|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் 6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
28 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
திருச்சிற்றம்பலம்
1. வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 1899-1
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத 1899-2
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் 1899-3
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 1899-4
2. சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் 1900-1
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் 1900-2
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் 1900-3
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் 1900-4
3. அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே 1901-1
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ 1901-2
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே 1901-3
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால் 1901-4
4. அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் 1902-1
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள் 1902-2
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் 1902-3
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால் 1902-4
5. வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த 1903-1
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் 1903-2
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி 1903-3
இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல 1903-4
6. உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் 1904-1
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து 1904-2
அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து 1904-3
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை 1904-4
7. பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் 1905-1
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் 1905-2
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் 1905-3
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால் 1905-4
8. வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் 1906-1
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் 1906-2
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி 1906-3
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால் 1906-4
9. காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் 1907-1
தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் 1907-2
தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித் 1907-3
தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் 1907-4
10. புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி 1908-1
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் 1908-2
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் 1908-3
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள் 1908-4
11. வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் 1909-1
பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப 1909-2
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும் 1909-3
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு 1909-4
12. விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் 1910-1
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் 1910-2
உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் 1910-3
நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம் 1910-4
13. மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் 1911-1
புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு 1911-2
கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் 1911-3
இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி 1911-4
14. பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் 1912-1
பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் 1912-2
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம் 1912-3
பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால் 1912-4
15. அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை 1913-1
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் 1913-2
செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று 1913-3
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் 1913-4
16. மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு 1914-1
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் 1914-2
பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார் 1914-3
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் 1914-4
17. மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் 1915-1
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது 1915-2
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் 1915-3
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் 1915-4
18. மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த 1916-1
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் 1916-2
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு 1916-3
ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார் 1916-4
19. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் 1917-1
அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம் 1917-2
நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும் 1917-3
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார் 1917-4
20. பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் 1918-1
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் 1918-2
கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில் 1918-3
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக 1918-4
21. ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி 1919-1
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு 1919-2
நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் 1919-3
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள் 1919-4
22. அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே 1920-1
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத் 1920-2
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத் 1920-3
தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க 1920-4
23. தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி 1921-1
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க 1921-2
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக 1921-3
வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப 1921-4
24. திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற 1922-1
மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல 1922-2
அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல 1922-3
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக 1922-4
25. தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற 1923-1
நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க 1923-2
வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ 1923-3
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக 1923-4
26. அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் 1924-1
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் 1924-2
தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் 1924-3
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் 1924-4
27. அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் 1925-1
எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி 1925-2
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே 1925-3
ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார் 1925-4
28. சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை 1926-1
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் 1926-2
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் 1926-3
அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார் 1926-4
29. பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் 1927-1
தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் 1927-2
தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி 1927-3
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே 1927-4
30. மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் 1928-1
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே 1928-2
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் 1928-3
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் 1928-4
31. பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த 1929-1
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் 1929-2
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா 1929-3
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் 1929-4
32. பயன் தருவ ப•றருவும் வல்லிகளும் மல்கித் 1930-1
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் 1930-2
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா 1930-3
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் 1930-4
33. அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 1931-1
சங்கம் படகம் கருவி தாரை முதலான 1931-2
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 1931-3
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 1931-4
34. இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் 1932-1
தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் 1932-2
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே 1932-3
அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார் 1932-4
35. காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் 1933-1
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் 1933-2
சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் 1933-3
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார் 1933-4
36. மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் 1934-1
தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத் 1934-2
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் 1934-3
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் 1934-4
37. சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி 1935-1
உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் 1935-2
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் 1935-3
