சுருதி ஸூக்தி மாலா (PDF file)

|| ஓம் நம: சிவாய ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்



சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை - 600 004.

சுருதி ஸூக்தி மாலை

(வ்யாக்யானம்-தத்துவப் பிரகாசிகை)


மங்கள ச்லோகம்

				கல்ப்பாந்தே சமித த்ரிவிக்ரம
				     மகா கங்காள பத்த ஸ்புரத்
				சேஷஸ்யூத ந்ருஸிம்ஹ பாணி
				     நகரப் ப்ரோதாதி கோலாமிஷ: |
				விச்வைகார்ணவ ஸம்விஹார முதிதெள
				     யோ மத்ஸ்ய கூர்மா வுபெள
				கர்ஷந் தீவரதாம் கதோஅஸ்யது
				     ஸதாம் மோஹம் மஹாபைரவ: ||

இந்த ச்லோகம் ஆதித்ய புராணத்தில் இருக்கிறது. சிவலிங்க பூபதியவர்கள் ‘தத்துவ ப்ரகாசிகை’ என்று தமது வ்யாக்யானத்திற்கு இதை மங்கள ச்லோகமாகக் அமைத்துக்கொண்டார் போலும், அவர் வ்யாக்யானத்தைத் தழுவிய இந்தத் தமிழ் வ்யாக்யானத்திற்கும், இதையே மங்கள ச்லோகமாகக் கொள்வோம்.

		                                                               தி.வி.அ. சிரெளதி      

                                                                (பதிப்பாசிரியர்)
குறிப்பு

வ்யாக்யானத்தில் வரும் அனேக ஸம்ஸ்க்ருத பதங்களுக்கு விளக்கமாகத் தமிழில் அரும்பதவுரை அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

|| ஓம் நமோ தக்ஷிணாமூர்த்தியே ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

பெயர் விளக்கம்

சுருதி – வேதங்களின், ஸூக்தி – நல்ல அழகிய, அதாவது உண்மைப் பொருளை விளக்கும் வாக்கியங்களாகிய மலர்களின், மாலா-மாலை. இஃது பரமேச்வரனுக்கு ஸ்துதி ரூபமாய் ஸம்ர்ப்பிக்கப்படும் வாடாமலர் மாலை. ஸாதாரண மலர்களில் மாலை கொஞ்சம் நேரம் அல்லது ஒரு நாளானபின் வாடிவிடும். இந்த ஸ்துதி மாலையின் மலர்கள் ஒரு நாளும் வாடா.

ஸ்ரீ ஹரதத்தாசார்யார் தமது கிரந்தத்திற்குக் கொடுத்த சிறப்புப் பெயர் சுருதி ஸூக்தி மாலை, (ச்லோகம் 151) ஆயினும் 2-வது ச்லோகத்தில்

தாத்பர்ய ஸங்கரஹ மஹம் விததே மஹேசை!

என்று சொல்வதால், “தாத்பர்ய ஸங்க்ரஹம்” என்ற மற்றும் ஒரு பெயரும் நிலவி வருகிறது, சுருதி என்ற பதம் பொதுவாக நான்கு வேதங்களையும் குறிக்குமாதாலால், இந்த க்ரந்தம் மேலும் சற்று விளக்கமாக, “சதுர்வேத” தாத்பர்ய ஸங்க்ரஹம் என்றும் பெரியோர்களால் போற்றப்பட்டு வருகிறது.

வேதங்களின் உண்மைப் பொருளை அறியாதவர்களுக்கும் தங்கள் தங்கள் மதம், கொள்கை, அபிமானங்களுக்கேற்ப, வேறு வேறு கருத்துக்களை சொல்பவர்களுக்கும், ப்ரபல சுருதி ப்ரமாணங்களாலும், மீமாம்ஸா ந்யாயங்களாலும் முழுமுதற் கடவுள் பரமேச்வரனே என்ற உண்மை தத்துவத்தை ஸ்தாபிக்கும் சிவபரதல், சைவ ஸ்தாபத க்ரந்தம்.

                                                              தி.வி.அ. சிரெளதி

சுருதி ஸூக்தி மாலை

சுலோகம் 1 முதல் 50 முடிய

சுலோகம் 1

யஸ்மை நமோ பவதி யஸ்ய குணா: ஸமக்ரா:
நாராயணோபநிஷதா யதுபாஸனோக்தா |
யோ ந: ப்ரசோதயதி புத்தி மதிக்ரதெள ய:
தம் த்வாமனன்யகதிரீச்வர! ஸம்ச்ரயாமி ||
பதவுரை

யஸ்மை – எவருக்கு, நம:: - நமஸ்காரங்கள், பவதி – செல்கின்றனவோ; யஸ்ய – எவருக்கு, ஸமக்ரா – பரிபூர்ணமான, குணா: (ஆறு) குணங்கள் பவந்தி – இருக்கின்றனவோ, நாராயணோபநிஷதா – தைத்ரீயா ரண்யகம் பத்தாவது நாராயணோபநிஷத்தால், யதுபாஸனா – எவருடைய உபாஸனை, உக்தா – சொல்லப்பட்டதாக, பவதி – இருக்கிறதோ, ய: - எவர், ந: - நம்முடைய, புத்திம் – அந்தக் கரணத்தை, ப்ரசோதயதி – (அந்தர்யாமியாகவிருந்து) தூண்டிவிடுகிறாரோ, ய : - எவர், க்ரதென – யாகங்களுக்கு, அதி – தலைவரோ, (பல ப்ரதாவோ), தம் – அப்பேர்ப்பட்ட, த்வாம் – உம்மை, ஈச்வர – ஹே பரமேச்வரனே! அனன்யகதி – வேறு கதியில்லாத நான், (மற்ற தேவதைகளை ஆச்ரயிக்காமல்) ஸம்ச்ரயாமி – நன்கு சரணமடைகிறேன். பிரபக்தி ரூபமாகச் சரணமடைகிறேன்.

கருத்துரை

நமஸ்காரங்கள் எவரை அடைகின்றனவோ, எவர் நமச்சேஷியோ, எவர் பகவத் பத வாச்யரோ, பூர்ணமான ஆறு குணங்களும் நிரம்பப் பெற்றவரோ, (32 உபாஸனைகளுக்குள் சிறந்ததான) எவருடைய உபாஸனை நாராயணோபநிஷத் கூறுகிறதோ, எவர் காயத்ரீ மந்த்ர ப்ரதி பாத்யராக, எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து, புத்தியைச் செலுத்திச் செயல்களில் ஈடுபடுத்துகிறாரோ, எவர் ஸர்வ யாகங்களுக்கும் சேஷியாகச் கர்மடர்களால் அவலம்பிக்கப் படுகிறாரோ, இவ்விதம் விசேஷமான ஐந்து சிறப்பு லக்ஷணங்கள் பொருந்திய, கடவுளாகிய உம்மை ஹே, பரமேச்வரா! வேறு கதியில்லாத நான், மற்ற தெய்வங்களை உபாசிக்காமல் உம்மையே முழுமுதற் கடவுளாகவும், பரமென்றும், ஏகாந்தமாக உபாஸிக்கிறேன்.

என்று இந்த க்ரந்தத்தின் விஷயத்தைச் சொல்வது மூலம் ஸ்ரீ ஹரதத்தாசார்யவர்யர் முதல் சுலோகத்தில் மங்களத்தையும் ஈச்வர வணக்கத்தையும் சொல்லுகிறார்.

விசேஷவுரை

இந்த முதல் ச்லோகத்தால் பரமேச்வரனுக்கு சொல்லப்பட்ட சிறப்பு லக்ஷணங்கள் ஐந்து: (1) நமச்சேஷித்வம்; (2) நிரதிசய ஐச்வர்யாதி மத்வம்; (3) நாராயணோபநிஷத் உதீரிதோபாஸ்யத்வம்; (4) காயத்ரீ மந்த்ர ப்ரதி பாத்யத்வம்; (5) க்ரது சேஷித்வம் என்பன. இவ்வைந்தும் அதிவ்யாப்தி, அவ்யாப்தி, அஸம்பவம் என்ற முப்பிழையின்மையால், பரமேச்வரன் லக்ஷணங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வைந்தும் வேத வாக்கியங்களைக் கொண்டு நிலைநாட்டப் படுவதால், பிரமாணமும் விளக்கப்பட்டதாகும்.

லக்ஷண ப்ரமாணாப்யாம் வஸ்து ஸித்தி:

என்ற நியாயப்படி க்ரந்த ஆரம்பத்தில் வஸ்து நிர்தேசம் குறிக்கப்பட்டது. பரமேச்வரன் தான் வஸ்து; பரதெய்வம் பரமார்த்த தத்வம். சதுர்வேத தாத்பர்ய விஷயீ பூதப்பொருள் பரமேச்வரன் தான் என்பது குறிப்பிடப்பட்டது.

முழு முதற் கடவுளை வணங்குவதாகிய முதல் ச்லோகத்தால் க்ரந்தம் நிர்விக்னமாக முடிவடையும் பொருட்டு, க்ரந்த ஆரம்பத்தில் மங்களம் செய்யப்பட வேண்டும் என்ற ஸம்ப்ரதாயத்தை சிஷ்யர்களுக்கு அறிவித்துவிட்டு, இரண்டாவது ச்லோகத்தால், “பிரதிக்ஞை” என்ற பாகத்தைச் செய்ய ஆரம்பிக்கிறார், செய்யப்போகும் கார்யத்தை, சொல்லப் போகும் விஷயத்தைக் குறித்தால் தான், ஜிஞ்ஞாஸுக்களான ச்ரோதாக்கள், வாசகர்கள், கவனமாகக் கேட்க முன் வருவார்கள்.

சுலோகம் 2

வேதேஷு வா ததனுயாயிஷு வா விசார்ய
தந்த்ரேஷு வாக்யமகிலம் ப்ரதிபாதகம் தே |
தாத்பர்ய ஸங்க்ரஹ மஹம் விததே மஹேச !
மஹ்யம் ப்ரஸீத த நய மாம் ருஜுனாபதா த்வம் ||
பதவுரை

வேதேஷு வா – வேதங்களிலும், ததனுயாயிஷு வா தந்த்ரேஷு – வேதங்களைப் பின் பற்றி வந்திருக்கும் புராண, சிவதர்ம, முதலிய ஆகம ஸித்தாந்தங்களிலும், தே – நமச்சேஷித்வம் முதலிய ஐந்து லக்ஷணங்களால் குறிப்பிடப்பட்ட, உங்களுடைய, ப்ரதிபாதகம் – உபக்ரமம், உபஸம்ஹாரம் முதலிய ஆறுவித தாத்பர்ய லிங்கங்களைக் கொண்டு ஒரே நோக்கமாகத் தெரிவிக்கிற, அகிலம் வாக்யம் – எல்லா வாக்ய ப்ரமாணங்களையும், விசார்ய – நன்கு விசாரித்து, (விசிந்த்ய – நன்கு யோஜித்து), அஹம் – நான், தாத்பர்ய ஸங்க்ர்ஹம் – வேதபுராண வாக்ய தாத்பர்ய சுருக்கமாகிய இந்த க்ரந்தத்தை, (சுருதி ஸூக்தி மாலைய), விததே – செய்கிறேன். மஹேச – பரமேச்வரனே! மஹ்யம் – என் விஷயத்தில், ப்ரஸீத – (பிரஸன்னமாகி) அருள் புரிய வேண்டும். த்வம் – நீர், மாம் – என்னை, ருஜுனா – கோணல் இல்லாத, நேர்மையான, பதா – மார்க்கத்தினால், நய – போகும்படி செய்யவேண்டும்.

