thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

திருச்சிற்றம்பலம் 
 
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

4 இளையான்குடி மாற நாயனார் புராணம்
1. அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் 0440-1 தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார் 0440-2 நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் 0440-3 இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார் 0440-4 2. ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும் 0441-1 நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர் 0441-2 சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் 0441-3 பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் 0441-4 3. ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால் 0442-1 நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் 0442-2 கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து 0442-3 ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின் 0442-4 4. கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே 0443-1 மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின் 0443-2 உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா 0443-3 அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார் 0443-4

5. ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே 0444-1 நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் 0444-2 நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் 0444-3 தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் 0444-4 6. செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால் 0445-1 அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே 0445-2 மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து 0445-3 ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் 0445-4 7. இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி 0446-1 மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் 0446-2 தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் 0446-3 முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் 0446-4 8. மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக் 0447-1 கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர் 0447-2 பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர் 0447-3 நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் 0447-4 9. மாரிக் காலத்து இரவினில் வைகியோர் 0448-1 தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது 0448-2 பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற 0448-3 வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன் 0448-4 10. ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து 0449-1 ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால் 0449-2 தார மாதரை நோக்கித் தபோதனர் 0449-3 தீரவே பசித்தார் செய்வது என் என்று 0449-4 11. நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும் 0450-1 இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர் 0450-2 தமக்கு நாம் இன் அடிசில் தகவுற 0450-3 அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என 0450-4 12. மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன் 0451-1 ஏதிலாரும் இனித் தருவார் இல்லை 0451-2 போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை 0451-3 தீது செய்வினை யேற்கு என் செயல் 0451-4 13. செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல் 0452-1 மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால் 0452-2 வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று 0452-3 அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற 0452-4 14. மற்ற மாற்றம் மனைவியார் கூற முன் 0453-1 பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து 0453-2 உற்ற காதலினால் ஒருப் பட்டனர் 0453-3 சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார் 0453-4 15. பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து 0454-1 அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான் 0454-2 கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு 0454-3 உருகு கின்றது போன்றது உலகு எலாம் 0454-4 16. எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும் 0455-1 துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில் 0455-2 வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று 0455-3 நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து 0455-4 17. உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக் 0456-1 கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப் 0456-2 புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார் 0456-3 வள்ளலார் இளையான் குடி மாறனார் 0456-4 18. காலினால் தடவிச் சென்று கைகளால் 0457-1 சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன 0457-2 கோலி வாரி இடா நிறையக் கொண்டு 0457-3 மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார் 0457-4 19. வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச் 0458-1 சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி 0458-2 வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் 0458-3 அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார் 0458-4 20. முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள 0459-1 வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து 0459-2 வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார் 0459-3 கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை 0459-4 21. வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே 0460-1 அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று 0460-2 குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் 0460-3 பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க 0460-4 22. மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து 0461-1 புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை 0461-2 வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை 0461-3 நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று 0461-4 23. கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி 0462-1 இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன 0462-2 உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி 0462-3 அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் 0462-4 24. அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால் 0463-1 எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று 0463-2 தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச் 0463-3 செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் 0463-4 25. மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச் 0464-1 சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே 0464-2 ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச் 0464-3 சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி 0464-4 26. அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் 0465-1 என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே 0465-2 முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப 0465-3 இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான் 0465-4 27. இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி 0466-1 முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார் 0466-2 அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு 0466-3 மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன் 0466-4
This webpage was last updated on 16 May 2004

See Also:

  • iLaiyAnkudimARa nAyanAr purANam in English prose
  • The Puranam Of iLaiyAnkudimARa Nayanar in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page