|
Home > Scriptures & Stotras > Tamil
பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
(திருவாலவாய் மான்மியம்)
திருச்சிற்றம்பலம்
முதலாவது - மதுரை காண்டம்
(பாயிரம் முதல் பதிகப் படலம் வரை)
1. காப்பு
விநாயகர் காப்பு
1.
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே
சொக்கலிங்கமூர்த்தி காப்பு
2.
வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுணர் உள்ளந் தோறுஞ்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி
அங்கயற்கண்ணம்மை காப்பு
3.
சுரம்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
யுத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
வங்கயற்கண் எம்பிராட்டி
அரும்புமிள நகைபோற்றி யாரணநூ புரஞ்சிலம்பு
மடிகள் போற்றி
நூற்பயன்
4
திங்களணிதிருவால வாயெம் மண்ண றிருவிளையாட்
டிவையன்பு செய்துகேட்போர்
சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்
தகைமை தரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்
வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்
புங்கவராய் அங்குள்ள போக மூழ்கிப்
புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்
வாழ்த்து
5.
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக வறங்க ளின்ப
நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப்
புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க
கடவுள் வாழ்த்து
பரமசிவம்
6
பூவண்ணம் பூவின் மணம்போலமெய்ப் போத வின்ப
மாவண்ண மெய்கொண் டவன்றன்வலி யாணை தாங்கி
மூவண்ண றன்சந் நிதிமுத்தொழில் செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்
பராசக்தி
7
அண்டங்கள் எல்லாம் அணுவாக வணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்
சொக்கலிங்கமூர்த்தி
8
பூவி னாயகன் பூமக ணாயகன்
காவி னாயக னாதிக் கடவுளர்க்கு
ஆவி நாயகன் னங்கயற் கண்ணிமா
தேவி நாயகன் சேவடி யேத்துவாம்
அங்கயற்கண்ணம்மை
9
பங்கயற்க ணரியபாம் பரனுருவே தனக்குரிய படிவமாகி
இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த சராசரங்கள் ஈன்றுந் தாழாக்
கொங்கயற்கண் மலர்க்கூந்தற் குமரிபாண்டியன்மகள் போற் கோலங் கொண்ட
அங்கயற்க ணம்மையிரு பாதப்போ தெப்போது மகத்துள் வைப்பாம்
நடேசர்
10
உண்மையறி வானந்த வுருவாகி வெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்
தண்மையனல் வெம்மையெனத் தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற
பெண்மையுரு வாகியதன் னாநந்தக் கொடிமகிழ்ச்சி பெருக யார்க்கும்
அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம்
சௌந்தரபாண்டியர்
11
சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்துவேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்
மடவாலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்
தடாதகைப் பிராட்டியார்
12
செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டுந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்
கான் மாறி நடித்தவர்
13
பொருமாறிற் கிளர்தடந்தோள் ஒருமாறன் மனங்கிடந்த புழுக்க மாற
வருமாறிற் கண்ணருவி மாறாது களிப்படைய மண்ணும் விண்ணும்
உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்
கருமாறிக் கதியடையக் கான்மாறி நடித்தவரைக் கருத்துள் வைப்பாம்
தஷிணாமூர்த்தி
14
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமற்சொன் னவரை நினையாமனினைந் துபவத் தொடக்கை வெல்வாம்
சித்தி விநாயகக் கடவுள்
15
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யறுதியாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப் படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து வருவினைக டீர்ப்பாம்
சுப்பிரமணியக் கடவுள்
16
கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப் பெருங்
கடலுங் கலங்கக் கார்வந்
துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
பிளப்பமறை யுணர்ந்தோராற்றும்
அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலும் மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்
சரசுவதி
17
பழுதகன்ற நால்வகைச் சொன் மலரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெற
முக்கண்
மூர்த்தி தாளிற்
றொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச்
சுரும்புந் தேனும்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத் தாளடி
முடி
மேற்கொண்டு வாழ்வாம்
திருநந்தி தேவர்
18
வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
19
கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
பிடியன நாயனார் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்
திருநாவுக்கரசு நாயனார்
20
அறப்பெருங் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகர் இட்டநீல
நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்
சுந்தர மூர்த்தி நாயனார்
21
அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்
மாணிக்கவாசக சுவாமிகள்
22
எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணீருண் மூழ்கி
அழுதடி யடைந்த வன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்
சண்டேசுர நாயனார் முதலிய திருத்தொண்டர்
23
தந்தைதா ளடும்பிறவித் தாளெறிந்து
நிருத்தர்இரு தாளைச் சேர்ந்த
மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி
வழாது வாய்மெய்
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச்
சிவானுபவச் செல்வ ராகிப்
பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்
தாள்பரவிப் பணிதல் செய்வாம்
கடவுள் வாழ்த்து சுபம்
முதனூல்
24
அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சனற்கு மாரன்
உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனுக் குணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா
றெண்ணிய விவற்றுட் காந்தத் தீசசங் கிதையின் மாதோ
நூல் யாத்தற்குக் காரணம்
25
அறைந்திடப் பட்ட தாகு மாலவாய்ப் புகழ்மை யந்தச்
சிறந்திடும் வடநூல் தன்னைத் தென்சொலாற் செய்தி யென்றிங்
குறைந்திடும் பெரியோர் கூறக் கடைப்பிலத் துறுதி யிந்தப்
பிறந்திடும் பிறப்பி லெய்தப் பெறுதுமென் றுள்ளந் தேறோ
மொழி பெயர்த்த முறை
26
திருநகர் தீர்த்த மூர்த்திச் சிறப்புமூன் றந்த மூர்த்தி
அருள்விளை யாட லெட்டெட் டருச்சனை வினையொன் றாக
வரன்முறை யறுபத் தெட்டா மற்றவை படல மாக
விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்ப லுற்றேன்
பாயிரம் சுபம்
அவையடக்கம்
27
நாயகன் கவிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேயவத் தலத்தி னோர்கென் வெள்ளறி வுரையிற் குற்றம்
ஆயுமா றரிதன் றேனு நீர்பிரித் தன்ன முண்ணுந்
தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரிதந் தன்னை
28
கவைக்கொ ழுந்தழனாச் சுவை கண்டவூனிமையோர்
சுவைக்க விண்ணமு தாயினம் துளக்கமில் சான்றோர்
அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார்
செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்
29
பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத்
தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர்
ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய
நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்
30
அல்லை யீதல்லை யீதென மறைகளு ம்அன்மைச்
சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற்
கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனைச்
சொல்லு வேனெனு மாசை யென் சொல்வழி கேளா
31
அறுகாற்பீ டத்துயர்மால் ஆழிகடைந் தமுதையரங் கேற்று மாபோல்
அறுகாற்பே டிசைபாடுங் கூடன்மான் மியத்தையருந் தமிழாற் பாடி
அறுகாற்பீ டுயர்முடி யார் சொக்கேசர் சந்நிதியி லமரச் சூழும்
அறுகாற்பீ டத்திருந்து பரஞ்சோதி முனிவனரங் கேற்றி னானே
அவையடக்கம் சுபம்
32
கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்
33
தெய்வ நாயகன் நீறணி மேனிபோற் சென்று
பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்னக்
கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரல் மேகம்
34
இடித்து வாய்திறந் தொல்லென வெல்லொளி மழுங்கத்
தடித்து வாள்புடை விதிர்த்துநின் றுஇந்திர சாபம்
பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர்
முடித்து நாமென வருதல்போன் மொய்த்தன கொண்மூ
35
முனித னீள்வரை யுச்சிமேன் முழங்கிவா னிவந்து
தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன்
கனித னீர்மையா லாலவாய்க் கண்ணுதல் முடிமேற்
புனித நீர்த்திரு மஞ்சனம் ஆட்டுவான் போலும்
36
சுந்த ரன்றிரு முடிமிசைத் தூயநீ ராட்டும்
இந்தி ரன்றனை யொத்தகா ரெழிழிதென் மலைமேல்
வந்து பெய்வலத் தனிமுதன் மௌலிமேல் வலாரி
சிந்து கின்றகைப் போதெனப் பன்மணி தெறிப்ப
37
உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகள்தன்
இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கைத்
தடத்து நின்றிழி பாலெனத் தடவரை முகடு
தொடுத்து வீழ்வன விழுமெனத் தூங்குவெள் ளருவி
38
கருநிற மேக மென்னுங் கச்சணி சிகரக் கொங்கை
அருவியாந் தீம்பால் சோர வகன்சுனை யென்னுங் கொப்பூழ்ப்
பொருவில்வே யென்னு மென்றோட் பொதியமாஞ் சைலப் பாவை
பெருகுதண் பொருநை யென்னும் பெண்மகப் பெற்றாள் அன்றே
39
கல்லெனக் கரைந்து வீழுங் கரும்புனற் குழவி கானத்
தொல்லெனத் தவழ்ந்து தீம்பா லுண்டொரீஇத் திண்டோண் மள்ளர்
சொல்லெனத் தெழிக்கும் பம்பைத் தீங்குரல் செவிவாய்த் தேக்கி
மெல்லெனக் காலிற் போகிப் பணைதொறும் விளையாட்டு எய்தி
40
அரம்பைமென் குறங்கா மாவி னவிர்தளிர் நிறமாத் தெங்கின்
குரும்பைவெம் முலையா வஞ்சிக் கொடியிரு நுசுப்பாக் கூந்தல்
சுரும்பவிழ் குழலாக் கஞ்சஞ் சுடர்மதி முகமாக் கொண்டு
நிரம்பிநீள் கைதை வேலி நெய்தல்சூழ் காவில் வைகி
41
பன்மலர் மாலை வேய்ந்து பானுரைப் போர்வை போர்த்துத்
தென்மலைத் தேய்ந்த சாந்த மான்மதச் சேறு பூசிப்
பொன்மணி யாரந் தாங்கிப் பொருநையாங் கன்னி முந்நீர்த்
தன்மகிழ் கிழவ னாகந் தழீஇகொடு கலந்த தன்றே
42
வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டு
முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
நல்லமான் மதஞ்சாந் தப்பி நறுவிரை மலர் தூய் நீத்தஞ்
செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள் போலும்
43
அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
திரங்கிவா லன்ன மேங்கதி யிருகையும் சங்கஞ் சிந்தி
மசுங்குசூழ் காஞ்சி தன்னவரம்பிற வொழுகும் மாரி
பரம்பரற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்
