thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5 திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

5 திருநின்ற சருக்கம்

22 குலச்சிறை நாயனார் புராணம்
1. பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் 1695-1 செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல் 1695-2 துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது 1695-3 மன்னு வண்மையினார் மண மேற்குடி 1695-4 2. அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் 1696-1 ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய 1696-2 செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை 1696-3 வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் 1696-4 3. காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே 1697-1 வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை 1697-2 யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து 1697-3 ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 1697-4 4. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 1698-1 நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 1698-2 அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் 1698-3 செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 1698-4 5. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் 1699-1 அலகில் தீமையர் ஆயினும் அம்புலி 1699-2 இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் 1699-3 தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் 1699-4

6. பண்பு மிக்கார் பலராய் அணையினும் 1700-1 உண்ப வேண்டி ஒருவர் அணையினும் 1700-2 எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு 1700-3 நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் 1700-4 7. பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து 1701-1 ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை 1701-2 ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் 1701-3 பாதம் நாளும் பரவிய பண்பினார் 1701-4 8. இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் 1702-1 தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் 1702-2 மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் 1702-3 ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் 1702-4 9. ஆய செய்கையர் ஆயவர் ஆறணி 1703-1 நாயனார் திருப் பாதம் நவின்று உளார் 1703-2 பாய சீர் புனை பாண்டி மா தேவியார் 1703-3 மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் 1703-4 10. புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் 1704-1 தென்னர் நாடு திருநீறு போற்றவும் 1704-2 மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி 1704-3 சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் 1704-4 11. வாதில் தோற்ற அமணரை வன் கழுத் 1705-1 தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் 1705-2 யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் 1705-3 வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் 1705-4

This webpage was last updated on 16 May 2004

See Also:

  • kulachchiRai n^AyanAr purANam in English prose
  • The Puranam Of kulachchiRai n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page