|
995 |
தண்ணியல் வெம்மையி னான்றலை
யிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழி யார்இடக்
கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறை யோர்முறை
யாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.1 |
996 | வலங்கிளர் மாதவஞ் செய்மலை
மங்கையோர் பங்கினனாய்ச்
சலங்கிளர் கங்கைதங் கச்சடை
யொன்றிடை யேதரித்தான்
பலங்கிளர் பைம்பொழில் தண்பனி
வெண்மதி யைத்தடவ
நலங்கிளர் நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.2
|
997 | கச்சிய னின்கருப் பூர்விருப்
பன்கரு திக்கசிவார்
உச்சியன் பிச்சையுண் ணியுல
கங்களெல் லாமுடையான்
நொச்சியம் பச்சிலை யான்நுரை
தீர்புன லாற்றொழுவார்
நச்சிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.3
|
998 | பாடிய நான்மறை யான்படு
பல்பிணக் காடரங்கா
ஆடிய மாநடத் தானடி
போற்றியென் றன்பினராய்ச்
சூடிய செங்கையி னார்பல
தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.4
|
999 | பிலந்தரு வாயினொ டுபெரி
தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம் இருபிள
வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன்நெடு
மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.5
|
1000 | வெண்பொடி மேனியி னான்கரு
நீல மணிமிடற்றான்
பெண்படி செஞ்சடை யான்பிர
மன்சிரம் பீடழித்தான்
பண்புடை நான்மறை யோர்பயின்
றேத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.6
|
1001 | தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை
யன்சுடர் வெண்மழுவாட்
படைமலி கையன்மெய் யிற்பகட்
டீருரிப் போர்வையினான்
மடைமலி வண்கம லம்மலர்
மேல்மட வன்னம்மன்னி
நடைமலி நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.7
|
1002 | குளிர்தரு திங்கள்கங் கைகுர
வோடரக் கூவிளமும்
மிளிர்தரு புன்சடை மேலுடை
யான்விடை யான்விரைசேர்
தளிர்தரு கோங்குவேங் கைதட
மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.8
|
1003 | கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங்
கேழற்பின் கானவனாய்
அமர்பயில் வெய்திய ருச்சுன
னுக்கருள் செய்தபிரான்
தமர்பயில் தண்விழ வில்தகு
சைவர் தவத்தின்மிக்க
நமர்பயில் நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.9
|
1004 | கருவரை போலரக் கன்கயி
லைம்மலைக் கீழ்க்கதற
ஒருவிர லாலடர்த் தின்னருள்
செய்த உமாபதிதான்
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை
வன்றிகழ் செம்பியர்கோன்
நரபதி நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனே. | 7.98.10
|
1005 | கோடுயர் வெங்களிற் றுத்திகழ்
கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய நன்னிலத் துப்பெருங்
கோயில் நயந்தவனைச்
சேடியல் சிங்கிதந் தைசடை
யன்றிரு வாரூரன்
பாடிய பத்தும்வல் லார்புகு
வார்பர லோகத்துள்ளே. | 7.98.11
|