அந்தர்யாமியாக இருந்து, அனைத்தையும் தூண்டுகிற தாங்கள், நல்ல வேதவாக்கியங்கள், உண்மையான தாத்பர்யங்களை விளக்கும், நேர்மையான வழியில் என்னைப் போகும்படி தூண்டவேண்டும். வாயு ஸம்ஹிதையிலும், ச்வேதாச்வதர உபநிஷத்திலும், பரமேச்வரனே புத்தி ப்ரேரகன் என்ற விஷயம் விளக்கப்பட்டிருக்கிறது.

விரிவுரை

முழுமுதற் கடவுளால் இயற்றப்பட்டதால் வேதங்கள் ப்ரமாணங்களாகும் என்பதும். காளிதாஸன் க்ரந்தம் போல வேதமும் ஒரு மகாபுருஷன் செய்தது தான் என்பது அனுமானத்தால் சித்திக்கும் என்பது. தார்க்கிகர்கள் கொள்கை. புருஷஸூக்த மந்த்ரமும் (யக்ஞேச்வரனான) – பரமேச்வரனிடமிருந்து மூன்று வேதங்களும் உண்டானதாகக் கூறுகிறது.

ஜைமினி மகரிஷியும், அவரைப் பின் பற்றும் மீமாம்ஸகர்களும். வேதங்கள் அபெளருஷேயமானதால், புருஷ தோஷம் கொஞ்சமும் சங்கிக்க இடமற்றது; ஆதலால் ப்ரமாணங்கள் என்கிறார்கள்.

மூச்சு விடுவதுபோல் சிரமமில்லாமல் (அனாயஸமாகக்) கடவுளிடமிருந்து வேதங்கள் வெளிவந்தன. ஆதலால் ஈச்வரன் என்ற புருஷஸம்பந்தம் இருந்தாலும் மற்ற கிரந்தங்களைப்போல், மானிட, க்ருதி யில்லாததால் தோஷமற்றவை, ப்ரமாணங்களாகும் என்பது வ்யாஸர், அவரைப் பின்பற்றியவர்களுடைய கொள்கையாகும்.

க்ரந்தகாரர் ஸ்ரீ ஹரதத்தாசார்யார் இந்த மூன்று கொள்கைகளையும் அங்கீகரித்து விளக்கம் செய்திருக்கிறார்.

வேத: ஸ்வயம் பவது வா தவ வா ப்ரணீதி:

                                     (சு – 108)

ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் அறியப்படாத தர்மத்தையும் பிரம்மத்தையும் தெரிவிப்பதால், வேதம் என்ற பெயர் அந்வர்த்தமாகிறது. (காரணப் பெயராகத் பொருந்தியிருக்கிறது) புராணம், ஆகமம் முதலியவை வேதார்த்தத்தை விளக்க வந்தமையால், அவைகளில் சொல்லப்பட்ட ஸித்தாந்தங்களும் ஏற்கத்தக்கவை என்பது ஜைமினி முனிவரால் ஸ்ம்ருத்யாருத்யாதிகரணத்தில் விசாரித்து ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இங்கு ‘வா’ என்ற பதம் ‘உம்’ என்ற பொருளையும், ‘தந்த்ரம்’ என்ற பதம் ‘ஸித்தாந்தம்’ என்ற பொருளையும் தருவது குறிப்பிடத்தக்கது.

 
உபக்ரமோப ஸம்ஹாரெள, அப்யாஸோ பூர்வதா பலம் |
அர்த்தவாதோப பத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே ||

என்ற ஆறு தாத்பர்ய க்ராஹக லிங்கங்களைக்கொண்டு நோக்க மறிய வேண்டும். அம்முறை வ்யாஸமுனிவராலும், ஸத்வித்யா, பூம வித்யா ப்ரகரணங்களில், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்களாலும் விளக்கப்பட்டிருக்கிறது.

சுலோகம் 3

மந்த்ரார்த்தவாத விதிபிர் பஹுதா விபக்தோ
யச் சப்தராசிரனபேக்ஷதயா ப்ரமாணம் |
ஸோயம் விமத்ஸர விம்ருஷ்ட பதார்த்ததத்வோ
வேத: ப்ரகாசயதி கேவல மீச்வரம் த்வாம் ||

ஐந்து லக்ஷணங்களில் நமச்சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை விவரிக்கவேண்டி, முதலில் “ஈச்வரன்” என்ற பதம் மகாதேவன், (பரமேச்வரன்) ஒருவனைத்தான் குறிக்கும் என்பதை வேத ப்ரமாணங்களால் ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறார்.

பதவுரை

மந்த்ரார்த்தவாத விதிபி: - மந்திரங்கள், அர்த்த வாதங்கள், விதி வாக்யங்கள் என்று மூன்று விதமாகவும், பஹுதா – இன்னும் பலவிதமாகவும், விபக்த: - பிரிக்கப்பட்டிருப்பதும், அனபேக்ஷதயா – (சொன்னவரின் மகிமையை) வேறு ப்ரமாணத்தை அபேக்ஷிக்காமல் ஸ்வதந்தரமாகவே, ப்ரமாணம் – ப்ரமாணதுமான, ய : - யாதொரு, சப்த ராசி: - சப்தக் கூட்டமாகிய வேதம் இருக்கிறதோ, ஸ: - அப்பேர்ப்பட்ட அயம் – இந்த ப்ரத்யக்ஷமான, வேத: - வேதமானது, விமத்ஸர விம்ருஷ்ட பதார்த்த தத்வ: - அஸுயை, பொறாமை இல்லாதவர்களால் பதார்த்த உண்மை விசாரிக்கப்படுமாகில், த்வாம் கேவலம் – உம்மைமட்டும் தான், ஈசவ்ரம் – ஈச்வரபதத்திற்கு உண்மை அர்த்தமாக, ப்ரகாசயதி – வெளிப்படுத்தி, ப்ரகாசிக்கச் செய்கிறது.

விரிவுரை

வேதத்தில் மந்த்ரங்கள் ச்ரவணத்துக்கு உபயோகிக்கப்படுகின்றன. அர்த்தவாதங்கள் ஒரு விஷயத்தைப் பகழவோ, நிந்திக்கவோ உபயோகப்படுகின்றன. விதிகள் (நிஷேதங்கள்) உலகில் அறியப்படாத, செய்ய வேண்டிய தர்மங்களையும், விலக்கவேண்டிய அதர்மங்களையும் தெரிவிக்கின்றன என்பது மீமாம்ஸக ஸித்தாந்தம். ஸ்ம்ரிதிகள் வேதார்த்தத்தை விளக்குவதால் பரதந்த்ர ப்ரமாணம், வேதமொன்றுதான் பிறரை மூலமாக அபேக்ஷிக்காமல் ஸ்வதந்த்ர ப்ரமாணம் என்பதும் மீமாம்ஸகர் முடிவு செய்த ஸித்தாந்தம். ஒவ்வொரு பதத்தின் உண்மைப் பொருளை அஸூயை பக்ஷபாதமின்றி விசாரித்து நிர்ணயிக்க வேண்டும்.

ஈசானஸ் ஸர்வ வித்யானாம், ஈச்வரஸ்ஸர்வ
பூதானாம் – தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்

		முதலியவை, ஈச்வர பத அர்த்தத்தை விளக்கும் மந்த்ரங்கள்.

யத ஈஷ்டே ஈச்வர: முதலியவைகள், தாது, ப்ரத்யங்களைப் பிரித்துக் காட்டி, ஈச்வரபதத்தை விளக்கும் அர்த்தவாதங்கள்.

காரணம் து த்யேய: ; ஸர்வைச்வர்ய ஸம்பன்ன:

ஸர்வேச்வர: ச சம்பு: - முதலியவை, ஈச்வர பதார்த்தத்தை விளக்கி அவரை த்யானம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் விதிகள் இம்மாதிரி பலவிடங்களில் மந்திரார்த்தவாத விதிகள். அதர்வசிரஸ், ச்வேதாச்வதரோப நிஷத், மாண்டூக்யம், முதலியவைகளில் பலவாறு சொல்லப்பட்டிருப்பவை இங்கு ப்ரமாணமாகும்.

சுலோகம் 4

சப்தோய மீச்வர இதி ச்ருதிகோசஸ்ஸந்
ஆநீலகண்ட மவதம்ஸித சந்த்ரலேகம் |
த்வாமேவ போதயதி நாத! நிஜார்த்த போஷாத்
அன்யம் புன: ப்ரகரணாதி நிபீடனேன ||

பதத்தின் உண்மையான அர்த்தத்தை யோக வ்யுத் பத்தியால் அறியவேண்டும். அவ்விதமே ரூடமான பதங்களுமுண்டு ஈச்வரன் என்ற பதம் யோகமுறையிலும் ரூடமுறையிலும் பரமேச்வரனைத்தான் குறிக்கிறதென்று 4-வது, 5-வது சுலோகங்களால் விளக்கம் செய்கிறார்.

பதவுரை

அயம் – இந்த, ஈச்வர: ஈதி – ஈச்வரனென்ற சப்த: - சப்தமானது, வார்த்தையானது, ச்ருதி கோசரஸ்ஸந் – காதால் கேட்கப்படும்போது, லக்ஷணா வ்ருத்தியைக் கைக்கொள்ளாமல், அபிதா என்ற சக்திமாத்ரத்தால் விஷயீகரிக்கப்படும்போது ஆநீலகண்டம்* - நஞ்சுண்டபொழுது அடையாளமாகக் கொஞ்சம் தான் கருத்த கழுத்தை உடையவரும், அவதம்ஸித சந்த்ரலேகம் – ஆபரணமாகத் தலையிலணியப்பட்ட சந்திர கலையை உடையவருமரன, நாத – தலைவரே! த்வாமேவ – உம்மையே, நிஜார்த்தபோஷாத் – நிகரற்ற ஐச்வர்யம் என்ற தன் சொந்த அர்த்தம் நிரம்பியிருப்பதால், போதயதி – அறிவிக்கிறது, அன்யம் புன: மற்ற தேவதைகளையோ, ப்ரகரணாதிநிபீடனேன – ப்ரகரணம் ஒளசித்யம், லிங்கம் முதலிய 14 ஸங்கோச ப்ரமாணங்கள், பதாந்தர ஸம்பிவ்யா ஹாரம். “வா” பதச் சேர்க்கை முதலிய காரணங்களால் (முக்யார்த்தத்தை விடவேண்டிய வருவதால்) போதயதி – அறிவிக்கிறது.