44
வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
அரைபடு மகிலுங் சாந்து மப்பியின் னமுத மூட்டுக்
கரைபடு மருத மென்னும் கன்னியைப் பருவ நோக்கித்
திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ
45
மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
நிறைபர மென்றும் பூதி சாதனநெறி வீடென்றும்
அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யங்கி
முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரி வெள்ளம்
46
மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைமகள் போல் வருநீர் வெள்ளந்
துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
உறைவழி யோடை எங்கு மோடிமன் றுடையார்க் கன்பர்
நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே
47
இழிந்த மாந்தர்கைப் பொருள்களும் இகபரத் தாசை
கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்
48
ஈறி லாதவள் ஒருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைநீ ரொன்றே
யாறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ
49
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவள் வினையின் மூண்டார்
50
பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்புதேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமகள் உடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த நெங்கேழ்த் தழன்மனி யிமைக்கு மன்னோ
51
ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
சேறுசெய் குநருந் தெய்வம் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
மாறுசெய் களைகட்டோம்பி வளம்படுக் குநரும் ஆனார்
52
பழிபடு நறுவந் தன்னைக் கடைசியர் பருகிச் செவ்வாய்
மொழி தடுமாற வேர்வை முகத்தெழ முறுவல் தோன்ற
விழிசிவந் துழலக் கூந்தன் மென்றுகில் சோர வுள்ளக்
கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த தன்றே
53
பட்பகையாகுந் தீஞ்சொற் கடைசியர் பவளச் செவ்வாய்க்
குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங்
கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்துக் கென்றும்
திட்பகை யாகு மென்றுங் செறுதல்போற் களைதல் செய்வார்
54
கடைசியர் முகமும் காலும் கைகளும்கமல மென்னார்
படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார்
அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை
உடையவ னாணை யாற்றா லொறுப்பவர்க் குறவுண் டாமோ
55
புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்நூல்
வரையறை கருத்து மான வளர்கருப் புறம்பு தோன்றிக்
கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந்து அந்நூல்
உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே
56
அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்
கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல்
வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி
நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி
57
அகனில வேறு பாட்டின் இயல்செவ்வி யறிந்து மள்ளர்
தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு
வகைநலார் பண்புசெல்வி யறிந்துசேர் மைந்தர்க் கின்பம்
மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ ழெல்லாம்
58
கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி
முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரைக் கமல நீலம்
அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவே றரிந்தீடாக்கி
நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர் செய்தார்
59
கற்றைவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
அற்றவர்க் கற்ற வாறுஈந் தளவைகண் டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடு போய்த் தென்னா
டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டியுண்டார்
60
சாறடு கட்டி யெள்ளுச் சாமைகொள் ளிறுங்கு தோரை
ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை யேனல்
வேறிபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும்
ஏறோடு பண்டி யேற்றி யிருநிலங் கிழிய வுய்ப்பார்
61
துறவின ரீச சேனசத் தொண்டினர் பசிக்கு நல்லூண்
டிறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடற் பனிப்புக் காடை
உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழிகிச் செய்யும்
அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார்
62
நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த
பொச்சமில் அன்பு மன்னர் புதல்வரைக் கண்டாலன்ன
அச்சமுங் கொண்டு கூசி யடிபணிந் தினிய கூறி
இச்சையா றொழுகி யுள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார்
63
நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெய் வெள்ளம்
நிறைபடு செம்பொன் வண்ணப் புழுக்கலா னிமிர்ந்த சோறு
குறைவற வுண்டு வேண்டும் பொருள்களும் கொண்மி னென்ன
மறைமுத லடியார் தம்மை வழிமறித் தருத்துவார்கள்
64
பின்னெவ னுரைப்ப தந்தப் பெருந்தமிழ் நாடாங்கன்னி
தன்னிடை யூர்க ளென்னு மவயவந் தாங்கச் செய்த
பொன்னியற் கலனே கோயின் மடமறப் புறநீர்ச் சாலை
இன்னமு தருத்து சாலை யெனவுருத் தரித்த தம்மா
65
இன்ற டம்புனல் வேலிசூழ் இந்நில வரைப்பிற்
குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்தினை நான்கும்
மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின்
ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை யுரைப்பாம்
66
கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர்க் குருந்தின்
ஒல்லை தாயதிற் படர் கறிக் கருந்துண ருகுப்ப
முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில்
எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர்
67
கன்றோ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு
மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி
குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழன் மருதஞ்
சென்று தங்குவ சேவகம் எனமுறச் செவிமா
68
எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றியர் இழைத்த
சிற்றில் வாய்நுழைந் தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு
பற்றி லாரெனச் சிதறிய மனவணி பரதர்
முற்றி லாமுலைச் சிறுமியர் முத்தொடும் கோப்ப
69
முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றிப்பின் பயில்வன மருதங்
கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென்று இரங்கி
ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை
70
கரும்பொற் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றைபொன் சொரிவ
அருந்த டங்கடல் வளையெடுத்து ஆழியான் கையில்
இருந்த சங்கென விறைகொளப் பூவைமே லெறிவ
71
கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலாக் கனிகீண்
டழிந்த தேனுவர்க் கேணிபாய்ந் தகற்றுவ வுவரை
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
றொழிந்த தாமரைப் போதுபுக்கு ஒளிப்பன கெண்டை
72
ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை
சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து
கூறு வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
தூறு வாரெனக் சிரித்துஅலர் தூற்றவ முல்லை
73
துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்
கள்ளு மாறவும் கூனலங்காய் தினை யவரை
கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்
எள்ளு மாறவும் அளப்பன விடைக்கிடை முத்தம்
74
அவமி கும்புலப் பகைகடந் துயிர்கெலா மன்பாம்
நவமி குங்குடை நிழற்றிமெய்ச் செய்யகோ னடாத்திச்
சிவமி கும்பர ஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவமி ருந்துஅர சாள்வது தண்டமிழ்ப் பொதியம்
75
வான யாறுதேய்ந் துயரிய மலயமே முக்கண்
ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய்
ஆனை யீருரு யம்மழை யசும் பதன் புண்ணீர்
கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன்று அன்றே
76
சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப
நனைய விழ்ந்தசெங் காந்தண்மேல் நாகிள வேங்கைச்
சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர்
அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய
77
குண்டுநீர்ப்படு குவளைவாய்க் கொழுஞ்சினை மரவம்
வண்டு கூப்பிடச் செம்மறூய்ப் புதுமது வார்ப்ப
அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரிந் துஆனெய்
மொண்டு வாக்கிமுத் தீவினை முடிப்பவ ரனைய
78
அகிலு மாரமுந் தழன்மடுத் தகழ்ந்தெறிந் தழல்கால்
துகிரு மாரமுந் தொட்டெறிந் தைஐவனம் தூவிப்
புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி
இகலில் வான்பயிர் ஓம்புவ வெயினர்தஞ் சீறூர்
79
அண்ட வாணருக்கு இன்னமு தருத்துவோர் வேள்விக்
குண்ட வாரழற் கொழும்புகை கோலுமக் குன்றிற்
புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப
உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும்
80
கருவி வாள் சொரி மணிகளுங் கழைசொரி மணியும்
அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாகத்
திரவி கான்றெசெம் மணிகளும் புனங்கவ ரினமான்
குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்
81
மாய வன்வடி வாயது வையமால் உந்திச்
சேய மங்கய மாயது தென்னனா டலர்மேற்
போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்
மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்
82
ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன்
ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறும்
நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த
போக பூமியும் பெருநைசூழ் பூமியே போலும்
83
சிறந்த தண்டமிழ் ஆலவாய் சிவனுல கானாற்
புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன்
மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர்
அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும்
84
வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக்
களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்
அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர்
விளைந்த செந்நெலுங் கன்னலு, வீசும் அவ் வாசம்
85
பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ்
பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர்
மதியி லேவிளை கின்றன மறைமுதற் பத்தி
86
கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ
87
விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலயமா முனிக்குத்
