|
Home > Scriptures & Stotras > Tamil
சித்தாந்த சிகாமணிஇரண்டாம் பாகம்
சிவப்பிரகாசரின் தமிழாக்கம் - - - - -
பன்னிரண்டாவது
(12) சதுர்விதசாரத்தலம்
[அதாவது - குரு லிங்க ஜங்கம பூஜையுடன் அவர்களின் ப்ரசாதங்களையும் ஸ்வீகரிக்கும் சிவபக்தனே சதுர்வித சாரமுள்ளவனென்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
பத்தி கொண்டரன் பாதப் புனலெனச்
சத்தெ னுங்குரு சங்கம மெல்லடிக்
குய்த்த வொண்புன லுங்களித் துண்பரா
னித்த லுஞ்சிவ நேச மடைந்துளார். 1
பொங்கு றும்புனி தத்திற் புனிதமாய்
மங்க லந்தனின் மங்கல மாகியே
சங்க ரன்றிருத் தாட்புனற் றாரண
மிங்க ளித்திடுஞ் சித்திகள் யாவுமே. 2
அத்த னந்தி யணிந்த மலரொடு
பத்தி ரங்க டலையிற் பரித்துள
சுத்த னிங்கோர் கணத்தினிற் றூங்குகை
மத்த வேழ மகம்பய னண்ணுவான். 3
உருத்தி ரன்கொளு மோதநங் கொள்கமற்
றுருத்தி ரன்பெற் றுயிர்ப்ப துயிர்க்கவோ
ருருத்தி ரன்பரு கொண்புன லுண்கவெண்
றுரைத்தி டுங்கொண் டுயர்சொற் சுருதியே. 4
நற்ப ழங்கடி நாண்மலர் பத்திர
மெற்ப தம்புன லேமுதல் யாவையுந்
தற்பெ ருஞ்சிவ லிங்கந் தனக்கரோ
வர்ப்பி தஞ்செய்து கொள்ளுவ னன்பினோன். 5
பிரபுலிங்க லீலை
குடிப்பன விழுங்குவ கூரெ யிற்றினாற்
கடிப்பன நக்குவ வனைத்துங் கைம்மலர்
அடுத்துள சிவன்றனக் கர்ப்பித் துண்பவன்
விடுத்தவன் மேல்வரும் வினைகள் யாவும்.
உலக னைத்தினு மோங்கொளி யாகியே
யிலகு மெய்ச்சிவ லிங்க விறைபெருந்
தலைமை பெற்றிட லாலவன் றானுகர்
பலவு முற்றிடல் பத்தர்க் கியல்பரோ. 6
தீத கற்றுஞ் சிவனிரு மாலிய
மேதி னிக்கண் விமலற் றரித்துளோ
ராத ரத்தி னடைகுவ தன்றிமற்
றேதி லர்க்கஃ தெய்த வொணாதரோ. 7
அண்ண லீசனுக் கர்ப்பிதஞ் செய்துபின்
னுண்ணு மோதனத் தோரவி ழொன்றினுக்
கெண்ணு மாபரி யாக விரும்பய
னண்ணு வார்சிவ பத்தர் நயந்தரோ. 8
பரம னுண்டு பவித்திர மாயது
நிரும லம்பெற லானிரு மாலியம்
பெருமை தங்கு நிருமலன் பெற்றுணுங்
கருமை தங்கு கயவர்க் கடாதரோ. 9
சுத்த மாகுஞ் சுடர்சிவ னுண்ணுபு
வைத்த வானிரு மாலியங் கொண்டுறப்
பத்தியோவிய பாவிக ளாமெனக்
கைத்து ளோரதி காரிக ளல்லரே. 10
அருளி லிங்கத் தரும்பிர சாதத்தால்
வருமி ரும்பலன் வண்குரு சங்கமந்
தருமி ரும்பிர சாதமுந் தந்திடு
மொருமை கொண்டுவந் துண்பவர்க் கென்றுமே. 11
ஆத லானல் லருட்சிவ லிங்கமெய்
நாத னாகிய நற்குரு சங்கமங்
காத லாகிக் கசிந்து தொழுதவர்
சாத மாதர விற்றரித் துண்கவே. 12
பிரபுலிங்க லீலை
புலம்பி நைந்திருக் கின்றவப் போதினி
லிலிங்க முங்கர முந்திகழ் வெய்துற
நலங்கொ ளல்லம னண்ணனி னண்ணலுங்
கலங்கி நின்றவக் காரிகை கண்டனன்.
- சதுர்விதசாரத்தலம் முற்றிற்று - * * *
பதின்மூன்றாவது
(13) உபாதிதானத்தலம்
[அதாவது - மேற்கூரிய நான்குவித ஸாரமுள்ளவனும், பலாபேக்ஷையினால் குரு லிங்க ஜங்கமங்களுக்குத் தானம் செய்பவனுமான சிவபக்தனே சோபாதிகதாநி என்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
தேசி கற்குஞ் சிவலிங்கத் திறகுமா
லாச கற்று மருட்சிவ யோகிக்கும்
பேச லுற்ற வவர்பிர சாதவூ
ணேச முற்றவர் நின்று கொடுக்கவே. 1
தான மூவகை தக்கசோ பாதிக
மேனை மாநிரு பாதி சகசமென்
றூன மாம்பல னுன்னி யளித்தலே
ஞான மேவிலர் நச்சுசோ பாதிகம். 2
- உபாதிதானத்தலம் முற்றிற்று - * * *
பதினான்காவது
(14) நிருபாதிகதானத்தலம்
[அதாவது - தானத்தைப் பெற்றுக் கொள்பவனுடைய சந்தோஷத்தின் பொருட்டுத் தானம் செய்து, அவ்வித தானத்தில் எவ்வித பலாபேக்ஷையு மில்லாமல் அது ஈச்வரார்ப்பணம் என்னும் புத்தியுள்ள சிவபக்தனே நிருபாதிகதாநி என்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
விடுத்து நெஞ்சம் பலனை விழைதலை
யடுத்த வீசனுக் கர்ப்பித மென்றுனிக்
கொடுக்கு மந்தக் கொடையை யுரைப்பரிங்
கெடுத்து நன்னிரு பாதிக மென்னவே. 1
- நிருபாதிகதானத்தலம் முற்றிற்று - * * *
பதினைந்தாவது
(15) சகசதானத்தலம்
[அதாவது - தானம் பெற்றுக்கொள்ளத்தக்கவன் தானம் செய்யத்தக்கவன் தானம் செய்யும் பதார்த்தம் ஆகிய இவைகளெல்லாம் சிவஸ்ரூபமென்றும், தான் கொடுக்கத் தக்கவ னல்லவென்றும், குருவும் லிங்கமும் பூஜ்யமான ஜங்கமமும் தன் பதார்த்தத்தை ஸ்வீகரிக்கிறார்க ªளுன்றும் எண்ணி, அதனால் கர்த்ருத்வ புத்தி செய்யாது தானம் செய்பவனான சிவபக்தனே சகசதானி என்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
இரத்தல் செய்பவ னீபவ னீத்துறு
மருத்த நின்றவ ருஞ்சிவ மென்றுதான்
கருத்த னென்னுங் கருத்தில னாகியே
தரித்தி டுஞ்செயற் றானஞ் சகசமே. 1
இறப்ப நன்கொடை யாவினு மேலதாய்ச்
சிறப்ப டைந்து செயுஞ்சக சக்கொடை
பிறப்பெ னுந்துர்ப் பிணிமருந் தாகிய
மறப்ப ருஞ்சிவ ஞானம் வழங்குமால். 2
பத்த ரோடு பரமனுக் கீத்துறு
மெய்த்த தானஞ் சகசம் விமலனுக்
குய்த்த போதொன் றுதவுநற் பாத்திரத்
தத்த மாயிர மீயு மரும்பயன். 3
பாத்தி ரஞ்சிவ னுங்கன பாத்திரஞ்
சாத்தி ரந்தெரி தக்க குரவனு
மேத்தி யொன்றவர்க் கீயு மரும்பலன்
மூத்து நிற்கு முடிவில தாகியே. 4
காணு றுஞ்சிவ னாகிக் கருநெறி
நாணு றுஞ்சிவ ஞான மருவியே
யேணு றுஞ்சிவ யோகிக் கிடும்பொருண்
மாணு றும்பர மார்த்த மெனப்படும். 5
எக்கொ டைக்குமெ டுத்தசற் பாத்திர
மிக்க மெய்ச்சிவ யோகி மிகையென
வொக்க வொன்றிங் குரைப்பதி லையிலை
பக்க நூல்கள் பலவினு மென்பவே. 6
சாந்த மாய தனிச்சிவ யோகிகை
யேய்ந்த வோர்பிடி பிச்சை யிடும்பலன்
கூர்ந்த வோர்சத கோடி மகஞ்செயு
மாந்த ரானு மருவுத லன்றரோ. 7
திருத்தி யொண்சிவ யோகி பெறிற்சிவன்
றிருத்தி யெய்துவ னச்சிவ னெய்திய
திருத்தி கொண்டு செறியு முலகெலாந்
திருத்தி யெய்துஞ் சிவமய மாதலால். 8
பிரபுலிங்க லீலை
உலகி லொருவன் சிவயோகி யுண்ட தம்ம சராசரமா
மலகி லுயிர்க ளெலா முண்ட தாகு மென்ன மறைகூறு
மிலகு முறையைக் காட்சியா னின்றில் குணர வுணர்த்தினான்
கலக வினைக டீர்க்குமருட் கண்ணன் றிகழ் லமதேவன்.
ஆத லாற்சிவ யோகிக் கநுதிநங்
காத லாலெக் கருமத்தி னானுமே
யோத நாதியி லொன்றுங் குறைவறத்
தீதி லாது திருத்திசெய் கிற்பரே. 9
தாவி லாதுயர் சச்சிதா நந்தமாய்
மேவு மீசனுக் காக விரும்பியே
யாவு நல்குவன் யாவ னனையனே
யோவி லாத வொருபெருஞ் சங்கரன். 10
உரைத்த நன்னெறி யுற்றுயர் தானியா
யருத்த மாமய னாதியர் வாழ்வினில்
விரத்த னாகும் விழுமிய பத்தனே
தரித்து நிற்குமா கேசத் தகைமையே. 11
- சகசதானத்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் எக்காரணத்தினால் பிண்டம், பிண்டஜ்ஞானம், சம்சாரஹேயம், குருகாருண்யம், லிங்கதாரணம், விபூதி, ருத்ராக்ஷம், ஸ்ரீபஞ்சாக்ஷர ஜபம், பக்தி, உபயம், த்ரிவிதசம்பத்தி, சதுர்விதசாரம், உபாதிமாடம், நிருபாதிமாடம், சஹஜமாடம் என்னும் பதினைந்து ஸ்தலங்களுடனே கூடியிருத்தலானும் சிவசக்தியினாலும் எவன் பக்தியுள்ளவ னானானோ அக்காரணத்தினால் அவன் முதலாமவனான பக்தன் என்று அறியப்பட்டான்.
1-வது பத்தத்தலம் முற்றும் * * *
இரண்டாவது மாகேசத்தலம்
[அதாவது - எக்காலத்தும் லிங்கநிஷடையினால் ஆஸ்திக்ய நித்யகர்ம சத்ய சதாசார தர்மசௌசீல்யாதிகளை யடைந்து வீரசைவ வ்ரத சம்பந்னனாயிருத்தல் என்பது.]
