|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
5 மெய்ப்பொருள் நாயனார் புராணம்
1. சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி 0467-1
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் 0467-2
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு 0467-3
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் 0467-4
2. அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து 0468-1
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி 0468-2
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் 0468-3
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் 0468-4
3. மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில் 0469-1
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல் 0469-2
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார் 0469-3
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார் 0469-4
4. தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் 0470-1
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று 0470-2
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது 0470-3
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார் 0470-4
5. இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் 0471-1
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு 0471-2
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும் 0471-3
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான் 0471-4
6. இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் 0472-1
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் 0472-2
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச் 0472-3
செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான் 0472-4
7. மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் 0473-1
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி 0473-2
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் 0473-3
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் 0473-4
8. மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும் 0474-1
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது 0474-2
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச் 0474-3
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான் 0474-4
9. கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே 0475-1
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத் 0475-2
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன் 0475-3
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும்
இறைவன் என்றான் 0475-4
10. என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு
உறுதி கூற 0476-1
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப் 0476-2
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே 0476-3
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான் 0476-4
1.1 கண்டு சென்று அணையும் போது கதும் என
இழிந்து தேவி 0477-1
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் 0477-2
அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை 0477-3
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின்
வணங்கி நின்று 0477-4
12. மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து
அணைந்தது என்ன 0478-1
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற 0478-2
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம
நூல் மண்மேல் 0478-3
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் 0478-4
13. பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான்
அருள் செய்த இந்த 0479-1
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன 0479-2
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும் 0479-3
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன்
விளம்ப வேந்தன் 0479-4
14. திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப் 0480-1
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித் 0480-2
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும் 0480-3
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்
செய்யும் என்றான் 0480-4
15. கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை
மடி மேல் வைத்துப் 0481-1
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர்
வணங்கும் போதில் 0481-2
பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய 0481-3
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத்
தொழுது வென்றார் 0481-4
16. மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு
வைத்த தத்தன் 0482-1
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் 0482-2
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் 0482-3
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத்
தடுத்து வீழ்ந்தார் 0482-4
17. வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட 0483-1
தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி 0483-2
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக 0483-3
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் 0483-4
18. அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத்
தீங்கு செய்த 0484-1
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை
சூழ்ந்த போது 0484-2
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன்
கொண்டு போவான் 0484-3
இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான் 0484-4
19. அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச் 0485-1
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து 0485-2
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர 0485-3
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின்
மீண்டு போந்தான் 0485-4
20. மற்று அவன் கொண்டு போன வஞ்சனை
வேடத்தான் மேல் 0486-1
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட 0486-2
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் 0486-3
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் 0486-4
21. சென்று அடி வணங்கி நின்று செய் தவ
வேடம் கொண்டு 0487-1
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற 0487-2
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று 0487-3
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் 0487-4
2.2 அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் 0488-1
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே 0488-2
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று 0488-3
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார் 0488-4
23. தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார்
அவர் முன் தம்மைக் 0489-1
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க 0489-2
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக் 0489-3
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் 0489-4
24. இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான்
அன்பர் என்றே 0490-1
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில் 0490-2
என் உரை செய்தேன் ஆக இகல் விறன்
மிண்டர் பொற் தாள் 0490-3
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு
செப்பல் உற்றேன் 0490-4
This webpage was last updated on 16 May 2004
|
|