் 3176-3
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர் 3176-4
23. பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி 3177-1
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து 3177-2
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் 3177-3
ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் 3177-4
24. கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி 3178-1
மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் 3178-2
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் 3178-3
ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து 3178-4
25. குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து 3179-1
வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே 3179-2
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி 3179-3
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல் 3179-4
26. அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு 3180-1
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து 3180-2
நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு 3180-3
இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் 3180-4
27. நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் 3181-1
போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் 3181-2
பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் 3181-3
போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார் 3181-4
28. வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் 3182-1
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் 3182-2
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என 3182-3
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 3182-4
29. அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த 3183-1
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு 3183-2
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் 3183-3
மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் 3183-4
30. நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் 3184-1
செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் 3184-2
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி 3184-3
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் 3184-4
31. குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் 3185-1
அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி 3185-2
நிலவிய வன் தொண்டர் அ•து இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சி 3185-3
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் 3185-4
32. தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் 3186-1
காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி 3186-2
நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் 3186-3
பாவை பாகர் தமைப் பணிந்து பாடும்
விருப்பில் சென்று அணைவார் 3186-4
33. மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி 3187-1
ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண 3187-2
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும்
எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் 3187-3
கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார் 3187-4
34. தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் 3188-1
சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் 3188-2
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப 3188-3
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் 3188-4
35. பூந்தண் பனிநீர் கொடு சமைத்த
பொருவு இல் விரைச்சந்தனக் கலவை 3189-1
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு 3189-2
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் 3189-3
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய
எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி 3189-4
36. வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து 3190-1
மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி 3190-2
ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி 3190-3
ஆறு புணைந்தார் அடித் தொண்டர்
அளவு இல் பூசை கொள அளித்தார் 3190-4
37. செங்கோல் அரசன் அருள் உரிமைச்
சேனாபதி ஆம் கோட்புலியார் 3191-1
நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் 3191-2
தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து
இறைஞ்சித்தலை சிறந்த 3191-3
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா 3191-4
38. ஆன விருப்பின் மற்று அவர்
தாம் அருமையால் பெற்று எடுத்த 3192-1
தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த 3192-2
மானார் நோக்கின் வனப்பகையார் தமையும்
கொணர்ந்து வன் தொண்டர் 3192-3
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார் 3192-4
39. அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் 3193-1
கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை
அளிக்க வேண்டும் எனத் 3193-2
தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் 3193-3
படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார் 3193-4
40. கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின்
வைத்து கொண்டு இருந்து 3194-1
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி 3194-2
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி 3194-3
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர் 3194-4
41. வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும்
விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி 3195-1
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் 3195-2
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் 3195-3
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை 3195-4
42. சிறப்பித்து அருளும் திருக்கடைக்
காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப் 3196-1
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் 3196-2
மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி 3196-3
நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த
அருள் பெற்று இறைஞ்சினார் 3196-4
43. அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் 3197-1
செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி 3197-2
மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று 3197-3
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார் 3197-4
44. நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் 3198-1
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி
அருள் பெற்று எழுந்து அருளி 3198-2
மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் 3198-3
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து 3198-4
45. இறைஞ்சிப் போந்து பரவையார் திரு
மாளிகையில் எழுந்து அருளி 3199-1
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் 3199-2
புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் 3199-3
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் 3199-4
46. செறி புன் சடையார் திருவாரூர்ப்
திருப் பங்குனி உத்தரத் திருநாள் 3200-1
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க 3200-2
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர் 3200-3
இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் 3200-4
47. சென்று விரும்பித் திருப்புகலூர்
தேவர் பெருமான் கோயில் மணி 3201-1
முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர்
முன்பு வீழ்ந்து இறைஞ்சித் 3201-2
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து 3201-3
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார் 3201-4
48. சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய 3202-1
வறிது புறம் போந்து அருளி அயல்
மடத்தில் அணையார் வன் தொண்டர் 3202-2
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப 3202-3
மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால் 3202-4
49. துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் 3203-1
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் 3203-2
அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய 3203-3
வெயில் உந்திய வெண் பட்டு அதன்
மேல் விரித்துப் பள்ளி மேவினார் 3203-4
50. சுற்றும் இருந்த தொண்டர்களும்
துயிலும் அளவில் துணை மலர்க் கண் 3204-1
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் 3204-2
வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் 3204-3
பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி 3204-4
51. தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல
முகை தலை மேல் 3205-1
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு 3205-2
மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை 3205-3
பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து 3205-4
52. பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே 3206-1
எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி 3206-2
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும்
நதியும் குறை மதியும் 3206-3
பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர் 3206-4
53. செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி 3207-1
எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த
விருப்பால் விழுந்து இறைஞ்சி 3207-2
ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று 3207-3
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் 3207-4
54. வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி 3208-1
அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல்
நெருங்கி அணி ஆரூர்த் 3208-2
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் 3208-3
உளமன்னிய தம் பெருமானார் தம்மை
வணங்கி உவந்து அணைந்தார் 3208-4
55. வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் 3209-1
அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில்
பலவும் அணைந்து இறைஞ்சிச் 3209-2
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் 3209-3
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார் 3209-4
56. பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால்
அங்கு நின்றும் போய்ச் 3210-1
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி 3210-2
வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் 3210-3
தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை 3210-4
57. பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் 3211-1
நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி 3211-2
நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் 3211-3
மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து 3211-4
58. வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் 3212-1
சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் 3212-2
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி 3212-3
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் 3212-4
59. படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய 3213-1
விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி 3213-2
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் 3213-3
தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள் 3213-4
60. வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் 3214-1
தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் 3214-2
பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள்
பணிந்து பொருவனார் என்னும் 3214-3
மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார் 3214-4
61. செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி 3215-1
விழுநீர் மையினில் பெரும் தொண்டர்
விருப்பின் ஓடும் எதிர்கொள்ள 3215-2
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி 3215-3
தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித்
தொண்டர் சூழ உறையும் நாள் 3215-4
62. புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு
அருளும் திறமும் போற்றிசைத்து 3216-1
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் 3216-2
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள்
பலவும் பணிந்து போந்து 3216-3
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில் 3216-4
63. விளங்கும் திருவாவடு துறையில் மேயார்
கோயில் புடைவலம் கொண்டு 3217-1
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் 3217-2
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் 3217-3
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார் 3217-4
64. சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் 3218-1
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும்
பெண்ணோர் பாகத்து அண்ணலார் 3218-2
தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து 3218-3
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார்
முனைப் பாடித் தலைவர் 3218-4
65. மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் 3219-1
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் 3219-2
அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை 3219-3
முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார் 3219-4
66. பெருகும் பதிகம் பிறை அணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை 3220-1
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி 3220-2
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து 3220-3
மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார் 3220-4
67. செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் 3221-1
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் 3221-2
கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் 3221-3
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச்
சிறப்பித்து இசையின் விளம்பினார் 3221-4
68. அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் 3222-1
மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் 3222-2
தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் 3222-3
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார் 3222-4
69. நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி 3223-1
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய 3223-2
சொல்லூத்¢யமா அணிந்தவர் தம் சோற்றுத்
துறையின் மருங்கு எய்தி 3223-3
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து
வலம் கொண்டு அடி பணிவார் 3223-4
70. அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல்
பதிகம் எடுத்து அருளிக் 3224-1
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் 3224-2
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் 3224-3
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் 3224-4
71. தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை 3225-1
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் 3225-2
சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு 3225-3
பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண் 3225-4
72. மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று 3226-1
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து 3226-2
நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் 3226-3
அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் 3226-4
73. அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து 3227-1
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து
வீழ்ந்து பரம் கருணைக் 3227-2
குணம் கொள் அருளின் திறம் போற்றிக்
கொண்ட புளகத்துடன் உருகிப் 3227-3
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து 3227-4
74. அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி 3228-1
தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து 3228-2
மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து 3228-3
பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார் 3228-4
75. செய்ய சடையார் திரு ஆனைக் காவில்
அணைந்து திருத் தொண்டர் 3229-1
எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே 3229-2
ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து 3229-3
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார் 3229-4
76. மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் 3230-1
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி 3230-2
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் 3230-3
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி 3230-4
77. வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் 3231-1
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற 3231-2
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது
புக்கு ஆட்ட அணிந்து அருளித் 3231-3
தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் 3231-4
78. சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி 3232-1
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் 3232-2
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில்
அன்பர் மருவிய தொண்டு 3232-3
ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் 3232-4
79. சென்று திருக் கோபுரம் இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்து மணி 3233-1
முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து
முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி 3233-2
நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் 3233-3
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று 3233-4
80. அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் 3234-1
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் 3234-2
முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே
முறைப்பாடு உடையார்போல் 3234-3
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் 3234-4
81. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப்
புலம் கெழும் பிறப்பால் 3235-1
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம்
எழுமையும் உணர்த்தி 3235-2
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார்
இவர் அலாது இலையோ என்பார் 3235-3
வைத்தனன் தனக்கே தலையும் என்
நாவும் என வழுத்தினார் தொண்டர் 3235-4
82. இவ் வகை பரவித் திருக்கடைக்
காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப 3236-1
மெய் வகை விரும்பு தம் பெருமானார்
விழுநிதிக் குவை அளித்து அருள 3236-2
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி 3236-3
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு
இருந்தனர் சில நாள் 3236-4
83. அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் 3237-1
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி
இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் 3237-2
பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப்
பாங்கு அமர் புடை வலம் கொண்டு 3237-3
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார்