* விஷம் உடல் முழுதும் பரவும் தன்மையுள்ளதாயினும் கடவுளை ஒன்றும் செய்ய முடியாது. ஈச்வரன் ஸ்வேச்சையால் விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி கழுத்தின் நிறத்தையும் சிறிது நீலமாக்கி காட்டுகிறார்; தான் செய்த பரமானுக்ரஹத்திற்கு ஒர் ப்ரத்யஷ ப்ரமாணமாக அமைத்துக் கொள்கிறார், ஈச்வரனுக்கு நீலகண்டன் என்று காரணப் பெயரும் அமைகிறது. (தி.வி.அ)


விசேஷ வுரை

வ்யாகரணத்தில் ஈச்வரசப்தம் ஸ்தேசபாஸபிஸகஸோவரச் என்ற ஸூத்ரத்தால் ‘வரச்’ ப்ரத்யயாத்தமாவும் ‘வநிப்’ ப்ரத்யயம் வைத்து “வனோரச” என்ற ஸூத்ரத்தால் ‘ர’ என்ற எழுத்து வருவதாலும் “அச்னோதேராசுகர்மணி வரட் ச” என்ற உணாதி ஸூத்ரத்தால் ‘வரட்’ ப்ரத்யயாந்தமுமாக மூன்று விதமாக வ்யுத்பத்தி காண்பிக்கப் பட்டிருக்கிறது, “ஆசு கர்ம வர தாம்னாதி க்ரியா யஸ்ய சீக்ர தாதா ஆசுதோஷ: என்று விளக்கப் பட்டிருக்கிறது. “ஈச்வர: - க்ஷிப்தம் என்பது ப்ருஹாதரண்யக சாங்கர பாஷ்யம். எல்லாரையும் விட ஐச்வர்யமுள்ள ஸ்வதந்த்ரன் தான், பிறர் அபேக்ஷையில்லாதலால், சீக்கிரத் கார்யங்களைச் செய்ய முடியும். துஷ்டநிக்ரஹமோ சிஷ்டபரி பாலனமோ அனாயாஸமாக சீக்கிரம் செய்பவர் ஈச்வர பதத்தின் யோகத்தால் அர்த்தம் கிடைக்கிறது. ஹாலஹல விஷத்தை உடன் சாப்பிட்டுக் கஷ்டங்களை நீக்கியவரும், சந்திரனைத் தலையில் தரித்து அம்ருத கிரணங்களை ஸகல ஜகத்துக்கும் ஊட்டி சுகம் தருபவரும் பரமேச்வரனாதலால் ஈச்வரபதம், ப்ரகரணம் முதலிய ஸங்கோசக ப்ரமாணம் இல்லாத காலத்தும், யோகவ்யுத்பத்தியால் அவரைத்தான் குறிக்கும் என்பது தாத்பர்யம் – ப்ரம்மா, விஷ்ணு முதலிய கடவுளுக்கு நிக்ரஹானுக்ரஹ சக்தியளித்தவர் சிவபெருமான் தான்.

“ஹரிம் ஹரந்தம் அனுயந்திதேவா: விச்வஸ் யேசானம் வ்ருஷபம் மதீனாம்”

என்ற வேதவாக்யங்களிலும், வேதத்தைத் தழுவிய பிரஹஜ்ஜாபால ஸ்ரீஉதி:, பிரம்மாண்டபுராணம், வாயவீய ஸம்ஹிதை, மகாபாரதம் வனபர்வம், த்ரோணபர்வம் முதலிய பல இடங்களிலும், பரமேச்வரனுடைய ஈச்வரத்வம்; மற்ற எல்லாரையும் அடக்கியாளும் சக்தி நன்கு விளங்கும்.

சுலோகம் 5

சப்தஸ் தவாயமபிதான மனன்ய சப்தோ
நைகண்டுகா: சிவபதாதி வதேன மாஹு: |
வஸ்து ஸ்வாபாவக்ருதமேவ து பூஜ்யபாவம்
ப்ரூதே மஹேச்வர மஹான் பரம: ச சப்த: ||

யோக வ்யுத்பத்தியைக் கவனிப்பது இருக்கட்டும். ஈச்வரன் என்பது உமக்குப் பெயராக அமைந்து விட்டது. ஆதலால் ரூடம் என்றே சொல்லவேண்டும். அல்லது யோகரூடமாகப் பங்கஜம் என்ற பதம்போல இருக்கட்டும் என்று விளக்குகிறார் இந்த 5-வது ச்லோகத்தால்.

பதவுரை

அயம் சப்த: - இந்த ஈச்வரன் என்ற சப்தமானது, தவாபிதானம் – சிவசப்தம் போல உமக்கு அஸாதாரணப்பெயராகும் அனன்ய சப்த: - பிறரைக் குறிக்காத சப்தமுமாகும். நைகண்டுகா: - நிகண்டு கிரந்தத்தை யுணர்ந்தவர்கள், ஏனம் – இந்த ஈச்வர பதத்தை, சிவ பதாதிவத் – சிவன் பதம் முதலியவை போல, ஆஹு: - சொல்லுகிறார்கள். மஹேச்வரா! மஹான் சப்த: - மகான் என்ற அடைமொழியும் பரம: ச சப்த: - பரம என்ற அடைமொழியும், இரண்டும் ஈச்வரபதத்தின் விசேஷணங்கள், வஸ்து ஸ்வபாவக்ருதம் – ஈச்வர சப்தார்த்தமான வஸ்துவின் ஸ்வபாவத்தால் கிடைத்த, பூஜ்ய பாவ மேவ – பூஜிக்கத் தகுந்த தன்மையையே, ப்ரூதே – சொல்லுகின்றன.

பிறர் ஈச்வரனாகலாம், சிவபெருமான் பரமேச்வரன், மகேசரன் என்பதால், பரம, மகத் சப்தங்கள் அடைமொழியாக வந்து. பிறரை விலக்கவில்லை. ஆனால், அயோக வ்யவச் சேதகமாக நின்று. ஈசரத்வம் சிவபெருமானுக்குப் பூரணமாக உள்ளத்தைத் தெரிவிக்கிறது. ஆதலால் ஈச்வர சப்தம் அடைமொழியில்லாத காலத்தும்கூட சிவபெருமானைத்தான் குறிக்கும் என்பது பொருள்.

ஒரு குழந்தை தந்தையைப் பார்த்துப் பெருமாள் கோயிலுக்குப் போகிறாயா, ஈசரன் கோயிலுக்குப் போகிறாயா, என்று கேட்பது, ஆபால கோபாலம் பிரஸித்தமனதல்லவா? இது வாயவீய ஸம்ஹிதையில் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. காளிதாஸ் மகாகவியும், விக்ரமோர்வசீயம் நாந்திச்லோகத்தில்

 
யஸ்மின் ஈச்வர இத்யனன்ய விஷய:
      சப்தோயதார்த்தாக்ஷா: என்றும்
ரகுவம்ச காவ்யத்தில்
       மகேச்வர: த்ர்யம்பக ஏவ, ந அபர:  என்றும்
கூறியிருக்கிறார்.

சுலோகம் 6

யஸ்யோபஸர்ஜன மஸென பரமோ மகான் வா
சப்தஸ் ததர்த்த மபிதாது மலம் ப்ரக்ருஷ்டம் |
சப்தேன பூஜ்ய வசனேன ஸமஸ்யமான:
பூஜாம் ப்ரவீதி யதி சப்தவித: ப்ரமாணம் ||

பரம :,மஹான், இவ்விரண்டு பதங்கள் சிறந்தவர் என்ற அர்த்தத்தை யல்லவா குறிக்கின்றன. பூஜ்ய பாவத்தின் அயோக வ்யவச்சேதகம் என்பது பொருந்தாதே என்ற சங்கையை இந்த சுலோகத்தில் நீக்குகிறார்.

ஸமாஸத்தில் விசேஷ்யம் பூஜ்யவாசக மானதால், அத்துடன் கூடிய அடைமொழியும் பூஜ்யார்த்தத்தைக் கூறுவது இயல்பு தான் என்ற ஸமாதனம் கூறப்படுகிறது.

பதவுரை

அஸெள – இந்த, பரம : சப்த : - பரம சப்தமோ, மஹான் வா சப்த : - மகான் சப்தமோ, யஸ்ய – எந்த சப்தத்திற்கு, உபஸர்ஜனம் – விசேஷணமாகக் கொடுக்கப்படுகிறதோ, ததர்த்தம் – அந்த விசேஷ்யத்தின் அர்த்தத்தை, ப்ரகிருஷ்டம் – சிறந்ததாக, அபிதாதுமலம் – அறிவிக்கச் சக்தியுள்ளது, பூஜ்யவசனேன சப்தேன – பூஜிக்கப்படுகிறவர், என்று பொருள் தரும் சப்தமாகிய ஈச்வர பதத்துடன், ஸமஸ்யமான : யதி – ஸமாஸம் செய்யப்பட்டிருப்பதாலும், சப்தவித : பிரமாணம்யதி – பதங்களின் உண்மை அர்த்தங்களை நிர்ணயம் செய்வதில் நிபுணர்களான வையாகரணர்களும், மகத், பரம சப்தங்கள் மிகவும், சிரேஷ்டம், உத்தமம். பூஜ்யத் தன்மைகளைக் குறிப்பதாக விளக்கம் செய்திருப்பதாலும், பூஜாம் ப்ரவீதி – பூஜித்தல் என்ற கார்யத்தின் சிறப்பைத்தான் சொல்லும்.

‘யதி’ என்னும் பதம் ‘ஆனால்’ என்ற பதம் போல, ஸந்தேகத்தை இங்கு குறிப்பதல்ல. நிச்சயத்தை குறிப்பது, விசேஷம் காண்க.

ஸந்மகத் பரமோத்தமோத்க்ருஷ்டா : பூஜ்யமானை :

					என்பது, வ்யாகரண ஸுத்ரம். (பாணினீயம் 2-1-61)

சுலோகம் 7

நாநீச்வரம் பவிதுமர்ஹதி விச்வமேதத்
பஹ்வீச்வரம் ச நிதரா மயதா ப்ரமாணம் |
தல்லோக வேத விதிதேச்வர ! வர்ஜனேன
கோயம் ப்ரம : கதிசிதீச்வரமன்ய மாஹு: ||

 		      யஜமானனை வேலைக்காரன் நமஸ்கரிப்பது வழக்கம். அது தான் ஈச்வர ப்ருத்யந்நியாய மெனப்படும்.

ஈச்வரபதம் வேதபுராணங்களில் பரமேச்வரனையே குறிப்பதாக யோக ரூட பதமென்பது முன்சொல்லியபடி தீர்மானிக்கப்பட்டிருப்பதால், ப்ருத்ய ஸ்தானீயர்களானவர்களால் செய்யப்படும் நமஸ்காரம் பரமசிவனைத்தான் சேரும் என்பது ‘ஈச்வர’ சப்தார்த்ததைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டது. அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ‘பஹ்வீச்வர’ வாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற ‘அ ன்யேச்வர’ வாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை இந்த 7வது ச்லோகத்தால் கூறுகிறார்.

பதவுரை

ஏதத் – இந்த, விச்வம் – ப்ரபஞ்சம் (உலகம்) அனீச்வரம் முழு முதற்கடவுள் இல்லாமல், பவிதும் – உண்டாவதற்கோ, இருப்பதற்கோ, நார்ஹதி – தகுந்ததில்லை, பஹ்வீச்வரம்-ச - பல கடவுள்களை உடைத்தாயிருப்பதும், நிதராம் ந – முற்றிலும் தகுந்ததில்லை. அயதா ப்ரமாணம் தத் – பெரிய மாளிகை, கோபுரங்களில் பலபேர் கர்த்தாவாகக் காணப்படுவதால் ஒப்புக் கொள்ளலாம். ப்ரமாணமில்லாததால், உலகுக்குப் பல கர்த்தாக்களை அங்கீகரிக்க முடியாது. லோக வேத விதிதேச்வர வர்ஜனேன – புராணங்களிலும், வேதங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஈச்வரனான நீலகண்டன், சந்திரசேகரனைத் தள்ளிவிட்டு, கதி சித் – சிலர், அன்யம் – மற்று பிரம்மாவை, விஷ்ணுவை அனீச்வரனை ஈச்வரனல்லாதவர்களை, ஈச்வரம் – ஜகத்கர்த்தாவாக, ஆஹு: - சொல்லுகிறார்கள், அவர்கள் மூடர்கள். கோயம் ப்ரம: - ஏன் இந்த மயக்கம்? வேத புராணங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் போதுகூட, ஏன் இந்த மயக்கம் அவர்களுக்கு?

