|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
4 மும்மையால் உலகாண்ட சருக்கம்
16 முருக நாயனார் புராணம்
1. தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை சூழும் திருமேனி 1017-1
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி 1017-2
சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டுப் 1017-3
போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம் புகலூர் 1017-4
2. நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த 1018-1
சேம நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால் 1018-2
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் 1018-3
காமர் மதுவுண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்குமால் 1018-4
3. நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய 1019-1
வண்ண மதுரத் தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல 1019-2
தண்ணென் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின் 1019-3
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந் தேன் பொழியுமால் 1019-4
4. வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன 1020-1
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல 1020-2
அண்டர் பெருமான் திருப் பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும் 1020-3
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால் 1020-4
5. ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில் 1021-1
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை முதல்வர் 1021-2
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடிக் கீழ் 1021-3
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் 1021-4
6. அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள் 1022-1
மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய் 1022-2
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றைச் 1022-3
சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார் 1022-4
7. புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய் 1023-1
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி 1023-2
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த 1023-3
அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார் 1023-4
8. கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின் 1024-1
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில் 1024-2
காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண் 1024-3
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து 1024-4
9. கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் 1025-1
இண்டைச் சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் 1025-2
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் 1025-3
நுண்டாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர் 1025-4
10. ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத் 1026-1
தாங்கிக் கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் 1026-2
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான 1026-3
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் 1026-4
11. தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம் 1027-1
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில் 1027-2
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட 1027-3
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் 1027-4
12. அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் 1028-1
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து 1028-2
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே 1028-3
பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் 1028-4
13. அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார் 1029-1
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச் 1029-2
செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த அருளின் பொருள் அளிக்கத் 1029-3
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் 1029-4
14. அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் 1030-1
விரவு புகலூர் முருகனார் மெய்மைத் தொண்டின் திறம் போற்றிக் 1030-2
கரவில் அவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு 1030-3
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன் 1030-4
This webpage was last updated on 16 May 2004
|
|