திடமு றுத்தியம் மொழிக்கெதிர் அக்கிய தென்சொன்
மடம கட்காங் கென்பது வழுதிநா டன்றோ
88
கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந்து ஆய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப் படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ
89
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தலும் முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்துங் கன்னித்
தண்ட மிழ்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்
90
வெம்மை யால்விளை வ·கினும் வேந்தர்கோல் கோடிச்
செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற்
பொய்மை மாறிய பத்தியும் பொலிவுகுன் றாவாய்த்
தம்மை மாறியும் புரிவது தருமம் அந்நாடு
91
உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த
திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
தலைவ ரான்முறை செய்தநா டி·தன்றிச் சல்தி
சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்தும் அ·தே
பாண்டித் திருநாட்டுப் படலம் சுபம்
92
மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்
சங்க லம்புனை தோளிணை தடமுலை யாதி
அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய
நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்
93
கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியல்அவ் வயிறுகுற் றாலஞ்
செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்
பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே
94
வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கப்
படுவில் ஆரமே பாண்டிநா டாரமேற் பக்கத்
திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள்
நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம்
95
திரும கட்கொரு தாமரைக் கூடமே திருமான்
மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந்
தரும கட்கியோ கத்தனிப் பீடமே தரையாம்
பெரும கட்குஅணி திலகமே யானதிப் பேரூர்
96
திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி
கக்கு மாளிகை நிவப்புறு காட்சியந் நகருள்
மிக்க வாலிதழ்த் தாமரை வெண்மகள் இருக்கை
ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும்
97
நெற்க ரும்பெனக் கரும்பெலா நெடுங்கமு கென்ன
வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த
பொற்க வின்குலைத் தெங்குகார்ப் பந்தரைப் பொறுத்து
நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே
98
சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக்
கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி
உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குஉதவி
நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை
99
ஒல்லொ லிக்கதிர்ச் சாவிகள் புறந்தழீஇ யோங்க
மெல்லி லைப்பகங் கொடியினால் வீக்குறு பூகம்
அல்லெ னுங்களத் தண்ணற னணிவிழாத் தருப்பைப்
புல்லொ டும்பிணிப் புண்டபொற் கொடிமரம் போலும்
100
சீத வேரியுண்டு அளிமுரல் கமலமேற் செருந்தி
போத வேரியு மலர்க்களுஞ் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செங்கரம் விரித்துவாய் மனுக்கள்
ஓத வேமமு முதகமு முதவுவா ரனைய
101
விரைசெய் பங்கயச் சேக்கைமேற் பெடையொடும் விரவி
அரச வன்னநன் மணஞ்செய வம்புயப் பொய்கை
திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம்
மரக தக்கலத் தரளநீ ராஞ்சனம் வளைப்ப
102
இரும்பின் அன்னதோள் வினைஞரார்த் தெறிந்துவாய் மடுக்குங்
கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாறு
சுரும்பு சூழ்கிடந் தாற்றிடச் சொரிந்துவெஞ் சினத்தீ
அரும்பு கட்களி றொத்தன வாலையெந் திரங்கள்
103
பள்ள நீர்குடைந் தஞ்சிறைப் பாசிபோர்த்து எழுந்த
வெள்ளை யன்னத்தைக் காரன மெனப்பெடை வீழ்ந்த
உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு
கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும்
104
இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழும் இமையாப்
புரவி நாநிமிர்த் தயில்வன பொங்கர்வாய்த் தளிர்கள்
கரவி லார்மகத் தெழுபுகை கற்பக நாட்டிற்
பரவி வாட்டுவ பனியெனப் பங்கயப் பொய்கை
105
பிறங்கு மாலவா யகத்துளெம் பிரான்அரு ளால்வந்
தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கிக்
கறங்கு தெண்டிரைப் பெரும்புறக் கடலும்வந் திவ்வூர்ப்
புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு
106
எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பிப்
பறியு மாமையும் வாளடு கேடகம் பற்றிச்
செறியு நாண்மலர் அகழியுஞ் சேண்டொடு புரிசைப்
பொறியு மேயொன்றி யுடன்றுபோர் புரிவன போலும்
107
கண்ணி லாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப
மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர்
தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை
எண்ணி னார்இரு ணரகநீத் தேறினு மேறார்
108
குழிழ லர்ந்தசெந் தாமரைக் கொடிமுகிழ் கோங்கின்
உமிழ்த ரும்பா ஞானமுண் டுமிழ்ந்தவாய் வேதத்
தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும்
அமிழ்த வெண்டிரை வைகையும் ஒருபுறத் தகழாம்
109
பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியாக்
கள்ள முண்டகச் செவ்வியாற் கண்டவர் கண்ணும்
உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத்து ஓங்கும்
புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையைப் புகல்வாம்
110
மாக முந்திய கடிமதில் மதுரைநா யகர்கைந்
நாக மென்பதே தேற்றமந் நகர்மதில் விழுங்கி
மேக நின்றசை கின்றதவ் வெஞ்சினப் பணிதன்
ஆக மொன்றுதோ லூரிபட நெளிவதே யாகும்
111
புரங்க டந்தபொற் குன்றுகோ புரமெனச் சுருதிச்
சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார்
உரங்க டந்திட வேண்டினும் உதவிசெய் தவரால்
வரங்க டந்திடப் பெறவெதிர் நிற்பது மானும்
112
சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள்
விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந்
துண்ட போல்பவு முமிழ்வன போல்பவு முழலா
113
மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
சிகர மாலைசூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே
114
எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மதிற் புறஞ்சூழ்ந்
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோர் ஆற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளெ வெல்ல
வல்ல வம்மதிற் பொழிசெயு மறஞ்சிறி துரைப்பாம்
115
மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் வீசுவன முத்தலைக்
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால வீசுவன காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள் விடமென்ன வீசுவன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவன கற்க வண்கயிறு கோத்து வீசுவன வார்த்தரோ
116
நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர்த் தெறியு மலையரா
வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு வாரை விக்கிட விழுங்குமாற்
குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு வார்தலைகள் சிதறுமால்
அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி யடுபு லிப்பொறி யமுக்குமால்
117
எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற வெறிந்து குண்டகழி யிடைவிழத்
தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுளை தந்து வீசுயுடல் சிந்துமாற்
கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புறத்
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்பசில கூளியே
118
துவங்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி தொடர்பி டித்தகை யறுக்கவிட்
டுவக்கு மொன்னலர்க டலைக ளைத்திருகி யுடனெ ருக்குமா நிலைகளாற்
சுவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர் கல்லு ருட்டியடும் ஒல்லெனக்
குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல் கொட்டு வேவலர்கள் கிட்டவே
119
உருக்கி யீயமழை பெய்யு மாலய வுருக்கு வட்டுருகு செம்பினீர்
பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர் பிடித்து விட்டவர் தமைத்தெறச்
செடுக்கி வீசுநடை கற்ற மாடமொடு சென்று சென்று துடி முரசொடும்
பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும் வாளிமழை பெய்யுமால்
120
வெறிகொள் ஐம்பொறியை வெல்லி னும்பொருது வெல்லுதற்கரிய காலனை
முறிய வெல்லினும் வெலற்க ருங்கொடிய முரண வாயமர ராணெலாம்
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரிய வாயவனர் புரியுமிப்
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால்
121
கழையும் தாமமும் சுண்ணமு மணிநிழற் கலணுங்
குடையுந் தூபமுந் தீபமுங் கும்பமுந் தாங்கித்
தழையுங் காதலர் வரவுபார்த் தன்பகந் ததும்பி
விழையுங் கறிபினா ரொத்தன விழாவறா வீதி
122
ஆலநின்றமா மணிமிடற் றண்ணலா னந்தக்
கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல்
வேலை நின்றெழு மதியெதிர் வெண்ணிலாத் தெண்ணீர்
கால நின்றன சந்திர காந்தமா ளிகையே
123
குன்ற நேர்பளிக் குபரிகை நிரைதொறுங் குழுமி
நின்ற பல்சரா சரமுமந் நீழல்வாய் வெள்ளி
மன்ற கம்பொலிந் தாடிய மலரடி நிழல்புக்
கொன்றி யொன்றறல் கலந்தபல் லுயிர்நிலை யனைய
124
கறிந்த ருந்துபுற் குவைகழீஇக் காற்றொடர் பரியத்
தெறித்த கன்றயன் மரகதச் சித்திரத்து எற்றி
எறித்த பைங்கதிர்க் கொழிந்தையு மெட்டிநா வளைத்துப்
பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று
125
சிறுகு கண்ணவாய்க் காற்றெறி செவியவாய்ப் பாசம்
இறுகு காலவாய்க் கோட்டுமா னினம்வழங் காறுங்
குறுகு நுண்மருங் கிறுத்தெழு கோட்டுமா னினம்போம்
மறுகும் வண்டுசூழ்ந் திறைகொள மான்மத நாறும்
126
மாட மாலையு மேடையு மாளிகை நிரையும்
ஆட ரங்கமு மன்றிவே ளன்னவர் முடியும்
ஏட விழ்ந்ததா ரகலமு மிணைத்தடந் தோளுஞ்
சூடு மாதரார் சீறயிப் பஞ்சுதோய் சுவடு
127
மருமச் செம்புன லாறிட மாறடு கோட்டுப்
பருமச் செங்கண்மால் யானையின் பனைக்கையு மறைநூல்
அருமைச் செம்பொரு ளாய்ந்தவர்க் கரும்பொருள் ஈவோர்
தருமச் செங்கையு மொழுகுவ தானநீ ராறு
128
பரிய மாமணி பத்தியிற் பதித்திருட் படலம்
பொரிய வில்லிடக் குயிற்றிய பொன்னர மியமும்
தெரிய மாமுர சொலிகெழு செம்பொனா டரங்கும்
அரிய மின்பயோ தரஞ்சுமந் தாடுவ கொடிகள்
129
வலம்ப டும்புயத் தாடவர் மார்ப்மேற் புலவிக்
கலம்ப டர்ந்தபூண் முலையினார் காலெடுத் தோச்சச்
சிலம்ப லம்பிசை மழுங்கமுன் னெழுமவர் தேந்தார்ப்