விசேஷ வுரை

கன்று வளர்ச்சிக்காகப் பால் சுரப்பது போல, அசேதனமாகிய உஅலகம். ஜீவாதியர் சுகத்திற்காக சேதனன் இல்லாமல் உண்டாகவோ, சேஷ்டிக்கவோ முடியாது. பால் சேதனனாகிய பசுவின் உதவியால் சுரக்கிறது. அயஸ் காந்தமும் இரும்பை சேதனனால் சமீபத்தில் வைக்கப்பட்ட பிறகுதான் இழுக்கிறது. ஆதலால், அசேதன உலகுக்கு சேதனன் ஈச்வரன் இருந்தே ஆகவேண்டும். அவன் ஒருவன் ஸர்வ சக்தனாக ஒப்புக் கொள்ளப்படுவது லாகவ ந்யாயத்தால். ச்ருதியும்,

       தத் விஜிஞாஸஸ்வம்
       தஸ்மாத் ஸப்தார்ச்சிஷ; ஸமிதஸ் ஸப்தஜிஹ்வ:
       த்யாவா ப்ருதிவீ ஜனயந் தேவ ஏக:

என்ற விடங்களில், ஏகவசனத்தாலும், ஏகபதத்தாலும் ஓர் காரணம் என்கிறது. ச்வேதாச்வதரம், சிவரகஸ்யாகமம், வாயவீய ஸம்ஹிதை, லிங்கபுராணம்,காளிகா கண்டம், பத்ம புராணம், மகாபாரதம் சாந்திபர்வம் ஆனுசாஸனிகபர்வம், ஸ்காந்தம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்மாவை வலது பக்கத்திலிருந்தும், விஷ்ணுவை இடது பக்கத்திலிருந்தும், நான்கு வேதங்களையும் நான்கு முகங்களிலிருந்தும் படைத்துப் பரமேச்வரன் உலகத்தை நடத்துவதாகவும், யுக முடிவில் அழிப்பதாகவும் கூறப்பட்டிருப்பதால் கார்யகோடியில் சேர்ந்த பிரம்மா, விஷ்ணு தேவதைகள் உலகின் காரணமாகவோ, ஈச்வரனாகவோ இருக்கமுடியாதது பற்றி, அன்யேச்வர வாதமும், ப்ரமையால் ஏற்பட்டதுதான், என்பது தாத்பர்யம்.

	ஹிரண்ய கர்ப்ப: ஸமவர்த்ததாக்ரே
	அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே

என்ற ப்ரமாணங்கள் விச்வாமித்ரர் உலகில் சிலவற்றைப் படைத்தது போல், பிரம்மா விஷ்ணுக்களும் சிலவற்றைப் படைத்தவர் ஆவார்கள். அப்படைத்தலும் பரமேச்வரன் அருளால்தான் என்பது தாத்பர்யம். ஆனதால், மற்ற ப்ரமாணங்களோடு விரோதமாகதவை.

சுலோகம் 8

விச்வம் நிரீச்வரமிதம் ஜகதாஹ ஸாங்க்யோ
யோக: ச ஸேச்வரமுபா வனுவாதினோன்யே |
நத்வேவ ஸம்பவதி சேச்வரதாம் ப்ருவாண:
பத்மாஸனாதிபி ரனீச்வர சப்த வாச்யை: ||

வேத புராணங்களைக் கவனிக்கும் எவனும் அந்யேச்வர வாதியாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் தன் வார்த்தையில் முன்பின் முரண்பாடாகப் பேசுபவனாவான் என்ற கருத்துடன் 8-வது சுலோகம் சொல்லப்படுகிறது.

பதவுரை

ஸாங்க்ய: - ஸாங்க்ய சாஸ்திரம் இயற்றிய கபில முனிவர், இதம் ஜகத் – இந்த உலகம்,நிரீச்வரம் கடவுள் இல்லாமல் உண்டாகி நடப்பதாக, ஆஹ - - சொல்லுகிறார் (கருதுகிறார்) யோக: ச – யோக சாஸ்திரம் படைத்த ஹிரண்ய கர்ப்பன் (பதஞ்சலி முனிவர்) விச்வம் – உலொஅகை, ஸேச்வரமாஹ – கடவுளால் படைக்கப்பட்டு நடப்பதாகக் கருதுகிறார். அன்யே – மற்றவர்கள் அனைவரும், உபெள – அவ்விரு முனிவர்களை, அனுவாதின: - பின்பற்றிச் சொல்பவர்கள். அனீச்வர சப்தவாச்யை: - ஈச்வர சப்தத்தால் சொல்லப்பட முடியாதவர்களான, பத்மாஸனாதிபி :- பிரம்மா முதலியவர்களால் ஸேச்வரதாம் – உலகில் ஈச்வரனுள்ள தன்மையை, ப்ருவாண: - சொல்லுகிற அன்யேச்வர வாதியானவன், நத்வேவ ஸம்பவதி – ஒருவனும் இருக்க முடியாது. சுருதி புராணங்களில், பிரம்மா விஷ்ணு முதலியவர்களுக்கு ஈச்வரத்வம் இல்லையென்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் போது. அன்யேச்வரவாதீ எங்ஙனம் ஸம்பவிக்கக்கூடும். அப்படி ஸம்பவித்தால் அவன் வார்த்தை அனீச்வரனால், ‘ஸேசரம் ஜகத்’ என்று முன்பின் வ்யாஹதமான தாகுமல்லவா? த்ரிபுரதாஹத்திலும், ஆதித்ய புராணத்திலும், பசுபதி ஒருவந்தான் ஸர்வேச்வரன் என்பது விளக்கிக் கூறப்பட்டிருப்பதால், “மே மாதாவந்த்யா” என் தாயார் மலடி என்ற வாக்கியம் போல அந்யேச்வர வாதியின் வாக்கியம் ப்ரமாணமாகாது. (அபத்த வாக்கியம்).

       நாராயணேன ஸப்ராம்மகம் ஜகத்,
       ப்ரம்மணா ஸநாராயணகம் ஜகத்

என்ற வாக்கியங்கள் போலவும், வ்யாஹதமான, அன்யேச்வர வாதியின் வாக்கியம் தள்ளத்தகுந்தது.

சுலோகம் 9

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி நிபந்தனம் தே
யத்பூதநாத! நமஸாமபி பாத்ரமேகம் |
தத்ப்ராயச : ச்ருதிஷு துர்லபமேவ வாக்யம்
முக்த்வா நமோ பவதி யத்ர பவத் ப்ரஸங்க: ||

ஈச்வரன் என்ற பதத்துக்கு இவ்விதம் பரமசிவன்தான் பொருள் என்று தெளிவு படுத்திய பிறகு அதனால் பரமேச்வரன் நம: சேஷி யென்ற லக்ஷணம் முதலாவது கூறப்படுவது நியாயமே என்ற விஷயம் 9 முதல் 21 முடிய, 13 ச்சோலகங்களால் நன்கு விளக்கப்படுகிறது.

பதவுரை

பூதநாத – ஸகல ப்ராணிகளுக்கும் தலைவரே! தே – உம்முடைய, அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் ஈசத்தன்மையானது, அனுபாதி நிபந்தனம் – வேறு காரணங்களால் ஏற்பட்டதல்ல, ஸ்வபாவமாக அமைந்தது. அன்ய தேவதைகளன்றோ, உம்மை ஆராதித்து அவரவர்கள் அதிகாரத்திலமர்ந்து, வரப்ரஸாதத்தால், சிலவற்றிற்கு ஈச்வரர்களாக விளங்குகிறார்கள், ஆதலால் அவர்களின் ஐச்வர்யம் ஸங்குசிதம்; வரப்ரஸாதலப்த மாதலால் ஸ்வபாவிகமல்ல. உம்முடைய ஐச்வர்யம் ஸங்குசிதமல்ல, சிறந்தது; வரப்ரஸாத லப்தமல்ல; ஸ்வபாவிகம். உமக்குமேல் ஆராதிக்கக் கூடிய தெய்வம் இருப்பதாக வரம் கொடுக்க வல்லமையுள்ளதாக வேதபுராணங்கள் கூறவில்லையே. ப்ரம்மகைவர்தம், பராசரபுராணம், சிவரஹஸ்யம், ஆனுசாஸனிகபர்வம், த்ரோணபர்வம், பாத்ம புராணம், வாமன புராணம், ஸனத்குமாரஸம்ஹிதா, கூர்மபுராணம் ஆதித்யபுராணம், ஹரிவம்சம் முதலிய கிரந்தங்களில் ப்ரம்ம விஷ்ணுவாதி தேவதைகள் சிவலிங்கத்தைப் பூஜை செய்ததும், இஷ்டஸித்திகளைப் பெற்றதும், நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன ஆதலால், அவர்களின் ஈசத்வம் உபாதையால், தபோபலத்தால், சிவபூஜா பலத்தால் கிடைத்தது, ஸ்வாபாவிகமல்ல. உமக்கு ஆராத்ய (நீர் ஆராதிக்கும்படியான) தெய்வம் ஒன்றும் கிடையாதென்பதும், மேற்படி புராணங்களிலும் வேதங்களிலும் கூறப்பட்டிருப்பதால், உமது ஐச்வர்யம் ஸ்வாபாவிகமானது; சிறந்தது; ஸங்குசிதமானதல்ல.

யத் – எந்தக் காரணத்தால் இவ்விதமான, ஸ்வாபாவிக சிறந்த, ஐச்வர்யம் உம்மிடத்திருக்கிறதோ, தத் – அந்தக் காரணத்தால், நமஸாமபி – நமஸ்காரங்களுக்கும், த்வம் – நீர், ஏகம் – நிகரற்ற, ஒரே விதமான, பாத்ரம் – விஷயமாக இருக்கிறீர், பவத் ப்ரஸங்கம் முக்த்வா – உம்முடைய ஸம்பந்தம் இல்லாமல், யத்ர வாக்யே – எந்த வாக்கியத்தில், நமோ பவதி – நமஸ்காரம் சொல்லப்படுமோ, தத் – வாக்யம் – அப்படிபட்ட வாக்கியம், சுருதிஷு – வேதபுராணங்களில், ப்ராய: - பெரும்பாலும், துர்லபமேவ – காண்பது அரிதுதான்.

நமோ பிரம்ஹணே, நமோ ஸ்தவக்னயே நம: ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய:; நமோ வாசே, நமோ வாசஸ் பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி

என்ற சில விடங்களில், தேவாந்தரங்களுக்கு நம: பதம் கூறப்பட்டிருப்பது, அந்த தேவர்கள் உம்முடைய விபூதியாவார்கள் என்பது பற்றியே என்பது தாத்பர்யம். இங்கு ப்ராய: (பெரும்பாலும்) என்ற பதத்தால் கூறப்பட்டது காண்க.

சுலோகம் 10

தேவ! த்வதேக விஷயாணி நமாம்ஸி பும்ஸாம்
யஸ்மை நம: சுருதி பலா தவதாரயாம: |
தேவாந்தரேஷு, விஹிதான்யபி தான்யமூனி
ஸ்ரோதாம்ஸி ஸாகர இவ த்வயி ஸம்பதந்தி ||

	

இரண்டு ப்ரதானமான ச்ருதி வாக்ய ப்ரமாணங்களைக் கொண்டு நம: சேஷித்வ லக்ஷணத்தை ப்ரதிக்ஞை செய்கிறார்.

பதவுரை

தேவ – விளையாட்டாக உலகைப் படைத்து ஸ்வயம் ப்ரகாசமாக விளங்கும் கடவுளே! யஸ்மை நம: சுருதி பலாத் –

       யஸ்மை நம: தஸ்மை த்வா ஜுஷ்டம் நியு நஜ்மி என்ற சூலகவ ப்ரகரணத்தில் சொல்லப்படும் வேத மந்த்ரம்.
       யஸ்மை நம: தத் சிர:

என்ற தைத்தீரியாரன்யக சிசுமார ஸ்வரூப வர்ணன ப்ரகரணத்திலிருக்கும் மந்த்ரம்: இவ்விரண்டின் பலத்தால், பும்ஸாம் – மனிதர்களுடைய, நமாம்ஸி – நமஸ்காரங்கள், த்வதேக விஷயாணி – உம்மையே குறிப்பவை, மற்றவர்களைச் சேராதவைகள் என்று, அவதாரயாம: - நிச்சயிருக்கிறோம். தேவாந்தரேஷு – மற்ற தெய்வங்களுக்கு, பரமசிவன் மகிமை அறியப்படாததால், விகிதான்யபி – செய்யப்பட்ட போதிலும், தாநி – அமூநி – அந்த இந்த நமஸ்காரங்கள் ஸ்ரோதாம்ஸி – நதிகள், ஸாகரே இவ – ஸமுத்திரத்தில் போய்ச் சேர்வது போல, த்வயி – உம்மிடத்திலேயே, ஸம்பதந்தி – வந்து சேர்கின்றன.

