|
Home > Shaiva Siddhanta > Thirumurai > 11th ThirumuRai
11th tirumuRai collections
(825 pAcurams of several authors)
(in tamil script, unicode format)
பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
பாசுரங்கள் 1
1. திருஆலவாய் உடையார் பாசுரம் (1)
1.1 திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்
|
1. |
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் ( 5)
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால் (10)
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. | 1 |
திருச்சிற்றம்பலம்
This web page last revised on 14 March 2002
Back to 11th thirumuRai Page
Back to thirumuRai Main Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|