thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

2 தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.

இசையை கேட்க 2வது பாடல்:-

Get the Flash Player to see this player.

1 தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம் 1. ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் 0350-1 சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் 0350-2 பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் 0350-3 போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி 0350-4 2. கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி 0351-1 அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம் 0351-2 சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று 0351-3 பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி 0351-4 3. போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் 0352-1 நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் 0352-2 போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் 0352-3 ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார் 0352-4 4. பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி 0353-1 மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் 0353-2 தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே 0353-3 அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார் 0353-4 5. வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க 0354-1 தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் 0354-2 அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் 0354-3 திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார் 0354-4 6. மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் 0355-1 அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் 0355-2 உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார் 0355-3 பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார் 0355-4

7. ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார் 0356-1 தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் 0356-2 ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும் 0356-3 மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் 0356-4 8. செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் 0357-1 மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை 0357-2 இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் 0357-3 தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் 0357-4 9. இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ 0358-1 தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட 0358-2 அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் 0358-3 முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால் 0358-4 10. அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் 0359-1 புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ 0359-2 நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை 0359-3 திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் 0359-4

This webpage was last updated on 31 August 2008

See Also:

  • thillaivAzhandhaNar purANam in English prose
  • The Puranam Of thillaivaz anthaNar in English poetry

    1. Back to periya purANam Page
    2. Back to thirumuRai Page
    3. Back to Shaiva Sidhdhantha Home Page