( இதனுட்பிரிவு )
கலிவிருத்தம்
சாற்றினை யுவந்துபத் தத்த லத்தினைப்
பாற்றிய வினைநெறிப் பத்த னிங்ஙனெவ்
வாற்றினி லடைவன்மா கேசத் தன்மையை
மாற்றிரி கணேசநீ வகுத்துக் கூறுவாய். 1
மாசறு சகசநற் றானம் வல்லனாய்
வாசவ னாதியர் பதத்தின் மாற்றிய
நேசமோ டொருபெரு நேசத் துற்றவ
னீசனை யிணையின்மா கேசத் தன்மையான். 2
முன்னர்நஞ் சங்கரன் மொழிந்த வாறிவண்
பன்னுவன் மகேசநற் றலத்தின் பான்மையுந்
தன்னிகர் மகேச்சுரன் றன்மை யங்கதன்
பின்னர்வந் திலிங்கநன் னிட்டை பெற்றிடும். 3
பூருவாச் சிரயமத் துவிதம் போந்துபி
னாருமா க்குவாந மட்ட மூர்த்திபின்
சாருமியாண் டினுநிலை தடுத்தல் பின்சிவம்
பாரமா வுலகொடு பத்த னாந்தலம். 4
இம்முறை * நவவித மெய்தி நின்றுள
மெய்ம்மலி மகேசநற் றலம்வி ளம்புதுஞ்
செம்மையோ டொருங்கிய சித்த னாகியே
யெம்முனி வரவிருந் தினிது கேட்கவே. 5
(* மற்றொரு பிரிவு :- அதாவது மாகேசனானவன் இகலோகவீரன் பரலோகவீரன் லிங்கவீரன் என மூன்று வகைப்படுவன். இவர்களில், மத்யலோக கணங்கள் புகழும்படி ஷட்தர்சனங்களின் நிரசனம் செய்து தன்சமயத்திற்கு ப்ராணனை வ்ரயம் செய்பவனே இகலோகவீரன் எனப்படுவன்; தேவலோக கணங்கள் புகழும்படி சர்வசங்க பரித்யாகம் செய்து தர்மாதர்ம காமமோக்ஷங்களை விட்டிருப்பவனே பரலோகவீரன் எனப்படுவன்; அங்க லிங்க சங்கத்தினால் சர்வ கரணங்களும் ஒன்று பட்டிருப்பவனே லிங்க வீரன் எனப்படுவன். மாகேச்வரனை பிண்ட ப்ரஷ்மம் என வழங்குதலு முண்டு.)
பதினாறாவது
(16) மாகேச்சுரத்தலம்
[அதாவது - ப்ரம்மா முதலிய சமஸ்த பிராணிகளுக்கும் ஸ்வாமியான பரசிவன் ஒருவனே சர்வ ச்ரேஷ்டன் என்றறிந்தவனும், பரஸ்த்ரிசங்கம் பரத்ரவ்யாபேக்ஷை அவித்தை முதலிய பஞ்சக் லேசங்கள், அகங்காரம் மாத்சர்யம் கோபம் ப்ராணஹிம்சை ஆகிய இவை முதலிய குணங்களில் வர்த்தியா திருப்பவனும், சகஜதாநியானவனும், ப்ரஹ்மாதிகளின் பதங்களில் ஆசக்தியில்லாதவனும், ப்ரஹ்மாதி பதங்களை த்ருணோபாதியில் அறிபவனும், ஸ்ரீபரமேச்வரனிடத்தில் த்ருடமான பக்தியுள்ளவனும் ஆசக்தனுமான சிவபக்தனே மாகேச்வரன் என்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
உலகினை யளித்தரு ளுருத்தி ரன்மிகு
முலகினை யுண்டிடு மொருவன் றன்னினுந்
தலைமைய னென்றெவன் றுணியுந் தன்மையா
னிலகுறு மனையன்மா கேச னென்பவே. 1
விமலனா கியநுதல் விழியி னோனொடு
சமவரா கியநிலைச் சதுமு கப்பெருங்
கமலனா தியர்தமை யொப்புக் காண்குறு
மமைவிலா னரியமா கேச னாகுவான். 2
பங்கய னாதிய பசுக்கட் கென்றுமே
யிங்கிறை யாகிய வீசன் றன்னையே
துங்கனென் றுணர்தரு துணிவு பெற்றுளோன்
மங்கல நெறியுடை மகேச னாகுவான். 3
பெருமல முற்றிடு பிரம னாதியர்
தரும்வலி யிலர்தனி முத்தி நல்குவோ
னிருமல மகேசனே யென்னு நெஞ்சினோன்
மருவரு நிலையுடை மகேச னாகுவான். 4
மாலய னாதியர் மருவு வாழ்வெலாஞ்
சால வோர்து ரும்பெனத் தள்ளி யைம்புல
னாலுறு சுகங்களை மகேச னாற்றியே
சீலமோ டவன்சிவா னந்தத் தெய்துவான். 5
பிறர்மனை பிறர்பொருள் பெறல வாச்சின
மறுபகை முதனவை யனைத்து நீக்கியே
பொறையொடு பரனது புகழ்வி ரும்பிநன்
னெறிதரு சிவாகம நேய முள்ளனாய். 6
அரற்குயர் வளித்திடு மளவை கொண்டுதான்
பரற்கிதஞ் செய்துநம் பரம்பொ ருட்டவாய்த்
திரத்தொழில் புரிந்துமெய்ச் சிவநிந் தைக்கணே
மரித்திடு நிலையினும் வலிய னாகியே. 7
நிந்தனை யுடையரை நீக்கி யோர்சிவ
வந்தனை யுடையரை மருவி யென்றுமே
புந்தியின் மகிழ்பெறீஇப் புனித னாயுறு
மைந்துடை யவனரு மகேச னாகுவான். 8
- மாகேச்சுரத்தலம் முற்றிற்று - * * *
பதினேழாவது
(17) இலிங்கநிட்டைத்தலம்
[அதாவது - சர்வஸ்வமும் நாசமாயினும் சிரச்சேதமாய்க் கொண்டிருப்பினும் மற்ற வஸ்துக்களில் நிராபேக்ஷையுள்ளவனாய், நமஸ்காரம் தர்சனம் ஸ்பர்சனம் பூஜை முதலியவைகளினால் நியமமாய், எக்காலத்தும் சிவலிங்க பூஜையாகிய மகா வ்ரதத்தைக் கைவிடாத மாகேசனே பரம லிங்க நிஷ்டனென்று சொல்லப்படுவன் என்பது.]
கலிநிலைத்துறை
ஆவி மாளினுஞ் சிவலிங்க நிட்டையை யடைந்தோ
னோவி லாநெறி நிற்கவொன் றுணர்தர வுணர்த்துந்
தாவி லாதவிச் சிவலிங்க நிட்டையந் தலந்தான்
றேவ தேவனைப் பொருளெனு மகேசனைச் செறியும். 1
பொருளெ லாஞ்சிதைந் துயர்தலை யற்றுவீழ் பொழுது
மருளு லாஞ்சிவ லிங்கபூ சனைவிட லாகா
தெருளி னாலரன் பூசனை செய்திடா துண்ணு
மருளி லான்கரத் துற்றிடு முத்திமா நிதியம். 2
சம்பு பூசனை யாகிய தக்கதோர் தரும
மிம்பர் வீடுற வளித்திடு மினையதை யன்றி
நம்பு மேனைய சிறுபய னல்குறு தருமங்
கும்ப மாமுனி செய்வதென் பெறுவது கொண்டு. 3
நியமங் கொண்டுபூ சனைசெயு நிமலலிங் கத்திற்
செயலி லன்புட னர்ப்பிதஞ் செய்தசே டத்தை
யயில்பு மெய்வளர்ப் பவனெவ னனையதன் மையனே
மயல கன்றுயர் தருதனி வீரமா மகேசன். 4
விடுத்து மற்றுள பயனெலாம் விமலலிங் கத்தி
லடுத்த நெஞ்சமும் பரமலிங் கத்தரும் புகழே
யெடுத்த றைந்திடு வாயுமர்ச் சனைசெய வென்றும்
படைத்த கைகளு முடையனே யுருத்திரன் பகரின். 5
பரம லிங்கநன் னிட்டையை யுளன்பரா னந்த
வொருபெ ருஞ்சிவ மதனையே யடைவனென் றுரைக்கு
மிருள றுங்கலை யாவுமற் றவன்றனக் கென்னாந்
திரமி ழந்துறு துறக்ககா ரணமெனுஞ் செயல்கள். 6
நீறு கண்டிகை புனைந்துநன் னெறியிடை நின்று
தேறு மஞ்சிவ லிங்கமா நிட்டையிற் சிறந்த
பேற டைந்தவன் றன்னையப் பிரமனே முதலோர்
மாற ருந்துதி செய்துநின் றிறைஞ்சுவர் மன்னோ. 7
பிரபுலிங்க லீலை
நெஞ்சஞ் சோகம் பாவனையி னிற்க நிறுத்தி விடயங்க
ளஞ்சுந் துறவாத் துறந்தசிவ யோகி யொருவ னடியணையிற்
றுஞ்சுந் திருமான் முதலமர ருள்ள மவனைத் துதித்திறைஞ்சா
தெஞ்சுந் தவமா முனிவரிலை யெனநான் மறையு மியம்புமால்.
- இலிங்கநிட்டைத்தலம் முற்றிற்று - * * *
பதினெட்டாவது
(18) பூருவாச்சிரய நிரசனத்தலம்
[அதாவது - மேற்கூரிய க்ரமத்தில் லிங்க நிஷ்டையுள்ளவனும், கிடைக்கப்பெற்ற சிவாசாரத்தை யாச்ரயிப்பவனும், மாகேச்வர சமயத்திற்கு விருத்தங்களானதும் தீக்ஷைக்கு முன்னர் நிகழ்ந்தவைகளும் ஜாதி குல சம்பந்தத்தால் வரும் தர்மங்களுமாகிய பூர்வாச்ரயங்களைக் கைவிட்டவனுமான வீரமாகேச்வரனே பூர்வாச்ரய நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]
கலிநிலைத்துறை
கொண்டு றுங்சிவ லிங்கநன் னிட்டையைக் கொண்டு
விண்டு றும்பவ நெறியடை வீரமா மகேசன்
கண்ட ருஞ்சிவ நெறிவிலக் காயிவண் கலந்த
பண்டு றுங்கரு மங்களோ விடுத்திடப் படுமால். 1
சோதி லிங்கநன் னிட்டையின் விலக்கெனத் தோன்றுஞ்
சாதி தன்குல தருமங்க ளனைத்தையுந் தணந்த
நீதி யொன்றுள னாகிய நிலைபெறு மகேசன்
றீத டைந்துள தொல்லையாச் சிரயத்திற் றீர்ந்தோன். 2
பற்று றுஞ்சிவ தீக்கையிற் பவித்திரன் றனக்கு
முற்ற ருங்கரு மங்களி னென்பயன் மூடம்
பெற்று றும்பவப் பிணியின ரேயவை பெறுவா
ருற்றி டுஞ்சிவ தீக்கையி னோனவை யொழியும். 3
மனிதர் சுத்தரு மசுத்தரு மெனவிரு வகையர்
புனிதர் மெய்ச்சிவ தீக்கையைப் பொருந்தின ரொழிந்தோ
ரினிதெ னுஞ்சிவ தீக்கையை யிலாதவ ரென்ப
வனிதை பங்குடை யமலனூற் பெருநெறி வல்லோர். 4
வருண நன்னிலைத் தருமங்க ளிருவகைப் படுமொன்
றரன றைந்தது மற்றைய தயனறைந் ததுவாம்
பரன றைந்தது பயிலுவர் சிவாச்சிர யத்தர்
பிரம னல்கிய தருமமே பிராகிரு தர்க்கு. 5
முந்தை யுற்றுள விந்தநத் துருவங்கண் மூண்ட
வெந்த ழற்கவர்ந் துண்ணுற விரவுறா வாபோ
னந்து றச்சிவ தீக்கையை நண்ணினோர் தமக்குட்
பந்த முற்றுள சாதிவேற் றுமையிலை பகரின். 6
சிவஞான தீபம்
இந்தநங்கள் பலபலபே ருடைய வாகு மெரிதழலி னிடையிடவே யெல்லாஞ் சேர
வெந்துவிற கினினாம நாச மாகி வெண்ணீறென் றொருபெயராய் விளங்கு மாபோற்
பந்தமுறுங் குலாசார மயக்க மெல்லாம் பரமகுருத் திருநோக்கம் பரித்தவாறே
வெந்தழியு மொருபுழுவேட் டுவனா மாபோல் விமலனுரு வாயெவர்க்கு மேலா மன்றே.
