|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
முதற் காண்டம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
2 திருநீலகண்ட நாயனார் புராணம்
1. வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார் 0360-1
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே 0360-2
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும் 0360-3
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார் 0360-4
2. பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை
முடியார்க்கு அன்பர் 0361-1
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார் 0361-2
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார் 0361-3
சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார் 0361-4
3. அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம்
அமுதுக்கு ஆக்கி 0362-1
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும் 0362-2
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் 0362-3
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார் 0362-4
4. அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் 0363-1
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் 0363-2
தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று 0363-3
சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார் 0363-4
5. ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால்
அணைந்து நண்ண 0364-1
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை 0364-2
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் 0364-3
தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார் 0364-4
6. மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று 0365-1
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி
அனையார் தம்மை 0365-2
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் 0365-3
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார் 0365-4
7. ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் 0366-1
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 0366-2
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை 0366-3
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் 0366-4
8. கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் 0367-1
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய 0367-2
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி 0367-3
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார் 0367-4
9. இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற 0368-1
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல 0368-2
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து 0368-3
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் 0368-4
10. இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட 0369-1
மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை
விளக்கங் காண 0369-2
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் 0369-3
அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி 0369-4
11. கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா 0370-1
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல் 0370-2
தோளடு மார்பிடைத் துவளும் நூலுடன் 0370-3
நீளளி வளர் திரு முண்ட நெற்றியும் 0370-4
12. நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும் 0371-1
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட 0371-2
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய் 0371-3
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் 0371-4
13. நண்ணிய தவச் சிவ யோக நாதரைக் 0372-1
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் 0372-2
புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து 0372-3
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார் 0372-4
14. பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று 0373-1
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட 0373-2
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள் 0373-3
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின் 0373-4
15. எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் 0374-1
வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார் 0374-2
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து 0374-3
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று 0374-4
16. தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத் 0375-1
துன்னிய யாவையும் தூய்மை செய்வது 0375-2
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது 0375-3
இன்ன தன்மையது இது வாங்கு நீ என 0375-4
17. தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய 0376-1
மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு 0376-2
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் 0376-3
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் 0376-4
18. வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் 0377-1
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் 0377-2
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர் 0377-3
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் 0377-4
19. சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த 0378-1
கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச் 0378-2
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால் 0378-3
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல்
மனையில் வந்தார் 0378-4
20. வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து 0379-1
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப 0379-2
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு 0379-3
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் 0379-4
21. என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு 0380-1
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர்
திகைத்து நோக்கி 0380-2
நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை 0380-3
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது
ஒன்று இன்றி நின்றார் 0380-4
22. மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும் 0381-1
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட 0381-2
இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து 0381-3
கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார் 0381-4
23. இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன 0382-1
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன் 0382-2
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன்
கொண்டு இப் 0382-3
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று
இறைஞ்சி நின்றார் 0382-4
24. சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச்
செயிர்த்து நோக்கி 0383-1
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப் 0383-2
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங்
கொள்ளேன் போற்ற 0383-3
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா
என்றான் முன்னோன் 0383-4
25. கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது
கெடுதலாலே 0384-1
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால 0384-2
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது 0384-3
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம்
ஒழித்தது என்ன 0384-4
26. ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை
வௌவிப் 0385-1
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் 0385-2
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப் 0385-3
போவதும் செய்யேன் என்றான் புண்ணியப்
பொருளாய் நின்றான் 0385-4
27. வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை 0386-1
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன 0386-2
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக் 0386-3
குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான்
கொடுமை இல்லான் 0386-4
28. ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப் 0387-1
பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன்
புகலும் என்ன 0387-2
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி 0387-3
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் 0387-4
29. கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற 0388-1
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் 0388-2
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை 0388-3
பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என 0388-4
30. தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி 0389-1
அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே 0389-2
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் 0389-3
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான்
எனச் சென்றார் 0389-4
31. நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின்
துறை போனார் 0390-1
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில் 0390-2
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும் 0390-3
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார் 0390-4
32. அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு
மறையோர் முன் பகர்வான் 0391-1
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத் 0391-2
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி 0391-3
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார் 0391-4
33. நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும் 0392-1
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் 0392-2
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர்
உரை செய்வார் 0392-3
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என 0392-4
34. நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு 0393-1
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் 0393-2
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று 0393-3
சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர்
உரைசெய்தார் 0393-4
35. திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் 0394-1
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக்
கொடுத்தீர் ஆனால் 0394-2
தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில் 0394-3
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார் 0394-4
36. அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர்
மொழியக் கேட்டுத் 0395-1
திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார் 0395-2
பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று 0395-3
பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம்
மனையைச் சார்ந்தார் 0395-4
37. மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ
யோகியார் முன் 0396-1
சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர் 0396-2
நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார் 0396-3
புனை மணி வேணுத் தண்டின் இரு தலை
பிடித்துப் புக்கார் 0396-4
38. தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி 0397-1
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக் 0397-2
கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப் 0397-3
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் 0397-4
39. வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் 0398-1
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத் 0398-2
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப் 0398-3
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற 0398-4
40. அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் 0399-1
முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை 0399-2
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் 0399-3
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை
மேல் கொண்டார் 0399-4
41. கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல் 0400-1
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி 0400-2
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல்
வருவார் தம்மைத் 0400-3
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன்
போற்றி நின்றார் 0400-4
42. மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர்
மனைகள் தோறும் 0401-1
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும் 0401-2
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால் 0401-3
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே 0401-4
43. விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச்
செவ்வாய் மென் தோள் 0402-1
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த 0402-2
திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப் 0402-3
பெறல் அரும் இளமை பெற்றுப் பேர்
இன்பம் உற்றார் அன்றே 0402-4
44. அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த 0403-1
மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப் 0403-2
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில் 0403-3
செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு
செப்பல் உற்றேன் 0403-4
This webpage was last updated on 16 May 2004
|
|