தோன்றும் கங்காளரைக் கண்டார் 3237-4
84. கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம்
பொழிதரக் கை குவித்து இறைஞ்சி 3238-1
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் 3238-2
கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று
ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று 3238-3
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய
விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் 3238-4
85. பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச்
சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக் 3239-1
கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது
கலந்து இனிது இருந்து போந்து அருளி 3239-2
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர்
தம் பதி பல வணங்கிக் 3239-3
குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு
முடி அணைந்தனர் கொங்கில் 3239-4
86. கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க்
கொடு முடிக் கோயில் முன் குறுகிச் 3240-1
சங்க வெண் குழையார் உழை வலம் செய்து
சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து 3240-2
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது
புனிதர் பொன் மேனியை நோக்கி 3240-3
இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த
மெய்க் குறிப்பினில் எடுப்ப 3240-4
87. அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு
எழுத்து அறிய எப் பொழுதும் 3241-1
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது
இயம்பும் என்றும் இதனைத் 3241-2
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப்
பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் 3241-3
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார்
நமச்சிவாயத் திருப் பதிகம் 3241-4
88. உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து
மெய் உணர்வு அறா ஒருமை 3242-1
நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார்
பாங்கு நல் பதிகள் 3242-2
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப்
போந்து தண் பனி மலர்ப் படப்பைக் 3242-3
குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகும் ஆதரவால் 3242-4
89. அத் திருப்பதியை அணைந்து முன்
ஆண்டவர் கோயில் உள் புகுந்து 3243-1
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு
மேவுவார் தம் எதிர் விளங்க 3243-2
நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல்
நீடிய கோலம் நேர் காட்டக் 3243-3
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக்
கலுழி நீர் பொழிதரக் கண்டார் 3243-4
90. காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை
இல் அன்பு என்பினை உருக்கப் 3244-1
பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து
மெய் உணர்வினில் பொங்கத் 3244-2
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத்
தலைப்படக் கிடைத்த பின் சைவ 3244-3
ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை
யார் அளவு அறிந்து உரைப்பார் 3244-4
91. அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பு அனார் இன்ப வெள்ளத்து 3245-1
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி
வளம் பதி அதன் இடை மருவி 3245-2
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார்
புரி நடம் கும்பிடப் பெற்றால் 3245-3
என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு
எழுந்து அருளுவதற்கு எழுவார் 3245-4
92. ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும் 3246-1
பாயும் நீர் நதியும் பல பல கடந்து
பரமர் தம் பதிபல பணிந்து 3246-2
மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து 3246-3
சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார்
தென் திசை கற்குடிமலையில் 3246-4
93. வீடு தரும் இக் கல் குடியில்
விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி 3247-1
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை உடன் பாடிப் 3247-2
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள்
பலவும் அணைந்து இறைஞ்சி 3247-3
தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை
மேல் சென்று அணைந்தார் 3247-4
94. செம் பொன் மேரு சிலை வளைத்த
சிவனார் ஆறை மேல் தளியில் 3248-1
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட 3248-2
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் 3248-3
இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார் 3248-4
95. ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி 3249-1
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் 3249-2
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் 3249-3
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார் 3249-4
96. அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி
என்று எடுத்து அமர் காதலில் 3250-1
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று 3250-2
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் 3250-3
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே 3250-4
97. அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று
வெண்ணெய் நல் ஊரினில் 3251-1
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் 3251-2
இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே 3251-3
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் 3251-4
98. நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு
தொண்டரொடுள்ளணைந்து 3252-1
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று 3252-2
ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் 3252-3
பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார் 3252-4
99. அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப்
பொழிந்து எழும் அன்பினால் 3253-1
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும்
புறத்து அணைந்து 3253-2
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் 3253-3
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் 3253-4
100. வம்பு நீடு அலங்கல் மார்பின்
வன் தொண்டர் வன்னி கொன்றை 3254-1
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் 3254-2
தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து 3254-3
கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார 3254-4
101. செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி 3255-1
ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு 3255-2
மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் 3255-3
முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு 3255-4
102. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் 3256-1
இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன 3256-2
குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் 3256-3
சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல 3256-4
103. கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் 3257-1
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி 3257-2
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று 3257-3
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார் 3257-4
104. கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் 3258-1
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க 3258-2
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி 3258-3
நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார் 3258-4
105. தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் 3259-1
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து 3259-2
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் 3259-3
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று 3259-4
106. நாதர் பால் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ணம் எல்லாம் 3260-1
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது 3260-2
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ 3260-3
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட 3260-4
107. பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் 3261-1
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி 3261-2
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று 3261-3
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் 3261-4
108. அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் 3262-1
மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் 3262-2
தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் 3262-3
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்3262-4
109. என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் 3263-1
வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக்
கொண்டு மணி முத்து ஆற்றில் 3263-2
பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் 3263-3
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று 3263-4
110. மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் 3264-1
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் 3264-2
காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று 3264-3
வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார் 3264-4
111. மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் 3265-1
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் 3265-2
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் 3265-3
சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் 3265-4
112. பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் 3266-1