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் 1935-4
38. செம் பொன் முதலான பல தான வினை செய்வார் 1936-1
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் 1936-2
வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் 1936-3
நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் 1936-4
39. ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் 1937-1
நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் 1937-2
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 1937-3
தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார் 1937-4
40. ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் 1938-1
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த 1938-2
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் 1938-3
மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார் 1938-4
41. நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் 1939-1
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் 1939-2
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் 1939-3
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் 1939-4
42. பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் 1940-1
அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத் 1940-2
தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே 1940-3
திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் 1940-4
43. ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே 1941-1
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு 1941-2
வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் 1941-3
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் 1941-4
44. தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் 1942-1
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் 1942-2
சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு 1942-3
நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார் 1942-4
45. வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் 1943-1
அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் 1943-2
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் 1943-3
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார் 1943-4
46. நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது 1944-1
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் 1944-2
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் 1944-3
தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார் 1944-4
47. விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து 1945-1
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை 1945-2
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் 1945-3
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார் 1945-4
48. சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் 1946-1
காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று 1946-2
ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே 1946-3
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப 1946-4
49. திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும் 1947-1
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் 1947-2
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் 1947-3
பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார் 1947-4
50. வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு 1948-1
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று 1948-2
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் 1948-3
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார் 1948-4
51. தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து 1949-1
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த 1949-2
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் 1949-3
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் 1949-4
52. சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை 1950-1
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் 1950-2
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல 1950-3
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் 1950-4
53. மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த 1951-1
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின் 1951-2
அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய 1951-3
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும் 1951-4
54. நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் 1952-1
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த 1952-2
சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு 1952-3
மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் 1952-4
55. பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் 1953-1
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் 1953-2
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் 1953-3
கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய் 1953-4
56. மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி 1954-1
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் 1954-2
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் 1954-3
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் 1954-4
57. பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் 1955-1
முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் 1955-2
மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை 1955-3
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் 1955-4
58. கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் 1956-1
இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் 1956-2
விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் 1956-3
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் 1956-4
59. பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் 1957-1
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி 1957-2
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி 1957-3
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார் 1957-4
60. நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் 1958-1
நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் 1958-2
ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் 1958-3
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் 1958-4
61. மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது 1959-1
இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் 1959-2
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் 1959-3
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார் 1959-4
62. கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து 1960-1
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 1960-2
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப 1960-3
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் 1960-4
63. மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் 1961-1
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ 1961-2
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து 1961-3
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள 1961-4
64. அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் 1962-1
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் 1962-2
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் 1962-3
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார் 1962-4
65. திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த 1963-1
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் 1963-2
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த 1963-3
அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார் 1963-4
66. அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை 1964-1
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும் 1964-2
தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் 1964-3
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன 1964-4
67. ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் 1965-1
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான 1965-2
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து 1965-3
வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 1965-4
68. எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி 1966-1
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் 1966-2
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து 1966-3
அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார் 1966-4
69. யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் 1967-1
ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில 1967-2
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும் 1967-3
தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் 1967-4
70. சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் 1968-1
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் 1968-2
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 1968-3
தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 1968-4
71. எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் 1969-1
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் 1969-2
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் 1969-3
துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார் 1969-4
72. சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் 1970-1
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி 1970-2
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி 1970-3
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா 1970-4
73. எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று 1971-1
கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே 1971-2
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து 1971-3
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி 1971-4
74. விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் 1972-1
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் 1972-2
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி 1972-3
