|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
6 விறன்மிண்ட நாயனார் புராணம்
1. விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம்
கழல் பரவிப் 0491-1
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு 0491-2
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் 0491-3
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு 0491-4
2. வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும் 0492-1
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் 0492-2
மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் 0492-3
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் 0492-4
3. என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான் 0493-1
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால்
ஆய்ந்த மறை 0493-2
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார் 0493-3
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம் 0493-4
4. அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை
விளக்க அவதரித்தார் 0494-1
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி 0494-2
எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் 0494-3
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர் 0494-4
5. நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த 0495-1
பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் 0495-2
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து 0495-3
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார் 0495-4
6. பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் 0496-1
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க
நடை செலுத்தி 0496-2
வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர் 0496-3
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் 0496-4
7. திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து 0497-1
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது 0497-2
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று
உரைப்பச் சிவன் அருளால் 0497-3
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் 0497-4
8. சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார்
அடியார் திருக்கூட்டம் 0498-1
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப் 0498-2
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று
உரைக்க மற்றவர் பால் 0498-3
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் 0498-4
9. ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின் 0499-1
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள் 0499-2
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால் 0499-3
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார் 0499-4
10. ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை 0500-1
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் 0500-2
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ் 0500-3
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் 0500-4
1.1 வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு
விளங்க வரும் 0501-1
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை 0501-2
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே 0501-3
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம் 0501-4
This webpage was last updated on 16 May 2004
|
|