|
1014 |
நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. | 1.94.1 |
1015 |
ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. | 1.94.2
| 1016 |
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. | 1.94.3
| 1017 |
அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. | 1.94.4
| 1018 |
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. | 1.94.5
| 1019 |
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. | 1.94.6
| 1020 |
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. | 1.94.7
| 1021 |
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. | 1.94.8
| 1022 |
அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. | 1.94.9
| 1023 |
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. | 1.94.10
| 1024 |
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே. | 1.94.11
|