thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்

17 உருத்திர பசுபதி நாயனார் புராணம்
1. நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம் 1031-1 மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக் 1031-2 குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித் 1031-3 தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர் 1031-4 2. வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ 1032-1 தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை 1032-2 ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர் 1032-3 தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும் 1032-4 3. அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத் 1033-1 துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் 1033-2 செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி 1033-3 பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார் 1033-4 4. ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு 1034-1 மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும் 1034-2 தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி 1034-3 நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் 1034-4 5. கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு 1035-1 பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும் 1035-2 நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய 1035-3 விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி 1035-4

6. தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய 1036-1 உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத் 1036-2 தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் 1036-3 கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் 1036-4 7. அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை 1037-1 வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே 1037-2 திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் 1037-3 ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் 1037-4 8. காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த 1038-1 வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி 1038-2 ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம் 1038-3 தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார் 1038-4 9. நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் 1039-1 ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப் 1039-2 பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம் 1039-3 கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற 1039-4 10. அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால் 1040-1 பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி 1040-2 எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம் 1040-3 செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் 1040-4

This webpage was last updated on 16 May 2004

See Also:

  • uruththira pasupathi nAyanAr purANam in English prose
  • The Puranam Of uruththira pasupathi n^AyanAr in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page