விரிவுரை

வாயவீய ஸம் ஹிதை, மார்க்கண்டேய புரானம், மாண்டூக்யோப நிஷத் கிரந்தங்களில், கடவுள் விளையாட்டாக, அனாயாஸமாக, உலகத்தைப் படைக்கிறார். அதனால் க்ருத, க்ருத்யனான, பரிபூர்ணவஸ்துவான அவருக்கு யாதொரு லாபமும் கிடையாது.

	லோகவத்து லீலா கைவல்யம்.

என்ற ந்யாயம்தான் படைத்தலுக்குப் பயன் என்ற அர்த்தம். தேவபதத்துக்கு, நன்கு விளக்கம் கூறப்பட்டிருத்தல் இங்கு கவனிக்கத் தகுந்தது. த்ரோண பர்வம், காளிகா கண்டம், லிங்க புராணம், காசிகா கண்டம் முதலிய க்ரந்தங்களில், துருவனுக்கு, மகாவிஷ்ணு த்ருவபதத்தை, ஈச்வர ப்ரஸாதத்தால் அடைந்ததை, பக்தனுக்குக் கொடுத்ததாக விரிக்கப்பட்டுள்ளது ஆதலால், மற்ற தேவதைகளின் நமஸ்காரங்கள், அவர்களுக்கு அந்தர்யாமியும், ஆராத்ய தேவரும், வரப்ரதான தேவருமாகிய உம்மைத்தான் வந்தடையும் என்பது திண்ணம்.

சுலோகம் 11

யஸ்மை நம: ச்ருதிரனூத்ய நமஸ்வினம் த்வாம்
ஏகா நியோஜன முவாச பசோ: கபர்தின் |
அன்யா ச திவ்ய சிசுமார சிரோ பவந்தம்
சக்யந்த தித்த முபயேன நமோ விதாதும் ||

	யஸ்மைநம: என்று ஆரம்பிக்கும் இரண்டு சுருதிகளுக்கு அர்த்தம் கூறும் சுலோகம்.
பதவுரை

கபர்தின் – கபர்தமென்ற ஜடா பாரமணிந்த கடவுளே! ஏகா – ஒரு, யஸ்மை நம; ச்ருதி – யஸ்மை நமஸ்தஸ்மை த்வாஜுஷ்டந்நியுநஜ்மி – என்ற வேதமானது, நமஸ்வினம் த்வாம் – நம: சேஷியான உம்மை, அனூத்ய – உத்தேசித்து, பசோ: நியோஜனம் – பசுவைக் கட்டுவதை, உவாச – சொல்லுகிறது. அன்யா – மற்றதான “யஸ்மை நம’ தத் சிர:” என்ற வேத மந்த்ரம், பவந்தம் – உம்மை, திவ்ய சிசுமாரசிர: - ஆகாயத்தில் ப்ரகாசிக்கும் சிசுமாரத்தின் சிரஸ்ஸாக, ஆஹ - - ரூபகாலங்கார விதமாகக் கூறுகிறது. தத் – ஆகையால், இத்தம் – இந்த வ்யாக்யான முறைப்படி, உபயேன – இரண்டு வேத ப்ரமாணங்களால், நம: நமஸ்காரத்தை, விதாதும் – உமக்கு சேஷமானதென்று தாத்பர்யம் கூற, சக்யம் – இயலும்.

சுலோகம் 12

ச்ருத்யோர் த்வயோரபி நமஸ்வின முச்யமானம்
த்வாமேவ தந்த மனுஸந்ததத: ப்ரதேசம் |
சம்ஸந்தி மந்தமதயோபி கிமாபதந்தம்
மத்யந்தினே ஹி ஸவிதார மபன்ஹு வீரன் ||

கீழே குறிப்பிடப்பட்ட இரண்டு வாக்கியங்களிலும் நம: சேஷீ ஒருவர் குறிப்பிடப்படுவது உண்மை. அவர் பரமசிவன் தான் என்பது எங்ஙனம் அறியப்பட முடியும் என்ற கேள்விக்கு, முன் பின் ஸந்தர்ப்பங்களைக் கவனித்தால் பரமேச்வரன் தான் அவ்வேத வாக்கியங்களால் நம: சேஷீயாகக் கூறப்படுவது தெளிவாகும் என்ற விஷயத்தை விளக்குகிறார்.

பதவுரை

தம் தம் ப்ரதேசம் – முன் கூறப்பட்ட வேதவாக்கியங்களின் அந்தந்த முன்பின் வாக்கிய ஸந்தர்ப்பத்தை, அனுஸந்ததத: - நன்கு பர்யாலோசித்துப் பார்க்கும் வித்வான்கள், த்வயோரபி ச்ருத்யோ: - அந்த இரண்டு சுருதி வாக்யங்களுக்கும், த்வாமேவ - உம்மையே, நமஸ்வின முச்யமானம் – நம: சேஷியாகக் கூறப்படுவதாகச், சம்ஸந்தி – சொல்லுகிறார்கள். மந்த மதய: அபி – மூடபுத்தியுள்ளவர்களும், ஆபதந்தம் – மேலே கிளம்பி கொண்டிருக்கிற, (ஆதபந்தம் – நன்கு வெய்யில் அடித்துக் கொண்டிருக்கிற), மத்யந்தினே – உச்சிவேளையிலுள்ள, ஸவிதாரம் – ஸூர்யனை, கிம் ஹி அபன்ஹு வீரன் – இல்லை யென்று மறுத்துச் சொல்வார்களா என்ன? மிகவும் தெளிவாகத் தெரிவதை ஒருவரும் மறைக்கமுடியாது என்பது தாத்பர்யம்.

சுலோகம் 13

கர்மைவ சூலதா! சூலகவந் த்வதீயம்
மந்த்ரா பவந்த மகிலா: ப்ரதிபாதயந்தி |
த்வாமந்தரேண நமஸா க்ருதலக்ஷணாய
கஸ்மை பசும் நியுநஜா நி நியோஜய த்வம் ||
பதவுரை

சூலதா – சூலத்தைக் கையில் தரித்த சூலபாணியே! சூலகவம் – போதாயனர், ஆச்வலாயனர், முதலிய மகர்ஷிகளால் ப்ரதி வருஷம் வஸந்த ருதுவிலோ, சரத் ருதுவிலோ, மார்கழி மாதம் பூர்ணிமா திதியிலோ, நித்தியகர்மாவாக, அவசியம் செய்யப்பட வேண்டிய விதிக்கப்பட்டிருக்கும் பாக யக்ஞங்கள் ஏழில் ஒன்றாகிய ‘சூலகவம்’ என்று பெயருள்ள, கர்மா – கர்மாவானது, த்வதீயமேவ – உம்மையே தேவதையாகக் கொண்டது. சூலம் என்ற பதம், சூலம் தரித்த சூலியைக் குறிக்கும் – அவரைப் பசுவால் (கோ) பூஜிப்பது பற்றி, இந்தக் கர்மா சூலகவம் என்ற பெயர் பெற்றது காண்க. அகிலா: மந்த்ரா: - அந்தக்கர்மாவில் உபயோகிக்கம்படும் எல்லா மந்த்ரங்களும் பவந்தம் (ஏவ ) ப்ரதி பாதயந்தி – தங்களையே தேவதையாகக் குறிக்கின்றன.

		ஈசானாய த்வா ஜுஷ்டமுபாகரோமி

			என்பது, பசுவை தர்ப்பையால் தொட்டு ஸங்கல்ல்பிக்கும் காலத்தில் சொல்லப்படும் மந்த்ரம்.

		ஈசானாய த்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி

			என்பது, பசுவை ப்ரோக்ஷிக்கும்போது சொல்ல வேண்டிய மந்த்ரம்.

ஏதமேவ தேவம் மத்யே கோஷ்டஸ்ய யஜேத என்ற விதி வாக்கியத்தில் தேவசப்தந்தால் பரமசிவனைச் சொல்லி, அந்த தேவதைக்குச் செய்யவேண்டிய சூலகவ யக்ஞம் என்று தெளிவாகத் தெரிவிக்கிறது.

தேவ: பூஜ்ய: பினாகீ – என்பது நிகண்டு. தேவஸ்யாய தனே ப்ரதிதிசம் ப்ரத்யோதயதி என்று போதாயன ஸூத்ரத்தில் பரமசிவன் தேவ சப்தத்தால் குறிக்கப்பட்டிருப்பதும்.

‘தேவமேவானுப்ரவிசதி’

என்று அதர்வசிரஸ்ஸிலும், தேவ சப்தப்ரயோகம் பரமசிவனைக் குறிக்கக் காணப்படுவதும் இங்கு காணவேண்டும். ஈச்வர சப்தம், போல, தேவ சப்தமும் பரமசிவனுக்கு யோகரூடமான சப்தம். மகாதேவ: பரமேச்வர: என்ற நாமாக்களால் அடைமொழியாகிய மகத் பரம சப்தங்கள் பூஜ்யத் தன்மையான அயோக வ்யவச் சேதகமே யல்லாது அன்யயோகவ்யவச் சேதகமல்ல என்று முன்னம் விளக்கப்பட்டதும், நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஆதலால் அனுவாதகமன மகத் பரமசப்தமில்லா விட்டாலும் ஈச்வர, தேவ பதங்கள் சிவபெருமானைத் தவிர மற்ற தேவதைகளைக் குறிக்காது. ஆதலால் அவை பங்கஜ பதம்போல யோக ரூடங்களாகும். இவ்விஷயம் சப்தா தேவ ப்ரமித : என்ற அதிகரணத்தில் வேதாந்த சாஸ்திரத்தில் வ்யாஸமுனிவரால் தீர்மானிக்கப் பட்டிருப்பதும், “ஈசானோ பூத பவ்யஸ்ய என்ற கடோபநிஷத் வாக்யார்த்த விசார முறையும் இங்கு கவனிக்கதக்கவையாகும்.

	பவாய தேவாய ஸ்வாஹா
	நமஸ்தே ருத்ர மன்யவ

யஸ்மை நம: தஸ்மை த்வா ஜுஷ்டம் நியுநஜ்மி இதி ஹராய க்ருசாய சர்வாய சிவாய பவாய மகாதேவாய உக்ராய பசுபதயே ருத்ராய சங்கராய ஈசானாய ஸ்வாஹா.

இம்மாதிரி ஸகல மந்த்ரங்களும் சூலகவ கர்மாவிற்கு உங்களையே தேவதையாகக் குறிக்கின்றன. தத்திதத்தால், நான்காவது வேற்றுமையால், மந்த்ரார்த்த பர்யாலோசனையால், மூன்று உபாயங்களாலல்லவா கர்மாவின் தேவதை அறியப்படுகிறது. உம்முடைய தேவதா பாவத்தில் மூன்று ப்ரமாணங்களுமிருப்பதால் நீர் தான் சூலகவ கர்ம தேவதை யென்பது சந்தேகமற்ற விஷயம்.

த்வாமந்தரேண – உம்மைத்தள்ளிவிட்டு, நமஸாக்ருதலக்ஷணாய – நமஸ்காரத்தால் லக்ஷணம் சொல்லப்பட்ட, கஸ்மை – எந்த தேவதையின் பொருட்டு, பசும் நியு நஜானி – பசுவை யூபத்தில் கட்டமுடியும்? த்வம் – நீரே, நியோஜய – என்னை நியாயமான வழியில் தூண்டி விடும்.

