|
349 |
கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே. | 1.33.1 |
350 |
சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.2
| 351 |
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.3
| 352 |
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.4
| 353 |
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. | 1.33.5
| 354 |
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.6
| 355 |
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.7
| 356 |
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.8
| 357 |
வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. | 1.33.9
| 358 |
தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. | 1.33.10
| 359 |
அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. | 1.33.11
|