thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5 திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

126வது பாடலைக் கேட்க:-

Get the Flash Player to see this player.

5 திருநின்ற சருக்கம்

21 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
திருச்சிற்றம்பலம்
1. திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 1266-1 வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் 1266-2 பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 1266-3 ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 1266-4 2. தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 1267-1 நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 1267-2 சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 1267-3 மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 1267-4 3. புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 1268-1 கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 1268-2 இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் 1268-3 வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் 1268-4 4. காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 1269-1 பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 1269-2 சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 1269-3 மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை 1269-4 5. கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு 1270-1 இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 1270-2 புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப 1270-3 உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் 1270-4 6. கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட 1271-1 மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் 1271-2 பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 1271-3 நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 1271-4 7. நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் 1272-1 பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் 1272-2 துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 1272-3 நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 1272-4 8. மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் 1273-1 உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் 1273-2 வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் 1273-3 கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி 1273-4 9. மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் 1274-1 செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப 1274-2 மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை 1274-3 வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை 1274-4 10. எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் 1275-1 பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் 1275-2 வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி 1275-3 மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் 1275-4

11. மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி 1276-1 அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் 1276-2 பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் 1276-3 சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு 1276-4 12. இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் 1277-1 மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் 1277-2 சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் 1277-3 தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் 1277-4 13. ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை 1278-1 ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி 1278-2 ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் 1278-3 நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் 1278-4 14. மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் 1279-1 அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் 1279-2 புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் 1279-3 கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் 1279-4 15. தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித 1280-1 நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் 1280-2 விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்¢லைவேளாண் 1280-3 குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் 1280-4 16. அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் 1281-1 மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் 1281-2 ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் 1281-3 திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 1281-4 17. புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் 1282-1 மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் 1282-2 நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் 1282-3 திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 1282-4 18. திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் 1283-1 அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ 1283-2 உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் 1283-3 மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 1283-4 19. மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் 1284-1 காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் 1284-2 மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 1284-3 ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் 1284-4 20. மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் 1285-1 தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 1285-2 பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த 1285-3 சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் 1285-4 21. தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் 1286-1 சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் 1286-2 முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை 1286-3 மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் 1286-4 22. அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் 1287-1 முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் 1287-2 மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் 1287-3 பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் 1287-4 23. ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் 1288-1 காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் 1288-2 பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள 1288-3 வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் 1288-4 24. அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு 1289-1 மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் 1289-2 குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் 1289-3 பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் 1289-4 25. கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் 1290-1 முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் 1290-2 மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் 1290-3 அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் 1290-4 26. வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு 1291-1 போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் 1291-2 காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை 1291-3 நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 1291-4 27. ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த 1292-1 தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை 1292-2 மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் 1292-3 தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் 1292-4 28. மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் 1293-1 சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் 1293-2 பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் 1293-3 கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் 1293-4 29. தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் 1294-1 மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த 1294-2 காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் 1294-3 பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் 1294-4 30. ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து 1295-1 பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் 1295-2 மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் 1295-3 பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் 1295-4 31. வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் 1296-1 அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் 1296-2 தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் 1296-3 செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 1296-4 32. எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் 1297-1 அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் 1297-2 இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய 1297-3 வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 1297-4 33. அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற 1298-1 பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் 1298-2 என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் 1298-3 முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 1298-4 34. தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா 1299-1 உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி 1299-2 அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி 1299-3 இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 1299-4 35. மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் 1300-1 தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் 1300-2 காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் 1300-3 ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 1300-4 36. கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் 1301-1 மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் 1301-2 நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் 1301-3 யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 1301-4 37. நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை 1302-1 அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் 1302-2 நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் 1302-3 கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 1302-4 38. பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 1303-1 மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு 1303-2 வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் 1303-3 கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 1303-4 39. அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் 1304-1 பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் 1304-2 துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 1304-3 தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 1304-4 40. அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் 1305-1 சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் 1305-2 உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய 1305-3 வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 1305-4 41. அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் 1306-1 செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் 1306-2 தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ 1306-3 நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் 1306-4 42. பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் 1307-1 ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் 1307-2 நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் 1307-3 சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 1307-4 43. சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் 1308-1 குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் 1308-2 அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் 1308-3 துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 1308-4 44. புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற 1309-1 நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு 1309-2 மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் 1309-3 பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 1309-4 45. நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் 1310-1 கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் 1310-2 கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு 1310-3 மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து 1310-4 46. தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை 1311-1 ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை 1311-2 ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள 1311-3 வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 1311-4 47. தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் 1312-1 அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் 1312-2 சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் 1312-3 பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் 1312-4 48. மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் 1313-1 உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் 1313-2 முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் 1313-3 அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 1313-4 49. பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் 1314-1 தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் 1314-2 கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய 1314-3 மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் 1314-4 50. அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது 1315-1 வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் 1315-2 கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் 1315-3 படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் 1315-4 51. அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் 1316-1 விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி 1316-2 உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் 1316-3 நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் 1316-4 52. அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் 1317-1 கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை 1317-2 இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் 1317-3 தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் 1317-4 53. புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது 1318-1 குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை 1318-2 கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் 1318-3 பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் 1318-4 54. தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி 1319-1 ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் 1319-2 ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் 1319-3 போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று 1319-4 55. குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு 1320-1 மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் 1320-2 பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் 1320-3 கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 1320-4 56. ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் 1321-1 பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி 1321-2 ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் 1321-3 தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 1321-4 57. கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை 1322-1 எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த 1322-2 நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு 1322-3 அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் 1322-4 58. என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து 1323-1 நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் 1323-2 சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய 1323-3 அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 1323-4 59. அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 1324-1 எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 1324-2 ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் 1324-3 செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என 1324-4 60. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி 1325-1 அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு 1325-2 உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் 1325-3 தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 1325-4 61. பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து 1326-1 மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து 1326-2 கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் 1326-3 செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 1326-4 62. சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் 1327-1 குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று 1327-2 இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் 1327-3 திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் 1327-4 63. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி 1328-1 நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் 1328-2 இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 1328-3 உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து 1328-4 64. தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி 1329-1 ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது 1329-2 கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது 1329-3 மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் 1329-4 65. மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் 1330-1 உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் 1330-2 கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் 1330-3 பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 1330-4 66. என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 1331-1 நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து 1331-2 சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் 1331-3 குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 1331-4 67. திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப 1332-1 பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு 1332-2 உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி 1332-3 தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் 1332-4 68. நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் 1333-1 மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் 1333-2 சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 1333-3 ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 1333-4 69. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக 1334-1 வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் 1334-2 தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் 1334-3 உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் 1334-4 70. நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக 1335-1 மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் 1335-2 கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம் 1335-3 போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால் 1335-4 71. மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் 1336-1 அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் 1336-2 செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் 1336-3 முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே 1336-4 72. அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் 1337-1 பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் 1337-2 இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் 1337-3 தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் 1337-4 73. பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் 1338-1 அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் 1338-2 மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் 1338-3 இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் 1338-4 74. மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 1339-1 பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 1339-2 நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 1339-3 யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே 1339-4 75. இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 1340-1 சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா 1340-2 அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் 1340-3 மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே 1340-4 76. பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 1341-1 அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 1341-2 முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 1341-3 நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 1341-4 77. மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் 1342-1 மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே 1342-2 எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் 1342-3 கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே 1342-4 78. மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் 1343-1 தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத்தன்மைப் பதி மேவியதா பதியார் 1343-2 பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா 1343-3 எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே 1343-4 79. இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி 1344-1 மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் 1344-2 பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் 1344-3 புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் 1344-4 80. தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை 1345-1 ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் 1345-2 பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் 1345-3 மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் 1345-4 81. மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் 1346-1 நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் 1346-2 கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் 1346-3 தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் 1346-4 82. இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி 1347-1 மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 1347-2 சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் 1347-3 செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 1347-4 83. தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் 1348-1 பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு 1348-2 எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் 1348-3 தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் 1348-4 84. