4.105 திருப்புகலூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

1009

தன்னைச் சரணென்று தாளடைந்
தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை
கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
லோகத் திருத்திடுமே.

4.105.1
1010

பொன்னை வகுத்தன்ன மேனிய
னேபுணர் மென்முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே
தமியேற் கிரங்காய்
புன்னை மலர்த்தலை வண்டுறங்
கும்புக லூரரசே
என்னை வகுத்திலை யேலிடும்
பைக்கிடம் யாதுசொல்லே.

4.105.2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

4.105.3
1011

பொன்னள வார்சடைக் கொன்றையி
னாய்புக லூர்க்கரசே
மன்னுள தேவர்கள் தேடு
மருந்தே வலஞ்சுழியாய்
என்னள வேயுனக் காட்பட்
டிடைக்கலத் தேகிடப்பார்
உன்னள வேயெனக் கொன்றுமி
ரங்காத உத்தமனே.

4.105.4

இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

4.105.5-9
1012

ஓணப் பிரானும் ஒளிர்மா
மலர்மிசை உத்தமனுங்
காணப் பராவியுங் காண்கின்
றிலர்கர நாலைந்துடைத்
தோணற் பிரானை வலிதொலைத்
தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக்
குறுகா கொடுவினையே.

4.105.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page