|
Home > Scriptures & Stotras > Tamil >Fourth ThirumuRai
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)
4.50 திருக்குறுக்கை - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
|
486 |
நெடியமால் பிரம னோடு
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார்
அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித்
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. | 4.50.1 |
487 | ஆத்தமாம் அயனு மாலும்
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன்
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. | 4.50.2
|
| இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. | 4.50.3-10
|
திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|