புலம்பு வண்டுநொந் தரற்றிய பொங்குபேர் ஒலியே
130
தைய லார்மதி முகங்களுந் தடங்களுங் குழைய
மைய ளாவிய விழிகளு மாடமுங் கொடிய
கையு நாண்மலர்ப் பொதும்பருங் கறங்குஇசைவண்ட
நெய்ய வோதியும் வீதுயு நீளற னெறிய
131
மலருந் திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள்
அலருந் தண்துறை யுங்குடைந் தாடுவ தும்பி
சுலவுஞ் சோலையு மாதருந் தூற்றுவ வலர்கள்
குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம்
132
ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்பந்
தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில்
சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமுத் திறைப்ப
வாடி னார்பரி நித்தில மாலையும் குப்பை
133
ஐய வென்னுரை வரம்பினை வாகுமோ வடியர்
உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன்
பொய்யில் வேதமுஞ் சுமந்திடப் பொறாதகன் றரற்றுஞ்
செய்ய தாண்மலர் சுமந்திடத் தவம்செய்த தெருக்கள்
134
தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற்
பூரண கும்பக் கொங்கைப் பொருவின்மங் கலமா மங்கை
தாரணிந் தாரந் தூக்கிச் சந்தகி றிமிர்ந்து பாலிச்
சீரணி முளைவெண் மூரல் செய்துவீற் றிருக்கு மன்னோ
135
திங்களைச் சுண்ணம் செய்து சேறுசெய் தூட்டி யன்ன
பொங்குவெண் மாடப் பந்தி புண்ணியம் பூசுந் தொண்டர்
தங்கண்மெய் வேடந் தன்னைத் தரித்தன சாலக் கண்கொண்
டங்கணன் விழவு காண்பா னடைந்தென மிடைந்த வன்றே
136
தேரொலி கலினப் பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட
தாரொலி கருவி யைந்தும் தழங்கொலி முழங்கு கைம்மான்
பேரொலி யெல்லா மொன்றிப் பெருகொலி யன்றி யென்றும்
காரொலி செவிம டாது கடிமணி மாடக் கூடல்
137
இழிபவ ருயர்ந்தோர் முத்தோ ரிளையவர் கழியர் நோயாற்
கழிபவர் யாவ ரேனும் கண்வலைப் பட்டு நெஞ்சம்
அழிபவர் பொருள்கொண் டெள்ளுக் கெண்ணெய்போ லளந்து காட்டிப்
பழிபடு போகம் விற்பா ராவணப் பண்பு சொல்வாம்
138
மெய்படு மன்பி னார்போல் விரும்பினார்க் கருத்துந் தங்கள்
பொய்படு மின்பம் யார்க்கும் புலப்படத் தேற்று வார்போல்
மைபடு கண்ணார் காமன் மறைப்பொருள் விளங்கத் தீட்டிக்
கைபடச் சுவராய்த் தோன்றச் சித்திரங் காணச் செய்வார்
139
திருவிற்கான் மணிப்பூ ணாகம் பலகையாத் தெண்முத் தார
அருவிக்கால் வரைமென் கொங்கைச் சூதொட்டி யாடி வென்றும்
மருவிக்கா முகரைத் தங்கள் வடிக்கண்வேன் மார்பந் தைப்பக்
கருவிச்சூ தாடி வென்றும் கைப்பொருள் கவர்தல் செய்வார்
140
தண்பனி நீரில் தோய்த்த மல்லிகைத் தாம நாற்றி
விண்படு மதியந் தீண்டும் வெண்ணிலா முற்றத் திட்ட
கண்படை யணைமேற் கொண்டு காமனுங் காமுற் றெய்தப்
பண்பல பாடி மைந்த ராவியைப் பரிசில் கொள்வார்
141
குரும்பைவெம் முலையிற் சிந்து சாந்தமுங் குழலிற் சிந்தும்
அரும்பவிழ் மாலைத் தாது மளிநுகர்ந் தெச்சி லாகிப்
பொரும்பரிக் காலிற் றூளாய்ப் போயர மாதர் மெய்யும்
இருங்குழற் காடுஞ் சூழ்போ யியன்மணம் விழுங்கு மன்னோ
142
ஆலவா யுடையா னென்று மங்கயற் கண்ணி யென்றும்
சோலைவாழ் குயிலி னல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும்
பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவ னோதும்
நூலவாய்ச் சந்தை கூட்டி நுவன்மறைச் சிறாரை யொத்த
143
ஔவிய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்தும்
திவ்விய நரம்புஞ் செவ்வாய்த் தித்திக்கு மெழாலும் தம்மிற்
கௌவிய நீர வாகிக் காளையர் செவிக்கா லோடி
வெவ்விய காமப் பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே
144
கட்புல னாதி யைந்து முவப்புறக் கனிந்த காமம்
விட்புலத் தவரே யன்றி வீடுபெற் றவரும் வீழ்ந்து
பெட்பமுற் றமுதும் கைப்பப் பெரும்குலக் கற்பி னார்போல்
நட்பிடைப் படுத்தி விற்கு நல்லவ ரிருக்கை யீ தால்
145
வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
விழுக்குடிப் பிறப்பு மூவர் ஏவிய வினைகேட் டாற்றும்
ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா
இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்
146
வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை
அருகிருந் தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை
உரைபெறு தழிழ்பா ராட்டு மோசைகேட் டுவகை துள்ள
இருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு மோசை
147
அருந்தின ரருந்திச் செல்ல வருந்துகின் றாரு மாங்கே
இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி
வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார்
148
வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும்
ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்கப் பாடுந்
தானமுங் கொடையு மன்பும் வரிசையுந் தகைசா னண்பும்
மானமுந் தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்
149
புல்லியோர் பண்டங் கொள்வார் வினவின பொருடம் பக்கல்
இல்லெனி னினமா யுள்ள பொருளுரைத் தெதிர்ம றுத்தும்
அல்லதப் பொருளுண் டென்னின் விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ்
சொல்லினு மிலாபங் கொள்வார் தொன்பர பிருக்கை சொல்வாம்
150
நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின்
கால வாலிய வைரவாள் கானிரைத் தும்பர்க்
கோல வாணிலாச் சொரிமணி குயிற்றிவெண் மாடம்
மாலை போல்வருத் தியற்றின பீடிகை மறுகு
151
திரைய ளிப்பவுந் திரைபடு தீம்புனல் வேலிக்
கரைய ளிப்பவுங் கரையிலா னிரைபடு கானத்
தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும்
வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம்
152
கரிய கம்பலக் கிடுகின் மேற் கதிர்விடு பவளத்
தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும்
பரிய நித்தல மணிவட மரகதப் பசுந்தார்
விரிய விட்டன விந்திர வின்னிசை யனைய
153
நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனைக்
கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு
வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர்
ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய
154
பன்னி றத்தபல் பெருவிலைப் பட்டெலா மவண
அன்ன பட்டின்மேம் படுவிலைப் பருத்தியு மவண
எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர்
மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண
155
மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை
உரல்கள் வெள்ளியா லடுப்பகில் விறகுலை பனிநீர்
அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும்
எரிபொ னாலிழைத் தாடுப விவர்சிறு மகளிர்
156
செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினால் திண்ணிலைக் கதவம்
வயிரத் தாழுடைத் தவர்கடை வாயிலு மென்றால்
அயிரிற் றீந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வத்
தியலிற் றாமென வரையறுத் திசைப்பதை யெவனோ
157
எரிக்கு றும்பொறி யனையசெம் மணிசுட ரெறிபொன்
வரிச்சு ரும்புநேர் மரகத முத்துவாள் வைரந்
தெரிப்ப ருந்துகிர் சிந்தின செல்லுநா ளன்றும்
கரிப்பர் கையகப் படுவன வாயிரத் திரட்டி
158
பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண்
தேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் றூய
மாயை காரிய வொலி யன்றி வான்முதற் கருவின்
ஆய காரிய வோசையே யாய்க்கிடந் தன்றே
159
ஒழிவில் வேறுபல் பொருளுமே ழுலோகமும் பிறவும்
வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்துத்
தழுவி வேண்டினர் தாங்கொளத் தக்கவா பகரா
அழிவி லாமறை போன்றன வாவண வீதி
160
திக்கெலாம் புகழ் மதுரையைச் சிவபுர மாக்கி
முக்க ணாயக னரசுசெய் முறையினுக் கேற்பத்
தக்க தோழனோ டளகைமா நகருறை தயக்கம்
ஒக்கு மந்நகர் வாணிக ருறையுள்சூழ் நிகமம்
161
ஒற்றை யாழியா னுலகிரு ளதுக்குமா போலச்
செற்ற நேமியாற் கலி யிரு டின்றுகோ லோச்சி
மற்ற டம்புய வலியினான் காறடு சீற்றக்
கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோமறு குரைப்பாம்
162
தரங்க வேலைக டம்மையே தாளுறப் பிணித்துத்
துரங்க மாவெனத் தொகுத்தமந் துறைபல வருவி
இரங்கு மோரறி வுயிர்வரை யாவையும் பெய்ர்த்து
மரங்கொல் யானைபோற் பிணித்தகூ டம்பல மன்னோ
163
மழுக்கள் வச்சிரங் கார்முகம் வாளிமுக் குடுமிக்
கழுக்கள் சக்கர முடம்பிடி கப்பண நாஞ்சில்
எழுக்க ணாந்தகம் பலகைதன் டிவைமுதற் படையின்
குழுக்க ளோடிகல் விந்தைவாழ் கூடமும் பலவால்
164
துளைய கல்லைமா லெனக்கொண்டு சுழற்றியுஞ் செந்தூள்
அளையும் யானைபோற் பாய்ந்துமல் லாற்றியும் ஆற்றல்
விளைய வாளடு கேடகம் வீசியும் வென்றி
இளைய ராடமர் பயில்வன வெண்ணிலாக் கூடம்
165
தேசவிர் நீல மாடஞ் செம்மணிச் சென்னி மாடங்
காசறு கனக மாடஞ் சந்திர காந்த மாடம்
மாசற விளக்கு மின்ன மாடநீண் மாலை கூடற்
பாசிழை மடந்தை பூண்ட பன்மணிக் கோலை யன்ன
166
விரையகல் கதும்பி னல்லார் வீங்கிளங் கொங்கை போழ்ந்த
வரை யகன் மார்ப மன்றி வடுப்படார் தமக்கன் பில்லார்
உரையகன் மான வாற்றா லொழுகுவார் பலகை யொள்வாட்
கரையகல் விஞ்சை வீரர் கணம்பயில் காட்சித் தெங்கும்
167
மின்னைவா ளென்ன வீசி வீங்குவார் தம்மிற் போர்மூண்
டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதையக் குத்தி
அன்னவா னென்ன வாய்விட் டதுவெனச் செந்நீர் சோரப்
பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள்
168
தூண்டுவா ருளமுந் தங்கள் பின்னிடத் துவக்குண் டீர்த்துத்
தாண்டுமா னொற்றை யாழித் தேரினும் துள்ளித் துள்ளப்
பாண்டில்வாய்ப் பசும்பொன் றேயப் பார்மகண் முதுகுகீண்டு
சேண்டிசை போய்மடங்கச் செல்வத்தேர் நடாத்து வார்கள்
169
மைந்தர்தந் நெருக்கிற் சிந்து கலவையும் மகளிர் கொங்கைச்
சந்தமுங் கூந்தல் சோர்ந்த தாமுமுஞ் சிவிறி வீசு
சிந்துரப் பொடியும் நாறத் தேனொடு மெழுந்து செந்தூள்
அந்தர வயிறு தூர்ப்ப வடுபரி நடாத்துவார்கள்
170
தம்முயிர்க் கிரங்கார் ஆகித் தருக்கொடு மான மீர்ப்பத்
தெம்முனை யெதிர்ந்தா ராற்றுஞ் செருவெனக் குருதிச் செங்கேழ்க்
கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி
வெம்முனை நோக்கி நிற்பார் வேறவற் றூறு நோக்கார்
171
பெண்முத்த மனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வைகை
வெண்முத்த மிழைத்த சிற்றில் சிதைபட வெகுண்டு நோக்கிக்
கண்முத்தஞ் சிதறச் சிந்தும் கதிர்முத்த மாலைத் தட்பத்
தெண்முத்தி னகைத்துச் செல்வச் சிறார்கடே ருருட்டு வார்கள்
172
கொடிமுகி றுழாவு மிஞ்சிக் கோநகர் வடகீழ் ஞாங்கர்
முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும்
அடிமிசை நாறத் தென்னர் வழிவழி யரசு செய்யும்
இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாடக் கோயில்
173
ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித்