       ஈச்வரனாகிய உம்மாலும், வேத தாத்பர்யத்துக்கு மாறாக செய்யச் சொல்ல முடியாது என்று தாத்பர்யம்.

சுலோகம் 14

அங்காந்தரேஷு விபுதாந்தர ஸம்ஸ்துதேஷு
யச் சிம்சுமார சிரஸ: பரிசிஷ்யஸே த்வம் |
தஸ்மை நமோ பவிது மீச்வர! ஸாம்ப்ரதந்தே
தேவாந்தராய ந கதஞ்சி தனீச்வராய ||

இவ்விதம் இரண்டாவதான “யஸ்மைநம: தத்சிர:” என்ற மந்த்ரமும், முன்பின் ஸந்தர்ப்பத்தை யோஜித்தாலும், பாரிசேஷ ந்யாயத்தைக் கொண்டும், அதாவது சொல்ல வேண்டியவர்கள், மற்றவையால் சொல்லப்பட்டு விட்டபடியால் வேறு ஒருவரும் பாக்கியில்லாததால் பாக்கியுள்ள அவர்தான் இக்குறிப்புக்கு இலக்காவார் என்ற ந்யாயத்தாலும்) ஈச்வரனையே ஐயமறத் தெரிவிக்கிறது என்று விளக்கம் செய்கிறார்.

பதவுரை

அங்காந்தரேஷு – தலையைத் தவிர மற்ற அவயவங்கள், (1) மூர்தா – தர்ம தேவதை, (2) மேல்தாடை – பிரம்மா, (3) கீழ் தாடை – யக்ஞேச்வரன், (4) ஹ்ருதயம் – விஷ்ணு, (5) ஆண்குறி – ஸம்வதஸரதேவதை, (6) முன் கால்கள் – அசுவினி தேவதைகள், (7) நடுவு – அத்திரிமுனிவர், (8) பின் கால்கள் – மித்ரா வருண தேவதைகள் (9) வாலின் முதல் பாகம் – அக்னி தேவதை, (10) வாலின் இரண்டாவது பாகம் – இந்திரதேவதை, (11) மூன்றாவது பாகம் - ப்ரஜாபதி தேவதை, (12) நான்காவது பாகம் – ஸம்ஸார பயம் நீக்கும் அபயபத வாச்ய பிரம்மா என்று இவ்வாறாக, விபுதாந்தர ஸம்ஸ்து தேஷு – சிம்சுமாரமாக வர்ணிக்கப் படும் கச்யபருடைய அவயவங்கள், மூர்த்தா முதலியவைகள் தர்ம தேவதை முதலிய மற்ற தேவதைகளாக அமைத்துப் புகழப்பட்டிருக்கும் போது, சிசுமார சிரஸ : - சிசுமாரன் தலையின் துதிக்காக, ய: - யாதொரு, த்வம்: - நீர், பரிசிஷ்யஸே – மிச்சப் படுகிறீரோ ஈச்வரா! – ஹே பரமேச்வரா, ஈச்வர சப்தத்தால், யோக ரூட பதத்தால் அனிதா ஸாதாரணமாக சொல்லப்படும் கடவுளே, நமஸ்காரங்களுக்கு அஸாதரண உத்தேச்யமான பரம்பொருளே தஸ்மை – அப்பேர்ப்பட்ட, தே – உமக்குத்தான், நமோ பவிதும் – நமஸ்காரம் உரித்தானது என்பது ஸாம்ப்ரதம் – யுக்தமாகும். அனீச்வரனான மற்ற தேவதைக்கு நமஸ்காரம் உரித்தாவது, யுகதமாகுமா? அனீச்வரன் இயற்கையாகவே நமஸ்காரத்திற்கு தகுந்தவனல்லன். ஸரியான ஈச்வரன் இருக்கும்போது அவன் எவ்வித நமஸ்கார அர்ஹனவான். ஈச்வரத்வம் தான் நமஸ்கார ஸ்வாமித்வத்துக்குக் காரணம் என்பது ஸம்போதனத்தால் தெளிவு படுத்தப் படுகிறது.

அனீச்வராய தேவாந்தராய – ஈச்வரனல்லாத மற்ற தேவதைகளுக்கு, கதம்சித் – எவ்விதத்திலும் நமோ பவிதும், நமஸ்காரம் செல்லுவதற்கு, ந ஸாம்ப்ரதம் – தகுந்ததல்ல.

தெளிவான ஆயிரம் ந்யாயங்களால், ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் மூடர்கள் புத்தியில், மகேச்வரபத வாச்யன், நம: சேஷி என்பது ஏறுகிறதில்லை. துஷ்காலமுள்ளவன் கையில் வைக்கப்பட்ட நல்ல ரத்னமும் ஓடிவிடுமல்லவா? ப்ராப்தமில்லையானால், கைக்குக் கிடைத்ததும் நழுவி விடுமன்றோ? பாக்யமிருந்தால் தான் சிவன் நம: சேஷி என்ற உண்மைப் பொருள் விளங்கும். அல்லாது மயங்கி மடியவேண்டியது தான் பாத்ம புராணத்தில் ஈச்வரனுக்கு விஷ்ணு நமஸ்கரித்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

“தேவ தேவனான ஈசனே உமக்கு நமஸ்காரம். சாச்வதப் பொருளே! மாறாப் பொருளே! உமக்கு நமஸ்காரம் தங்களை நான் அறியமுடியவில்லை. உம்மை நீர்தாம் அறியமுடியம், நமஸ்காரம், நமஸ்காரம் உம்மைச் சரணமடைந்தேன். எனக்கு உம்மையறியும் கண்ணைக் கொடும். என்னால் நமஸ்காரம் தான் செய்யமுடியும் உம்மையறிய முடியவில்லை.” என்பது பாத்ம புராணம்.

நம: சேஷித்வம் என்பது வேத புராணங்களால், யஸ்மை நம: என்ற இந்த மந்த்ரத்தாலும் தெளிவு.

சுலோகம் 15

யா வஜ்ரிணீ பவதி சங்கர! சங்கினீ யா
முத்ரா ச யா கமலினீ பரதோபதிஷ்டா |
தாபிர் பவந்த்யபிநயா விபுதாந்தராணாம்
மொளிஸ்ப்ருசா கரபுடாஞ்சலி முத்ரயா தே ||

நாடக மேடையில் நடிக்கும் ஜனங்கள் கூட நமஸ்கார முறையால், உம்மை ஸமிக்ஞை காட்டுகிறபடியால் நமஸ்கார முத்திரைக்கு நீர்தாம் அஸாதாரணமான அர்த்தம் என்று பரதநாட்டிய சாஸ்திரம் தெரிவிப்பதால், நம: சேஷித்வம் உமக்குத் தான் பொருந்தும் என்று விளக்கப்படுகிறது.

பதவுரை

சங்கர – சுகத்தைத்தரும் கடவுளே! பரதோபதிஷ்டா – பரத முனிவரால், அபிநய சாஸ்திரத்தில் உபதேசிக்கப்பட்ட வஜ்ரிணீதி யா முத்ரா – வஜ்ரிணீ யென்ற யாதொரு முத்திரை, சங்கினீ யா கமலினீதி ச – ச்ங்கினீ, கமலினீ யென்ற முத்ரைகளும், பவந்தி – இருக்கின்றவவோ தாபி: - அவைகளால், விபுதாந்தராணாம் – மற்ற இந்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற தேவதைகளின், அபிநயா பவந்தி, - அபிநயங்கள் அமைந்திருக்கின்றன. அந்தந்த முத்ரைகளால், அந்தந்த ஆயுதம் கொண்ட தேவதைகள் அஸாதரணமான அந்த அந்த அபிநயங்களால் தெரிவிக்கப் படுகிறார்கள். தே அபிநய: - உமக்கு அஸாதாரண அபிநயமானது மொளிஸ்ப்ருசா – தலைமேல் வைக்கப்பட்ட, கரபுடாஞ்சலி முத்ரயா – கூப்பிய இருகைகளாகிய அஞ்சலி முத்ரையால், பவதி – ஏற்படுகிறது.

       பரத  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதாவது:-

வஜ்ரிணீ முத்ரையால் (வஜ்ராயுதம்) இந்திரனையும் பத்மினி முத்ரையால் (பத்மம் தாமரை) பிரம்மாவையும், சங்கினீ முத்ரையால் (சங்கு) விஷ்ணுவையும், தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பிய அஞ்சலி முத்ரையால் (நமஸ்கார முத்ரையால்) ருத்ரனையும் அபிநயத்தால் தெரிவிக்க வேண்டும். (இங்கே ருத்ரன் என்றால் ஈச்வரன் என்றே அர்த்தம்) மற்றவர்களுக்கு ஆயுதம் அடையாளத்தால் அபிநயம் காட்டுவது போல, ஈச்வரனுக்கு த்ரிசூலம் ஆயுதமுத்ரையால் அபிநயம் விதிக்கப்படலாம். ஆயினும், பரதமுனிவர் அவ்வாறு ஆயுத முத்ரை விதிக்காமல், தலைக்குமேல் கை கூப்பிய நமஸ்கார முத்ரையால் அபிநயம் விதித்ததாலும். நம: சேஷித்வம் அவருக்குத்தான் பொருந்தும் என்பது அறிவிக்கப்பட்டது.

சுலோகம் 16

தத்தம் நம: கிமுபிசுச்ரும தேவதாப்ய:
த்வாமந்தரேண நமஸா மவஸான பூமிம் |
தாஸ்தத் க்ரஹீதுமனலன்ன ஹி க: சிதீஷ்டே
சோரோபநீதமிவ தாரயிதும் கிரீடம் ||

இவ்விதம் நமஸ்காரங்கள் சிவபெருமானைச் சேர்ந்ததானது பற்றி, மூட ஜனங்களால் கொடுக்கப்பட்ட போதிலும் மற்ற தேவதைகள் நமஸ்காரங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுந்தவர்களல்ல. நான் சொந்தக்காரனல்ல என்று, கொடுத்த நமஸ்காரங்களைப் பெற்றுக் கொள்ளாமல், சொந்தக் காரனாகிய உமக்குத்தான் கொடுத்துவிட வேண்டியவர்கள். மாறுதலாகத் தவறிவந்த ஒரு பொருளை, நான் வைத்துக் கொள்ளாமல் ஒழங்கானவன், பொருளின் சொந்தக்காரனிடம் பொருளைச் சேர்த்து விடுவானல்லவா?

பதவுரை

தேவதாப்ய: - தேவாந்தரங்களுக்கு, தத்தம் – கொடுக்கப்படுகிற, நம: - நமஸ்காரத்தை, கிமபி – சில மந்த்ரங்களில் (நமோ ப்ரம்மணே, நமோஸ்த்வக்னயே) ஏன்றவைகளை சிலவற்றை, சுஸ்ரீஉம – கேள்விப்படுகிறோம். நமஸாமவஸான பூமிம் – நமஸ்காரங்களுக்குத் தாத்பர்ய விஷயமான, த்வாமந்தரேண உம்மைத்தவிர, தர: - மற்ற அந்த தேவதைகள் தத் – அந்த நமஸ்காரத்தை, க்ரஹீதும் – பெற்றுக் கொள்வதற்கு, அநலம் – சக்தியற்றவர்கள். ஹி – ஏனென்றால், கச்சிதபி – உம்மைத் தவிர வேறு ஒருவரும் அந்த நமஸ்காரத்தை. சோரோபநீதம் – திருடனால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட, கிரீடமிவ – அரசன் தரிக்கத்தகுந்த தலையாபரணமாகிய கிரீடத்தைப்போல, தாரயிதும் – தாங்களே வைத்துக் கொண்டு தரித்துக்கொள்ள, நஈஷ்டே – சக்தியற்றவர்கள்.

