|
787 |
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்
சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
பகையெறிவித் திறைவ னூரே. | 01 |
788 | திருவளருங் கழுமலமே கொச்சைதே
வேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
கண்டத்தோன் விரும்புமூரே. | 02
|
789 | வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரன்நாளும் அமரு மூரே. | 03
|
790 | மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர் பரவு மூரே.
| 04
|
| *தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
|
791 |
வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங் கோனூர் வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
வம்பெருகு தோணிபுரஞ் சீர்
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த வூரே. | 05
|
792 | புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
யுதைத்துகந்த அப்ப னூரே. | 06
|
793 | வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலு மூரே. | 07
|
794 | மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலைச் சிலைய னூரே. | 08
|
795 | இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்
தயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்
தணர்வேத மறாத வூரே. | 09
|
796 | மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே. | 10
|
797 | ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குருவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் தங்கு மூரே. | 11
|
798 | அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
வேணுபுரம் அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே. | 12
|