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால் 1972-4
75. எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை 1973-1
மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப 1973-2
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் 1973-3
செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து 1973-4
76. செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் 1974-1
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் 1974-2
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு 1974-3
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் 1974-4
77. மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் 1975-1
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட 1975-2
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட 1975-3
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் 1975-4
78. தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் 1976-1
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் 1976-2
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை 1976-3
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார் 1976-4
79. வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை 1977-1
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் 1977-2
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் 1977-3
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் 1977-4
80. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி 1978-1
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள 1978-2
அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் 1978-3
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார் 1978-4
81. வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 1979-1
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 1979-2
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 1979-3
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 1979-4
82. மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம் 1980-1
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து 1980-2
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப் 1980-3
பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ 1980-4
83. அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் 1981-1
இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் 1981-2
புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து 1981-3
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி 1981-4
84. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே 1982-1
மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் 1982-2
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் 1982-3
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் 1982-4
85. ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் 1983-1
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி 1983-2
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் 1983-3
கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார் 1983-4
86. தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் 1984-1
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் 1984-2
தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் 1984-3
பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார் 1984-4
87. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார் 1985-1
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி 1985-2
இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே 1985-3
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ 1985-4
88. பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி 1986-1
தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே 1986-2
இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று 1986-3
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் 1986-4
89. இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே 1987-1
சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் 1987-2
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் 1987-3
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார் 1987-4
90. பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே 1988-1
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி 1988-2
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் 1988-3
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார் 1988-4
91. காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து 1989-1
ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன் 1989-2
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் 1989-3
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார் 1989-4
92. மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் 1990-1
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் 1990-2
துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து 1990-3
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் 1990-4
93. புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும் 1991-1
கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் 1991-2
பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே 1991-3
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் 1991-4
94. என்று இனைய பல கூறி இருக்கு மொழி
அந்தணரும் ஏனையோரும் 1992-1
நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண்
மேல் ஏந்தி நிரந்த போது 1992-2
சென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர்
தாம் தெய்வ ஞானக் 1992-3
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல்
கொண்டு களி கூர்ந்து செல்ல 1992-4
95. மாமறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்
தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து 1993-1
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே 1993-2
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும் 1993-3
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக 1993-4
96. நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் 1994-1
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத் 1994-2
தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பர் 1994-3
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள்
புடை பெயரும் கொள்கைத்தாக 1994-4
97. மங்கல தூர் இயந்து வைப்பர் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப் 1995-1
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும்
நிரைப்பார் போற்றி செய்வார் 1995-2
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத் 1995-3
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை 1995-4
98. தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 1996-1
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 1996-2
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 1996-3
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 1996-4
99. தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி
அன்று இரவு தொல்லை நாத 1997-1
மா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய 1997-2
கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு 1997-3
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில் 1997-4
100. காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக்
கலந்து வீற்று இருந்த தங்கள் 1998-1
தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து 1998-2
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும்
முன் வணங்கிப் போற்றி 1998-3
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார் 1998-4
101. பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி
நீர் பிரச மலர் தரளம் சிந்த 1999-1
வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி 1999-2
திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று 1999-3
இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம்
ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார் 1999-4
102. மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின்
விழுப் பொருளை வேணி மீது 2000-1
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை 2000-2
மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் 2000-3
கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம்
கவுணியர் கோன் பாடும் காலை 2000-4
103. கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும்
கண்டு அருளி கருணை கூர்ந்த 2001-1
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் 2001-2
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த 2001-3
வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே 2001-4
104. காழி வரும் பெரும் தகையார் கையில்
வரும் திருத் தாளக் கருவி கண்டு 2002-1
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் 2002-2
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் 2002-3
தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார் 2002-4
105. உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து
அளவின் உண்மை நோக்கித் 2003-1
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல் 2003-2
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ
வந்து அருளும் மதலையாரும் 2003-3
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார் 2003-4
106. செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது 2004-1
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள 2004-2
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி
அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் 2004-3
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில் 2004-4
107. திருப் பெருகு பெரும் கோயில் சூழ வலம்
கொண்டு அருளித் திருமுன் நின்றே 2005-1
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று 2005-2
விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல் 2005-3
பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை 2005-4
108. எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி 2006-1
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி 2006-2
மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி 2006-3
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம் 2006-4
109. அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமை முன்னம் அளித்த தாயார் 2007-1
முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 2007-2
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 2007-3