தீர்த்தராய் முத்தீ வேட்குஞ் செல்வர்தம் இருக்கை சொல்வாம்
174
முஞ்சிநாண் மருங்கின் மின்னப் பொன்செய்த முளரி வேய்ந்த
குஞ்சிநான் றசையத் தானைச் சொருக்குமுன் கொய்து தூங்கப்
பஞ்சிநாண் கலைந்தோன் மார்பும் பலாசக்கோல் கையும் தாங்கி
எஞ்சிநாண் மறைநூல் கற்போர் கிடைகளே யில்ல மெல்லாம்
175
தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்
நாவரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ
176
வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின்
பேதமும் தெரிந்தோ ராலும் பிறமதங் களைய வல்ல
வாதமும் மதமேற் கொண்டு மறுத்தலும் நிறுத்த வல்ல
போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம்
177
உறிபொதி கரகக் கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த
அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள
எறிசுடர் மழுவா ளென்னக் கோவணம் யாந்த கோலர்
மறைமுடி வன்றித் தேறா மாதவர் மடங்க ளெங்கும்
178
அட்டில்வாய்ப் புகையு மாடத் தகில்படு புகையும் வேள்வி
விட்டெழு புகையும் ஒன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல்
பட்டது பலருந் தந்தம் பயில்வினை யிழக்க நங்கை
மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாண் மானு மன்னோ
179
தெய்வ நீறுமைந் தெழுத்துமே சிதைக்கல னாக
எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவிப்
பௌவ மேழையும் கடந்தரன் பதமலர்க் கரைசேர்
சைவ மாதவர் உறைமடத் தனிமறு குரைப்பாம்
180
எங்கு மீசனைப் பூசைசெய் திகபர மடைவார்
எங்கு மன்பரைப் பூசைசெய்து எழுபிறப் பறுபார்
எங்கு மாகமஞ் செவிமடுத் தெதிர்வினை தடுப்பார்
எங்கு நாயகன் வடிவுணர்ந் திருள்மலங் களைவார்
181
அழிவி லானுரை யாகமம் இலக்கமாய்ந் தவற்றுள்
விழிமி தாகிய விதியினும் விலக்குனு மடியைத்
தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசம்
கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால்
182
மறைகள் ஆகமம் பொதுச்சிறப் பெனச்சிவன் வகுத்து
முறையி னோதிய விதிவிலக் குரைகளு முடிவில்
அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைத்த
குறைவி லாச்சிவ யோகியர் குழாங்களும் பலவால்
183
குழலும் தும்புரு நாரதர் பாடலும் குனித்துச்
சுழலுங் கொம்பனார் ஆடலு மூவர்வாய்த் துதியும்
விழவின் செல்வமுஞ் சுருதியுந் திசையெலாம் விழுங்கும்
முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்
184
மடங்கல் இன்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று
விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண்பிறைக் கண்ணியான் கயிலைமூ வுலகும்
ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கமே யொக்கும்
185
கரந்து தேன்றுளித் தலர்களும் சொர்ந்துவண் டரற்ற
நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு
பரந்து கட்புனல் உகப்பல மலர்கடூய்ப் பழிச்சி
இரந்து நின்றருச் சனைசெயு மிந்திர னிகரும்
186
உழல்செய் தீவினை புருப்பற வுயிர்க்கெலா மடியின்
நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின்
குழல்செய் வண்டுகற் பகமதுக் கொணர்ந்துவந் தூட்டித்
தழல்செய் காமமென் பேடையின் ஊடனோய் தணிக்கும்
187
ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார்
ஊரு மாழியன் றதுவென வோன்கெயி லெட்டாய்ச்
சாரு நேமியன் றதுவெனச் சமைந்தகோ புரம்பொன்
மேரு வன்றது வெனச்சுடர் விசும்பிழி விமானம்
188
வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்
பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர்
மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும்
189
பொறிகள் ஐந்தினுக் கூட்டுபல் போகமு மிதப்பச்
செறிகொ ணீரவா லுவர்ப்பவத் திருநகர் மாக்கள்
நெறிகொள் செஞ்சடைப் பிறைமுடி நிருமலக் கொழுந்தின்
வெறிகொ ணான்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல்
190
முன்ன வன்னர சிருக்கையால் அந்நகர் முளரிப்
பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வந்
தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும்
மின்னை யீன்றத· தீன்றதால் விழுத்தகு புகழே
191
எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்
வழுத்த நின்றவிந் நகர்வயின் உம்பரின் மாண்ட
விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத்
தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்
192
விரைய வீழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்துத்
திரைய வென்றது முடிதகர்த் திந்திரன் செருக்குக்
கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக
வரைய வென்றதும் இந்நகர் வலியினா லன்றோ
193
எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்குந்
தங்கு பேரொளி யல்லதித் தனிநகர்ச் செல்வஞ்
செங்க ணாயிர நாவினான் செப்பவும் எதிர்க்கண்
டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ
194
புண்ணி யம்புரி பூமிபா ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்
195
பண்கனிந் தனைய சொல்லார் நரப்பிசைப் பாணி தேவர்
உண்கனி யமுதுங் கைப்பச் செவிதுளை தூண்ட வுண்டும்
பெண்களின் அமுத மன்னார் பெருமித நடன முண்ணக்
கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார்
196
கலவிவித் தாக வூடிக் கட்புனல் குளிக்கு நல்லார்
புலவிதீர் செவ்வி நோக்கிப் புனர்முலைப் போகந் துய்த்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு தரும தானங்
கலைஞர்கைப் பெய்துங் காலங் கழிப்பவ ரெண்ணி லாதார்
197
சந்தித்து மீனநோக்கி தலைவனை மூன்று போதும்
வந்தித்தும் ஈசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்
அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ்
சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பார் பல்லோர்
198
கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்டவை கருத்துள் ஊறச்
சொற்பொரு ணினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுட் டுளக்கந் தீர்த்தும்
எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த
அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்து நாள் கழிப்பார் சில்லோர்
199
தன்னிகர் உயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவனாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ
அன்னது தனதே யாகு மண்ணிலே பாண்டி வேந்தாய்
இந்நகர்க் கரச னாவா னிக்கவிக் கிறைவ னாவான்
200
என்னென வுரைப்பேன் இந்த விறைமகன் பண்மை யேனை
மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ
அன்னவ னாணை யாற்றா டைப்பதிவ் வகில மென்றான்
முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன்
மதுரை திருநகரப் படலம் சுபம்
201
வரங்க டந்தரு ளெனமுது வானவர் முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவன் இருப்பது திருக்கயி லாயம்
202
புரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்
203
அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
நரம்பி னோசையு முழவதிர் சும்மையு நால்வாய்
வரம்பில் ஓதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ
204
வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத்
தந்த தாலரன் கயிலையிந் தனதுசா ரூபம்
205
ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறைக் குடுமியின் உள்ளளி நோக்கித்
தூங்கு மாதவர் கண்களும் சொரிவன வெள்ளம்
206
கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீர் எடுத்துக்
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வொருபால்
207
கைய நாகமும் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந்து அன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு
திருக்கைலாய வருணனைப் படலம் சுபம்
208
அளந்தி டற்கரி தாயவக் குன்றின்மேல்
களங்க றுத்துவிண் காத்தவன் கோயின்முன்
விளம்ப ருஞ்சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்
வளம்பெ றுஞ்சிவ தீர்த்தத்தின் மாடது
209
தண்ட ருங்கதிர்ச் சந்திர காந்தத்திற்
பண்ட யங்க நவமணி பத்திசெய்
தண்டர் தச்சன் அனேக தவஞ்செய்து
கண்ட தாயிரக் கான்மண் டபமரோ
210
ஆன பான்மையி னால்அந்த மண்டபம்
ஞான நாயக னாண்மலர்த் தாடொழ
வான மீனொடு வந்து பதங் குறித்
தூன மின்மதி வைகுவ தொத்ததே
211
அன்ன மண்டபந் தன்னு ளருந்தவம்
என்ன வேங்கை யதண்மேல் இருந்தனன்
பன்னு வேள்விப் பதினெண் புராணமும்
சொன்ன மாதவச் சூத முனிவனே
212
அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாகி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந்து ஏத்தியே
213
சம்பு பத்தன் சதானந்தன் உத்தமன்
அம்பு யத்த னனைய மகோதரன்
உம்ப ரஞ்சிய வுக்கிர வீரியன்
நம்பு வேள்விப் பிரசண்ட நற்றவன்
214
ஆதி மாதவர் யாவரும் அன்புமை
பாதி யாய்முற்று மாகும் பராபரச்
சோதி பால்வைத்த சூதனைத் தோத்திரம்
ஓதி யஞ்சலித் தொன்று வினாவினார்
215
வேத வாகம புராணமே மிருதியே முதலா
ஓது நூல்களின் றுணிபொரு ளுலகெலாம் பயந்த
பேதை பாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய
போத மாதவ வுனக்கியாம் புகல்வது ஒன்று றுலதால்
216
மேரு மந்தரங் கைலைபர்ப் பதமுதல் விடைமேல்
ஊரு மந்தர நாடவன் உறைபதி யனந்தம்
ஆரு மந்தமில் போகம்வீ டடைவதென் றவற்றின்
கார ணங்களோ டுரைத்தனை கருத்தினுக் கிசைய
217
ஐய மாதிமுக் குற்றமும் அகலநீ யருளிச்
செய்ய வுந்தெளிந் திலேங்கள்யாஞ் சிற்றறி வுடையேம்
மைய னெஞ்சினே மாகையான் மயக்கற வின்னும்
உய்யு மாறருள் செய்தியென் றுரைத்தனர் மன்னோ
218
தலங்க டம்மின்மிக் குள்ளதாய்த் தகுதிசா றீர்த்தக்
குலங்க டம்மின்மிக் குள்ளதாய்க் குறையிரந் தோர்க்கு
நலங்க டந்தருண் மூர்த்தியாய் நாதவே தாந்தப்
புலங்க டந்தபேர் ஒளியுறை தலனொன்று புகலாய்
219
என்ற போதெதிர் முகமலர்ந் திருண்மல வலியை
வென்ற சூதனுந் தலங்களின் விசேடமாய்ந் தம்பொற்
குன்ற வார்சிலை யானிடங் கொண்டுறை பதியுள்
ஒன்று கேட்கவீ டளிப்பதாய் உளதுமற் றதுதான்
220
முற்ற வோதிய புராணமூ வாறினுட் காந்தம்
பெற்ற தாறுசங் கிதையவை யாறுந்தம் பெயராற்
சொற்ற பேர்சனற் குமரமா முனிவரன் சூதன்
கற்றை வார்சடைச் சங்கரன் மால்அயன் கதிரோன்
221
இன்ன வாறனுட் சங்கர சங்கிதை யென்று
சொன்ன நூலினை யுணர்த்தினான் சங்கரன் துணைவிக்
கன்ன போதவண் மடியினி லிருந்துகேட் டதனை
மின்னு வேல்பணி கொண்டவேள் வெளிப்பட வுணர்ந்தாள்
222
குன்றே றிந்தவேள் வழிபடு குறுமுனிக் குரைத்தான்
அன்று தொட்ட· தகத்திய சங்கிதை யாகி
நின்ற தன்னது கேட்பவர்க் கரனடி நீழல்
ஒன்றும் இன்பவீ டளிப்பதா வொருதல னுரைக்கும்
223
அதிக வப்பதி யாதெனி னாலவாய் கேட்கக்
