|
Home > Scriptures & Stotras > Tamil
திருச்சிற்றம்பலம்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
*ஏசுமத நிராகரணம்
அறிகிலை நரர்க்காய் வேண்டி யளித்தனன் மிருக மாதி
யிறையவ னென்றா யோரீ யீன்றிட மலமீ தூருஞ்
சிறுபுழு விரையு றாதென் செய்குவை யதனை நோக்க
வறிவரு நுணிய தேகி யனந்தநீ யவையென் செய்வாய். 1
வாய்திறந் தலறும் வேங்கை வல்விட முமிழ்பாம் பாதி
நேயமற் றெவர்கூற் றாய நிகழவதெ னுலகத் தந்நாட்
டூயவ னாதிக் கோதுஞ் சொன்னெறி யடங்கா தென்னி
னாயகோ வாதி மாந்தர்க் கடங்கிய விதமென் கொல்லோ. 2
சொல்லின னவர்க்கச் சாதி யடங்கவுந் துயரஞ் செய்தே
கொல்லமற் றையவு மீச னென்றிடிற் கொடுநா காதி
நல்லவா வோரோர் காலத் தடங்கலா னவிலச் சாதி
யல்லல்செய் திடலாற் றீயோ யறைந்தசொற் பழுதே யாகும். 3
(* ஏசுமத நிராகரணம் என்னும் நூல், சதுரகராதி யியற்றிய வீரமாமுனிவரென்னும் கிருஸ்துவரைக் கவிச் சக்கரவர்தியாகிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் கண்டித் தெழுதியதாமென்பர்.)
(குறிப்பு :- இந்நூல் இப்போது அகப்பட்டிலது, அன்பர்கள் கண்டுதவின் வெளியிடலாம்.)
|