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து
கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் 2007-4
110. மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே 2008-1
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் 2008-2
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம் 2008-3
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் 2008-4
111. வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு
மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் 2009-1
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல்
ஆன சிறப்பின் செய்கை 2009-2
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால்
கடன் ஆற்றும் சண்பை மூதூர் 2009-3
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி
எவ்உலகும் ஏத்தும் நாளில் 2009-4
112. செழும் தரளப் பொன்னி சூழ் திரு
நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் 2010-1
கொழுந்து அணியும் சடையாரை எங்கள்
பதியினில் கும்பிட்டு அருள அங்கே 2010-2
எழுந்து அருள வேண்டும் என இசைந்து
அருளித் தோணி வீற்று இருந்தார் 2010-3
பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள்
பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார் 2010-4
113. தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ்
போல் சீர் அடிகள் தரையின் மீது 2011-1
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும்
பொறா அன்பு புரிந்த சிந்தை 2011-2
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள 2011-3
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து
உடன் போந்தார் ஞானம் உண்டார் 2011-4
114. தேன் அலரும் கொண்றையினார் திரு
நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார் 2012-1
வான் அணையும் மலர்ச் சோலை
தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் 2012-2
பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத்
தாதையர் பணிப்பக் கேட்டு 2012-3
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல்
தொடை மாலை நவிலல் உற்றார் 2012-4
115. காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் 2013-1
சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் 2013-2
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் 2013-3
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் 2013-4
116. ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர 2014-1
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் 2014-2
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் 2014-3
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம் 2014-4
117. அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட 2015-1
நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி 2015-2
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு 2015-3
தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் 2015-4
118. காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி 2016-1
பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி 2016-2
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை 2016-3
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் 2016-4
119. திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 2017-1
பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி 2017-2
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் 2017-3
தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார் 2017-4
120. கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து 2018-1
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் 2018-2
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி 2018-3
நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் 2018-4
121. பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் 2019-1
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி 2019-2
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு 2019-3
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார் 2019-4
122. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத் 2020-1
தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து 2020-2
மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று 2020-3
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை 2020-4
123. சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் 2021-1
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் 2021-2
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு 2021-3
ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே 2021-4
124. பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு 2022-1
சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று 2022-2
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க 2022-3
மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார் 2022-4
125. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச் 2023-1
சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் 2023-2
பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து 2023-3
நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார் 2023-4
126. மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் 2024-1
செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி 2024-2
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி 2024-3
ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் 2024-4
127. அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் 2025-1
திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி 2025-2
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் 2025-3
தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் 2025-4
128. தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய 2026-1
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் 2026-2
சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய 2026-3
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் 2026-4
129. வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் 2027-1
செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு 2027-2
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் 2027-3
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை 2027-4
130. அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் 2028-1
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி 2028-2
உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி 2028-3
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் 2028-4
131. திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் 2029-1
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் 2029-2
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் 2029-3
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் 2029-4
132. பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் 2030-1
சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து 2030-2
விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து 2030-3
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் 2030-4
133. அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர் 2031-1
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே 2031-2
இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு 2031-3
கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார் 2031-4
134. கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து 2032-1
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என 2032-2
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி 2032-3
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் 2032-4
135. தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் 2033-1
ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை 2033-2
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க 2033-3
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 2033-4
136. யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி 2034-1
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் 2034-2
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று 2034-3
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் 2034-4
137. எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் 2035-1
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் 2035-2
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து 2035-3
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப 2035-4
138. பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த 2036-1
வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் 2036-2
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் 2036-3
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார் 2036-4
139. காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் 2037-1
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை 2037-2
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் 2037-3
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர் 2037-4
140. சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் 2038-1
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் 2038-2
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் 2038-3
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார் 2038-4
141. மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள 2039-1
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் 2039-2
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே 2039-3
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் 2039-4
142. சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர் 2040-1
பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த 2040-2
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் 2040-3
தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 2040-4
143. பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த 2041-1
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப 2041-2
வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த 2041-3
புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார் 2041-4
144. தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் 2042-1
மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் 2042-2
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் 2042-3
தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார் 2042-4
145. நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி 2043-1
முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை முகிழ் விரி மணம் சூழப் 2043-2
புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திடப் போந்து 2043-3
கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் 2043-4
146. வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் 2044-1
தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ 2044-2
தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் 2044-3
கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 2044-4
147. பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன்
வரும் பயில் மறையவர் சூழச் 2045-1
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு 2045-2
மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் 2045-3
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார் 2045-4
148. செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி
இத்திருந்து உலகினிற்கு எல்லாம் 2046-1
மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் 2046-2
தங்கு புள்ளலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப் 2046-3
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை 2046-4
149. கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக்
கடி மணக் குளிர் கால் வந்து 2047-1
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து
உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப 2047-2
இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட 2047-3
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர்
நின்று ஆடுவ மலர்ச் சோலை 2047-4
150. இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி
இன்அமுது என ஞானம் 2048-1
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டு 2048-2
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித் 2048-3
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி 2048-4
151. ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு 2049-1
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச் 2049-2
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ 2049-3
போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் 2049-4
152. பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில்
மறையவர் பயில் வேள்விச் 2050-1
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே 2050-2
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே 2050-3
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடுவானம் 2050-4
153. கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து
உயர் கழனி அம் பணை நீங்கி 2051-1
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன 2051-2
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி 2051-3
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக 2051-4
154. பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம்
போனகம் பொன் குன்றம் 2052-1
மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று 2052-2
அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி 2052-3
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள் 2052-4
155. வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க 2053-1
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச் 2053-2
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக் 2053-3
கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார் 2053-4
156. செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில் 2054-1
எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ 2054-2
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத் 2054-3
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர் 2054-4
157. மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச் 2055-1
சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு 2055-2
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப் 2055-3
பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி 2055-4
158. நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின் 2056-1
மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள் 2056-2
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த 2056-3
ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில் 2056-4
159. நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட 2057-1
அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் 2057-2
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற 2057-3
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் 2057-4
160. அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம் 2058-1
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும் 2058-2
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப் 2058-3
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு 2058-4
161. உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை
ஒழிவு இன்றி உருவின் கண் 2059-1
அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி 2059-2
இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் 2059-3
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி 2059-4
162. ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால் 2060-1
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே 2060-2
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் 2060-3
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி 2060-4
163. பண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி 2061-1
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் 2061-2
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக் 2061-3
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் 2061-4
164. முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று 2062-1
சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி 2062-2
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற 2062-3
பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார் 2062-4
165. செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் 2063-1
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் 2063-2
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் 2063-3
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார் 2063-4
166. செய்ய சடையார் திருவேட்களம் சென்று 2064-1
கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன் 2064-2
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும் 2064-3
ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள் 2064-4
167. கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து 2065-1
மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் 2065-2
செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை 2065-3
அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் 2065-4
168. பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி 2066-1
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் 2066-2
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் 2066-3
ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 2066-4
169. ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே 2067-1
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் 2067-2
தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து 2067-3
பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண் 2067-4
170. அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை 2068-1
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் 2068-2
தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் 2068-3
கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார் 2068-4
171. செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் 2069-1
எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி 2069-2
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி 2069-3
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் 2069-4
172. பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம் 2070-1
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த 2070-2
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் 2070-3
செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார் 2070-4
173. ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக் 2071-1
குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு 2071-2
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர் 2071-3
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ் 2071-4
174. ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் 2072-1
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் 2072-2
நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம் 2072-3
கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி 2072-4
175. இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி 2073-1
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் 2073-2
பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப் 2073-3
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து
போந்து அணைந்தனர் புறமுன்றில் 2073-4
176. அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில் 2074-1
பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர் 2074-2
நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய 2074-3
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் 2074-4
177. பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 2075-1
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் 2075-2
செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர 2075-3
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார் 2075-4
178. இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின் 2076-1
மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணர் வணங்கிக் கார் 2076-2
நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று 2076-3
அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார் 2076-4
179. ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு 2077-1
செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட 2077-2
மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார் 2077-3
உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் 2077-4
180. அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 2078-1
பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 2078-2
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த்
தொல்லை வெங்குரு வேந்தர் 2078-3
செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார் 2078-4
181. மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு
சூழ் முது குன்றை அடைவோம் என்று 2079-1
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி 2079-2
செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு 2079-3
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் 2079-4
182. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் 2080-1
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 2080-2
ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு 2080-3
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் 2080-4
183. தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும்
எனும் தண் தமிழ் தொடை சாத்தி 2081-1
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 2081-2
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 2081-3
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 2081-4
184. ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை 2082-1
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் 2082-2
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு
பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 2082-3
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார் 2082-4
185. கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 2083-1
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 2083-2
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் 2083-3
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார் 2083-4
186. முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 2084-1
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 2084-2
அந்தணாளர் அவர் அருகே செலச் 2084-3
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் 2084-4
187. ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 2085-1
காதலால் அணைவார் கடிது ஏகிட 2085-2
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 2085-3
பாத தாமரை நொந்தன பைப்பய 2085-4
188. மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 2086-1
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 2086-2
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 2086-3
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார் 2086-4
189. பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 2087-1
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 2087-2
தேசு மிக்க திருவுரு ஆனவர் 2087-3
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார் 2087-4
190. இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 2088-1
வந்த வைதிக மாமணி ஆனவர் 2088-2
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 2088-3
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் 2088-4
191. மாறன் பாடி எனும் பதி வந்துற 2089-1
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 2089-2
வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 2089-3
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 2089-4
192. உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 2090-1
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 2090-2
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 2090-3
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் 2090-4
193. அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 2091-1
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 2091-2
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 2091-3
வெற்றி மாதவத்தோருடன் மேவினார் 2091-4
194. இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 2092-1
மன்னனார் தம் வழி வருத்தத் தினை 2092-2
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 2092-3
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர் 2092-4
195. ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 2093-1
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 2093-2
மாறில் முத்தின் படியினால் மன்னிய 2093-3
நீறு வந்த நிமலர் அருளுவார் 2093-4
196. நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் 2094-1
மாட மாமணை தோறும் மறையோர்க்குக் 2094-2
கூடு கங்குல் கனவில் குலமறை 2094-3
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் 2094-4
197. ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 2095-1
மான முகத்தின் சிவிகை மணிக் குடை 2095-2
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 2095-3
கோன் அவன் பால் அணைந்து கொடும் என 2095-4
198. அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 2096-1
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 2096-2
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 2096-3
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர் 2096-4
199. ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 2097-1
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின 2097-2
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 2097-3
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார் 2097-4
200. சால மிக்க வியப்புறு தன்மையின் 2098-1
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 2098-2
காலம் எய்திடக் காதல் வழிப்படும் 2098-3
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் 2098-4
201. திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 2099-1
துங்க வெண் குடை தூய சிவிகையும் 2099-2
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 2099-3
அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 2099-4
202. கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 2100-1
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 2100-2
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து 2100-3
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் 2100-4
203. சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 2101-1
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 2101-2
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 2101-3
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 2101-4
204. மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 2102-1
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 2102-2
தேசுடைச் சிவிகை முதலாயின 2102-3
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் 2102-4
205. இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 2103-1
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 2103-2
முத்த நற் சிவிகை முதல் ஆயின 2103-3
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார் 2103-4
206. அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 2104-1
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 2104-2
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 2104-3
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின் 2104-4
207. சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் 2105-1
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 2105-2
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 2105-3
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் 2105-4
208. மாலை யாமம் புலர் உறும் வைகறை 2106-1
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 2106-2
கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து 2106-3
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர் 2106-4
209. போத ஞானப் புகலிப் புனிதரைச் 2107-1
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 2107-2
காதல் செய்பவன் போலக் கருங்கடல் 2107-3
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் 2107-4
210. ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 2108-1
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 2108-2
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 2108-3
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 2108-4
211. வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 2109-1
கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் 2109-2
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 2109-3
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் 2109-4
212. என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 2110-1
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 2110-2
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது 2110-3
மன்று உளரர் அருள் என்று வணங்கினார் 2110-4
213. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 2111-1
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 2111-2
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 2111-3
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே 2111-4
214. எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 2112-1
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 2112-2
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 2112-3
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார் 2112-4
215. பொடி அணிந்த புராணன் அரத்துறை 2113-1
அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 2113-2
படி இலாத சொல் மாலைகள் பாடியே 2113-3
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார் 2113-4
216. சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 2114-1
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று 2114-2
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து 2114-3
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் 2114-4
217. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை 2115-1
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் 2115-2
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி 2115-3
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம் 2115-4
218. விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் 2116-1
கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் 2116-2
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து 2116-3
விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே 2116-4
219. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் 2117-1
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் 2117-2
அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் 2117-3
ம |