கதிய ளிப்பதென் றோதிய சூதனைக் கதியின்
மதியை வைத்தவர் அன்னதைப் பகரென வந்த
விதியி னிற்புகல் கின்றனன் வியாதன்மா ணாக்கன்
224
புதிய தாமரை வேவிய பழமறைப் புத்தேள்
விதியி னாற்கடு நடைப்பரி மகஞ்செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க் குதவுதண் டுறைகெழு காசிப்
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டொரு வைகல்
225
அகத்தியன் வியாத னாரதன் சனகன் ஆதிநான் முனிவர்கோ தமனூற்
சிகைத்தெளி வுணர்ந்த பராசரன் வாம தேவன்வான் மீகியே வசிட்டன்
சகத்தியல் கடந்த சுகன்முதன் முனிவர் தம்மொடும் பத்துவெம் பரிமா
மகத்தொழின் முடித்து மற்றவர்க் குள்ள மகிழ்வுற வழங்குந வழங்கா
226
சத்திய வுலகிற் சரோருகக் கிழவன் சார்ந்தபின் புலப்பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும் காசி யடிகளை யடைந்தனர் பணிந்து
முதல் மண்டபத்தி னறமுத னான்கு மொழிந்தருண் மூர்த்திசந் நிதியிற்
பத்தியா யிருந்து நாரத முனியைப் பார்த்தொரு வினாவுரை பகர்வார்
227
தலமுதன் மூன்றுஞ் சிறந்ததோர் சைவத் தலமுரை யென்னநா ரதன்றான்
கலைமுழு துணர்ந்த சனற்குமா ரன்பாற் கற்றவன் வியாதனாம் அவன்பால்
நலமுறக் கேண்மி னெனவவன் கதிர்வே னம்பிபான் மறைமுத லனைத்தும்
அலைவற வுணர்ந்தோன் குறுமுனி யாகு மவனிடைக் கேண்மென விடுத்தான்
228
மலயமா தவனை யடைந்துகை தொழுது வாழ்த்திவா தாவிவில் வலனைக்
கொலையுரி தரும மூர்த்தியே விந்தக் குன்றடக் கியதவக் குன்றே
அலைகடல் குடித்த வருட்பெருங் கடலே யருந்தமிழ்க் கொண்டலே தென்பார்
துலைபெற நிறுத்த களைகணே யென்று சுருதியா யிரமெனத் துதித்தார்
229
மூவகைச் சிறப்பு முள்ளதோர் தான மொழிகென முகமலர்ந் தருள்கூர்ந்
தியாவையும் உணர்ந்தோன் முத்திமண் டபத்தி னீரிரு தொகையின்வந் திறக்கும்
சேவல்க டமையு மைங்கரன் றனையுஞ் சேவலங் கொடியுடை வடிவேற்
காவலன் றனையும் வடநிழ லமர்ந்த கண்ணுதற் பரனையும் பணியா
230
அங்கயற் கண்ணி தன்னையு மெந்தை யாலவா யானையும் இதய
பங்கயத் திருத்திச் சமாதியி லிருந்து பரவச மடைந்துபார்ப் பதிக்குச்
சங்கர னருளிச் செய்தசங் கிதையைத் தாரக னுடலிரண் டாகச்
செங்கைவேல் விடுத்த சேவக னெனக்குத் தெருட்டினா னனையசங் கிதையில்
231
பெறற்கருந் தவஞ்செய் தகந்தெளிந் தரிதிற் பெறுங்கதி கேட்பவர்க் கெளிதா
யுறப்படுந் தலநீர் வினாயமுச் சிறப்பு முள்ளதெத் தலத்தினுங் கழிந்த
சிறப்பினாங் கெண்ணெண் டிருவிளை யாடல் செய்தருள் வடிவெடுத் தென்றும்
மறைப்பொருள் விளங்கு மாலவாய் அதனை மண்ணின்மேற் சிவனுல கென்னும்
232
அத்தலத் தனைய மூவகைச் சிறப்பும் அளவிலா வுயிர்க்கெலாங் கருணை
வைத்தவன் செய்த திருவிளை யாட்டும் வரையுரங் கிழியவே லெடுத்த
வித்தக னெனக்கு விளம்பிய வாறே விளம்புவ னுமக்கென வந்த
உத்தம முனிவர் யாவருங் கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான்
மதுரைக் காண்டம்
233
நாட்டமொரு மூன்றுடைய நாயகனுக் கன்புடையீர் நயந்து நீவிர்
கேட்டதலம் ஈண்டுரைத்த திருவால வாயதனுட் கிளைத்துப் பொன்னந்
தோட்டலர்தா மரைமுளைத்த தொருதடமுஞ் சுந்தரச்செஞ் சோதி ஞான
ஈட்டமென முளைத்தசிவ லிங்க மொன்று முளவின்னு மிசைப்பக் கேண்மின்
234
திருவால வாய்க்கிணையா மொருதலமும் தெயவமணஞ் செய்ய பூத்த
மருவார்பொற் கமலநிகர் தீர்த்தமுமத் தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி யுறைசோம சுந்தரன்போ லிகபரந்தந் துலவா வீடு
தழிவானு முப்புவனத் தினுமில்லை யுண்மையிது சாற்றின் மன்னோ
235
அவ்வகைய மூன்றின் முதற் றலப்பெருமை தனைச்சுருக்கி யறையக் கேண்மின்
எவ்வகைய வுலகத்துந் தருமதல மதிகமவற் றீறிலாத
சைவதல மதிகமவற் றறுபத்தெட் டதிகமவை தமிலீ ரெட்டுத்
தெய்வதல மதிகமவற் றதிகதல நான்கவற்றைச் செப்பக் கேண்மின்
236
அன்னமலி வயற்புலியூர் காசிநகர் காளத்தி யால வாயாம்
இன்னவளம் பதினான்கிற் றிருவால வாயதிக மெவ்வாறு என்னின்
மின்னவிரம் பலங்காணக் காசிநகர் வதிந்திறக்க வியன்கா ளத்திப்
பொன்னகரம் பத்தியினால் வழிபாடு செயவளிக்கும் போகம் வீடு
237
அறந்தழையுந் திருவால வாய்கேட்ட வுடன்போக மளிக்கும் ஈண்டு
பிறந்திறவாப் பேரின்பக் கதியளிக்கும் இதுவன்றிப் பிறழா தெங்கும்
நிறைந்தபர னெத்தலமும் படைப்பானித் தலத்தைமுத னிருமித் திங்ஙன்
உறைந்தருளி னானன்றி யின்னமுள திதன்பெருமை யுரைப்பக் கேண்மின்
238
திருவால வாயென்று கேட்டவரே யறம்பெறுவர் செல்வ மோங்குந்
திருவால வாயென்று நினைத்தவரே பொருளடைவர் தேவ தேவைத்
திருவால வாயிடத்துக் கண்டவரே யின்பநலஞ் சேர்வ ரென்றுந்
திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டுநெறி சேர்வர் அன்றே
239
சுரநதிசூழ் காசிமுதற் பதிமறுமைக் கதியளிக்குந் தூநீர் வைகை
வரநதிசூழ் திருவால வாய்சிவன் முத்திதரும் வதிவோர்க்கு ஈது
திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு மாதலினிச் சீவன் முத்தி
புரனதிக மென்பதெவ னதற்கதுவே யொப்பாமெப் புவனத் துள்ளும்
240
ஆதலினிப் பதிவிட்டுப் பிரபதியிற் போய்நோற்போர் அங்கை கொண்ட
சீதளவா னமுதேய்ப்பத் தித்திக்கத் தேம்பெய்து செய்த தீம்பால்
ஓதனத்தைக் கைவிட்டு புறங்கையை நக்குவா ரொப்பா ரிந்த
மாதலத்தின் பெருமைதனை யாவரே யளவிட்டு வழுத்தற் பாலார்
241
மற்றைய தலங்க டம்மிற் பரிமகம் வாச பேயம்
அற்றமில் சோடசாக மக்கினிட் டோமம் யார்க்கும்
முற்றரு மிராசு சூய முதன்மக முடித்த பேறுஞ்
செற்றமி றரிச பூர்ண முதலிட்டி செய்த பேறும்
242
எள்ளிழு தன்னங் கன்னி யிவுளிதே ரியானை யில்லம்
வெள்ளியான் பொன்பூ ணாடை விளைவொடு பழனமுன்னாத்
தள்ளரும் அடிமையாதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன் காசியாதிப் பதிகளில் வதிந்த பேறும்
243
கங்கைகா ளித்தி வாணி காவிரி கண்ண வேணி
துங்கபத் திரைதீம் பாலி தூயதன் பொருநை முன்னாச்
சங்கையி னதிகண் முற்றும் ஆடிய தவத்தின் பேறும்
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க் கெய்தும்
244
அன்னிய தலங்க டம்மில் ஆற்றிய பிரம கத்தி
பொன்னினைக் களவு செய்தல் கள்ளுண்டல் புனித வாசான்
பன்னியைப் புணர்த லின்ன பாதக மனைத்து மென்றுந்
தன்னிக ரால வாயில் வதிபவர் தமைவிட் டேகும்
245
மற்றைய தலத்தின் சாந்தி ராயண மதியந்தோறும்
உற்றபே றிங்குக் கங்கு லூண்டியால் அடைபே றாகும்
மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறிங்
குற்றொரு வைக லுண்டி யொழிந்தவர் பெறும்பே ராகும்
246
அயனக ரடைந்து நான்கு திங்களோன் பாற்றும் பேறிவ்
வியனக ரடைந்து நோற்கும் அட்டமி விரத நல்கும்
அயனக ரெய்தி யாறு திங்கணோன் பாற்றும் பேறிவ்
வியனகர்ச் சோம வார விரதமே யளிக்கு மன்றே
247
ஏனைய தலத்தி லோராண் டுணவொழிந் தியற்று நோன்பால்
ஆனபே றிங்கு நோற்குஞ் சிவனிரா வளிக்கும் இங்கே
ஊனவைம் பொறியும் வென்றோன் முப்பொழு துண்டு வைகித்
தானமர்ந் தாலுங் காலுண் டியற்றுமா தவத்தோ னாகும்
248
இந்தநான் மாட மோங்கும் ஆலவா யிடத்தியா ரேனும்
அந்தணர் தமக்கோர் முட்டி யருந்தவர் தமக்கோர் பிச்சை
தந்தவர் புறம்பு செய்த சோடச தானந் தம்மால்
வந்தபே றடைவர் பல்வே றுரைப்பதென் மதியான் மிக்கீர்
249
பல்வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனு மென்றும்
பல்வகைத் தீர்த்த மெல்லா மாடிய பயனு மென்றும்
பல்வகைத் தான மெல்லா நல்கிய பயனு மென்றும்
பல்வகைத் தான பூசை பண்ணிய தவத்தின் பேறும்
250
பல்வகைத் தவங்கள் எல்லாம் முற்றிய பயனுந் தூய
பல்வகை மந்தி ரத்தி லெய்திய யயனு நூலின்
பல்வகைக் கேள்வி யெல்லா மாய்ந்துணர் பயனும் யோகம்
பல்வகை ஞான மெல்லாம் பயின்றுணர்ந் தடங்கும் பேறும்
251
அனையதொல் பதியி லென்றும் வைகுவோர் அடைவ ரென்றால்
இனையதொல் பதிக்கு நேர்வே றில்லையிப் பதியின் மேன்மை
தனையறி பவரா ரீசன் றானன்றி யாத லலே
வினைனைவெல் பவரங் கெய்தி வதிவதே வேண்டு மாதோ
252
கைத்தலநான் கிரண்டுடைய மலர்க்கடவுண் மோலொருநாட் கயிலையாதி
எத்தலமு மொருதுலையிட் டித்தலமும் ஒருதுளையிட் டிரண்டுந் தூக்க
உத்தமமாந் திருவால வாய்மிகவுங் கனத்ததுகண் டுலகின் மேலா
வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை யாவரே வழுத்தர் பாலார்
253
அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவனம் அமர்ந்தோர் சீவன்
முக்திபுரங் கன்னிபுரந் திருவால வாய்மதுரை முடியா ஞானம்
புத்திதரும் பூவுலகிற் சிவலோகஞ் சமட்டிவிச்சா புரந்தென் கூடல்
பத்திதரு துவாதசாந் தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர்
254
என்றுதலச் சிறப்புரைத்த குறுமுனிவ னெதிரறவோர் இறும்பூ தெய்தி
நன் றுதலப் பெருமையருள் செய்தனைகேட் டுடலெடுத்த நயப்பா டெல்லாம்
இன்றடைந்தே மினிச்சுவண புண்டரிகச் சிறப்பதனை யிசைத்தி யென்னக்
குன்றமடக் கியகருணைக் குன்றனையான் வரன்முறையாற் கூறு கின்றான்
255
விரதமா தவத்தீர் காணின் வெவ்வினை யெல்லாம் வீட்டிச்
சரதமாப் போக நல்குந் தபனிய முளரி வந்த
வரவுமக் கனக கஞ்சப் பெருமையும் வளனு நன்கா
உரைசெய்துங் கேண்மி னென்னா முனிவரன் உரைக்கு மன்னோ
தலவிசேடப் படலம் சுபம்
256
கண்ணகன் குடுமி மாடக் கடிபொழி லால வாயின்
அண்ணலம் பெருமை யாரே யளப்பவ ரவிர்தண் முத்த
வெண்ணகை யுமையா ளன்பு விளைமுகச் செவ்வி போலத்
தண்ணறும் கமலம் பூத்த தடப்பெருந் தகைமை சொல்வாம்
257
ஆற்றுனுக் கரசாங் கங்கை காவிரி யாதி யாறும்
வேற்றுரு வாய முந்நீர் வேலையும் பிறவுங் காருந்
தோற்றுமுன் றன்னை யாட்டச் சுந்தர மூர்த்தி செங்கண்
ஏற்றினன் கண்ட தீர்த்த மாகுமீ தெவ்வா றென்னின்
258
அகளமா யுலக மெல்லாம் ஒடுக்கியந் நெறியே யார்க்கும்
நிகளமாம் விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்குந்
குகளிலா வறிவா னந்த சுந்தரச் சோதி மேனாட்
சகளமா முருவங் கொண்டு தானொரு விளையாட் டாலே
259
முக்கணன் அரவப் பூண நூலினன் முகிழ்வெண் டிங்கட்
செக்காஞ் சடையன் சூல கபாலத்தன் செங்க ணேற்றன்
மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும்
பக்கமு நந்தி யாதி கணாதிபர் பாவிச் சூழ
260
சென்றுதன் தேனித் தேசாற் றிசையெலாம் விளங்கச் செங்கண்
வென்றிகொள் உரக வேந்த னகரமும் விபுதர் வேந்தன்
பொன்றிகழ் நகரும் வேதன் புரமுமால் புரமு மேலைத்
தன்றிரு நகருஞ் சென்று சஞ்சரித் தாடி மீள்வான்
261
அன்னபோ தயனுந் தேவர்க் கரசனும் ஆழி வேந்தும்
முன்னர்வந் திறைஞ்சி யேத்த முனிவரும் பேறு நல்கித்
தன்னக ரடைந்து நீங்காத் தனிப்பெருங் கணத்தி னோரை
இன்னருள்சுரந்து நோக்கி யிலிங்கத்திற் புகுது மெல்லை
262
வேத்திரப் படையோன் ஆதி கணாதிபர் வீழ்ந்து பால
நேத்திர வன்பர்க் கன்ப நிரஞ்சன நிருத்தா னந்த
சாத்திர முடிவுந் தேறாத் தனிமுக லொருவ வென்னாத்
தோத்திர வகையா லேத்தித் தொழுதொன்று வினாவல் செய்வார்
263
ஐயவிவ் விலிங்க மூர்த்திக் காட்டவு மடியே மூழ்கி
உய்யவுங் கங்கை யாதி நதிகளும் உலகத்துள்ளோர்
மை யறு தடாச நீரு மற்றிலை யிருமைப் பேறுஞ்
