சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.101 திருநாகைக்காரோணம்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

1027

பொன்னாம் இதழி விரைமத்தம் பொங்குகங்கைப் புரிசடைமேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்னே
துன்னா மயூரம் சோலைதொறும் ஆட தூரத் துனைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே.

7.101.1
1028

வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு ஆனால் மனைதோறும்
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர்
முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.2
1029

புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர்
இல்லம் தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம் மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.3
1030

மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி
பூண்தார் பொறி ஆடு அரவு ஆமை புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆக
தூண்டா விளக்கு மணிமாட வீதீதோறும் சுடர்உய்க்க
சேண்தார் புரிசைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.4
1031

ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை வெண்தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீ£ர் எத்தனையும்
பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.5
1032

தோடு உடுத்த காது உடையீ£ர் தோலைஉடுத்துச் சோம்பாதே
ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே அரிது அன்று
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்
சேடை உடுத்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.6
1033

கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இக் காலம்
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீ£ர்
கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணிமாளிகைக் குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.7
1034

பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி பெண் ஓர் பாகமா
வெள்ளை நீ££றே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்
தொள்ளும் வேலைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.8
1035

மத்தம் கவரும் மலர்க் கொன்றைமாலைமேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரை செய்தால் உமக்கே அன்றே பழி உரையீ£ர்
முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.9
1036

மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்க மலர்ச்
சிறை வண்டு அறையும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.

7.101.10
1037

தேரார் வீ£தித் தென்நாகைத் திருக் காரோணத்து இறையானைச்
சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள்
வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.

7.101.11

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப்பதிகங்கள் ஏழாம் திருமுறை முற்றும்.


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page