(இந்தனம் - விறகு, விரவல் - கலத்தல், நந்தல் - பெருநல், நண்ணினோர் - அடைந்தவர், பந்தம் - கட்டு.)
பாச மற்றுயர் தீக்கையிற் சிறந்துள பத்த
ரீச னைப்பெறு பத்தர்பா லோரிடத் தெனினும்
பேசி லுற்றிடு சாதியுன் னுதன்மிகப் பிழையென்
றூச லொத்துழல் பிறப்பிறப் பகன்றவ ருரைப்பார். 7
பிரபுலிங்க லீலை
சங்கமந் தனக்கொரு சாதி யுன்னினான்
அங்கையி னமர்தரு மரற்கு முன்னினான்
சங்கர னொடுசரந் தம்மில் வேறெனும்
அங்கவ னறிவரு மளற்ற ழுங்குவான்.
- பூருவாச்சிரய நிரசனத்தலம் முற்றிற்று - * * *
பத்தொன்பதாவது
(19) அத்துவித நிரசனத்தலம்
[அதாவது - லங்க பூஜைக்கு விருத்தங்களான பூர்வாச்ரய தர்மங்களை எவ்வாறு விட வேண்டியதோ அவ்வாறே அத்வைத ஜ்ஞானமும் லிங்கபூஜைக்கு விருத்தமானதினால் அவ்வத்வைத ஜ்ஞானத்தைவிட்டு லிங்கமே பூஜ்யம் அங்கமே பூஜகம் என்னும் த்வைத பாவத்தையே அங்கீரிக்கும் மாகேச்வரனே அத்வைத நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பூசனை செய்வோன் கொள்வோன் பேதமென் றுறலாற் போற்றும்
பூசனை யாதி கன்மம் பொன்றலா லிலிங்க நிட்டை
நாசம துறலா லெங்கும் பெறஞான மிலாமை தன்னா
லீசனை வந்திக் கின்றோ னெங்குமத் துவிதஞ் செய்யான். 1
இறையவ னியக்கு கின்றோ னியங்குறப் பட்டு நிற்போ
னறைதரு முயிரென் றெண்ணி யாயவிவ் வேறு பாடு
பெறுமுறை யதனா லந்தப் பிரேரகன் றனையர்ச் சித்த
னெறியொடு புரிக செய்யே னிகழ்த்துமத் துவிதந் தன்னை. 2
பராபரன் பதியா மந்தப் பதிதொடர் பசுவா மான்மா
விராவிவர் தம்மி லென்றும் வேறுபா டிலரே யாயிற்
றராதல மதனி லீசத் தன்மையோ டடிமைத் தன்மை
வராவென வுரைப்பர் மிக்க மறைகளா கமங்கள் வல்லோர். 3
எம்முறை பராப ரன்றா னிலங்குறு போத கத்தான்
மெய்ம்மலி காட்சி யுற்று விளக்கமோ டெய்தி நிற்கு
மம்முறை பெறவ டைந்த வத்துவி தப்பேர் வாழ்க்கை
யிம்மையின் ஞான மில்லோர்க் கென்றுமின் றாகு மன்றே. 4
கருமவே துவினைக் கொண்டு காண்குறும் வேறு பாடு
மருவுறு மதனா லென்றும் வளங்கெழு மருச்ச நாதி
புரிதரு நெறியி னின்றோன் பொருந்துநற் கரும மெலலா
மொருவவந் தெய்து மத்து விதத்தினை யுற்றி டானால். 5
- அத்துவித நிரசனத்தலம் முற்றிற்று - * * *
இருபதாவது
(20) ஆவாகன நிரசனத்தலம்
[அதாவது - அத்வைத நிரசனத்தைச் செய்தலும் லிங்க நிஷ்டையுள்ளவனால் லிங்காஹ்வான சித்யர்த்தமாய் ஒரு மூர்த்தியைக் கல்பிக்க வேண்டியதாயின் அநித்யத்வப்ரசங்க முண்டாகும் காரணத்தினாலும், லிங்கத்தின் பரிபூர்ண தசையினாலும், சிவலிங்க பூஜார்த்தமாய் அத்வைத பாவத்தை விட்டு த்வைத பாவத்தை அங்கீகரிப்பவனும், சைவனைப்போலப் பூஜார்த்தமாய் ஸ்ரீ குருதத்தமான இஷ்டலிங்கத்தினிடத்தில் பூஜைக்கு அங்கமான ஆஹ்வான நிரசனம் செய்பவனுமாகிய மாகேச்வரனே அஹ்வான நிராசகனென்று சொல்லப்படுவன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அச்சிவ லிங்கம் வந்தித் தத்துவி தத்தை நீத்தோன்
மெய்ச்சிவ மயமாய் நின்று விளங்குதன் னிட்ட லிங்கத்
திச்சையி னரனை யாவா கநித்திட லியல்பன் றென்பர்
பொய்ச்செயல் கடந்து மிக்க புலக்குறும் பெறிந்த வீரர். 1
சிற்கலை யொடுதி கழ்ந்த சிவலிங்கந் தீக்கை தன்னா
னற்குரு வளித்த வன்றே நண்ணுறு மமல னென்றும்
பொற்புறு முணர்வின் மாறாய்ப் பொருந்துமா வாகனந் தான்
பிற்பெறு தினங்க டோறும் பேணுத லாலென் பேறே. 2
என்றுநல் லிட்ட லிங்கத் திசைந்துநன் னிட்டை பெற்றோன்
றன்றனி யிலிங்கந் தன்னிற் சங்கரன் றன்னை வைத்துப்
பின்றனி விடுக்க லாகா துணிவிது பெருநூற் கென்று
தென்றமிழ் மலயத் துற்ற சிவமுனி யறிந்து கொள்ளே. 3
- ஆவாகன நிரசனத்தலம் முற்றிற்று - * * *
இருபத்தொன்றாவது
(21) அட்டமூர்த்தி நிரசனத்தலம்
[அதாவது - லிங்கமானது பரிபூர்ணமான சிவனே என்னும் ஜ்ஞானத்தை யாச்ரயித்து ஆவாஹனத்தை நிரசனம் செய்ததுபோல, ப்ருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய இவைகள் பசுக்களாயிருக்கின்றன வென்றும், சிவத்தின் அவயவங்க ளென்றும், சிவத்தினிடத்தில் ஏகத்வத்தை யடைந்தவைகளல்ல வென்று மறிந்து, அவைகளின் பேதத்தையும் நிரசனம் செய்த மாகேச்வரனே அஷ்டமூர்த்தி நிராசகன் என்று சொல்லப்படுவன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அத்தனோ டுயிர்க்கிங் கெவ்வா றயிக்கவத் துவித மாகா
தத்திற மிறைவ னுக்கு மம்புவி யாதி கட்கு
முய்த்துண ரட்ட மூர்த்தித் தன்மையவ் வொருவற் கென்றும்
வைத்தது மதிட்டா நத்தால் வயங்கொரு மையினா லன்றால். 1
காரிய ஞால மாதி கருத்தனொண் மகேச னாகுஞ்
சீரிய குலால னாகா செய்கட மதுபோ லீசன்
பாரிய வுலக மாகான் பராபர னான்மா வென்ப
ரேரிய நிலமுன் பாய வெண்வகை யுடம்பி னுக்கும். 2
நிலமுத லாய வெல்லா மசேதன நின்ற வான்மா
மலமுறு மூட னாகு மாதலால் வயங்கு மீச
னலவகை யட்ட மூர்த்த மாகிய வுடம்பி னுக்கு
மிலகுறு மான்மா வாகு மீசற்கும் பேத முண்டோ. 3
பார்புன லங்கி வங்கூழ் விசும்பொடு பரிதி திங்க
ளார்தரு மான்மா வென்னு மட்டமூர்த் தங்க டம்மிற்
சீர்கெழு பரமன் றன்னை வேறுறத் தெரிந்து காண்போ
னேர்தரு மட்ட மூர்த்தி நிராசக னாகு மன்றே. 4
- அட்டமூர்த்தி நிரசனத்தலம் முற்றிற்று - * * *
இருபத்திரண்டாவது
(22) சர்வகத நிரசனத்தலம்
[அதாவது - சிவன் சர்வகதனாயின் அஸ்ப்ருச்யனாவானாதலால் அந்த அஸ்ப்ருச்ய த்வத்தைப் பரிகாரம் செய்வதினிமித்தம் அச்சிவத்தின் சர்வகதத்வத்தை லிங்கநிஷ்டை யொன்றானே நிரசனம் செய்பவனும், பூஜாகாரியத்தி னிமித்தம் சிவன் எந்தெந்த விடத்திலுமிராமல் இஷ்டலிங்கத்தில் மாத்திரமே இருப்பன் என்னும் ஜ்ஞான முள்ளவனுமான மாகேச்வரனே சர்வகதநிராசகன் என்று சொல்லப்படுவன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இருந்திடு மிறைவ னெங்கு மென்றிடி னிறைவற் கெங்கும்
வரந்தரு பூசை யாகுஞ் சிவலிங்க மாத்தி ரத்தி
லரந்தையி னிட்டை கூடா தாதலா லமல னெங்கும்
பரந்தவ னென்று கூறப் படானென வறிந்து கொள்ளே. 1
நிறந்தவ னெங்குமேனு நிமலன்ற னாத ரத்திற்
சிறந்துறு நிறைந்த வன்னி தன்மரஞ் செறித லேபோ
லறிந்திதை யமலன் றன்னை யனைத்தையும் விடுத்துத் தன்பா
லுறைந்திடு மிட்ட லிங்கத் துவந்தருச் சிக்க மாதோ. 2
எங்கணு நிறைவோ னாக வியம்பினு மமலன் றன்னைத்
தங்குறு நூல்க ளெல்லாந் தனதுபற் றாகி நின்ற
மங்கல மாமி லிங்க மாதிய வடிவி லென்று
மங்கண னதிக மாக வமர்வன்பூ சனைப்பொ ருட்டு. 3
உருத்திர நினது மெய்யே துற்றநன் மங்க லத்தைப்
பரித்திடு மகோர மாகிப் பாவத்தி னகன்று நிற்கு
முரைத்ததி லுறைவோ னாகி யொளிர்வைநீ யென்று மிக்க
கருத்தொடு மறையா நிற்குங் கடிவருஞ் சுருதி யன்றே. 4
ஆதலா லருச்ச னைக்க ணுயர்ந்தவ னனைத்தும் விட்டுக்
காதலாற் சிறந்து மூல காரணன் விளங்கா நின்ற