செய்யவோர் தீர்த்த மிங்குண் டாக்கெனச் செப்ப வேண்டும்
264
அத்தகை யிலிங்க மூர்த்திக் கடுத்ததென் கீழ்சா ராக
முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு
பைத்தலைப் பாந்தள் வேந்தன் பாதலங் கீண்டு போயெண்
கைத்தலப் பிரமன் அண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல்
265
அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்தபேர் ஆழி யூழிப்
பௌவநீ ரென்ன வோங்கப் பாணியா லமைத்து வேணித்
தெய்வநன் னீரைத் தூவிக் கலந்துமா தீர்த்த மாக்கிக்
கைவரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்
266
இன்னமா திர்த்தந் தன்னை யெனைப்பல தீர்த்தங் கட்கு
முன்னம்யாம் இங்குக் கண்ட முதன்மையா லாதி தீர்த்தம்
என்னலா மினியுண் டாக்குந் தீர்த்தங்க ளெவைக்கு மேலாய்
மன்னலாற் பரம தீர்த்த மெனப்பெயர் வழங்க லாகும்
267
மருட்கெட மூழ்கி னோர்நன் மங்கலம் பெறலா னாமம்
அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ளத்
திருட்கெட ஞானந் தன்னை யீதலான் றிதற்கு நாமம்
268
குடைந்துதர்ப் பணமுஞ் செய்து தானமுங் கொடுத்தும் மாடே
அடைந்தெழுத் தைந்தும் எண்ணி யுச்சரித் தன்பா லெம்மைத்
தொடர்ந்துவந் திறைஞ்சிச் சூழ்ந்து துதித்தெமை யுவப்பச் செய்தோர்
உடம்பெடுத் ததனா லெந்த வுறுதியுண் டதனைச் சேர்வார்
269
இந்தநீ ரெம்மை யாட்டி னேழிரண் டுலகின் மிக்க
அந்தமி றீர்த்த மெல்லாம் ஆட்டிய பயன்வந் தெய்தும்
வந்திதின் மூழ்கி யிங்கு வைகுநங் குறியை யுங்கள்
சிந்தையி லார்வம் பொங்கப் பூசனை செய்மி னென்னா
270
விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற
பண்ணவன் றானந் நீரிற் படிந்துதன் னனுச்சை யாலே
அண்ணலங் கணத்தி னோரை மூழ்கிவித் தனாதி யாய
புண்ணிய விலிங்கந் தன்னுட் புகுந்தினி திருந்தான் மன்னோ
271
அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம
சுந்தரன் முடிமேல் ஆட்டித் துகளறப் பூசை யாற்றிச்
சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம்
வந்தவா றிதுவத் தீர்த்த மகிமையு முரைப்பக் கேண்மின்
272
வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவத்
தளையறு மூழ்கின் வேண்டுங் காமியம் எல்லாஞ் சாரும்
உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலகத் துள்ள
அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வந் தெய்தும்
273
மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து
மையறு வருண சூத்த மந்திர நவின்று மூழ்கிற்
றுய்யமா தீர்த்த மெல்லாந் தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர்
கையிலெப் பொருளும் ஈந்த காசறு பேறு நல்கும்
274
தெய்வவித் தீர்த்தந் தன்னை நினைவின்றித் தீண்டினாலும்
அவ்விய வினையு னீந்தி யரும்பெறல் வீடு சேர்வர்
இவ்வுரை மெய்யே யாகும் என்னெனின் மனத்தா றன்றி
வெவ்வழ றீண்டி னாலுஞ் சுடுமன்றி விடுமோ வம்மா
275
ஆருமந் நீரி லென்று மாடினார் சீவன் முத்தி
சேருவ ரந்நீ ராடுஞ் சிறப்புறு பயனுக் கொவ்வா
வாருண மாக்கி னேய மந்திரம் இவைமுன் னான
பேருணர் வளிக்கு நானஞ் செய்தவர் பெறும்பே றெல்லாம்
276
அன்னநீர் தனையுமாடி யாலவா யுடைய நாதன்
றன்னையும் பணிவோன் மேலைப் பாகதி தன்னைச் சாரும்
என்னநன் னூலிற் சொன்ன பவித்திரம் எவைக்கு மேலாய்ப்
பன்னரும் புனித மான பவித்திர மாகி நிற்கும்
277
ஆதர விலனா யந்நீ ராடினோன் சுவர்க்கன் சேரும்
ஆதர வுளனாய் மூழ்கி வானவ ராதி யானோர்க்
காதர வரிசி யெள்ளுத் தருப்பண மமையச் செய்தோன்
ஆதர வேள்வி முற்று மாற்றிய பயனைச் சேரும்
278
ஏனைமா தலங்க டம்மி லிருந்துசெய் விரதம் பூசை
தானமா தரும மோமந் தவஞ்செபந் தியானந் தம்மால்
ஆனமா பயனிற் கோடி யதிகமாம் அடைந்து மூழ்கி
ஞானமா தீர்த்த ஞாங்க ரிருந்தவை நயந்து செய்யின்
279
பிறந்தநா ளந்னீர் மூழ்கின் மேலைவெம் பிறவிப் பௌவம்
மறிந்திடு மறிதேள் கும்ப மதிகளின் மூழ்கித் தென்பால்
உறைந்தவர் பொருட்டுப் பிண்ட முதலினா லவர்தாம் ஆழ்ந்து
நிறைந்திடு பிறவிப் பௌவ நின்றுமே லெழுவ ரன்றே
280
அத்தட மருங்கின் யாவர் தென்புல மடைந்தோர் தங்கள்
சித்தமா சகற்ற வேண்டிச் செய்கடன் முடிக்கி னன்னோர்
எத்தனை யெண்ணேர்ந் தாலும் எள்ளுக்கா யிரமாண் டாக
அத்தனை யாண்டு மட்டு மவரைவிண் ணான வைப்பார்
281
மூவகை யுலகில் உள்ள தீர்த்தமு முறையா லென்றுஞ்
சேவகஞ் செய்யு மிந்தத் தீர்த்தமெந் நாளு மூழ்கி
ஏவாந் நீரா லென்று மீசனைப் பூசை செய்வோர்
ஆவரிப் பிறவி தன்னி லவர்கதிக் கரையைச் சார்வார்
282
விடுத்திடல் அரிய நித்த வேள்வி விரதம் வேதந்
தடுத்திட லரிய தானந் தவமிவை தரும்பே றெல்லாம்
அடுத்ததன் கரையில் வைகி யீசனை யருச்சிப் போர்க்குக்
கொடுத்திடு புண்ணி யத்திற் கோடியி லொன்றுக் கொவ்வா
283
உம்மையிற் பிறவி தோறு நியமநல் லொழுக்கம் பூண்டு
பொய்மையில் விரதந் தானந் தவஞ்செய்து புனிதராகிச்
செம்மைநன் னெறியி னின்ற சித்தழிக் கலதித் தீர்த்தம்
இம்மையில் அடைந்து நித்தமாடுதற் கெய்தா தன்றே
284
மதிகதிரோ னிடத்தொடுங்கு தினந்திங்கட் பிறப்பரவம் வாயங் காந்து
கதிர்கடமை விழுங்குதினம் விதிபாத மிந்நாளிற் கருதி மூழ்கித்
துதிகடருப் பணந்தானம் புரிதன்மனு வோதுதலத் தொகையொன் றற்கொன்
றதிகபல னம்முறைநூ றாயிரநூ றாயிரமோர் அநந்த மாகும்
285
பொருவரிய தகர்த்திங்க டுலாத்திங்கள் இவை யுதிக்கும் போது மூழ்கின்
ஒருபதினா யிரமடங்காஞ் கறவுகவைத் தாளலவ னுதிப்பின் மூழ்கின்
இருபதினா யிரமடங்கா மிந்திரவி யிடத்தொடுங்கு மிந்து வாரம்
வருவதறிந் தாடிமனு வோதன்முதற் செயினனந்த மடங் குண்டாகும்
286
பிரயாகை தனின்மகர மதிநாண்முப் பதுங்குடைந்து பெறும்பே றிந்தத்
திரையார்பைந் தடத்தொருநாண் மூழ்குவோன் பெறும்விரத சீலம் பூண்டு
வரையாமல் ஒருவருடம் படிந்துமையை யமரர்சிகா மணியாம் வேத
உரையானை வழிபடுமேன் மலடிக்கு நன்மகப்பே றுண்டா மன்னோ
287
எண்டிசைய நதிவாவி வடிவான மாதீர்த்தமெல்லா மிப்பொற்
புண்டரிக தடத்திலொரு கோடியிலோர் கூறுநிகர் போதா வீது
கண்டதனா லறந்தீண்டப் பெற்றதனா னற்பொருளங் கையால் அள்ளிக்
கொண்டதனா லின்பநலங் குடைந்ததனாற் பேரின்பங் கொடுக்கு மன்றோ
288
முன்னவ னருளிச் செய்த காரண முறையால் அன்றி
இன்னமிப் புனித வாவிக் கேதுவா லெய்து நாமம்
மின்னவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரிற்
பின்னது கலந்த நீராற் பெறுஞ்சிவ கங்கையென்றும்
289
அலகிலாத் தீர்த்தந் தம்மு ளதிகவுத் தம்மாய்த் தோன்றி
இலகலா லிதனைத் தீர்த்த வுத்தம மென்பர் ஆராய்ந்தோர்
பலவிதழ் விரித்துச் செம்பொற் பங்கய மலர்ந்த நீரால்
உலகவர் யாரும் பொற்றா மரையென வுரைப்ப ரன்றே
290
தருமமுன் னாகு நான்குந் தருதலாற் றரும தீர்த்தம்
அருமைசால் அருத்த தீர்த்த மரும்பெறற் காம தீர்த்தம்
இருமைசேர் முத்தி தீர்த்த மென்பதா மீனைய தீர்த்தம்
வெருவரு பாவமென்னும் விறகினுக் கெரியா மன்றே
291
இவ்வருந் தலத்தி னாற் பெருமையும் எரிகால் செம்பொற்
றெய்வத பதும தீர்த்தப் பெருமையுஞ் செப்பக் கேட்டேன்
எவ்வமில் போகம் வீடு பெறுவரென் றிசைத்தான் முந்நீர்ப்
பௌவமுண் டமரர் வேந்தன் பரிபவ விழுமந் தீர்த்தோன்
தீர்த்த விசேடப் படலம் சுபம்
292
ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்கமேன்மை முறையினா லறைய லுற்றாம்
293
பொன்னெடு மேரு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்
294
அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரணமிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்க மாய்ச் சிறக்கு மன்னோ
295
இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்
296
திறப்படு முலக மெங்கும் வியாபியா ய்ச்சிறந்துநிற்கும்
அறப்பெருங் கடவுள் சோமசுந்தர னதனா லன்றே
கறைக்கதிர் வடிவேற் றென்னன் கையிற்பொற் பிரம்புபட்ட
புறத்தடித் தழும்பு மூன்று புவனமும் பட்டதன்றே
297
சொற்றவிச் சமட்டி யான சோமசுந் தரனைக் காணப்
பெற்றவர் வியட்டி யான பிறபதி யிலிங்கங் காணல்
உற்றவ ராவ ரென்னென் றுரைக்கின்வே ரூட்டு நீர்போய்
மற்றைய சினைக ளெல்லாந் தழைவிக்கு மரத்தின் மாதோ
298
எத்தலத் தியாவ னெண்ணெண் டிருவிளை யாடல் செய்தான்
அத்தலத் தவனுக் கொப்பு மதிகமாஞ் சிறப்பும் பெற்ற
உத்தம னென்று மெந்த வுலகிலு மில்லை யந்த
வித்தக னதிகத் தன்மை யெனைத்தெனின் விளம்பக் கேண்மின்
299
பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு
தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு
விருப்புறு கேளிவி தம்முண் மேம்படும் புரவி மேதம்
அருட்படு தானந் தம்முள் விழுமிதா மன்ன தானம்
300
மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன் வேட்டோர்க்
கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம்
புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம்
302
மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்குந்
தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப
இன்மைசா னெறி நின் றோருக் கேற்குநற் கலங்க டம்மின்
நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர்
302
தீயவான் சுவை ப்பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்
தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்
303
அந்தமு முதலு மில்லா வகண்டபூ ரணமா யார்க்கும்
பந்தமும் வீடு நல்கும் பராபரச் சோதி தானே
வந்தனை புரிவோர்க் கிமை மறுமைவீ டளிப்பா னிந்தச்
சுந்தர விலிங்கத் தென்றும் விளங்குவான் சுருதி யேத்த
304
இத்தகு சயம்பு தன்னை யேனைய சயம்பு வெல்லாம்
நித்தமும் தரிசித் தேகு நிருமல வொளியா மிந்த
உத்தம விலிங்கங் கண்டோ ருரையுணர் வொடுங்க வுள்ளே
சித்தமா சொழியத் தோன்றுஞ் சிவபரஞ் சுடரைக் கண்டோர்
305
இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாங்
கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள
மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு நோய்போல்
உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்
306
கலிகடல் இரவி தோன்றக் கருகிரு ளுடையு மாபோல்
ஒலிகெழு பெருங்கா றள்ள வுடைபடு மேகம் போல
வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போலக்
குலிசவல் லேறு தாக்கப் பொடிபடுங் குன்றம் போல
307
மருட்சிசெய் காம நோயான் மதிகெடு மாறு போல
அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடும் அவிச்சை போலத்
தருக்கறு முவணஞ் சீறத் தழலரா விளியு மாபோற்
செருக்குற வழியுங் கற்ற கல்விபோற் சிதையு மன்றோ
308
புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்
அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த
பலனுறுங் கதிர்கால் உச்சி வைகலிற் பணியப் பெற்றாற்
கலைஞர்பா னூற்றுப் பத்துக் கபிலைமா தானப் பேறோம்
309
