|
1010 |
விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல் லாரிட ரிலரே. | 3.94.1 |
1011. | வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறை யீருமை யலர்கொடு
ஓதிய ருணர்வுடை யோரே. | 3.94.2
|
1012. | விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீரும திணையடி
உளங்கொள உறுபிணி யிலரே. | 3.94.3
|
1013. | விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்கள் துயர்பிணி யிலரே. | 3.94.4
|
1014. | மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினோ டரவசைத் தீரே
அக்கினோ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே. | 3.94.5
|
1015. | வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே. | 3.94.6
|
1016. | விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழன்மல்கும் அங்கையி னீரே
அழன்மல்கும் அங்கையி னீருமை யலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே. | 3.94.7
|
1017. | வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
சித்தம துடையவர் திருவே. | 3.94.8
|
1018. | மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே. | 3.94.9
|
1019. | விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அரைமல்கு புலியத ளீரும தடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே. | 3.94.10
|
| இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 3.94.11
|