|
1036 |
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே. | 1.96.1 |
1037 |
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே. | 1.96.2
| 1038 |
நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே. | 1.96.3
| 1039 |
பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே. | 1.96.4
| 1040 |
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே. | 1.96.5
| 1041 |
இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே. | 1.96.6
| 1042 |
அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே. | 1.96.7
| 1043 |
தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே. | 1.96.8
| 1044 |
இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே. | 1.96.9
| 1045 |
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே. | 1.96.10
| 1046 |
பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே. | 1.96.11
|