Thiruthondar Puranam (Periya Puranam) Twelfth Thirumurai


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5. திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
5. திருநின்ற சருக்கம்

23. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 1706-1 வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 1706-2 நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 1706-3 மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 1706-4 2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 1707-1 சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 1707-2 இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 1707-3 முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 1707-4 3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 1708-1 கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 1708-2 வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 1708-3 புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 1708-4 4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 1709-1 மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 1709-2 சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 1709-3 நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 1709-4

5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 1710-1 கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 1710-2 செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 1710-3 உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 1710-4 6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 1711-1 ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 1711-2 மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 1711-3 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 1711-4 7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 1712-1 பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 1712-2 மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 1712-3 சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 1712-4 8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 1713-1 செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 1713-2 மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 1713-3 நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 1713-4 9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 1714-1 நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 1714-2 கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 1714-3 எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 1714-4 10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 1715-1 காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 1715-2 ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 1715-3 மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 1715-4 11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 1716-1 கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 1716-2 மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 1716-3 குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 1716-4

This webpage was last updated on 16 May 2004

See Also:

  • perumizhalaik kuRumba n^AyanAr purANam in English prose
  • The Puranam Of perumizhalaik kuRumba n^AyanAr in English poetry