ருக்வேதத்தில் உள்ள ரிக் ஒன்று கவனிக்கத் தகுந்தது.

ஸ்தோமம் வோ அத்ய ருத்ராய சிக்வஸே க்ஷயத் வீராய நமஸா திதிஷ்டன | ஏபி: சிவ ஸ்வவாம் ஏவ யாவபி. திவ: ஸிஷக்தி ஸ்வயசா: நிகாமபி:

இதன் பொருள்: - ஓ தேவர்களே! உங்களைக்குறித்து நாங்கள் கொடுக்கும் நமஸ்காரங்களையும், ஸ்துதிகளையும் ருத்ர பெருமானுக்குக் கொடுத்து விடுங்கள். அவைகளுக்கு அவர் தான் உரித்தானவர். அவர் ஸர்வசக்தன். வீரபத்திரன் முதலிய மகா மகிமை வாய்ந்த விபூதியுள்ளவர், எங்கும் புகழ் பெற்றவர் ஈச்வரன் என்று அஸாதரணமாக அழைக்கப்படுகிறவர். அவரவர்கள் வேண்டும் பயன்களை தேவர்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கும் கொடுக்க வல்லவர். ஆதலால் மற்ற தேவதைகள் தமக்குப் பிறரால் கொடுக்கப்பட்ட ஸ்துதிகளையும் நமஸ்காரங்களையும் ஈச்வரனுக்கு கொடுத்துவிட வேண்டும். அவர் தாம் நமஸ்காரங்களுக்கு சொந்தக்காரர். (நமஸ்காரம் சிவன் சொத்து) இல்லையேல் திருடன் கொடுத்த கிரீடத்தைத் தரிப்பதால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு கஷ்டம் அடைவது போல் தீங்கு நேரிடும் என்பது நன்கு உணர்த்தப்படுகிறது. நமஸ்காரம் செய்யத் தகுந்தவர்தாம் துதிக்கத்தகுந்தவர். காளிதாஸ மகாகவியும் – பிறரை துதிக்காதவரும், அனைவராலும் துதிக்கப்படுகிறவரும், பிறரை நமஸ்கரிக்காதவர், ஆனால் அனைவராலும் நமஸ்காரம் செய்யப்படுபவர் என்று பரமேச்வரனை வர்ணித்திருக்கிறார்.

இந்த அபிப்ராயத்துடன் தான், தைத்ரீய ஆரண்யகத்தில், சிசுமார துதியின் கடைசியில் பூதாதி பதியாக துதிக்கப்பட்ட கச்யபருக்கு “ஸர்வம் தே நம:” என்று கடைசியில் நமஸ்காரம் செய்யப் படுகிறது.

       ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |
       ஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||

என்று ப்ரதிதினம் நாம் செய்யும் ஸந்த்யா வந்தன முடிவு சுலோகத்தில் மற்ற தேவதைகளின் நமஸ்காரங்கள், நதிகள் மழைஜலம் சமுத்ரத்தை அடைவதுபோல் விஷ்ணுவை அடைவதாகப் ப்ரசித்தமாகத் தெரிகிறது. ஆயினும் கீழ் சொல்லப்பட்ட மந்த்ரம் ஸோமம வ: ருக்வேதத்தில் உள்ளதால், இந்த சுலோகம் ஸ்ம்ருதி என்ற புராணவசன மாதலாலும் சுருதிக்கு முரண்பாடாக விருப்பதாலும் விரோதாதி கரண ந்யாயப்படி வேதம் சொல்லும் அர்த்தம் தான் கொள்ளப் பட வேண்டும். அதற்கு விரோதமான, இந்த ஸ்ம்ருதி (புராண) வசனம் தள்ளப்பட வேண்டியது. மேலும் கேசவம் ப்ரதிகச்சதி என்பதற்கு யாது பொருள் என்று விசாரிக்க வேண்டும். கேசவம் என்ற பதம் யெளகிகம். ‘கே’ பிரம்மா; ‘அ ‘ விஷ்ணு; ‘ஈச’ ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. இம்மூவரையும் தமக்கு உட்படுத்தி வைத்துக் கொண்டிருப்பவர் கேசவன். வ என்பது மத்வர்த்தீயமாகும். மும்மூர்த்திகளுக்குமீசனை நமஸ்காரங்கள் அடைகின்றன என்பது ப்ருக்ருத சுலோகத்திற்கு ஸமானார்த்தமானதால் விரோதமே கிடையாது.

சுலோகம் 17

தஸ்மை நமோ பவது யத்ர நிஷீதஸீதி
ஸர்வம் நமஸ்ய மனயா து திசா மஹேச |
அப்யோஷதீ: ப்ரதி நமோ வயமாமநாமோ
தேஹீவ தேஹ மதிதிஷ்டஸி யேன ஸர்வம் ||

பரமசிவனைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் வேத புராணங்களிலுள்ள நமஸ்காரங்களை ஸமஞ்சஸமாக நயனம் செய்வதற்காகச் சொல்லப்படுகிறது.

பதவுரை

யத்ர நிஷீதஸி – எங்கு அபிவ்யக்தமாக இருக்கிறீரோ, தஸ்மை – அந்த அதிஷ்டானத்துக்கும், நமோ பவது – நமஸ்காரம் இருக்கட்டும், இதி – என்ற, அனயா திசா – இந்த ந்யாயமாக, இந்த விதமாக, மஹேச! – பரமேச்வரனே! ஸர்வம் எல்லா வஸ்துவும், நமஸ்யம் – நமஸ்கரிக்கத்தகுந்தது. யேன – எந்தக் காரணத்தால், தேஹம் – உடம்பில், தேஹீவ – ஜீவன் இருப்பதுபோல, ஸர்வம் – எல்லா வஸ்துவிலேயும், அதிதிஷ்டஸி – நீர் அந்தர்யாமியாக வீற்றிருக்கிறீரோ, தேன – அந்தக் காரணத்தால், ஓஷதீரபி ப்ரதி – அசேதனமான செடி கொடிகளுக்கும் வயம் – நாங்கள், நம: - நமஸ்காரத்தை, ஆமநாம: - அடிக்கடி சொல்லுகிறோம்.

ஓம் நமோ ப்ரம்மணே என்ற மந்திரத்தை, அத்யயனத்தின் முடிவில் மூன்று தடவை சொல்வதல்லவா அத்யயன ஸம்ப்ரதாயம். அதைத்தான் ஆமநாம: என்ற க்ரியாபதம், ம்நா தாதுவால் அறிவிக்கிறது. பிரஹதாரண்யக அந்தர்யாமி ப்ராம்மணம் ச்வேதாச்வதரோபநிஷத், அதர்வசிரஸ், வாயவீய ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் ஈச்வரன் அத்தர்யாமியாக இருப்பது ப்ரமாணஸித்தம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது. ஆதலால்தான் மந்தாதிகாரிகளுக்கு ப்ரதீகோபாஸ்தி விதிக்கப்பட்டிருக்கிறது. மஞ்சளில்கூட பிள்ளையார் பூஜை செய்யப்படுகிறது. ஆனால் உத்தேச்யம் பரமசிவனுக்குத்தான். உலகில் யஜமானன் தரித்த புஷ்பமாலையை ஆதரவுடன் வைத்துக்கொள்வது யஜமானன் திருப்தியை அளிப்பதும் இந்திரன் சிவநிர்மால்யத்தை அலக்ஷ்யம் செய்து யானை தலையில் வைத்துக் கசக்கியதால் துர்வாஸரால் சபிக்கப்பட்டதும், அதிஷ்டான பூஜையால், அந்தர்யாமி திருப்தியடைவதை அன்வயல் திரேக ந்யாயத்தால் தெளிவாகக் காண்பிக்கிறதல்லவா? ஆதலால் உம்முடைய அதிஷ்டானமானதால் உலகில் எல்லாம் நமஸ்கரிக்கத் தகுந்ததே.

சுலோகம் 18

ஸர்வம் த்வயா ஜகத் அதிஷ்டிதமேவ மத்வா
ச்வான: ச்ருதெள நமஸிதா: பதய:  ச தேஷாம் |
லோகே புனஸ்தவ மஹேச்வர! பக்தியோகாத்
ஆரோபிதா அபி வயம் பஹுமான பாத்ரம் ||

இந்த ந்யாயத்தை அனுஸரித்து தான் சத ரூத்ரீய மந்த்ரங்களில் அத்யந்த நிக்ருஷ்ட நாய் முதலிய ஜந்துக்களுக்கும் நமஸ்காரம் கூறப்பட்டிருக்கிறது.

பதவுரை

ஸர்வம் ஜகத் – எல்லா உலகமும், த்வயா – உம்மால் அதிஷ்டிதம் – ப்ரவேசிக்கப்பட்டிருப்பது, மத்வைவ – நினைத்துத்தான் (உண்மை தெரிந்து) ச்வான; - நாய்களும், தேஷாம் பதய: ச – அவைகளின் தலைவர்களும், நமஸிதா: - நமஸ்கரிக்கப்படுகிறார்கள். ருத்ரபாஷ்யத்திலும், வாயவீய ஸம்ஹிதையிலும் இக்கருத்து நன்கு விளக்கப்பட்டிருப்பது காண்க. மஹேச்வரா! வயமபி – நாங்களும், தவ - உங்களுடைய பக்தியோகாத் – பக்தி செய்த ஸம்பந்தத்தால், லோகே – உலகில், பகுமானபாத்ரம் – கெளரவத்திற்கு, மரியாதை பெறுவதற்கு விஷயமான நிலையை ஆரோபிதா: புன: - அடையப் பெற்றிருக்கிறோம் அன்றோ.

சிவதத்வ நிரூபணம், ஆதித்திய புராணம் வாயவீய ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில், ஈச்வர பக்தர்களையும் பூஜித்துப் போற்றவேண்டும்; பக்த அபசாரம், அபராதம், கடவுள் அபராதத்தைக் காட்டிலும் அதிகம் என்று விளக்கப் பட்டிருக்கிறது காண்க.

சுலோகம் 19

த்வேதா நமோ விம்ருசத: ப்ரதிபாதி லோகே
வேதேஷுவா விஷமலோசன நான்யரூபம் |
யத்தந்நமஸ்த்வயி ததீச்வரதா ப்ரயுக்தம்
த்வத்ஸந்நிகர்ஷ விஹிதம் யதனீச்வரேஷு ||
பதவுரை

விஷமலோசன – முக்கண்ணனே, விம்ருசத: யோஜிக்கும் மனிதனுக்கு, லோகே – புராணங்களிலும், வேதேஷுவா – வேதங்களிலும், நம: - நமஸ்காரம். த்வேதா – இரண்டு விதமாக, ப்ரதிபாதி – குறிக்கப்பட்டிருப்பது விளங்குகிறது. அன்யரூபம் – மூன்றாவது ப்ரகாரமுள்ள நமஸ்காரம், ந – காணப்படவில்லை, யத் த்வயி நம: தத் – உம்மிடத்தில் செய்யப்படும் யாதொரு நமஸ்காரம் உண்டோ அது, ஈச்வரதா ப்ரயுக்தம் – நீர் ஸர்வேச்வரன் என்ற உண்மையால் ஏற்பட்டது. அனீச்வரேஷு யத் நம: தத் – ஈச்வரனல்லாத மற்றவர்களிடத்தில் காணப்படும் யாதொரு நமஸ்காரம் உண்டோ அது, த்வத் ஸந்நிகர்ஷ விகிதம் – நீர் அந்தர்யாமியாகவிருப்பது பற்றியும், உமது பக்தியால் ஏற்பட்ட மஹிமை பற்றியும் வந்தது, என்ற இரண்டுவிதம்தான் நமஸ்காரம். மூன்றாவது விதம் கிடையாது.

