|
45 |
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே. | 01 |
46. | புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே. | 02
|
47. | வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யானதானே. | 03
|
48. | பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே. | 04
|
49. | பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே. | 05
|
50. | பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே. | 06
|
51. | புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே. | 07
|
52. | போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே. | 08
|
53. | மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே. | 09
|
54. | பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே. | 10
|
55. | புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
பந்த மார்வினை பாறிடுமே. | 11
|