சோதியா மிட்ட லிங்கந் துணிவொடு பூசை செய்க
நீதியா மனைய னெங்கு நிறைதலை விலக்கினானே. 5
- சர்வகத நிரசனத்தலம் முற்றிற்று - * * *
இருபத்து மூன்றாவது
(23) சிவஜகந் மயத்தலம்
[அதாவது - பின்னும், எவ்வாறாயினும் சிவன் சர்வகதனல்லாமல் ப்ராதேசிகனானால் அவனுக்கு உத்கர்ஷம் எவ்வாறு நிகழும்? ஆதலால் அந்த லிங்க நிஷ்ட்டையினால் மாகேச்வரனுக்கு ப்ரயோஜனமில்லை யென்னும் ஆசங்கை நிகழுமாயின் கூறுகிறார். சிவன் பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கும் வல்லமையுள்ளவன், இவ்வாறகிய ஓர் புத்தியினால் சிவோத்கர்ஷத்தி னிமித்தம் அங்கீகரிக்கப்பட் டிருப்பவனும், சிவன் எவ்விடத்து மிருத்தலை நிராகரிப்பினும் ப்ரமாண வல்லமையினால் அந்த சர்வகதம் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறதோ அவ்வாறே ப்ரமாண வல்லமையினால் சர்வவ்யாபகத்வத்தையும் அங்கீகரித்திருப்பவனுமான மாகேச்வரனால் ஜகந்மயத்வத்தின் சித்திவிரும்பப்பட் டிருத்தல் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பூசனை நியமந் தன்னாற் பொருந்திலிங் கத்தின் கண்ணே
தேசுற விலங்கா நின்ற சிவன்றனை யருச்சிப் போனு
மீசனை யுலக மெல்லாம் வியாபக னென்னக் கொண்டு
பாசம தகல நின்று பாவிக்க வேண்டு மன்றே. 1
மண்ணினிற் றோன்றுங் கும்ப மண்ணின்வே றாமோ வேலைக்
கண்ணினிற் றோன்று மொக்கு ணுரைதிரை கடலின் வேறோ
வெண்ணிடிற் பரனாற் றோன்று மிருஞ்சரா சரமே யாகப்
பண்ணுறுத் துலக மெல்லாம் பரனில்வே றாமோ வாகா. 2
ஒண்டளிர் முதலா யுள் வுருவொடு மரநின் றாங்கு
மண்டல முதலா யுள் வடிவொடு பரம னிற்குங்
கண்டுறு மிழையி னாய காழக நூலா மாபோற்
பண்டுள வுலக மெல்லாம் பரன்மய மாகு மன்றே. 3
தன்னொரு சத்தி கொண்ட மலர்ச்சியாற் சகங்க ளாகி
மன்னுறு மிறைவி ரிந்து படங்குடி வடிவா மாபோ
லிந்நிலை யதனா லெல்லா மிறைமயங் கயிற்றிற் றோன்றும்
பந்நகம் வேறி லாத பான்மைபோற் பரனி லொன்றும். 4
கயிற்றர விப்பி வெள்ளி குற்றியிற் கள்வன் மிக்க
வெயிற்படு கானற் றெண்ணீர் விண்ணிற்கந் தர்வ வூர்போற்
பயிர்ப்பறு நித்த சச்சி தானந்த சிவத்தின் கண்ணே
செயப்படு பொருளாய்த் தோன்றுஞ் செப்பிய வுலக மன்றே. 5
கைவல்ய நவநீதம்
கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்வ நகர்க னாவூர்
வானமை கயிற்றிற் பாம்பு மலடிசேய் மயலின் கோடு
பீனமாந் தறிபு மானிப்பி ரபஞ்ச மெல்லாம் பொய்யே
ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்தி டாதே.
ஞானவாசிட்டம்
வெங்காதற் பெரும்பாம்பு நெளிபுற்றாங் குடும்பபரம் வெறும்பொய் யென்றே
இங்காசை யறநீக்கி யெல்லையிலாப் பிரமபதத் திருந்து வாழ்வாய்
சிங்கார கந்தர்வ நகரிருந்தென் சிதைவுற்றென் றீதோ நன்றோ
பங்கான மனைமக்கள் வாழ்ந்தாலென் கெட்டாலென் பாச மாயை.
- சிவஜகந்மயத்தலம் முற்றிற்று - * * *
இருபத்து நான்காவது
(24) பத்ததேகிகதேவத்தலம்
[அதாவது - சிவனுக்கு ஜகந்மயத்வம் சித்தமாயினும் ஸுககரனான அந்தப் பரமேச்வரன் ஜகந்மயமா யிருப்பினும் சிவபக்தர்களின் இருதய கமலத்தில் விசேஷமாய் ப்ரகாசிக்கின்றனன் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சங்கர னாகு மீசன் சகமய மெனினு முள்ளப்
பங்கய மலரி லென்றும் பத்தர்பாற் சிறந்து தோன்றும்
பொங்குறு கயிலை பொன்னம் பொருப்பொடு மந்த ரத்து
மங்கது போல்வி சேடித் தமர்தரு மிறைவ னன்றே. 1
அலர்கதிர் நிறைந்து விம்பத் தளவுபட் டமர்தல் போல
வுலகுரு வாய்நி றைந்த வொருவனும் பத்தர் நெஞ்ச
மலர்மிசை யிலகு முன்றன் வடிவெனு மிலிங்க மீச
பலர்புகழ் பத்தர் தம்பாற் பதியுமென் றுரைக்கும் வேதம். 2
சுத்தர்க ளிடத்துந் தீர்ந்த துறவின ரிடத்து ஞானச்
சித்தர்க ளிடத்து மிக்க சிவவேடத் தவரி டத்து
முத்தம ரிடத்தும் பாச முதறுமா கேச ராகும்
பத்தர்க ளிடத்து மென்றும் பரசிவம் விளங்கு மன்றே. 3
இந்நிலை மகேச னென்போ னேதில ரிடத்திற் றீர்ந்த
தன்னக விழைவி னோனாய்த் தனாதிட்ட லிங்கந் தன்னின்
மன்னிய மனத்த னாகிச் சகஞ்சிவ மயமாய்க் கண்டு
பின்னமி னிலையி னின்ற பெயர்ப்பிர சாதி யாவான். 4
- பத்ததேகிக தேவத்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் எக்காரணத்தினால் லிங்கநிஷ்டை, பூர்வாச்ரய நிரசனம், அத்தை நிரசனம், ஆஹ்வான நிரசனம், அஷ்டமூர்த்தி நிரசனம், சர்வகத நிரசனம், சிவஜகந்மயத்வம் என்னும் ஏழு ஸ்தங்களுடனே கூடியிருத்தலால் எவன் வீசைவ வ்ரத சம்பந்ன னானானோ அக்காரணத்தினால் அவன் இரண்டாமவனான மாகேச்வரன் என்று அறியப்பட்டான்.
இரண்டாவது மாகேசத்தலம் முற்றும் * * *
மூன்றாவது பிரசாதித்தலம்
[அதாவது - ஒவ்வொரு இந்த்ரிய த்வாரா அநுபவிக்கும் சௌக்யத்தை முதலில் லிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து பின்னர் அதை ப்ரசாத புத்தியினால் மாகேச்வரன் அநுபவித்தல் என்பது.]
( இதனுட்பிரிவு )
கலிவிருத்தம்
உரைத்தனை மகேசனல் லொழுக்க முற்றுநீ
கருத்துறு மிரேணுக கணேசப் பேரினோ
யருத்திகொண் மகேசனா மனைய னெங்ஙனம்
வரப்பிர சாதிதா னாகும் வண்ணமே. 1
தனக்குறு மிலிங்கநிட் டாதி சார்பினால்
வினைப்பகை கடந்துள விறன்ம கேசனொண்
மனப்பிர சாதமே மருவு மாற்றினாற்
கனப்பிர சாதியா மென்பர் கற்றுளோர். 2
சாற்றுறு புகழ்ப்பிர சாதி யின்றல
வேற்றுமை *யேழ்வகைப் படும்வி ளம்புறிற்
றோற்றுறு மியற்பிர சாதித் தூய்த்தலம்
போற்றுற வாதியிற் பொருந்து மென்பவே. 3
( * மற்றொரு பிரிவு :- அதாவது அர்ப்பித ப்ரசாதி, அவதான ப்ரசாதி, பரிணாம ப்ரசாதி என்று மூன்று வகைப்படுவன். சரீரஹஸ்தத்தினால் சகல பதார்த்தங்களையும் இஷ்ட லிங்கத்திற்குச் சமர்ப்பித்துக் கொள்பவனே அர்ப்பித ப்ரசாதி. மனோ ஹஸ்தத்தினால் பஞ்சேந்த் ரியங்களில் பஞ்சலிங்க ப்ரதிஷ்டை செய்து அவ்வவ்விடங்களில் வரும் சுகத்தைக் கொள்பவனே அவதான ப்ரசாதி. அங்காச்ரயம் அறவே ஒழிந்து லிங்காச்சயம் ஓங்கி வளர்ந்து பாவ ஹஸ்த பரிதனானவனே பரிணாம ப்ரசாதி. ப்ரசாதியைக் கலாப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)
சற்குரு லிங்கசங் கமநற் பத்தர்பின்
சிற்பர சரணரொண் சேட மேயென
நிற்பவர் மான்மியம் யாம்நி கழ்த்துதும்
பொற்புறு முனிவர புகன்ற வாறரோ. 4
இருபத்தைந்தாவது
(25) பிரசாதித்தலம்
[அதாவது - ஸ்ரீ குருமூர்த்தியின் தசையினாலும் லிங்கத்தின் தசையினாலும் நிச்சேஷமாய் ஜங்கமத்தின் தசையினாலும் கிடைக்கப்பெற்ற சித்த பரிபாக முள்ளவனும் சிவஜ்ஞான சித்தியின் பொருட்டு லிங்கத்தினிடத்தில் இடப்பட்ட கரணமுள்ளவனும், லிங்கத்ரயத்தினிடத்தில் அர்ப்பிதமான பதார்த்தங்களை நுகர்பவனும், அந்த லிங்கார்ப்பித மல்லாதவைகளை விசர்ஜிக்கிறவனுமான மாகேச்வரனே ப்ரசாதி என்று சொல்லப்படுவன் என்பது.]
