|
283 |
முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. | 1.27.1 |
284 |
மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. | 1.27.2
| 285 |
பங்க யங்கள் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே. | 1.27.3
| 286 |
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமா னவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. | 1.27.4
| 287 |
பவழ வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னும் அடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே. | 1.27.5
| 288 |
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. | 1.27.6
| 289 |
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிக ளவர்போலுங்
கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. | 1.27.7
| 290 |
மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. | 1.27.8
| 291 |
நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல அடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே. | 1.27.9
| 292 |
குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே. | 1.27.10
| 293 |
மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே. | 1.27.11
|