சுலோகம் 20

த்வத் ஸந்நிகர்ஷ க்ருத ஏவ நம: ப்ரயோக:
ப்ராயோ வஸீயஸி யவீயஸி த்ருச்யமான: |
ச்ரைஷ்ட ப்ரயுக்த இதி கல்ப்பயிதும் ந சக்யம் 
அச்ரேயஸாமபி நமாம்ஸி நிதர்சி தாநி ||

என்ற வேத வாக்யத்தால், நமஸ்காரம் முதலிய உபசாரங்களுக்கு ச்ரேஷ்டதா காரணமென்றல்லவா தெரிகிறது என்ற சங்கை நீக்கப்படுகிறது.

பதவுரை

த்வத் ஸந்நிகர்ஷ க்ருத ஏவ நம: ப்ரயோக: - உம்முடைய ஸம்பந்தத்தால் ஏற்பட்ட நமஸ்கார ப்ரயோகம், ப்ராய: - அனேகமாக, வஸீயஸி – சிறந்த ப்ராம்மணர்களிடத்திலும், யவீயஸி – தாழ்ந்த நாய்களிடத்திலும், த்ருச்யமானஸ்ஸந் – காணப்படுகிற போது, ச்ரைஷ்டப்ரயுக்த இதி – சிறப்பால் ஏற்பட்டதென்று, கல்ப்பயிதும் – முடிவு செய்வது, நயுக்தம் – தகுதியாகாது யத: - ஏனென்றால், அச்ரேயஸாமபி – தாழ்ந்த நாய்களுக்கும், நமாம்ஸி – நமஸ்காரங்கள், நிதர்சிதாநி – சதருத்ரீய மந்த்ரங்களில் காண்பிக்கப்பட்டன.

ஆதலால் உங்களுடைய ஸம்பந்தம் தான் நமஸ்கரிக்கப்படுவதற்குத் தகுந்த, அவ்யபசரிதமான காரணமாகும். சிறந்ததாக இருப்பது. தாழ்ந்த நமஸ்கரிக்கப்படும் இடங்களில்லாததால், வ்யபசரிதம் என்பது பற்றி நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணமாகக் கொள்ள முடியாது என்று தாத்பர்யம். “நமஸ்க்ருத்யஹி” என்ற வேதம், உமது ஸம்பந்தத்தால் கிடைத்த சிறப்பை அநுவதிக்கிறது.

சுலோகம் 21

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நாம நமஸ் த்வதீயம்
ச்ரேஷ்டோஸி ய: க்ரதுபுஜாம் பதிரக்ரியானாம் |
ச்ரேஷ்ட ச்ருதோஸி பகவந்நவிசேஷதஸ்த்வம்
மந்த்ரேஷு க்ருச்ச்ர படிதேஷு ச ஸாம கானாம் ||

“தூஷ்யது துர்ஜன :” என்பது ஒர் ந்யாயம், துஷ்டன் ஸந்தோடஷப்படட்டும் என்று அவன் சொல்லும் கக்ஷியை அங்கீகரித்தே நமது கொள்கைக்குப் பாதகமில்லை என்று ஸாதிப்பது சாஸ்திரக்காரர்கள் வழக்கம். அந்த ந்யாயப்படி மேற்கொண்ட நமஸ்க்ருத்ய ஹி வஸீயாம்ஸம் என்ற வேதப்படி, சிறந்த நிலை தான் நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணம் என்று அங்கீகரித்தாலும் நம் கக்ஷிக்கு பாதகமில்லை என்று சொல்லப்படுகிறது.

பதவுரை

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நம: - சிறந்த மேன்மையால் ஏற்படும் நமஸ்காரமும், த்வதீயம் நாம – உம்மைச் சேர்ந்தது தான். அக்ரியானாம்பதி: - பசுபதியாகிய, ய: - த்வம் – யாதொரு நீர், க்ரது புஜாம் – தேவர்களுக்குள், ச்ரேஷ்டோஸி – சிறந்தவராக இருக்கிறீரோ, பகவன் – பகவானே! ஸாமகானாம் – சாமவேதிகளினுடைய, கிருச்ச்ரபடி தேஷு – க்ருச்ச்ர க்ரந்தத்தில் சொல்லப்படுகிற மந்த்ரேஷு – மந்த்ரங்களில், அவிசேஷத: - பொதுவாக (அபேக்ஷிகமன்னியில்) த்வம் – நீர், ச்ரேஷ்ட:- சிறந்தவர் என்று, ச்ருதோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர். “நமோ ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய என்பது ஸாமவேதிகளின் க்ருச்ச்ர க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கும் மந்த்ரமாகும். நக்ஷத்ரேஷ்டியில் திருவாதிரை நக்ஷத்திர ப்ரகரணத்தில் சொல்லப்படும் ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமான ஏதி ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம் என்ற மந்த்ரம். பசுபதி ஸர்வ தேவர்களுக்குள் சிறந்தவர் என்பதை விளக்குவது இங்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சுலோகம் 22

தேவாந்தரைஸ் ஸஹ நமஸ்துதி ஹூதய ஸ்தே
தோஷாய நால மலமேவ விபர்யயாய |
புத்ரார்த்தின: சருவிதெள ஸஹ சந்த்ர மெளளே 
ஸோமேன ஹூத மனுசுஸ்ரீஉம ருத்ரமக்னிம் ||

இவ்விதம் 9 முதல் 21 முடிய 13 ச்லோகங்களால் வேத, புராண வசனங்களைக் கொண்டும், சுருதி, ஸ்ம்ருதி லோக (புராணம்) ந்யாய ரீத்யா, நம: சேஷித்வம் என்ற லக்ஷணம் அதிவ்யாபதி, அவ்யாப்தி, அஸம்பவ ரூப தோஷ த்ரயமில்லாமல் பரமசிவனைக் குறிக்கும் என்பதை விளக்கி விட்டு,

இப்போது உத்தேச க்ரமமாக வந்த இரண்டாவது லக்ஷணமாகிய பகவத் பத வாச்யத்வம் என்பதை 29 முதல் 34½ வரை 6½ ச்லோகங்களால் உபபாதனம் பண்ணும் நோக்கத்துடன்

நடுவில் 22 முதல் 28 முடிய 7 ச்லோகங்களால் சிவபெருமான் வேதங்களில் பிறதேவதையுடன் சேர்க்கப்பட்டு துதிக்கப்படுவதோ நமஸ்கரிக்கப்படுவதோ, கூப்பிடப்படுவதோ கிடையாது, தனியாகத்தான் துதி, நமஸ்காரம், ஆஹ்வானம் செய்யப்படுகிறார். ஏனெனில் ஸமாஸமாப்யாம் விஷமே பூஜாத: என்ற கெளதமாதி வசனப்படி, சிறந்தவரைத் தாழ்ந்தவர்களோடு ஒன்று கூட்டி மரியாதை செய்வது தகாது என்ற முறையுள்ளதல்லவா என்ற விஷயத்தை ப்ரதிபாதிப்பதால், சிவபெருமான் நம: சேஷித்வ லக்ஷணத்தையும் சிறப்பையும், ஸ்தாணா நிக்ந ந்யாயப்படி த்ருடப்படுத்துவதற்கு, இந்த ச்லோகம் ஆரம்பம்.

பதவுரை

தேவாந்தரை: ஸஹ - மற்ற தேவதைகளோடு கூட, நம : ஸ்துதி ஹூதய : - நமஸ்காரம், ஸ்துதி, ஆஹ்வானங்கள், தே – உம்முடைய, தோஷாய – சந்தோஷம் பொருட்டு, நாலம் – சக்தியுள்ளவை அல்ல. விபர்யயாயைவ அலம் – கோபத்தின் பொருட்டேயாகும். சந்திரமெளளே – சந்திரனை சிரசில் தரித்திருப்பவரே! புத்ரார்த்தின: - ஸந்ததியை விரும்புகிறவனுக்கு, சருவிதெள – விதிக்கப்பட்ட சருவை த்ரவ்யமாகக் கொண்டயாகத்தில், ஸோமேன ஸஹ – ஸோமதேவதையோடு கூட, ஹூதம் – கூப்பிடப்படுகிற, ருத்ரம – ருத்ரனை, அக்னிம் – அக்னி தேவதையாக, அனுசுச்ரும – நாங்கள் வேதங்கள் வாயிலாக அறிகிறோம். ஆதலால் ஸோமாரெளத்ர சருவில், தாங்கள் ஸோமனோடு சேர்ந்து பூஜிக்கப்படவில்லை. ஸோமனும் அக்னியும் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார்கள்.

விரிவுரை

மாத்வா ருத்ர சுக்ருதாமா நமோபி: - ருத்ரதேவதையே! உம்மைப் பிறருடன் சேர்த்து நமஸ்கரிப்பதால் கோபிக்கச் செய்ய மாட்டோம். வ்ருஷப – வேண்டியதை வர்ஷிக்கும் ஸ்வதந்த்ர தெய்வமே! துஷ்டுதீ – மற்றதேவதைகளுக்கு சமமாகச் செய்யும் ஸ்துதியாலும், மா சுக்ருதாம – கோபமூட்ட மாட்டோம்; மா சுக்ருதாம ஸஹூதீ – வேறு தெய்வங்களோடு சேர்த்துக் கூப்பிடுவதாலும், (யாஜ்யா புரோனுவாக்யா – மந்த்ரங்களால் சேர்த்து யக்ஞத்துக்கழைப்பதாலும்) கோபிக்கச் செய்யமாட்டோம். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் நிருக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது.

கிம் ச துல்ய நமஸ்காரை: தேவாந்தரகாமிபி: |
       துஷ்டுத்யா ஸத்ருச ஸ்துத்யா ஸமானாஹ்வான
       கர்மணா ந வயம் சுக்ருதாம த்வாம் ஸர்வதேவ நமஸ்க்ருதம் ||

சிவபெருமானையும் விஷ்ணுவையும் கூடச்சேர்த்து ஸமமாக பாவிப்பவன் சண்டாள துவ்யனாகிறான். அவன் ஸங்கர ஜாதியைச் சேர்ந்தவனென்பது அனுமானம் செய்யப்படலாம். சூர்யனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் போல, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வித்தியாசமுளது என்றெல்லாம், தத்வம், சிவதத்வ நிரூபணம், ஆதித்ய புராணம், பராசர புராணம், ஸ்காந்தம் ஹூத ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை காண்க. ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகனைத்தையும் காத்த சிவபெருமானுக்கு நிகரான தெய்வம் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை, வைஷ்ணவர்களும் (முக்யமாக வைஷ்ணவப் பற்றுதல் உள்ள ஸ்மார்த்த ப்ராம்மணர்களும் தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிய வேண்டிய விஷயமாகும்.

       ஸோமா ரெளத்ரம் சரும் நிர்வபேத் ப்ரஜாகாம:

		என்பது சந்தானத்துக்காக விதிக்கப்பட்ட யக்ஞத்தைத் தெரிவிக்கும் வேதவாக்யமாகும்.

சுலோகம் 23

அக்னிம் ப்ரக்ருத்யகலு ருத்ரபதம் ப்ரயுங்க்தே
தத் ப்ராமஹணம் பவதி யத்ர தயோஸ் ஸஹூதி: |
ஆஹ்வானமத்ர பவத: ப்ருதகேவ த்ருஷ்டம்
யத் ப்ராதரக்னிமிதி ஸூக்த வித: படந்தி ||

ஸோமா ரெளத்ர சரு விதியில் ஸோமனோடு சேர்த்துக் குறிக்கப்படும் ருத்ரன் தாங்கள் அல்ல அக்னிதா