thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்

18 திருநாளைப் போவர் நாயனார் புராணம்
1. பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் 1041-1 திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் 1041-2 முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும் 1041-3 அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர் 1041-4 2. நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் 1042-1 சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர் 1042-2 ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச் 1042-3 சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம் 1042-4 3. நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் 1043-1 தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக் 1043-2 கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப் 1043-3 புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை 1043-4 4. பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின் 1044-1 தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த 1044-2 வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின் 1044-3 நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும் 1044-4 5. வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும் 1045-1 வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம் 1045-2 புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய் 1045-3 அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர் 1045-4 6. மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் 1046-1 சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப் 1046-2 பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப் 1046-3 புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி 1046-4 7. கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் 1047-1 வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ் 1047-2 கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட 1047-3 ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி 1047-4 8. வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் 1048-1 தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல் 1048-2 மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும் 1048-3 புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும் 1048-4 9. செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக் 1049-1 குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை 1049-2 வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் 1049-3 நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும் 1049-4 10. புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும் 1050-1 தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது 1050-2 விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் 1050-3 கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும் 1050-4 11. இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் 1051-1 மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் 1051-2 அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் 1051-3 ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் 1051-4

12. பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் 1052-1 சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் 1052-2 மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த 1052-3 அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் 1052-4 13. ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு 1053-1 சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் 1053-2 கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும் 1053-3 பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 1053-4 14. போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை 1054-1 நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் 1054-2 சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு 1054-3 ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 1054-4 15. இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும் 1055-1 செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று 1055-2 மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் 1055-3 அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் 1055-4 16. திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து 1056-1 விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே 1056-2 அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் 1056-3 வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார் 1056-4 17. சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில் 1057-1 நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் 1057-2 கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு 1057-3 போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார் 1057-4 18. சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று 1058-1 பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து 1058-2 சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல் 1058-3 அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார் 1058-4 19. வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால் 1059-1 தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான் 1059-2 இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து 1059-3 நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார் 1059-4 20. இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி 1060-1 மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த 1060-2 சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச 1060-3 உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப 1060-4 21. அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த 1061-1 ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை 1061-2 என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார் 1061-3 நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார் 1061-4 22. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது 1062-1 பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய் 1062-2 பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய் 1062-3 வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார் 1062-4 23. செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து 1063-1 பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் 1063-2 மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு 1063-3 அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் 1063-4 24. நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் 1064-1 சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார் 1064-2 குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள் 1064-3 ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள் 1064-4 25. இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி 1065-1 அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல் 1065-2 ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே 1065-3 செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார் 1065-4 26. இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய 1066-1 அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி 1066-2 மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது 1066-3 எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் 1066-4 27. இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் 1067-1 அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி 1067-2 மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு 1067-3 முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார் 1067-4 28. இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி 1068-1 முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து 1068-2 அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க 1068-3 மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் 1068-4 29. தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் 1069-1 அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி 1069-2 எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித் 1069-3 தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார் 1069-4 30. ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம் 1070-1 வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப 1070-2 நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார் 1070-3 தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் 1070-4 31. மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப் 1071-1 பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் 1071-2 நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி 1071-3 இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார் 1071-4 32. கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார் 1072-1 எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் 1072-2 பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய் 1072-3 மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் 1072-4 33. செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த 1073-1 அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் 1073-2 வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் 1073-3 பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் 1073-4 34. திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார் 1074-1 பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார் 1074-2 அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க 1074-3 வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் 1074-4 35. தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி 1075-1 ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி 1075-2 ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் 1075-3 எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் 1075-4 36. அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார் 1076-1 வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து 1076-2 சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க 1076-3 அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் 1076-4 37. மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து 1077-1 ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார் 1077-2 தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப் 1077-3 பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம் 1077-4

This webpage was last updated on 16 May 2004

See Also:

  • thirunALaippOvAr nAyanAr purANam in English prose
  • The Puranam Of thirunALaippOvAr n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page