விண்ணிடைப் பரிதிப் புத்தேண் மேலைநீர் குளிக்கும் எல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறோம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்
310
இன்னன வதிக மாம்பே றறிந்துபோ யெத்தே வர்க்கும்
முன்னவன் சமட்டி விச்சா புரமுறை முதல்வன் றன்னைச்
சொன்னவிக் காலந் தோறும் இறைஞ்சியுந் தொழுதுஞ் சூழ்ந்தும்
பொன்னடிக் கன்ப ராகி வழிபடும் புனித சீலர்
311
உம்மையில் வினைக ளென்னும் பிணியவிழ்ந் தொருவித் தூய
செம்மைய ராகி யானாத் திருவொடு செல்வ மோங்க
வெம்மையில் போகமூழ்கி மலவிருள் வீக்க நீந்தி
மைம்மலி கண்டத் தெங்கோன் மலரடி நீழல் வாழ்வார்
312
அறவுருவன் ஆலவா யானாமஞ் செவிமடுத்தா லடைந்த பத்துப்
பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும் பவப்பாவப் பிணிபோங் கூடல்
இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுதுமனைப் புறம்போந்தா லீரைஞ்ஞாறு
மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல் வினையனைத்து மாயு மன்னோ
313
புழைக்கைவரை தொலைத்தானை தரிசித்தோர் ஆயிரமாம் புரவி வேள்வி
தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத் தம்மதனாற் றவவா னோர்கள்
தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா யிரராச சூய யாகம்
இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி வாகியவவ் விலிங்கந் தன்னை
314
அங்கையள வாகியநன் னீராட்டிப் பூசித்தோ ரளவி லேனைத்
துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச் சிவாகமநூல் சொன்ன வாற்றான்
மங்கலமா கியமுகம னீரெட்டும் வழுவாது வாசந் தோய்ந்த
செங்கனசு மணிக்கலச்ப் புனலாட்டி மாபூசை செய்தோ ராவார்
315
அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத மானுதவு மைந்து தீந்தேன்
செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன் மட்டித்துத் தேவர் தேறா
மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி மாபூசை விதியாற் செய்தோர்
மைவண்ண வினைநீந்தி யறமுதனாற் பொருளடைந்து மன்னி வாழ்வார்
316
நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும் வடித்தவிரை நன்னீர் ஆட்ட
வல்லவர்நூ றாயிரமா மேதமகப் பயன்பெறுவர் வாச நானம்
எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு மட்டித்தோ ரெழிலார் தெய்வ
முல்லைநகை யாரோடும் விரைக்கலவை குளித் தின்ப மூழ்கி வாழ்வார்
317
நன்மலரொன் றாலவா யான்முடிமேற் சாத்தினா யைந்து நூறு
பொன்மலர்கொண் டயற்பதியுற் பூசித்த பயனெய்தும் புனித போகத்
தன்மைதரு சுந்தரக்கு தூபமொரு காற்கொடுப் போர் தமக்குத் தாங்கள்
சொன்மனமெய் யுறச் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் சுருதி நாதன்
318
திருவமுது நிவேதிப்போர் அவிழொன்றற் குகமொன்றாச் சிவலோ கத்தின்
மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம் பூலமுக வாச மீந்தோர்
பொருவரிய கடவுளராண் டொருநூறு கோடிசிவ புரத்து வாழ்வார்
ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங் கண்ணுதல முடைய ராவார்
319
நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட மணிக்கலச நல்ல வாசம்
பெறுந்தகைய தூபக்கா றீபக்கான் மணியின்ன பிறவுங் கங்குல்
தெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா யகர்க்கீந்தோர் செய்த பாவம்
வெறுந்துகள்செய் தைம்பொறிக்கும் விருந்தூட்டும் பெருங்காம வெள்ளத் தாழ்வார்
320
கயலிசைய கண்ணுமைகோன் றிருமுன்னர்ப் பல்லியமுங் கல்லென் றார்ப்ப
இயலிசைய பாடலினோ டாடலிவை செய்விப்போர் இறுமாப் பெய்திப்
புயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந் தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ்
செயலிசைய வணங்கனையா ராடரங்கு கண்டின்பச் செல்வத் தாழ்வார்
321
ஒருகாலட் டாங்கமுடன் பஞ்சாங்க முடநாத லெண்செங் கால்வெண்
குருகாலு மலர்த்தடஞ்சூழ் கூடனா யகற்பணிவோர் கோலொன் றோச்சிப்
பொருகாலின் வருபரித்தேர் மன்னவரா யாவருந்தம் புடைவந் தெய்தி
இருகாலுந் தலைவருட வெக்காலுந் தமைவணங்க விருப்பர் அன்றே
322
இத்தகைய திருவால வாயுடையான் றிருமுன்னர் இயற்று மோமம்
மெய்த்தவமந் திரந்தான மின்னவணு வளவெனினு மேரு வாகும்
உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம் யாவரளந் துரைப்பர் வேத
வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே மினிப்பலகால் விளம்பு மாறென்
323
இத்தலத்துக் கொப்பாக வொருதலமும் பொற்கமலம் என்னு மிந்த
உத்தமமா தீர்த்தத்துக் கொப்பதொரு தீர்த்தமுமெய் யுணர்வா னந்த
வித்தனைய விலிங்கமிதற் கொப்பாவோ ரிலிங்கமும்பார் விண்மே லென்னும்
முத்தலத்து மிலையந்த மூர்த்திதிரு நாமங்கண் மொழியக் கேண்மின்
324
கருப்பூர சுந்தரன்பூங் கடம்பவன சுந்தரனுட் கரவாத் தொண்டர்
விருப்பூருங் கலியாண சுந்தரனல் லறவடிவாய் விளங்கு மேற்றுப்
பொருப்பூரும் அபிராம சுந்தரன்றேன் புடைகவிழப் பொன்னிற் பூத்த
மருப்பூசௌ சண்பகசுந் தரன்மகுட சுந்தரன்றான் வாழி மன்னோ
325
மான்மதசுந் தரன்கொடிய பழியஞ்சு சுந்தரனோர் மருங்கின் ஞானத்
தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான்மருவு தடம்பொழில்சூழ் ஆலவாய்ச் சுந்தரன்மீன் கணங்கள் சூழப்
பான்மதிசூழ் நான்மாடக் கூடனா யகன்மதுரா பதிக்கு வேந்தன்
326
சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா புரநாதன் சீவன் முத்தி
புரநாதன் பூவுலக சிவலோகா திபன்கன்னி புரேசன் யார்க்கும்
வரநாளுந் தருமூல விலிங்கமென விவைமுதலா மாடக் கூடல்
அரனாம வின்னமளப் பிலவாகும் உலகுய்ய வவி லிங்கம்
327
பாதாள மேழுருவ முளைத்தெழுந்த தவ்விலிங்கப் படிவந் தன்னுள்
அதார மாகவமர்ந் தறுபத்து நாலுவிளை யாடல் செய்த
போதானந் தன்பெருமை நங்குரவன் மொழிப்படியே புகன்றோ மென்றான்
வேதாதி கலைதெரிந்த மலயமுனி கேட்டறவோர் வினாதல் செய்வார்
328
அருட்கடலே யிறைவிளையாட் டறுபத்து நான்கென்றா யவையா னந்தப்
பொருட்கடவுள் எக்காலத் தியாவர்பொருட் டாடினனெம் போதந் தேறித்
தெருட்படர வரன்முறையாற் செப்புகெனக் கரங்குவித்தார் தென்பால் வெற்பில்
இருப்பவனும் வினாயபடிக் கிறை நிரம்பத் தொகுத்துவிரித் தியம்பு கின்றான்
மூர்த்தி விசேடப் படலம் சுபம்
329
வானவர்கோன் பழிதொலைத்த விளையாட்டுங் கரிசாப மாய்த்த வாறும்
மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட பெருஞ்சிறப்பு மீனநோக்கி
ஆனதடா தகையழல்வா யவதரித்துப் பாராண்ட வருளும் ஈசன்
தானவளை மணஞ்செய்து முடிதரித்து மண்காத்த தகைமைப் பாடும்
330
புலிமுனியும் பணிமுனியுந் தொழவெள்ளி மன்றுணடம் புரிந்த வாறும்
வலிகெழுதோட் குண்டகட்டுக் குறட்கன்னக் குன்றளித்த வகையும் பின்னும்
நலிபசிநோய் கெடவன்னக் குழியசைத்துக் கொடுத்துநீர் நசைக்கு வைகை
அலைபுனல்கூ யருத்தியதும் பொன்மாலைக் கெழுகடலும் அழைத்த வாறும்
331
அந்தரர்கோ னாதனத்தில் உறைமலயத் துவசனை மீண்டழைத்த வாறுஞ்
சுந்தரவுக் கிரகுமர னவதரித்த வாறும்வளை சுடர்வேல் செண்டு
தந்தையிடத் தவன்பெற்ற வாறுமவ னவ்வடிமேல் சலதி வீறு
சிந்தவிடுத் ததுமகவான் முடியைவளை யெறிந்திறைவன் சிதைத்த வாறும்
332
பொன்னசலந் தனைச்செண்டாற் புடைத்துநிதி யெடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப்பொருளைப் பகர்ந்ததுவு மாணிக்கம் பகர்ந்த வாறுந்
தொன்னகர்மே னீர்க்கிழவன் வாவிடுத்த கடல்சுவறத் தொலைத்த வாறும்
அன்னதனித் தொன்மதுரை நான்மாடக் கூடனக ரான வாறும்
333
வட்டங்கொள் சடையுடைய சித்தர்விளை யாடியதோர் வனப்புங் கையிற்
கட்டங்கந் தரித்தபிரான் கல்லானை கரும்பருந்தக் காட்டு மாறும்
உட்டங்கு வஞ்சனையால் அமணர்விடு வாரணத்தை யொழித்த வாறும்
இட்டங்கொள் கௌரிமுனம் விருத்தனிளை யோன்குழவி யான வாறும்
334
செய்யதாண் மாறிநட மாடியதும் பழியஞ்சு திறனுந் தாயை
மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை மாற்றியது மதியா தாசான்
தையலா டனைவிரும்பு மாணவனை வாளமரிற் றடிந்த வாறும்
பையரா வெய்ததுவும் படிற்றமணர் விடுத்தபசுப் படுத்த வாறும்
335
அறவேற்றுப் பரியுகைத்து மெய்க்காட்டுக் கொடுத்தவிளை யாட்டுங் காட்டுச்
சுறவேற்றுக் கொடியரசன் றனக்குலவாக் கிழிகொடுத்த தொடர்பு நாய்கர்
நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து வளைபகர்ந்த நலனு மாறு
மறவேற்கண் மாதரார்க்கு அட்டமா சித்திபெற வகுத்த வாறும்
336
சென்னிபொருட் டெயில்வாயி றிறந்தடைத்து விடைபொறித்த செயலுஞ் சென்னி
மன்னிகலிட் டமர்விளைப்ப மீனவற்கு நீர்ப்பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டிரத வாதவினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னையகன் குழிவீட்டித் தென்னவற்கு மறவாகை தந்த வாறும்
337
மனக்கவலை கெடவுலவாக் கோட்டையடி யாற்களித்த வகைய மாமன்
எனக்கருணை வடிவாகி வழக்குரைத்துப் பொருள் வணிகற் கீந்த வாறுஞ்
சினக்கதிர்வேல் வரகுணற்குச் சிவலோகங் காட்டியதுந் திலவுக் கோலான்
தனக்கடிமை யெனவிறகு திருமுடிமேற் சுமந்துபகை தணித்த வாறும்
338
அப்பாணற் கிருநிதியஞ் சேரனிடைத் திருமுகமீந் தளித்த வாறும்
அப்பாணன் மனைவியிசைப் பகைவெல்ல வண்ணலவை யடைந்த வாறும்
அப்பாண னாளென்றோன் முலையருத்திப் பன்றியுயி ரளித்த வாறும்
339
வயவேனக் குருளைகளை மந்திரிகள் ஆக்கியதும் வலியுண் டாகக்
கயவாய்க்குக் குருமொழிவைத் தருளியது நாரைக்குக் கருணை நாட்டந்
தயவால்வைத் தருண்முத்தி நல்கியதுங் கூடனகர் தன்னைச் சித்தர்
புயநாகம் போய்வளைந்து திருவால வாயாக்கிப் போந்த வாறும்
340
சுந்தரனென் றெழுதியகூ ரம்பெய்து செம்பியன் போர் தொலைத்த வாறுஞ்
செந்தமிழோர்க் கியற்பலகை யருளியதுந் தருமிக்குச் செம்பொன் பாடித்
தந்ததுவு மாறுபடு கீரற்க்குக் கரையேற்றந் தந்த வாறும்
விந்தமடக் கியமுனியாற் கீரனியற் றமிழ்தெளிய விடுத்த வாறும்
341
ஊமனாற் புலவரிக லகற்றியதும் இடைக்காட னுடன்போய்க் கொன்றைத்
தாமனார் வடவால வாயமர்ந்த பரிசும்வலை சலதி வீசிப்
பூமனாய் குழலியைவேட் டருளியதும் வாதவூர்ப் புனிதர்க் கேறத்
தேமனாண் மலரடிகண் முடிசூட்டி யுபதேசஞ் செய்த வாறும்
342
நரிகள்பரி யாக்கியதும் பரிகணரி யாக்கியது நாகம் பூண்டோன்
அரியதிரு மேனியின்மேல் அடிசுமந்து மண்சுமந்த வருளுந் தென்னன்
எரியடுவெஞ் சுரந்தணித்த வாறுமம ணரைக்கழுவி லிட்ட வாறுங்
கரியதென வன்னிகிண றிலிங்கங்கூய் வணிகமகட் காத்த வாறும்
343
எனத்தொகையால் அறுபத்து நான்கிவற்றை நிறுத்தமுறை யீறிலாத
வினைத்தொகையா றகன்றீரெக் காலமெவர் பொருட்டெனநீர் வினாய வாற்றான்
மனத்தளவி லன்புமடை யுடைந்தொழுகத் திருவால வாயான் றாளை
நினைத்தளவி லானந்தம் பெருகவிரித் துரைப்பலென நெரியாற் கூறும்
பதிகப் படலம் சுபம்
இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.
Please send your comments and corrections
Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page
|