5.49 திருவாய்மூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

499

எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டு
அங்கே வந்துஅடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

5.50.1
500

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமா சொல்லி
என்னஜ வாஎன்று போனார்அது என்கொலோ.

5.50.2
501

தஞ்சே கண்டேன் தரிக்கிலா தார்என்றேன்
அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்
உஞ்சேன் என்றுகந் தேஎழுந்து ஒட்டந்தேன்
வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே.

5.50.3
502

கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன்
ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஒட்டந்தேன்
வழியிற் கண்டிலேன் வாய்மூர் அடிகள்தம்
கழியிற் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.

5.50.4
503

ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று
உள்கி உள்கி உகந்திருந் தேனுக்குத்
தெள்ளி யார்இவர் போலத் தெருவாய்மூர்க்
கள்ளி யாரவர் போலத் கரந்ததே.

5.50.5
504

யாதே செய்துமி யாமலோம்நீ யென்னில்
ஆதே யேயும் அளவில் பெருமையான்
மாதே வாகிய வாய்மூர் மருவினார்
போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.

5.50.6
505

பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேஎனா
ஒடிச் போந்திங்கு ஒளித்தவாறு என்கொலோ.

5.50.7
506

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடையார் இவர் பித்தரே.

5.50.8
507

தனக்கே றாமை தவிர்கென்று வேண்டினும்
நினைத்தேன் பொய்க்குள் செய்திடு நின்மலன்
எனக்கே வந்தெதிர் வாய்மூர்க் கேஎனாப்
புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

5.50.9
508

தீண்டற் கரிய திருவடி ஒன்றினால்
மீண்டற் கும்மதித் தார்அரக் கன்தனை
வேண்டிக் கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.

5.50.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page