கலிவிருத்தம்
சிந்தனை நிருமலஞ் செறியு மக்குறி
சந்தத முயர்பிர சாத மென்பரால்
வந்துறு மதுசிவ லிங்க மாவுரு
வெந்தைத னருட்பிர சாதத் தெய்துமே. 1
நிருமலன் றனக்குற நிவேதி தஞ்செயு
மருநிரு மாலிய மரிய சைவர்தம்
பெருமன நிருமலம் பெறவ ளித்திடற்
கொருபெருங் காரண மென்ப ரோர்ந்துளார். 2
போதகா ரணமெனும் புனித னற்பிர
சாதமா கியநிரு மாலி யந்தனைத்
தீதிலா மனப்பிர சாதத் திற்குணு
மீதுளா னற்பிர சாதி யென்பவே. 3
தத்துவ சுத்தியே யந்ந சுத்திதா
னத்தனுண் டொழிபிர சாத மாயின
தொத்திட வரியதோ ருணர்விற் கேதுவாஞ்
சித்தநின் மலந்தனைச் செய்யு மென்பவே. 4
தனக்கென வீட்டுபு தந்த யாவையு
நினைப்பரி தாகிய நிமலற் காக்கியே
மனப்பிர சாதமே மருவ வுண்கவென்
றனைத்தையு முணர்ந்தவ ரறைகு வாரரோ. 5
பரனிரு மாலியம் பவம ருந்துநல்
குரவுட னிடரிடை யூறு கொல்வது
திரமுற வாயுளைச் செய்வ தின்பமே
தருவது முத்தியுந் தருவ தாகுமால். 6
பிரபுலிங்க லீலை
பசிக்கு மருந்து மாய்வீடு பயக்கும் வண்மை சேர்ந்துபவம்
ஒசிக்கு மரன்றன் பிரசாத வூதி யந்தா னுணர்ந்திங்கு
வசிக்குந் தகைமை சங்கரற்கே வருவ தன்றிப் பசிக்குணவு
புசிக்கு மனிதர் தமக்கென்றும் பொருந்தா தென்றா னெம்பிரான்.
பத்திர மலரொடு பலாதி யாவையும்
வத்திர மைந்துடை வள்ளற் காக்கியே
துய்த்துறு நிலையினோர் தொன்மை பாதகக்
கொத்தினை யடியொடுங் கொல்வ ரென்பரே. 7
சம்புவி னருட்பிர சாத மென்னவே
நம்புறு குருவொடு ஞான சங்கமர்
தம்பிர சாதமுந் தானு கர்ந்திடும்
வெம்புறு பவமெறி வீர சைவனே. 8
- பிரசாதித்தலம் முற்றிற்று - * * *
இருபத்தாறாவது
(26) குருமான்மியத்தலம்
[அதாவது - சம்யக் ஜ்ஞானமே ஸ்வரூபமாயுள்ளவனும், கபடத்தினால் மனித ரூப முள்ளவனும், சாக்ஷாத் சிவரூபனாய் போகமோஷாதி சகல சித்திகளைக் கொடுப்பவனுமான ஸ்ரீ சத்குருவினது பரிபூர்ணமான ரூபமே குருமான்மியம் என்பது.]
கலிவிருத்தம்
சீரணி தருமெலாச் சித்தி கட்குமோர்
காரண வுயர்குரு வாகுங் கண்ணுத
றாரணி தனிற்குரு வடிவஞ் சார்ந்தருட்
பேரணி கலமொடு பிறங்கு மென்பவே. 1
நிட்கள வுணர்வுரு நித்த னாஞ்சிவன்
வட்கறு குருபர வடிவி னாலொரு
பெட்புறு சகளனாய்ப் பெரிது யிர்க்கெலாந்
கட்கரு மருள்செயச் சரிக்கு மென்பவே. 2
பரசிவ னுயர்குரு பரம சற்குரு
வரமுறு பரசிவ னென்ன வைப்பரிவ்
விருவரும் வேறென வெண்ணு றான்பவம்
வேருவுற வருசிவ ஞானம் வேட்டுளான். 3
பிரபுலிங்க லீலை
காந்தங் கண்ட விரும்புபோற் கண்ட பொழுதே யநிமிடன்ற
னேந்துஞ் செங்கைச் சிவலிங்க மெங்கள் பெருமான ங்கைமலர்
போந்தங் கிருந்த ததுபொழுதிற் புனிதன் சீவ கலைதானும்
சார்ந்தங் கிருந்த சிவலிங்கந் தன்னோ டவன்பாற் சார்ந்ததால்.
ஐய நினையு நின்கரத்தி னடைந்த சிவலிங் கத்தினையும்
பொய்யில் குரவன் றனையுமொரு பொருளென்றறிந்தே னின்றென்று
செய்ய கமலத் திருவடியிற் சென்று தொழுதல் லமநாம
மெய்ய னெதிநின் றன்பினால் விளம்பும் வனங்கா வலனன்றே.
கரசர ணணதிகள் கடுக்குந் தன்மையா
னரரொடு குரவனை யொப்பு நாடுறா
ருரமுறு குரவனை யுவந்து போற்றியே
பரகதி வேண்டுநர் பணிதல் வேண்டுமே. 4
நற்குரு பத்தியில் லார்க்கு நாடுறிற்
றற்சிவ பத்தியுஞ் சனித்தி டாதொரு
சிற்கன சிவனிடை செய்யும் பத்திபோற்
சற்குரு பத்தியுஞ் செய்யத் தக்கதால். 5
- குருமான்மியத்தலம் முற்றிற்று - * * *
இருபத்தேழாவது
(27) இலிங்கமான்மியத்தலம்
[அதாவது - பரிபூர்ண ஜ்ஞானமுளளவனான சத்குருவினால் குருமஹிமையையும், ஸ்வஸ்ரூப ஜ்ஞானத்தையும் அறியும்படி போதிக்கப்பெற்ற சீஷனால் ஜ்ஞானஸ்வரூப சர்வகாரணமானதும் ஸ்வயம் ப்ரகாசமானதும் சர்வோத் க்ருஷ்டமானதுமே மானதும் லிங்கமாம் என்று அறியப்பட்டது லிங்கமான்யம் என்பது.]
கலிவிருத்தம்
அருட்குரு மான்மிய வறிவின் மேன்மையான்
மருட்கழி பரசிவ லிங்க மான்மியம்
பொருட்பட வறிகுவன் புகழி லிங்கமே
தெருட்சக காரண மென்னத் தேர்கவே. 1
ஆதியாய்ச் சச்சிதா நந்த மாகிவான்
சோதியாய்த் தளையிலாச் சுத்த வாழ்வதாய்
வேதகா ரணமெனும் விமல லிங்மோர்
நாதனால் குருவலா னணுக லாகுமோ. 2
வேதனா ரணருமவ் விசும்பிற் றோன்றிய
சோதியா மிலிங்கமுன் தொடர்ந்து காண்கில
ராதலா லியாவரே யறிவர் மாதுமை
பாதியா மிளிர்தரு பரம லிங்கமே. 3
பிறகட வுளர்நிக ராத பேருல
கிறைமைகொள் பவனெனு மியல்பை யென்றுமே
முறைதரு பரசிவ லிங்க மூர்த்தியா
யுறைபர மன்றனக் கோதும் வேதமே. 4
பெரிதுயர் தருபர சத்தி பீடிகை
தெரிதர வருபர சிவமி லிங்கமவ்
வரிதுணர் வுறுசிவ சத்தி யாகிய
வொருதனி யிலிங்கமே யுலகம் யாவுமே. 5
பற்பல மொழிகொடென் பயன்வன் பாசமோ
டுற்பவ மறுசிவ யோகி கண்மன
நிற்பதெவ் விடத்திலவ் விமல லிங்கமே
யற்புத முறுபரப் பிரம மாகுமால். 6
தாமரை மலர்மிசைத் தலைவ னாதியால்
காமரு கடவுளர் சனக னாதியர்
மாமுனி வரர்சிவ லிங்கம் வந்தியாத்
தாமுறு நிலையினைத் தான டைந்தனர். 7
- இலிங்கமான்மியத்தலம் முற்றிற்று - * * *
இருபத்தெட்டாவது
(28) சங்கமமான்மியத்தலம்
[அதாவது - பயங்கரமான சம்சாரம் என்னும் இருளைப்போக்கி, காமக்ரோதாதிகளை ஜயித்து, மண் பொன் சத்ரு ஆகியவைகளைச் சமானமாய்க் கண்டு சகல சைதந்ய ஸ்வரூபமாயும் அத்யதினமான சிவஜ்ஞான யுக்தமாயு மிருப்பவனே ஜங்கமன் என்று கூறுவதே சங்கமமான்யிம் என்பது.]
கலிவிருத்தம்
ஆரிய னருளினா லறிந்த டைந்துள
பேரிய லிலிங்கநற் பெருமை கொண்டுதான்
சீரிய வுலகெலாஞ் சிவமெ னத்தெரிந்
தோரியல் கொடுசரத் துயர்ச்சி கூறுவார். 1
உலகுரு வாகிய வொருத னிச்சிவ
மிலகுறு தன்வடி வாக வென்றுமே
மலைவற வுணர்பவ னியாவன் மற்றவ
னலைவறு சங்கம மாகு மென்பவே. 2
பிரபுலிங்க லீலை
தன்னைச் சிவமென் றறிந்தவனே யறிந்தான் றன்னை யுண்மையாத்
தன்னைச் சிவமென் றறியாதா னறியா னென்றுந் தன்னுண்மை
தன்னைச் சிவமென் றென்றறிவ னன்றே பாசந் தனைநீப்பன்
தன்னைச் சிவமென் றறியாதான் றனக்குப் பிறப்பே துணையாகும்.
சிவமய மெனச்சக மியாவுந் தேர்பவ
னெவனவன் மலவிரு ளிரிக்குஞ் சோதியா
யருவிணர் வுடையவ னெவன வன்றொட
ருவமையி லொருசிவ யோகி யென்பவே. 3
முற்றுறு காமமுஞ் சினமு மோகமு
மற்றவ னுறவொடு பகையு மற்றவ
னுற்றிடு பசும்பொனோ டோடு மொன்றெனப்
பெற்றவ னுயர்சிவ யோகிப் பேரினோன். 4
நந்துறு மரியமெய்ஞ் ஞான மெய்ச்சிவ
சிந்தனை யுடையனாய்த் தீர்ந்த வெண்பவப்
பந்தனை யொருவிய பரம யோகியே
வந்துறு பரசிவ மயனெ னப்படும். 5
ஓங்குறு புகழ்ச்சிவ யோகி தன்றுணைப்
பூங்கம லர்திரு வடியிற் பூந்துக
ளீங்கெவர் மனையிடை சிசைந்து வீழ்தரு
மாங்கது புண்ணியத் தலம தாகுமால். 6
தரிசன மளித்திடுஞ் சகல சித்தியும்
பரிசன மழித்திடும் பாவ மியாவையும்
பரிசுறு மலிபுகழ்ப் பரம யோகியின்
கரிசறு பூசனை முத்தி காரணம். 7
மெய்ப்பர சிவனது மெய்ம்மை யுற்றுணர்ந்
தப்பர சிவசுகத் தழுந்து மேன்மையா
லொப்பறு மொருசிவ யோகி சங்கமிங்
கெப்பய னுதவிடா தியம்புங் காலையே. 8
- சங்கமமான்மியத்தலம் முற்றிற்று - * * *
இருபத்தொன்பதாவது
(29) பத்தமான்மியத் தலம்
[அதாவது - ஹஸ்தங்களினால் சிவபூஜா ரூபமான காயிக க்ரியையினாலும், சிவமூர்த்தி த்யான ரூபமான மானசிக க்ரியையினாலும், சிவஸ்தோத்ர ரூபமான வாசிக க்ரியையினாலும், லிங்க ரூபமான மகாதேவனைப் பூசித்து ஜனன மரணங்களைப் பக்தன் நாசஞ் செய்யத்தக்கதும், குரு லிங்க ஜங்கமர்களின் மாகாத் மியங்களை யறிந்தவனென்று நிர்வசனம் செய்து கிடைக்கப்பெற்ற அதிசயமுள்ள சிவக்தனது பேரன்புருவாயிருப்பதுமான மகிமையே பத்தமான்மியம் என்பது.]
கலிவிருத்தம்
குருவொடு மெய்ச்சிவ லிங்கங் கோதறு
சரமுறு புகழினைச் சாற்றுந் தன்மையாற்
பரவைசூ ழுலகினிற் பத்தன் றானுமவ்
வரமுறு துதியையவ் வாறு மன்னுமே. 1
சந்திர சேகரன் றன்னை நல்லர
விந்தமென் மனமொழி மெய்யி னாற்றினம்
வந்தனை புரிபவன் யாவன் மற்றவன்
பந்தம தறுசிவ பத்த னாகுவான். 2
பாவமா யுறுசிவ பத்தி யென்பதி
யாவரா யினும்பெறற் கரிய திங்கது
மேவினா னியாவன்மற் றவன் விளம்புறிற்
றாவிலா துயர்சிவ பத்தன் றானரோ. 3
பவப்பிணி யுளர்க்கிறை பத்தி யின்றெனிற்
றவப்பல வேதமுஞ் சாத்திரங்களு
முவப்புறு விரதமு மொண்ம கங்களு
மவர்க்குத வுறுவவென் றறிந்தி லோமரோ. 4
உறுதிகொள் பரசிவ பத்தி யுற்றிடார்க்
கறவினை யெனினுமே யவம தாகுமாற்
சிறுவிதி தனக்குமுன் செய்த வேள்விதான்
மறுதலை யுறுபயன் வழங்கிற் றென்பவே. 5
மிக்குறு பாவவல் வினைய னாயினும்
புக்கர பத்தியாற் புனித னாகுவான்
றக்கதன் றந்தையைக் கொன்ற தண்டிதான்
சிக்குறு பத்தியாற் சிவம தாயினான். 6
அறமொடு பாவமு மமல பத்தியா
னிறைபவர் தமக்கிலை நித்த பத்திதா
னறுபவர் தமையடைந் தார்த்துக் கொண்டுபோய்ப்
பிறவியாங் கடலினுட் பெரித ழுத்துமால். 7
அரவணி கடவுளை யடைந்த பத்தர்கட்
கிருவினை செயுமிட ரில்லைப் பொங்கொலிப்
பரவையின் முகட்டெழும் பரிதி வானவன்
புரவிக டமையிருட் டுயர்பொருந்துமோ. 8
பந்தனை வினைசிவ பத்தர் தங்களை
வந்தணை வுறுகில மரைமுட் டாட்சிறு
தந்துவி னாகிய சங்கிலித் தொடர்
கந்தொடி மதமுமிழ் களிற்றைக் கட்டுமோ. 9
மறையவ னரசனல் வணிகன் சூத்திரன்
பிறனென விலைசிவ பத்தி பெற்றுளா
னிறையவ னெனவுல கெங்கும் வந்தனை
பெறுபவ னவனெனப் பேசும் வேதமே. 10
இறைவனை யடைந்தவர்க் கில்லைச் சாதியின்
றிறமெரி தழலிடைச் சேரிற் பேதமெவ்
விறகுள வுயர்சிவ பூசை வேட்டுளோர்
கறைதவிர் நிலமிசைக் கணங்க ளல்லரோ. 11
- பத்தமான்மியத்தலம் முற்றிற்று - * * *
முப்பதாவது
(30) சரணமான்மியத்தலம்
[அதாவது - மாயா சம்பந்தமான வைபவத்தினால் கூடியிருக்கும் ப்ரஹ்மாதி தேவர்களை விட்டுப் பரசிவனை யாச்ரயித்து மோஷத்துக்கு அவனே காரணன் என்று அறிந்தடைதலே சரணமான்மியம் என்பது.]
கலிவிருத்தம்
அணங்கறு குருபர னாதி மான்மிய
மிணங்குற வுணர்த்துறு செயலெ லாங்கொடு
பணிந்திட வருசிவன் பதியெ னத்தெரிந்
துணர்ந்திடல் சரணநற் றலமென் றோதுவார். 1
மாயையால் வருமொரு வாழவு பெற்றுள
சேயநான் முகன்முதற் றெய்வம் விட்டொரு
தூயனா கியபர சிவனைத் துன்னுத
லாயினா கமமது சரண மாகுமால். 2
முக்கண னேயுயிர் முழுது மாள்பவ
னக்கட வுளையரு ளெனவ டைக்கலம்
புக்கவன் புகல்சர ணாக தப்பெயர்
தக்கவ னெனவுரை தருவர் மேலையோர். 3
விடுத்துறு புலன்வழி விண்ணு ளோர்பதத்
தெடுத்துள வவாவகன் றிறையை முத்திவேட்
டடுத்தவ னேசர ணார்த்தி யென்பவன்
குடத்தினி லுதித்துயர் குவட்டி லுற்றுளோய். 4
மனமொழி மெய்வினை கொண்டு வாண்மதி
புனைமுடி யிறைவனைப் புகலென் றெய்தினோர்க்
கினைவுறு செயன்மலி யாக மாதியாம்
வினைகொடு பெறுபய னியாது வேண்டியே. 5
பண்ணிய மகவினை பலவினாற் கெடும்
விண்ணுறு பதமலால் வேறுண் டாகுமோ
கண்ணுதல் சரண்புகுங் கருத்தின் மேன்மையோ
னண்ணுவ தழிவுறா ஞான விடரோ. 6
தனையடை பவர்க்குத்தண் ணளிசெய் கற்பக
மெனுமர னிணையடி புகலென் றெய்துறி
னினைவரும் பாதக நீச ராயினும்
பினையவர் பெறாதபே றேது பேசினே. 7
பரமனை யடைதரும் பாச நெஞ்சினோன்
பெருமைகொள் பிறவியே பிறவி யன்னவன்
றிருமல ரடியிணை சேர்ந்தி டாதவர்
வருமவப் பிறப்பினைப் பிறப்பில் வைத்திடார். 8
பெறலரு மானிடப் பிறவி பெற்றுமோ
ரறிவுரு வாகிய வவிர்ச டைப்பிரான்
றிறமுணர் குறுநெறி சேர்ந்தி டாரெனின்
வறிதவ ருயிரொடு வாழு நாளரோ. 9
புறந்திரி யாதுளம் புராரி தன்கணே
செறிந்திடு மொருபெருஞ் சிறப்புப் பெற்றுளோன்
பிறந்திடு குலமதே பெருமை பெற்றிடு
முறைந்தவன் வாழுநாள் பயனொ டொன்றுமால். 10
- சரணமான்மியத்தலம் முற்றிற்று - * * *
முப்பத்தொன்றாவது
(31) பிரசாதமான்மியத்தலம்
[அதாவது - குரு லிங்கம் ஜங்கமன் சிவபக்தன் சரணன் இவர்களின் மகிமானுபவம் சிவ ப்ரசாதத்தா லுண்டாதலாலும், முக்திக்குப் பக்தி மூலமாதல் போலப் பக்திக்கு ப்ரசாதம் மூலமாதலாலும், சம்சார நிவாரணம் செய்தலாலும், பிரசாத மான்மியம் என்பது.]
கலிவிருத்தம்
குருபரன் முதலியோர் பெருமை கூட்டுணத்
தருவது சிவப்பிர சாத மாதலா
லுரைசெயு மதனது பெருமை யோதுவ
ரிருவினை யெனும்பகை யெறிந்து ளோர்களே. 1
புகலெனச் சிவபிரான் றனைப்பொ ருந்தினோர்க்
கிகலறு சிவப்பிர சாத மெய்துறு
மிகுபவப் பகையென விளம்பு மன்னதிவ்
வகலிடத் தரிதரி தயல வர்க்கரோ. 2
மந்திர மகந்தவந் தியான மற்றுள
தந்திர மறிவிவை யாவுந் தண்கதிர்ச்
சந்திர முடிபிர சாத மெய்துற
வந்தன வெனவறி மனந்து ணிந்தரோ. 3
மொழிதரு சிவப்பிர சாத மூலத்த
தொழிவறும் பத்திதா னோதும் வேதிய
ரிழிவின ரெனவிலை யாரு முய்குவர்
விழிநுத லினன்பிர சாத மேவினே. 4
பங்கய மலரவ னாதிப் பண்ணவர்
சங்கர னருட்பிர சாதங் கொண்டுதம்
மங்கல பதங்களின் வாழ்வு மன்னியே
சிங்கலி னித்திய சித்த ராயினார். 5
தவநிகழ் சிவப்பிர சாத மெய்துறிற்
சிவமய மாகியே திகழும் யாவையும்
பவவலை யறவரு பான்மை யுண்டுகொ
லவமறு மரன்பிர சாத மன்றியே. 6
பலமொழி பகர்தலாற் பயனென் மூன்றெனு
முலகினு ளொத்தது முயர்வு கண்டது
மிலையிலை யிவ்வுரை யுண்மை யீர்ஞ்சடைத்
தலைவன தருட்பிர சாதத் திற்கரோ. 7
யோகம்வேண் டுறும்பிர சாத முற்றிட
வேகமாய்ஞ சிவமய மாகு மியாவையு
மாகையாற் சிவமெனு மாவி யோனிவன்
பேர்கிலா நிலையுடைப் பிராண லிங்கியாம். 8
- பிரசாதமான்மியத்தலம் முற்றிற்று - * * *
இவ்விதமாய் எக்காரணத்தினால் குருமான்மியம், லிங்கமான்மியம், ஜங்கமமான்மியம், பக்தமான்மியம், சரணமான்மியம் என்னும் ஐந்து ஸ்தலங்களில் கூறிய தர்மங்களுடனே கூடியிருத்தலால் லிங்க பிரசாதத்தை நுகர்வதற் குரியவனானானோ அக்காரணத்தினால் அவன் மூன்றாமவனான ப்ரசாதி என்று அறியப்பட்டான்.
- மூன்றாவது பிரசாதித்தலம் முற்றும் - * * *
நான்காவது பிராணலிங்கத் தலம்
[அதாவது - ப்ராணேந்த்ரியாதிக ளெல்லாமும் எனது என்னும் ப்ராந்தியை விட்டு எல்லாமும் லிங்கமே என்றறிந்து லிங்கைக்யாயத்த சித்தனாயிருப்பவனே பிராணலிங்கி என்பது.]
( இதனுட்பிரிவு )
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பத்தனோ டொண்ம கேசன் பகர்பிர சாதி யென்றிங்
கொத்தனே வருவ னென்ன வுரைத்தனை பிராணலிங்கி
யெத்திற மதனா லாவ னிவனிது தனையுங் கூறாய்
கைத்தல மழுவி னோன்வாழ் கைலையங் கணங்கள் வேந்தே. 1
ஒப்பறு கரும யோகத் துயர்ச்சியாற் பத்த னாதி
முப்பெயர் புனைந்து நின்றான் மொழிதரு மிவனி வற்குத்
தப்பறு ஞான யோகஞ் சாற்றிடத் தக்க தீங்குத்
துப்புறழ் சடிலக் கற்றைத் துகளின்மா முனிவ ரேறே. 2
பேரறி வுருவாய் நின்ற பிரமமே யிலிங்க மாமவ்
வோருறு மிலிங்க சத்தி பிராணநல் லுருவாய் நிற்குந்
தேருறு மினைய வாறாஞ் சிவலிங்கந் தனையு ணர்ந்தோ
னேருறு பிராண லிங்கி யென்பவ னெப்ர் மேலோர். 3
ஆசறு பிராண லிங்கித் தலமொரைந் * தாகு முன்னர்ப்
பேசுறு பிராண லிங்கித் தலமொடு பிராண லிங்க
பூசனை யதன்பின் மிக்க சிவயோக சமாதி பெற்று
நேசம துறுமி லிங்க நிசமங்க லிங்க மென்றே. 4
( * மற்றொரு பிரிவு :- அதாவது ஆசாரப்ராணி, லிங்கப்ராணி, ஜங்கமப்ராணி என்று மூன்று வகைப்படுவன். மனோ வாக் காயங்களில் ஆசாரத்தை க்ரகிப்பவனே ஆசார ப்ராணி; பாஹ்யாசாரத்தை மறந்து லிங்கத்திற்கு ப்ராணனைப் பூஜிப்பவனே லிங்கப்ராணி; ஜங்கமத்திற்கு உடல் மனம் ப்ராணன்களை நிவேதனம் செய்பவனே ஜங்கமப்ராணி ப்ராணலிங்கியை ஆனந்த ப்ரஹ்மம் என வழங்குதலு முண்டு.)
முப்பத்திரண்டாவது
(32) பிராணலிங்கித்தலம்
[அதாவது - லிங்கமே மந்த்ரஸ்வ ரூபம், அந்த மந்த்ரத்திற்குப் போதினியான சக்தியே ப்ராணரூபம், அந்த ரூபமான லிங்க ஜ்ஞான முள்ளவனும், ஸ்ரீ குரூபதேசாநுக்ரமமாய் ப்ராணவாயுவை அபானவாயுவுடனே பரஸ்பரம் சங்கடனம் செய்து நாபிக் கிழங்கின் நடுவிலிருந்து வெளிப்படும் ஜ்யோதியே ப்ராணலிங்க மென்றறிந்து அதனது அநுசந்தானத் திருப்பவனுமான ப்ரசாதியே பிராண லிங்கி என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தயங்குறு பிராணா பாந சமநிலை பெறலான் மூலத்
துயர்ந்தெழு சோதி யாதவ் வொளிமிகு சோதி தானே
வயங்குறு பிராண லிங்க மென்னவே வகுக்கப் பட்ட
தியங்குறு பிராணா பாந நிரோதிக ளென்போர் தம்மால். 1
பரிதியு ளடங்கு மெய்கூர் பனியென யாதன் கண்ணே
திரிதரு பிராண னொன்றிச் செறிந்திடு மதுவே கூறி
னரிதெனும பிராண லிங்க மென்பரங் கதுத ரித்தோ
னுரைதரு பிராண லிங்க வுரையுடை யோனா மன்றே. 2
அறிவுருவாகி யெங்கு மமர்பரப் பிரம மாகுங்
குறியுய ரிலிங்க ஞான யோகுடைக் குணத்தா னெஞ்சி
லெரிசுட ராகி நின்றே யிலங்குறு மறிவி லாராற்
செறிவுறு பொருளன் றாகு மென்றுரை செய்பவர் மேலோர். 3
இலங்கொளி யாகி யென்று மிதயநன் மலரிற் றோன்றி
நலந்தரு பரமானந்த ஞானலிங் கத்தை நீங்கிக்
கலந்துள புறத்தி லிங்கக் கருத்துள னாகி யுற்றோன்
மலங்குறு பரம மூட னென்னவே மதிக்கப்ப பட்டான். 4
பிரபுலிங்க லீலை
மனமி லிங்க மருவிலை யேலுட
றனிலி லிங்கந் தரித்து மிலையிலை
யெனவி யம்பு மிணையிலி யாகம
நினைவ ரன்கழ னிற்க நிறுத்தினாய்.
புறப்பொரு ளிதன்கட் செல்லும் புத்திவிட் டகத்தி லென்றுஞ்
சிறப்புறு மொளியாய்த் தோன்றுஞ் சிந்மய லிங்கந் தன்னைக்
குறித்துணர் கருத்தின் றிட்பங் கொண்டுற நின்று ளோனே
மறப்பறு பிராண லிங்கி யென்குவர் மதியின் மிக்கோர். 5
மாயையின் விகற்பந் தன்னால் வந்துள சகந்தோன் றாமற்
போயொழிந் திடுமா றென்றும் பொருந்துபு சிந்தை செய்து
பாயொளி யறிவானந்த பராபர லிங்கந் தன்னிற்
றூயநெஞ் சடங்க வல்லோன் றுகளறு பிராண லிங்கி. 6
சத்தையாஞ் சத்தி தானே தக்கதோர் பிராண னாகுஞ்
சத்ததாம் பிராண லிங்கந் தற்சம ரசஞா னத்தால்
வைத்ததாம்பிராண லிங்கி யெனும்பெய ரெனவ குப்பர்
தத்துவா தீத மாய தனிநிலை யுணர்ந்து நல்லோர். 7
- பிராணலிங்கித்தலம் முற்றிற்று - * * *
முப்பத்துமூன்றாவது
(33) பிராணலிங்கார்ச்சனத்தலம்
[அதாவது - சைதந்யாத்மகமானதும், ப்ராண வாயுவினால் வ்யாப்தமாய் சூக்ஷ்மமான தகராகாசத்தில் ப்ரகாசிப்பதுமான ப்ராண லிங்கத்தை க்ஷமாரூபாபிஷேக நித்யாநித்யவஸ்து விவேகவஸ்த்ர சத்யரூபாபரண பாவநாபூஷ்பாதி ஜ்ஞானஸ்வரூபமான மானசிக த்ரவ்யங்களினால் பூஜித்து ப்ராலிங்க சம்பந்தியானதே பிராணலிங்கார்ச்சனம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நன்றுறு மிதயந் தன்னின் ஞானலிங் கத்தை யெய்தி
நின்றெழு மன்பி னாலே நினைவெனு மலர்கள் கொண்டு
புன்றொழி லிலாது செய்யும் பூசனை யதுவே கண்டா
யொன்றொரு பிராணலிங்க பூசையென் றுரைப்ப தன்றே. 1
அகத்துறு பவனன் தன்னை யடைத்துநுண் விசும்பு பூத்து
மிகத்தலை மதியு குப்ப வீழமு தினிற்கு ளிர்ந்து
தகைக்குமொன் பதுவா யுற்றுத் தனியறி வெனும்பவி ளக்கிட்
டுகப்புறு மிதயத் தீசற் குஞற்றுக பாவ பூசை. 2
ஆடறல் பொறைவி வேக மாடைபூண் வாய்மை மாலை
தாடரு துறவு கந்தஞ் சமாதியக் கதையாங் கார
வீடெழு தூபந் தூய்மை விளக்கறி வுலக மெல்லாம்
பீடுறு நிவேத னந்தம் பிராற்கொலி மணிநன் மோனம். 3
பிரபுலிங்க லீலை
பொருலில்சற் பத்தியாந் தாரம் பூண்டொரு
வரவயி ராகமாம் வத்தி ரம்புனைந்
தொருவலி லுணர்வெனுஞ் செச்சை யொன்றுறப்
பரமனை யிருத்துவோன் பத்தனா குவான்.
அருளெனும் புனலினை யாட்டிச் சாந்தமாம்
வரைநறுஞ் சந்தொடு மருவ விந்திய
விரைமலர் புனைதறி வினைய ருத்துறிற்
பரமனை யவன்சிவ பத்த னாகுவான்.
ஒன்றினொன் றுள்ளுற வுடம்பு மூன்றையு
மன்றநல் வத்திர மடிய தாக்கியே
என்றுமங் கமைவுற விட்டம் வைப்பனேல்
அன்றவன் சிவமய மாகு மென்பவே.
பொறிவிட யார்ப்பி தந்தரம் பூலமவ் விடயத் தோய்த
லறுமது வலம திக்கிங் கதன்வடி வாகுஞ் சத்தி
பெறுமது வணக்க மாமிப் பெற்றியின் மனலிங் கத்தை
மறுவறு மனத்தர்ச் சிக்க வாலிய பொருள்கள் கொண்டே. 4
- பிராணலிங்கார்ச்சனத்தலம் முற்றிற்று - * * *
முப்பத்துநான்காவது
(34) சிவயோகசமாதித்தலம்
[அதாவது - பூர்வோக்த ப்ராணலிங்கார்ச்சன க்ரமங்களினால் அந்தரங்க க்ரியாசக்தனான ப்ராணலிங்கிக்கு சிவ ஜீவர்களின் சமான சாமரஸ்யாநுசந்தான மென்னும் சம்பத்தே சிவயோக சமாதி என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
புகன்றுள பிராண லிங்க பூசனைத் தொழிலின் கண்ணே
யுகந்துள விவர்க்கு மிக்க வொருசிவ ரூப மாகத்
திகழ்ந்துள தியானந் தன்னைச் செப்புறுஞ் சமாதி யென்ன
வகன்றரி பரந்த வொண்க ணரிவைபங் கினனூ லன்றே. 1
உரைமன மிறந்த சச்சி தானந்த வொளியாய் மேலாய்ப்
பரவுதத் துவங்கட் கெல்லாம் பரமசிற் சத்தி தன்னா
லுரமுற வொளிரு மஞ்ச வுருவமாம் பரமான் மாவைத்
திரமொடு பாவ கஞ்செய் திகழ்சோக பாவங் கொண்டு. 2
பிரபுலிங்க லீலை
என்றுதன தியலுணர்த்தி யுடம்புநா னென்றிருந்த வியல்பு போல
நின்றவெனை யுணர்ந்துநீ சோகம்பா வனைகொண்டு நிற்பை யாயிற்
பொன்றலுறு விடங்கலுழன் றன்னை நினைப்பப் போதல்போற் போம் விச்சை
நன்றறிதி யெனவறிவித் தனனெங்கோன் கோரக்க நாதன் றன்னை.
பிறங்கொளி மாலிங் கந்தான் பிரமமென் றுரைப்ப நிற்குஞ்
சிறந்துள பிராணன் றன்னைச் செப்புவர் சீவ னென்ன
வறைந்துள வவற்றி னேக பாவமா மனத்தி னானே
யுறுஞ்சிவ சமாதி யோக முற்றவ னென்பர் மேலோர். 3
ஆகமுறு சக்க ரங்க ளாறினு முற்ற கஞ்சஞ்
சகமருள் பிரம னாதி தானமென் றுன்னி யப்பால்
வகையிதழ் பத்து நூறு மருவுபங் கயம தன்கண்
மிகநிறை விமல விந்து விம்பமொன் றுளது மாதோ. 4
அத்தட மதியி னுட்ப மாம்புழை யொன்று காண்க
வத்தொளை கயிலை யாக வறிந்தவண் வீற்றி ருந்த
சத்திய ஞான னந்த சங்கரன் றனைப்பா விக்க
வெய்த்தகா ரணங்கட் கெல்லாங் காரண னென்ன வன்றே. 5
புறத்திரி வதனாற் றோன்றும் புகல்சக விகற்ப முள்ளிற்
செறிந்திடு மனத்தி னோர்க்குத் திகழ்ந்திடு மான்மா னந்த
முறுங்கடை யுவகை தன்னா லுயிரெனு மரணி தன்னிற்
பிறந்துள ஞானத் தீயாற் பெரும்பவஞ் சுடுவ னன்றே. 6
கருமவேர் செறிந்து துன்பப் பாசிலை காட்டி நிற்கு
மொருபெரும் பவம ரத்திற் குற்றவெம் பரசு தானாம்
பெருமல விருளி னுக்குப் பிறங்கொளி யிரவி யாகுந்
தெருமரு மனம டக்குஞ் சிவனுருத் தியாக மன்றே. 7
பிரபுலிங்க லீலை
வாயு நிற்ப மனநின்று மனந்தா னிற்பப் பொறிநின்று
பாய பொறிக ணிற்பவிடர் படுபுன் புலன்க ணின்றனவா
லாய புலன்க ணின்றமையா லகிலந் தோன்றா துள்ளத்தே
தூய பரமா நந்தபரஞ் சோதி தோன்றக் கண்டிருந்தார்.
பொறியிற் புறத்து மனஞ்செல்லிற் புலனே தோன்றி யிடுமகத்திற்
செறியக் கரணம் பரானந்த சிவமே தோன்றுஞ் சிவந்தோன்ற
வறிவிற் பரந்த விடயமய மாகு முலகந் தோன்றாமற்
பிறவித் துயரக் கடல்கடந்து பேரின் பஞ்சார் குவரென்று.
மரிப்பொ டுதிப்பு மறிக்குது மென்று
கருத்தை வெளிக்கரு மத்தின் விடுத்து
விரிக்குத னெய்யை விடுத்தெரி கின்ற
நெருப்பை யவிப்ப நினைப்பதை யொக்கும்.
மட்டற வோடு மனத்தை நிறுத்திக்
கட்டுதல் வீடு விடுத்திடல் கட்டன்
றொட்டிய பண்பி னுரைத்தல மப்பேர்
சிட்டன வட்கருள் செய்தன னன்றே.
கருமமும் யோகந் தானுங் கரணத்தைப் புனித மாக்கிப்
பொருமிடர் வாயி றோறும் புக்குழல் கறங்கு போலத்
தெருமரா துண்ணி றுத்துந் தௌ¤ந்தவக் கரணந் தன்னா
னிருமல னாகு மீச னித்தனென் றுணர்வு திக்கும்.
நித்திய னிமல னென்னு நினைவுறி னனித்த மாகிப்
பொய்த்தழி யுடம்பு டம்பைப் பொருந்திய பொருள் வெறுத்து
மெய்த்தருள் குரவன் றன்னை விரும்பினன் சென்று சார்ந்து
தத்துவ முதறி நின்ற தனியறி வினையே காணும்.
புலன்களை யொழித்த போதே பொறிகளும் பூத மைந்துங்
கலங்குறு கரண நான்குங் கலாதியுஞ் சுத்த மைந்தும்
விலங்குறு மடியில் வைத்த வெறுங்குடந் தன்னின் மேன்மேன்
மலங்குற வொருங்க டுக்கு மட்கலம் விழுத லேபோல்.
இந்திய மோரொன் றாய்விட் டிடின்மற்றை யொன்று சாரு
முந்திய மனம ழிப்ப முற்றும்போ மணிய பாம்பி
னைந்தலை களினு ளொன்றை யரிந்திடின் மற்றொன் றாலஞ்
சிந்திடு மிடற ரிந்தாற் றீர்ந்திடு மொருங்கு மாதோ.
ஆதலால் மன மடங்கி லங்கலிங் கங்க டம்முட்
பேதமோ வபேத மோவென் றழிவுறு பித்து நீங்குந்
தீதிலா யென்றி யம்பிச் சித்தரா மற்கு நாவா
லோதொணா வுணர்வி னுண்மை யுணர்த்தினன் குருகு கேசன்.
தாவி லாத மனமொடு சார்தரா
தோவு மாயி னுலகிற் புனலுமொண்
பூவு நாடொறும் போக்குறு பூசனை
ஆவி போகிய வாக நிகர்க்குமால்.
புறம்பு காண்குவன் புல்லிய னீசனை
அறிந்த ஞானி யகமுறக் காண்பனால்
எறும்பி காணுறி லின்கரும் பேகொளும்
செறிந்த வாடிலை தின்பன வென்பவே.
கரங்க ணல்ல கருமஞ் செயாநிற்பத்
திரிந்து செல்லுஞ் செலாதவி டத்துநெஞ்
சொருங்கு றாத வொருமனந் தன்னினும்
பரந்த வல்லற் படுக்கும் பகையிலை.
துயிலை யின்பெனச் சொல்லுத லிந்தியத்
தியலு நெஞ்ச மிலாமையி னாலன்றோ
பயிலு நெஞ்சம் பரந்து திரிதருஞ்
செயலி லில்லைச் சிறிதுஞ் சுகமரோ.
மனமொ ருத்தன் வசப்படு மேலவன்
பினைவ ருத்தும் பிறப்பை யடைந்திடான்
மனமொ ருத்தன் வசப்படா தோடுமேல்
நனிபி றப்பிடை நாளுஞ் சுழலுமே.
அறவி னைக்கு மரும்பொரு ளின்பொடு
பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்
விறலி னுக்குநல் வீரந் தனக்குமொண்
டுறவி னுக்குந் துணைமன மென்பவே.
நல்ல செய்து நரரை யுயர்த்தவும்
அல்ல செய்தங் களற்றிடை யாழப்பவும்
வல்ல திந்த மனமல தையனே
இல்லை யென்ன வியம்பு மறையெலாம்.
நெஞ்ச மாதுமை நேசனை நண்ணுமேல்
விஞ்சு பாதகங் கோடி விளைப்பினும்
அஞ்சு றானவ னவ்வினை யாவையும்
பஞ்சு தீயிடைப் பட்டென மாயுமே.
மக்கண் மானிட ரென்று மனத்தினான்
மிக்க மேன்மை விளங்கின ரில்லெனில்
பொக்க மேவும் பொறிகளோ ரைந்தினால்
ஒக்கு மாவினை யொத்துயர் வுற்றிடார்.
கெடுக்க வல்துங் கெட்டவர் தங்களை
எடுக்க வல்லது மிம்மன மென்றதை
அடக்க வல்லவ னைய பவக்கடல்
கடக்க வல்லவ னாவன் கடிதரோ.
ஆயின் மிக்கோ ரரிய செயலெலர்
நேய மிக்க மனத்தை நிறுத்தல்காண்
வாயு நிற்க மனமு முடனிற்கும்
தோய நிற்குறி னிற்குந் துரும்புமே.
ஓடு மாவை நிறுத்துறி னுள்ளுறக்
கோடும் வாய்க்க லினத்தினைக் கொள்ளுவார்
நீடு மாமன நிற்க நிறுத்துறில்
ஓடும் வாயுவை யுள்ளுற வீர்ப்பரால்.
அடுத்த நாடிக ளாங்கொரு மூன்றினும
விடுத்தும் வாங்கியு மேவ நிறுத்தியும்
தடுத்தும் வாயுவைத் தன்வச மாக்கின்வாய்
மடுத்தி டாது மனமும் வசப்படும்.
ஓடும் பொன்னு முறவும் பகையுமோர்
கேடுஞ் செல்வமுன் கீர்த்தியு நிந்தையும்
வீடுங் கானமும் வேறற நோக்குதல்
கூடுந் தன்மை கொளுமன நன்மனம்.
மன்னு காம வெகுளி மயக்கமென்
றின்ன கூடி யெறிவளி முற்சுடர்
என்ன வாடு மியன்மனந் தீமனம்
தன்னை யாருந் தடுக்கத் தகாதரோ.
மறிந்தி டாது மனபவ நங்கடாம்
செறிந்த வாயிற் சிவமய மாகுமால்
அறிந்து வாயுவை யங்ஙன மெய்தினோன்
இறந்தி டாத விலிங்கப் பிராணியாம்.
ஒடுக்குமனம் வீட்டுநெறிக் கொருதுணையா கும்புறத்து
நடக்குமன நிரயவழி நடப்பதற்குத் துணையாமென்
றிடக்கர்மன மடக்கும்வகை யெம்பிரா னியம்பியவா
றடக்கமன முறுநெறியி னருணந்தி தலைப்பட்டான்.
நில்லாது போமனத்தைக் கால்பிடித்து நிறுத்தியே
வில்லாரு மதியமுதம் விருந்திட்டு நட்புறீஇப்
பொல்லாத புலனுகரப் புறத்துநிலை தடுமாறிச்
செல்லாம லுடன்கொண்டு சித்திரமொத் திருந்தனனால்.
மனத்தை யடக்க மனந்துணை யாகும்
பினைத்துணை யின்றது றெ¢றன னாயிற்
றனிச்சிவ மேயொரு தானென வாழ்வ
னினைத்து மறந்து நிலத்து ழலானே.
வாரண மாகு மனத்தை யடக்கிற்
காரண மாயை களைந்தொழி யாத
பூரண மாகிய போத மடைந்திட்
டாரண மோது மரும்பொரு ளாவான்.
விரிந்த நெஞ்சங் கருவியாம் விடய முணர விரியாம
லொருங்கு நெஞ்சங் கருவியாந் தன்னை யுணர வொருங்காமல்
விரிந்த நெஞ்ச முடையவனை விடாது பிறவி யென்றுணர்க
வொருங்கு நெஞ்ச முடையானை யுறாது பிறப்பென் றுணர்கவே.
- சிவயோகசமாதித்தலம் முற்றிற்று - * * *
முப்பத்தைந்தாவது
(35) இலிங்கநிசத்தலம்
[அதாவது - சமாதி யில்லாத மற்றக் காலத்திலும் பக்தர்களின் மேலதான வாத்சல்யத்தினால் சிவபிரான் அவர்களது தேகங்களி லிருப்பானோ, பக்தர்களினால் தேகமுள்ள லிங்கத்தின் எந்த பரோக்ஷமல்லாத அநுபவஜ்ஞான முண்டோ, பூர்வோக்த ரீதியான சிவலிங்க சமாதி வல்லமையினால் அச்சிவலிங்கமே தானாவதோ, அதே இலிங்க நிசம் என்பது.]
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொருந்துறு மிதய மென்னும் புனிதநன் முளரி சேர்ந்த
வருஞ்சிவ லிங்க மெய்ம்மை யநுபவ சித்தி தானே
பரஞ்சு டராமி லிங்க நிசமெனப் பகரா நிற்பர்
திருந்திய கலைகள் யாவுந் தெரிபெரும் புலவரன்றே. 1
வேதனா தியராந் தேவர் வேதமா தியவா நூல்க
ளியாதினி லடங்கித் தோற்ற மெய்துறு மவ்வி லிங்க
மோதரும் பிரம மேயா முலகுதிக் குறுமி லிங்கந்
தீதறு ஞானா னந்த சிவமேமற் றொழிந்த வல்ல. 2
உரைப்பதென் பலமாற் றங்க ளுலகுதித் தொடுங்கும் வண்ணந்
தரித்திடு மிடம தாகுஞ் சச்சிதா னந்த மேனிப்
பரப்பிர மந்தா னேகாண் பரசிவ னாமங் கொண்டே
தெரிப்பறு மிலிங்க மென்று செப்புறப் பட்ட தன்றே. 3
பிரபுலிங்க லீலை
பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி
யுரைமன மிறந்து நின்ற வொருசிவ லிங்கந் தன்னின்
வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் றனைப்பொ ருந்து
மருமைகொண் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.
மாசறு நிகழ்வே தாந்த வாக்கியத் துதிக்கு ஞான
மாசறு மிலிங்க மென்ன வறைதரு கிற்பர் சில்லோர்
பேசுறு மதுதான் மிக்கப் பிரமமா மிலிங்கந் தன்னாற்
றேசுற வறிவ தாகுஞ் செய்க |