|
539 |
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே. | 01 |
540. | சித்த னேதிரு ஆலவாய் மேவிய
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. | 02
|
541. | தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே. | 03
|
542. | சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. | 04
|
543. | நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே. | 05
|
544. | தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே. | 06
|
545. | செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே. | 07
|
546. | தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே. | 08
|
547. | தாவி னான்அயன் தானறி யாவகை
மேவி னாய்திரு ஆலவா யாயருள்
தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே. | 09
|
548. | எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே. | 10
|
549. | அப்பன் ஆலவா யாதி யருளினால்
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. | 11
|