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் 3266-2
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் 3266-3
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார் 3266-4
113. ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் 3267-1
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் 3267-2
நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து 3267-3
நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய 3267-4
114. பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து 3268-1
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை 3268-2
உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் 3268-3
கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள 3268-4
115. மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன்
உயிர் கட்கு அருளும் ஆற்றல் 3269-1
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள்
வழுவி நரகு அணையா வண்ணம் 3269-2
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத்
தனிக் கூத்து என்றும் 3269-3
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி 3269-4
116. மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து
திரு வீதி மேவித் தாழ்ந்தே 3270-1
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி 3270-2
மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத் 3270-3
தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர்
வணங்கிச் சென்று சார்ந்தார் 3270-4
117. கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ 3271-1
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு
மகிழ்ச்சி மனத்தில் எய்தப் 3271-2
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர்
அவர் தமை நினையும் இன்பம் கூறி 3271-3
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்
மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில் 3271-4
118. கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை
தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் 3272-1
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது
ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி 3272-2
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி
ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது 3272-3
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார்
தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி 3272-4
119. திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித்
தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் 3273-1
உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள்
அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் 3273-2
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி
இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென் 3273-3
கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான்
நாட்டு முள்ளூரில் கலந்த போது 3273-4
120. கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண்
நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு 3274-1
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய
துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று 3274-2
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும்
வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் 3274-3
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த
திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார் 3274-4
121. எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து
எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் 3275-1
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு
செழும் கோயில் இறைஞ்சி நண்ணி 3275-2
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள்
பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி 3275-3
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை
எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் 3275-4
122. காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் 3276-1
நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி 3276-2
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு 3276-3
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து 3276-4
123. எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி 3277-1
நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி 3277-2
மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் 3277-3
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார் 3277-4
124. செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் 3278-1
மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு 3278-2
எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் 3278-3
பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார் 3278-4
125. மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத 3279-1
சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் 3279-2
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து 3279-3
தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் 3279-4
126. பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் 3280-1
பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி 3280-2
எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து 3280-3
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் 3280-4
127. நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் 3281-1
தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் 3281-2
கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே 3281-3
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல 3281-4
128. என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று 3282-1
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் 3282-2
நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் 3282-3
பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று 3282-4
129. ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் 3283-1
பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி 3283-2
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் 3283-3
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர் 3283-4
130. மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி 3284-1
முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் 3284-2
கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து 3284-3
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும் 3284-4
131. நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று 3285-1
மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள 3285-2
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ 3285-3
சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து
அருளத் தனித் தொண்டர் 3285-4
132. முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை 3286-1
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என 3286-2
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் 3286-3
பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து 3286-4
133. முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் 3287-1
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் 3287-2
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு 3287-3
எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் 3287-4
134. ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் 3288-1
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் 3288-2
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று 3288-3
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் 3288-4
135. கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் 3289-1
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற 3289-2
அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் 3289-3
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார் 3289-4
136. ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து 3290-1
மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க 3290-2
நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு 3290-3
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர் 3290-4
137. மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் 3291-1
பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் 3291-2
ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் 3291-3
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார் 3291-4
138. கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் 3292-1
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் 3292-2
திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் 3292-3
விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் 3292-4
139. வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து 3293-1
அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் 3293-2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் 3293-3
கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார் 3293-4
140. அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் 3294-1
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் 3294-2
தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் 3294-3
துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார் 3294-4
141. பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி 3295-1
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப 3295-2
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் 3295-3
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் 3295-4
142. இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் 3296-1
வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே 3296-2
அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் 3296-3
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார் 3296-4
143. பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் 3297-1
கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் 3297-2
துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் 3297-3
புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார் 3297-4
144. விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் 3298-1
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து 3298-2
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் 3298-3
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார் 3298-4
145. அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் 3299-1
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் 3299-2
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து 3299-3
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி 3299-4
146. திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் 3300-1
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி 3300-2
மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த 3300-3
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார் 3300-4
147. வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி 3301-1
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் 3301-2
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் 3301-3
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் 3301-4
148. தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து 3302-1
பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் 3302-2
மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி 3302-3
நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில் 3302-4
149. நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் 3303-1
புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் 3303-2
பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் 3303-3
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் 3303-4
150. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி 3304-1
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு 3304-2
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் 3304-3
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார் 3304-4
151. அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் 3305-1
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் 3305-2
ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் 3305-3
மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் 3305-4
152. மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது 3306-1
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் 3306-2
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி 3306-3
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார் 3306-4
153. அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்
கூர் அணைந்து இறைஞ்சிக் 3307-1
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் 3307-2
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் 3307-3
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் 3307-4
154. திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் 3308-1
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி 3308-2
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் 3308-3
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் 3308-4
155. மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று 3309-1
தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி 3309-2
நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் 3309-3
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் 3309-4
156. உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி 3310-1
பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் 3310-2
கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து 3310-3
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார் 3310-4
157. வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு
விரைக் குளிர் மென் 3311-1
பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே 3311-2
ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் 3311-3
மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து 3311-4
158. குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் 3312-1
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் 3312-2
வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் 3312-3
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி 3312-4
159. ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் 3313-1
சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் 3313-2
காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி 3313-3
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என 3313-4
160. வன் தொண்டர் அது கேட்டு மறை
முனிவர் தரும் பொதி சோறு 3314-1
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் 3314-2
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் 3314-3
சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி 3314-4
161. எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் 3315-1
பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த 3315-2
உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே 3315-3
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் 3315-4
162. சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து 3316-1
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி 3316-2
அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு
அணைந்தார் களும் துயிலக் 3316-3
கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார் 3316-4
163. சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் 3317-1
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை 3317-2
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து 3317-3
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் 3317-4
164. குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு 3318-1
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு 3318-2
வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் 3318-3
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார் 3318-4
165. கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் 3319-1
பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி 3319-2
உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி 3319-3
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் 3319-4
166. அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று 3320-1
மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் 3320-2
கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி 3320-3
தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார் 3320-4
167. சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து 3321-1
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் 3321-2
பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் 3321-3
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார் 3321-4
168. திருத்தினை மா நகர் மேவும் சிவக்
கொழுந்தைப் பணிந்து போய் 3322-1
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் 3322-2
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் 3322-3
கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார் 3322-4
169. திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் 3323-1
பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு 3323-2
வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் 3323-3
செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார் 3323-4
170. மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து
அர என்று எழும் ஓசை 3324-1
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி 3324-2
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் 3324-3
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார் 3324-4
171. நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து 3325-1
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து 3325-2
சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் 3325-3
பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார் 3325-4
172. தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் 3326-1
தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி 3326-2
வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே 3326-3
எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார் 3326-4
173. தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் 3327-1
ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் 3327-2
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க்
கொழுந்தைத் தொழுது இறைஞ்சி 3327-3
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் 3327-4
174. பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் 3328-1
நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி 3328-2
ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் 3328-3
கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார் 3328-4
175. அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் 3329-1
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை 3329-2
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் 3329-3
புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார் 3329-4
176. வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் 3330-1
மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி 3330-2
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் 3330-3
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார் 3330-4
177. மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட 3331-1
இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் 3331-2
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் 3331-3
செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார் 3331-4
178. வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் 3332-1
கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் 3332-2
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் 3332-3
கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார் 3332-4
179. இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் 3333-1
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப 3333-2
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணி 3333-3
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் 3333-4
180. வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த 3334-1
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப 3334-2
ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே 3334-3
நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார் 3334-4
181. திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க 3335-1
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே 3335-2
பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் 3335-3
உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி 3335-4
182. முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார்
தம் பெரும் கருணை 3336-1
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி 3336-2
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து 3336-3
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார் 3336-4
183. வந்தித்து இறைவர் அருளால் போய்
மங்கை பாகர் மகிழ்ந்த இடம் 3337-1
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச் 3337-2
சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து
செஞ்சொல் தொடைபுனைந்தே 3337-3
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும்
காஞ்சி மருங்கு அணைந்தார் 3337-4
184. அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனும் தொடர் அரிய 3338-1
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து 3338-2
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே
தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் 3338-3
இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில்
சூழ்காஞ்சி நகர் வாழ்வார் 3338-4
185. மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 3339-1
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 3339-2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 3339-3
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார் 3339-4
186. ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி 3340-1
நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து 3340-2
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப 3340-3
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் 3340-4
187. ஆழி நெடுமால் அயன் முதலாம்
அமரர் நெருங்கு கோபுரம் முன் 3341-1
பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் 3341-2
சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு 3341-3
வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் 3341-4
188. கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர 3342-1
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த 3342-2
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் 3342-3
செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார் 3342-4
189. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால் 3343-1
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து 3343-2
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் 3343-3
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் 3343-4
190. சீரார் காஞ்சி மன்னும் திருக்
காமக் கோட்டம் சென்று இறைஞ்சி 3344-1
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி 3344-2
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் 3344-3
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் 3344-4
191. ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் 3345-1
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் 3345-2
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் 3345-3
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில்
நிதி பெற்று இனிது இருந்தார் 3345-4
192. அங்கண் அமர்வார் அனே கதங்கா
பதத்தை எய்தி உள்ளணைந்து 3346-1
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன்
நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் 3346-2
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் 3346-3
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள் 3346-4
193. பாடல் இசையும் பாணியினால் பாவைத்
தழுவக் குழைக் கம்பர் 3347-1
ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் 3347-2
நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால் 3347-3
மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார் 3347-4
194. செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில்
செம் பொன் செழும் சுடரை 3348-1
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் 3348-2
மல்க நின்று விடையின் மேல் வருவான்
எனும் வண் தமிழப் பதிகம் 3348-3
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார் 3348-4
195. மன்னும் திருமால் பேறு அணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம் 3349-1
தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் 3349-2
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர் 3349-3
சென்னி முகில் தோய் தடம் குவட்டுத்
திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார் 3349-4
196. தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் 3350-1
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி 3350-2
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் 3350-3
அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை
மேல் மருந்தை வணங்கினார் 3350-4
197. வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை 3351-1
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் 3351-2
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து
வாழ்ந்து போந்து மன்னும் பதி 3351-3
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் 3351-4
198. வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல் 3352-1
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி 3352-2
நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து 3352-3
திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார் 3352-4
199. அங்கு சில நாள் வைகிய பின் அருளால்
போந்து பெரு விடையார் 3353-1
தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் 3353-2
பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் 3353-3
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார் 3353-4
200. அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி
ஆண்டநம்பி எழுந்து அருள 3354-1
எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார் 3354-2
வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் 3354-3
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால் 3354-4
201. வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் 3355-1
புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி 3355-2
அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் 3355-3
பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர் 3355-4
202. ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின் 3356-1
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் 3356-2
சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர் 3356-3
கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார் 3356-4
203. வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் 3357-1
கூனல் இளம் வெண் பிறைச் சடையார்
கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி 3357-2
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன் 3357-3
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் 3357-4
204. ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியு |