|
803 |
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே. | 3.75.1 |
804. | அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி றங்கொளிகொள் சண்பைநகரே. | 3.75.2
|
805. | போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பைநகரே. | 3.75.3
|
806. | கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே. | 3.75.4
|
807. | பணங்கெழுவு பாடலினோ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில் நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே. | 3.75.5
|
808. | பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கெண்டிநற வுண்டிசைசெய
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே. | 3.75.6
|
809. | விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே. | 3.75.7
|
810. | வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கையத ருக்கன்முத லானஇமை யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே. | 3.75.8
|
811. | நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே. | 3.75.9
|
812. | போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே. | 3.75.10
|
813. | வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே. | 3.75.11
|