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் 1349-1 முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே 1349-2 இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல 1349-3 மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் 1349-4 85. உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் 1350-1 கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் 1350-2 அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன 1350-3 இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 1350-4 86. அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து 1351-1 கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற 1351-2 வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் 1351-3 கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் 1351-4 87. கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் 1352-1 நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு 1352-2 உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் 1352-3 சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் 1352-4 88. விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து 1353-1 புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு 1353-2 உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே 1353-3 கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் 1353-4 89. தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய 1354-1 நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை 1354-2 அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் 1354-3 கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் 1354-4 90. அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று 1355-1 மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் 1355-2 தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 1355-3 பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் 1355-4 91. அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 1356-1 முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 1356-2 விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 1356-3 பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 1356-4 92. சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து 1357-1 மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை 1357-2 இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என 1357-3 நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 1357-4 93. நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் 1358-1 கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் 1358-2 தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி 1358-3 ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் 1358-4 94. ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி 1359-1 வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் 1359-2 ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் 1359-3 மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் 1359-4 95. பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை 1360-1 வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் 1360-2 சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத 1360-3 புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 1360-4 96. அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் 1361-1 பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை 1361-2 உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் 1361-3 திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 1361-4 97. ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் 1362-1 தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே 1362-2 ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று 1362-3 மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் 1362-4 98. வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 1363-1 தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 1363-2 மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 1363-3 ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 1363-4 99. மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் 1364-1 பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை 1364-2 ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை 1364-3 ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் 1364-4 100. ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் 1365-1 பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் 1365-2 கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் 1365-3 தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் 1365-4 101. ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் 1366-1 தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி 1366-2 ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே 1366-3 ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் 1366-4 102. அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் 1367-1 இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து 1367-2 மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று 1367-3 முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் 1367-4 103. ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் 1368-1 ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் 1368-2 தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் 1368-3 பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் 1368-4 104. நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று 1369-1 வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே 1369-2 செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் 1369-3 வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் 1369-4 105. பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் 1370-1 முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் 1370-2 படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய 1370-3 அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ 1370-4 106. அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப 1371-1 வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே 1371-2 இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் 1371-3 தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் 1371-4 107. நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் 1372-1 தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் 1372-2 எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் 1372-3 துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் 1372-4 108. மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் 1373-1 செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப 1373-2 உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் 1373-3 கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் 1373-4 109. மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் 1374-1 கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் 1374-2 பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் 1374-3 கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் 1374-4 110. கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு 1375-1 மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் 1375-2 தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் 1375-3 வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் 1375-4 111. பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா 1376-1 மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா 1376-2 ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா 1376-3 வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் 1376-4 112. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் 1377-1 படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் 1377-2 கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் 1377-3 முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே 1377-4 113. மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் 1378-1 கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் 1378-2 சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று 1378-3 ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே 1378-4 114. பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் 1379-1 நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் 1379-2 ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் 1379-3 சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் 1379-4 115. அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு 1380-1 விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் 1380-2 சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை 1380-3 மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் 1380-4 116. வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் 1381-1 செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் 1381-2 வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் 1381-3 அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 1381-4 117. தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் 1382-1 கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் 1382-2 தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் 1382-3 எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 1382-4 118. ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் 1383-1 தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து 1383-2 மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி 1383-3 ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 1383-4 119. ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து 1384-1 நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக 1384-2 நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல 1384-3 ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே 1384-4 120. யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் 1385-1 மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் 1385-2 தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப 1385-3 மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 1385-4 121. நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் 1386-1 எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் 1386-2 பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் 1386-3 பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் 1386-4 122. அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் 1387-1 தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் 1387-2 சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 1387-3 கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 1387-4 123. ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் 1388-1 தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் 1388-2 பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் 1388-3 வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 1388-4 124. அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த 1389-1 வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் 1389-2 செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் 1389-3 பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் 1389-4 125. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் 1390-1 ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 1390-2 எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று 1390-3 செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் 1390-4 126. சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி 1391-1 நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று 1391-2 அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு 1391-3 பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் 1391-4 127. பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் 1392-1 அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு 1392-2 அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் 1392-3 கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே 1392-4 128. அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் 1393-1 தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் 1393-2 தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் 1393-3 மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் 1393-4 129. இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் 1394-1 வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட 1394-2 அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் 1394-3 ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ 1394-4 130. அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் 1395-1 கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் 1395-2 தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட 1395-3 வருணனும் செய்தனன் முன்பு மா தவம் 1395-4 131. வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் 1396-1 சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட 1396-2 ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் 1396-3 பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் 1396-4 132. அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை 1397-1 மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ 1397-2 எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் 1397-3 தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே 1397-4 133. தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் 1398-1 செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் 1398-2 கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற 1398-3 விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் 1398-4 134. ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் 1399-1 தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று 1399-2 வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் 1399-3 சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே 1399-4 135. மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி 1400-1 வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் 1400-2 உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் 1400-3 செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் 1400-4 136. தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் 1401-1 மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் 1401-2 பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் 1401-3 காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் 1401-4 137. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் 1402-1 எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள 1402-2 மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் 1402-3 தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 1402-4 138. மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி 1403-1 இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் 1403-2 தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி 1403-3 அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 1403-4 139. மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் 1404-1 இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் 1404-2 பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் 1404-3 தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே 1404-4 140. தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் 1405-1 நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் 1405-2 பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் 1405-3 மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே 1405-4 141. கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் 1406-1 மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் 1406-2 உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் 1406-3 தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே 1406-4 142. இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த 1407-1 மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 1407-2 அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் 1407-3 செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே 1407-4 143. உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி 1408-1 நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே 1408-2 எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று 1408-3 தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் 1408-4 144. அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை 1409-1 விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் 1409-2 தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் 1409-3 பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் 1409-4 145. புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 1410-1 பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய 1410-2 அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து 1410-3 வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் 1410-4 146. வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த 1411-1 காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் 1411-2 பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 1411-3 கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் 1411-4 147. இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு 1412-1 மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் 1412-2 பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் 1412-3 சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் 1412-4 148. திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் 1413-1 அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா 1413-2 மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் 1413-3 பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் 1413-4 149. கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் 1414-1 சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி 1414-2 வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் 1414-3 பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 1414-4 150. புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் 1415-1 தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு 1415-2 என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று 1415-3 பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் 1415-4 151. பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து 1416-1 முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் 1416-2 தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை 1416-3 நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 1416-4 152. நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற 1417-1 ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் 1417-2 மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் 1417-3 சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 1417-4 153. ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் 1418-1 தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து 1418-2 தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் 1418-3 ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் 1418-4 154. தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் 1419-1 பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் 1419-2 பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் 1419-3 தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து 1419-4 155. வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள 1420-1 தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் 1420-2 கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் 1420-3 புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் 1420-4 156. ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 1421-1 வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி 1421-2 ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து 1421-3 தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் 1421-4 157. நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் 1422-1 மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 1422-2 காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 1422-3 வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார் 1422-4 158. முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் 1423-1 அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் 1423-2 பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு 1423-3 உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும் 1423-4 159. அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் 1424-1 பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் 1424-2 பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் 1424-3 செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் 1424-4 160. அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் 1425-1 தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் 1425-2 இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே 1425-3 சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை 1425-4 161. அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் 1426-1 நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் 1426-2 செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் 1426-3 பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார் 1426-4 162. அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் 1427-1 மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 1427-2 கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் 1427-3 செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி 1427-4 163. நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 1428-1 புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் 1428-2 பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று 1428-3 எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் 1428-4 164. மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் 1429-1 கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே 1429-2 ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 1429-3 ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார் 1429-4 165. வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா 1430-1 அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 1430-2 புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் 1430-3 களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார் 1430-4 166. நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே 1431-1 கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் 1431-2 தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 1431-3 ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் 1431-4 167. கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே 1432-1 பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின 1432-2 பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு 1432-3 ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் 1432-4 168. இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் 1433-1 அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 1433-2 மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் 1433-3 சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் 1433-4 169. பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் 1434-1 அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று 1434-2 இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி 1434-3 கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் 1434-4 170. நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் 1435-1 ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் 1435-2 கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் 1435-3 பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார் 1435-4 171. அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் 1436-1 திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு 1436-2 பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து 1436-3 விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட 1436-4 172. மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் 1437-1 சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் 1437-2 காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் 1437-3 நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ 1437-4 173. சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 1438-1 வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று 1438-2 அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி 1438-3 நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் 1438-4 174. மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி 1439-1 நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் 1439-2 நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 1439-3 தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் 1439-4 175. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை 1440-1 பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 1440-2 விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேலி ஆடல் 1440-3 புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் 1440-4 176. செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 1441-1 அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த 1441-2 நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 1441-3 தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் 1441-4 177. கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண் 1442-1 விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 1442-2 அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 1442-3 உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார் 1442-4 178. ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே 1443-1 ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 1443-2 காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 1443-3 வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த 1443-4 179. அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் 1444-1 பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே 1444-2 எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 1444-3 செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார் 1444-4 180. தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் 1445-1 கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 1445-2 தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 1445-3 வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் 1445-4 181. நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் 1446-1 ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 1446-2 காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு 1446-3 மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார் 1446-4 182. தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 1447-1 பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 1447-2 எழுதரிய மலக்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை 1447-3 அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் 1447-4 183. அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 1448-1 செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி 1448-2 எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி 1448-3 உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் 1448-4 184. பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான 1449-1 வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 1449-2 உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் 1449-3 வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் 1449-4 185. அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் 1450-1 பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய 1450-2 இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் 1450-3 தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே 1450-4 186. பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 1451-1 விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் 1451-2 சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 1451-3 கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி 1451-4 187. பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று 1452-1 பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 1452-2 அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து 1452-3 மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் 1452-4 188. அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத 1453-1 சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 1453-2 மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற 1453-3 மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் 1453-4 189. ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 1454-1 மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான 1454-2 நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் 1454-3 காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் 1454-4 190. மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 1455-1 காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி 1455-2 பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே 1455-3 ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் 1455-4 191. ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 1456-1 மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2 பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் 1456-3 பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத் தொண்டு போற்றிச் செய்வார் 1456-4 192. எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு 1457-1 மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 1457-2 பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 1457-3 செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் 1457-4 193. சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை 1458-1 குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் 1458-2 என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் 1458-3 முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் 1458-4 194. கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் 1459-1 பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று 1459-2 நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் 1459-3 வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் 1459-4 195. நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் 1460-1 மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் 1460-2 உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம் 1460-3 சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான் 1460-4 196. நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று 1461-1 புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் 1461-2 நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத 1461-3 தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் 1461-4 197. நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் 1462-1 மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து 1462-2 பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் 1462-3 தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் 1462-4 198. கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் 1463-1 திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் 1463-2 பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் 1463-3 ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 1463-4 199. ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் 1464-1 வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து 1464-2 காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு 1464-3 நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 1464-4 200. அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் 1465-1 ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் 1465-2 மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் 1465-3 செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 1465-4 201. அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 1466-1 தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் 1466-2 பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை 1466-3 வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 1466-4 202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 1467-1 சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 1467-2 கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 1467-3 பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 1467-4 203. காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் 1468-1 பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் 1468-2 வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் 1468-3 ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 1468-4 204. திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் 1469-1 பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு 1469-2 தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் 1469-3 குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் 1469-4 205. ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே 1470-1 பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் 1470-2 தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள 1470-3 ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 1470-4 206. தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் 1471-1 தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் 1471-2 மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் 1471-3 தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 1471-4 207. தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி 1472-1 எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச 1472-2 உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் 1472-3 நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 1472-4 208. அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இ